வரவர நான் ரொம்ப பிஸி ஆகிட்டு வர்றேன். பரிட்சைகள் நெருங்குது. படிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. அதானால பதிவு எழுதுவது கொஞ்சம் கஷ்டம். அது எழுதும் நேரத்துல என்ன ஆயிரம் பேரு தேர்வுல முந்திகிட்டு இருப்பான். அதனால், நான் எழுதுவது நிறுத்திடலாம்னு......... சொல்லல. கிட்டதட்ட நிறுத்திக்கிறேன். ஆனா இடைவெளியில உங்களுக்கு டார்ச்சர் கொடுக்கனுமேன்னு யோசிச்சிக்கிட்டே இருந்தேன். கரப்பான் பூச்சிய பாத்தேனே, அதே மேஜையில் உட்கார்ந்து படிக்கும் முயற்சியில் புத்தகத்தில் நட்சத்திரங்களாக கிறுக்கிக் கொண்டிருந்த போது கண நேரத்தில் தோன்றியது இந்த யோசனை. மடமட வென்று அங்கயே உட்கார்ந்து செல்லில் ஒரு கவிதைய வடிச்சிட்டேன். எல்லாரும் அதை வடியாம, சிந்தாம, சிதறாம, பதறாம பருகி மகிழுங்கள். ஆனால், ஆங்கிலத்தில் எழுதி இருக்கேன். அப்பதான் என்ன எழுதினாலும் தப்பு ரொம்ப கண்டுபிடிக்க மாட்டாங்க. பல பேரு படிக்காம கூட நல்லாருக்குனு சொல்லுவாங்க. அதனால கோச்சிக்காம இங்கே(கிளிக்குங்க.. கிளிக்காம போறீங்க?) வந்து படிச்சிடுங்க!
ஆண்டவா இன்னும் இவ்வளவு இருக்கா படிக்க?
பப்பு.. வாழ்க்கைல முதல் முறையா உருப்படியான முடிவு எடுத்து இருக்க.... படி.. இதுஎல்லாம் அப்பறம் பார்கலாம்.. வாழ்த்துக்கள்..
படி படி நல்ல முடிவு தான்..
கவிதையெல்லாம் தமிழ்ல இருந்தாலே எங்களுக்கு அலர்ஜி. இதுல ஆங்கிலத்துல வேறயா? இருந்தாலும் படிச்சுட்டு நான் தமிழ்ல மொழி பெயர்ப்பு செய்ய முடியுமான்னு பாக்குறேன் :)
என்னா ஒரு வில்லத்தனம்! போய் பார்க்கிறேன். :)
படிக்கிறீங்களா???
//வரவர நான் ரொம்ப பிஸி ஆகிட்டு வர்றேன். பரிட்சைகள் நெருங்குது. படிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு.//
நல்லா என்னை மாதிரி படிக்கணும் சரியா
நல்லா படிங்கப்பா.. பரீட்சையில் வெற்றி பெற வாழ்த்துகள்..
Dei.. Romba padikkada.. Aprom namba kola perumaiya yaaru kaapaturadhu.. 36 eduthooma, pass aanomaa irukkanum!!
வரவர நான் ரொம்ப பிஸி ஆகிட்டு வர்றேன். //
என்னது இது. ஆரம்பமே பொய் சொல்லலாமா...
நல்லா படிச்சு தேர்வுகள் நல்லா முடிக்க வாழ்த்துக்கள். (ஏழு வருஷத்துக்குள்ள)
நண்பா முதல் டைம் இங்க , என்ன ஒரு வில்லத்தனம் !! நான் உங்கள் ப்லோக் லிஸ்ட் ஜோஇன் பண்ணிட்டேன்
ஹலோ பப்பு செல்லாது செல்லாது ரெட்டை ஓட்டா?ஒத்தை பதிவுக்கு? உள்குத்து என்பது இதுதானா?
ஓட்டுக்கள் போட்டாச்சு.
ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!..
இதுவேறயா?ஐயோ பயந்து வருதே?