வட்டம்
Filed under என்னன்னே புரியல , கவிதை , by Prabhu on 2/20/2010 03:25:00 PM
13
வட்டம்
யாரோ இட்ட வழியில்
ஒவ்வொருவருக்காகவும்
வாழ்ந்து வழக்கொழிகையில்
எனக்கான ஒரு நாளில்
கடற்கரையோரம்
நிர்வாணமாய் நான்
இலக்கு
எட்டும் தொலைவில்
புரியாத ஆசை,
பிரம்ம பிரயத்தனங்கள்
வட்டத்திலிருந்து வெளியே வர.
பிரசவ குடத்தில் இருந்து மீள
முடியாத ஊனம்
என் நெஞ்சில் அழுத்தி நிற்க,
அந்த இலக்கு எட்டிக்காயானது.
உணவு
எதற்கு உழைக்கிறோமென்றால்
வாழ்க்கையில் சாதிக்கப் பிறந்தவனாம்
நாட்டை முன்னேற்றுகிறான் ஒருவன்
ஒருவன் கடனுக்காக.
தாய், தங்கை, லட்சியம், கனவு, வசதி, வறுமை
இத்யாதி இத்யாதி
நாளைய உணவின் ருசியைத்
தேர்ந்தேடுக்கும் பிரயத்தனம் எனக்கு
நான் சொல்ல வேண்டியத நீங்களே லேபிள்ள சொல்லிட்டீங்க :)
வேலை கிடைக்கிறதுக்கு முன்னாடி எல்லாம் நல்லா தானப்பா இருந்தான் இந்த பப்பு..திடிர்னு என்ன ஆச்சு..;)
போன பதிவு போட்டவுடனே படித்துவிட்டேன்..பட்..கம்மென்ட் பண்ண மறந்துட்டேன்..அது வேற இல்லாம ஒரு இருபது நாளா அடிச்சு புழிஞ்சு காயப்போடுறங்க அலுவலகத்தில்..
மெய்யாகும்மே நல்லாருக்குய்யா...!
ஜீப்புல ஏறீட்டய்யா.
@வெற்றி
அது சரி. அது ஒண்ணாவது வேலைக்காவுதே!
@வினோத்
பரவாயில்ல. பிஸியா இருக்கிறதால தானே.
@ராஜு
ரெம்ப நன்றீ
ஐயோ ஐயோ
ப்ரெசண்ட் பப்பு.
படிப்பு முடிஞ்சிருச்சா? வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டயா என்ன?
@ராஜன்
ஏன் புலம்புறீங்க.. அதத்தான் நான் பண்ணியிருக்கேனே...
@ஆதவன்
வேலைக்கு எல்லாம் போயிடல... இப்பதான் எம்பிஏ சீட்டே கெடச்சிருக்கும். அத முடிச்சிட்டு போனாதான் ஒரு கம்பெனிய பெரிய அளவில அழிக்க முடியும்?
//வேலைக்கு எல்லாம் போயிடல... இப்பதான் எம்பிஏ சீட்டே கெடச்சிருக்கும். //
எம் எல் ஏ சீட்டுக்கு டிரை பண்ணலாமே....
கவித சான்ஸே இல்ல.... எனக்கு புரியவே இல்ல...அப்ப நல்லாத்தான் இருக்கும்....
:)
vattam nalla potturekeengka. valththukkal.
@கன்ணா
ஆமா, எம்பிஏ க்கே காசு பிக்கிது... எம்.எல்.ஏ.க்கு நீங்க ஸ்பான்ஸர் பண்ணுறீங்களா?
புர்லயா? ஐ பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :)
@சரவணன்
வருகைக்கு நன்றி!
நல்லா தான் இருக்கு பப்பு.. அதுவும் தலைப்பு பேரில் உள்ள கவிதை..நச்..
ம்ம்.. பரவாஇல்ல.. கைவசம் ஒரு தொழில் இருக்கு..
எல்லாரும் ஓடுங்க.. அது நம்மள நோக்கிதான் வருது.. :))
மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........