கடவுள்?

Filed under , , by Prabhu on 11/15/2009 03:05:00 AM

21

கடவுள் என்ற வார்த்தையை எடுத்தாலே பிரச்சனை ஆகிவிடுகிறது. பிறகு கடவுள் இருக்கிறாரா என்ற தத்துவ விசாரணையை பேசுவதென்றால் எல்லாரும் அவரவர் கருத்தைக் கிட்டதட்ட திணிக்கும் தொனியில் பேச ஆரம்பிக்கின்றார்கள். கடவுள், மதம் போன்ற விஷயங்களைப் பேசுவதில் பெரும் பிரச்சனை என்னவென்று யோசித்தால், நாம் எப்பொழுது அதைப் பற்றி கூறினாலும் நமது தொனி நமது கருத்தை அடுத்தவர் மீது திணிப்பதாகவே தோன்றுகிறது. அடுத்தவரிடம் இருந்து நமது கருத்துக்கான பிரதியை எதிர்பார்க்கும் வகையில் நாம் அவர்கள் நம்பிக்கையில் கை வைப்பதாகத் தெரிகிறது. அதிலும் அதற்கு பதில் சொல்பவர்களைப் படிக்கும் போது அவர்கள் சிறிது சண்டை செய்வது போலவே 'தோன்றும்'. ஏனென்றால் அவரவருக்கு அவரவர் நம்பிக்கையில் பெரும் நம்பிக்கை.

கடவுளை நம்புவர்கள்தான் நல்லா சண்டை போடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு நிகராக சண்டை போடுகிறார்கள் கடவுள் மறுப்பாளர்கள். அதுவும் தமிழ் நாட்டு கடவுள் மறுப்பாளர்களின் 'கொள்கை பிடிப்பு' புல்லரிக்கிறது. நம்ம ஊரில் கடவுள் மறுப்பிற்கு பெயர் போனவர்கள் திராவிடக் கட்சியினர். அவர்களில் புகழ் பெற்ற தலைவரை எடுத்துக் கொள்வோம். அவர் கடவுளை மறுக்கிறார். மிக நல்லது. இந்து மதத்தையும் அதன் மூட  நம்பிக்கைகளையும் சாடுகிறார். சரிதான். ஆனால் எனக்கு குழப்பம் நேருவது எவ்விடத்தில் என்றால், அவர் ரம்ஜானுக்கு கஞ்சி குடிப்பதும், கிருஸ்துமஸுக்கு கிருஸ்துவப் பாடல்கள் கேட்பதும் எவ்வகையில் சேத்தி எனத் தெரியவில்லை. அதற்கு அவருக்கு உரிமை இருந்தாலும், கடவுள் மறுப்பு இங்கே எங்கு வெளிப்படுகிறது என புரிபடவில்லை. ஒருவேளை இந்து மதம் பல மதங்களின் கலவை என்பதால் அதற்கு மத நம்பிக்கை அற்றவனைப் பற்றி பேச நேரமில்லாமல் போனதும், மைனாரிட்டி ஓட்டென்று வந்தால் கடவுள் என்ன, சாத்தானென்ன, வா, 60:40 வைத்துக் கொள்ளலாம் என்பதோ காரணமாக இருக்கலாம்.

கடவுள் எனப் பேசும் போது மதம் என்ற ஒன்று உள்ளே வந்து விழுகிறது. இது என்ன சொல்லுகிறது? ஆணுறை பயன்படுத்தாதே, மின்விசிறி பயன்படுத்து, புற்று நோயை குணப்படுத்து, ஆனால் விஞ்ஞானத்தை நம்பாதே. 2000 வருடங்கள் முன்னாலே அவர் இதைக் கூறினார், நடந்தது என்பதை நம்புகிறீர்களா? என்னைக் கேட்டால் நம்பும் போது நம்புகிறேன். யோசித்து பார்த்தால், கஷ்டம். அதிலும் இப்பொழுது வரும் விஞ்ஞான விஷயங்களை பைபிளில்அப்பொழுதே கூறியிருக்கிறார்கள் எனும் பொழுது, அடடா, அவங்கள விட்டுட்டு தேவையில்லாம கலிலியோவையும், கோபர்நிகஸையுமல்லவா கொன்னுட்டோம் எனத் தோன்றுகிறது.

மத அடிப்படைவாதத்தின் அர்த்தமும் என் சிறுவயது மூளைக்கு விளங்க மாட்டேங்கிறது. கருத்தடை, உயிர்தொழில் நுட்பவியல், காண்டோம், மிக்கி மவுஸ் இதெல்லாம் ஏன் மதங்களிடம் இந்தப் பாடுபடுகிறது எனத் தெரியவில்லை.  கேட்டால், கடவுள் மீது அநியாயமாக பழி போடுகிறார்கள். ஒரு சின்ன குட்டி கதை. ஒரு பாதிரியார் புதிதாக சர்ச்சில் சேருகிறார். பின்னால் அவருக்கு கல்யாணமும் நடக்கிறது. சம்பள கூட்டப்படுகிறது. குழந்தை பிறக்கிறது, கூடுதல் சம்பளம். இரண்டாவது பிறக்கிறது, மீண்டும் கூட்டப் படுகிறது. இப்படியே குடும்ப உறூப்பினர் எண்ணிக்கையும் சம்பளமும் கூடிக் கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் சர்ச் ஒன்று கூடி ஒரு கூட்டம் நடத்தி அவரை எதிர்கொள்ளுகிறது. அதற்கு அவர், "குழந்தை மழையைப் போல கடவுள் கொடுத்த பரிசு. அதை மறுக்க நாம் யார்?" என்கிறார். கூட்டத்திலிருந்த ஒருவன் எழுந்து, "சாமி, கடவுள் கொடுத்த மழைதான். ஆனால் செருப்பும், குடையும் பயன்படுத்தறதில்ல? அதுமாதிரிதான். பாத்து இருந்துகங்க சாமி." என்றான்.

இன்னும் நான் கடவுளைப் பற்றி நான் பேசவில்லை என்று நினைக்கிறேன். இதுவரைப் பேசியது கடவுள் என நாம் பின்பற்றும் மதங்களின் நம்பிக்கைகள்.
இவ்வளவு பேச ஆரம்பித்த பிறகு நான் எதை நம்புகிறேன். கடவுளை நம்புவதா, கடவுளை நம்புவதை மறுப்பதை நம்புவதா என யோசிக்கும் பொழுது, இரண்டும் விவகாரமான விஷயம், இரண்டுமே வேண்டாமென நினைக்கிறேன். நம்புவதற்கென்ன? நம்புகிறேன். ஆனால் என் கேள்விகளுக்கு கடவுளிடம் இடமிருக்கிறதென்றாலும் மதங்களிடம் இடமில்லை. தமிழில் தெரியவில்லை. ஆங்கிலத்தில் சொல்கிறேன். Im an Agnostic. Agnostic? அடுத்த பதிவுல.

-தொடரும்

பின்குறிப்பு - ஒவ்வொருவருக்கு ஒரு நம்பிக்கை. நான் என்னைப் பற்றி சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். இதை நான் யாரையும் ஏற்கச் சொல்லவில்லை. உங்களுக்கு சுவையாகப் பட்டால் படிக்கலாம் என்கிறேன். இது ஓடும் எண்ண ஓட்டங்களும், சில சேகரித்த விஷயங்களுமே. அதப் படிச்சியா, இதப் படிச்சயான்னு கேக்கும் முன்னே அடுத்த பாகத்த பாத்து என்ன சொல்ல வருகிறேன்னு தெரிஞ்சுக்கோங்க.

Comments Posted (21)

கேள்விக் குறி போட்டு ஆரம்பிச்சி இருக்கீங்க! :)

ஆச்சரியக் குறியாக.. இந்த கட்டுரைகள் மாற வாழ்த்துகள்.

======

இந்த கேட்.., டாக் எல்லாம் என்ன ஆச்சி? படிக்கறீங்களா இல்லையா?

என்னது தொடருமா? அவ்வ்வ்வ்

பிரபல மற்றும் சர்ச்சைகுரிய பதிவர் பப்பு வாழ்க! வாழ்க! (இப்பவே கோஷம் போட்டா தான் நீ பெரிய ஆளா வரும் போது உபயோகமா இருக்கும்)

@பாலா
கேட் தான, படிச்சிட்டிருக்கேன். ந்ன்ன நடக்க போகுதுன்னு தெரியல.கடவுள் விட்ட வழி :)

@ஆதவன்
ஏதோ உங்க ஆதரவு இருந்தா சரிதான்! :)

கொஞ்சம் விவகாரமான .. இல்ல இல்ல.. நிறையவே விவகாரமான விஷயத்தை தொட்டு இருக்கீங்க.. உங்க மனசுல இருக்குறதை நேர்மையா சொல்லுங்க..தொடருங்கள்..

ஹய்.. அது எப்டிங்க முடியும்? எவன் எப்ப மாட்டுவான்னு பாத்துகிட்டு இருக்கோம்... உங்களை மட்டும் விட்டுடுவோமோ? இருங்க.. சண்ட போடன்னே 2,3 ஆளுங்க இருக்காங்க! கூப்பிட்டுட்டு வந்துடுறேன்.. அதுகுள்ள பதிவை தூக்கிடாதீங்க!!

wait 4 me i will.. no! No! we will be back..

நல்லா இருக்கே இன்னும் எழுதுங்க.

நன்றி

ரொம்ப நல்லா உங்க கருத்தை எழுதி இருக்கீங்க, வாழ்த்துகள்!
தொடருங்க.

மத நல்லிணக்கம் சம்பந்தமா ஒரு கவிதை எழுதி இருக்கேன், படிச்சு
உங்க கருத்தை சொல்லுங்க!

http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_15.html

அது சரி வீரமணி கருணாநிதி இவங்களை எல்லாம் வம்புக்கு இழுக்குற..
ஆனாலும் இந்த விஷயத்தில் நாம என்ன விவாதித்தாலும் அவங்க அவங்க பார்வை மாற போவதில்லை என்பது என் கருத்து.

பப்பு உங்கள் கருத்தைத் தெளிவாக சொல்ல வேண்டும் ,ஆரம்பத்தில் சொன்ன விஷயங்கள் சற்றே குழப்பல்.இருப்பினும் நீங்களும் நானும் இந்தக் கடவுள் விஷயத்தில் கிட்டத்தட்ட ஒரே wavelength-ல் தான் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

அய்யய்யோ சாமி கண்ண குத்திடும்
பழகின தோஷத்துக்கு ஓட்டு மட்டும் போட்டுட்டு எஸ்கேப்.

!

என் அறிவுக்கு எட்டிய வரையில் கடவுள் மறுப்பு தமிழ்நாட்டுக்கு அறிமுகமானதில் அறிவுப்பூர்வமான பின்னணி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அது பெரும்பாலும் உணர்வு தொடர்பானது.

எனக்கு கடவுளை அறிவுப்பூர்வமாக எதிர்ப்பவர்கள், அறிவுப்பூர்வமாக நம்புபவர்கள் இரு சாராரையுமே பிடிக்கும். சிந்தனையைத் தூண்டும் விதமாகப் பேசத் தெரிந்தவர்கள் அவர்கள்.

http://kgjawarlal.wordpress.com

@கார்த்திகை பாண்டியன்
தொடர்ந்துடுவோம்..

@கலையரசன்
என்னங்க யாரையும் காணோம். ஐம் வெய்டிங் :)

@என் பக்கம்
நன்றி

@பெயர் சொல்ல விருப்பமில்லை
நன்றி வருகைக்கு.

@வினோத்
அது உண்மை தான். ஆனால் நாம் அவர்களை மாற்ற முயல வேண்டியதில்லை.

@ஸ்ரீ
அடுத்த பதிவை இன்னும் தெளிவாக எழுத முயற்சிக்கிறேன்....

@கார்த்திகேயன்
கண்ணைக் குத்தும் கடவுள் மருந்தும் கொடுப்பார் என யாரும் சொல்லிக் கொடுக்கலையா?

@ஜவஹர்
உணர்வு தொடர்பானது என நீங்கள் சொல்வது சரியே! வருகைக்கு நன்றி.

நல்ல விடயம்... பதிவு என்பதால் பல பேரிட்டயிருந்து தப்பிட்டீங்க.... ஆனால் இதுதான் பேனாவுக்கு தேவை... விமர்சனங்கள் ஒருபுறமிருக்கட்டும் மனசில வாறத தைரியமா பேசுங்க. வாழ்த்துக்கள்.

பப்பு.. உண்மையாகவே நல்ல அழமான சிந்தனை.. கலக்குறடா. தொடர்ந்து எழுது..

:))))

தொடரட்டும்!

Agnostic..... எதாவது புது இங்கிலீஷ் பட பேரா.....

@poonkothai
வருகைக்கு நன்றி!

@கிஷோர்
இப்படியெல்லாம் சொல்லி தேத்துறதாலதான் பதிவிட்டுட்டு இருக்கேன் :)

@கார்க்கி
:)

@வால்ஸ்
சரியில்லையே.... :)

@பேநாமூடி
ரொம்ப ஜூப்பருங்கோ!

போட்டுத்தாக்கு....
கடைசியா குல சாமிக்கு கிடா வெட்டச் சொல்லப்போராங்கப்பா....:-)

i feel it would be good if u are a believer or an atheist instead of being an agnostic.

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!