மைக்ரோ ப்ளாக்கிங் 1

Filed under , , by Prabhu on 11/26/2009 12:35:00 AM

9

'Paa' பாடல்கள் இளையராஜாவின் இசையில் அருமையாக வந்திருக்கு. தன்னுடைய பழைய பாடல்களை ரிப்பீட்டியிருக்கிறார் என்றாலும் அவரது ஆர்கெஸ்ட்ரேஷனும் துல்லியமும் வாய்பே இல்ல. அவ்வளவு அழகா வந்திருக்கு 'Gumsum' எந்தப் பாடலின் ட்யூன் என்று தெரியவில்லை. ஆனால் 'Halke se bole' , 'புத்தம் புது காலை' எனத் தொடங்கும் தமிழ் பாட்டு போன்று  இருக்கிறது. 'Udhi udhi' எல்லா வெர்ஷனும் நல்லாருக்கு. அமிதாப் ஒரு பாட்டு சின்னப் பையன் மாதிரி பாடியிருக்கார். நல்லா இருக்குன்னுதான் நினைக்கிறேன், சரியா கேட்கவில்லை. தீம் ட்ரைலரில் கேட்டிருக்கலாம்.
மொத்தத்தில் Paa - soothing. தமிழில், இதமாக இருக்கிறது என்று சொல்லலாமோ?

'பையா' படப் பாடல்களும் வந்துவிட்டது. அப்பாகிட்ட ஐடியா கேட்பாரோ? இவரும் தன்னுடைய பழைய பாடல்களில் இருந்து இசையை மறுபதிப்பு செய்த மாதிரி இருக்கு. ஆனால் இந்தப் படப் பாடல்கள் வெற்றிக்கான அடையாளங்கள் தெரியுது.   'என் காதல் சொல்ல நேரமில்லை' என்ற பாடலில் யுவன் தன் குரலில் கிளப்பியிருக்கிறார். அவர் ரசிகர்களை பித்து பிடிக்க வைக்க இது போதும். பையா - அப்பாவுக்கு பையன்.

ஒரு நாள் சென்னையில எங்க சுத்தலாம்?  ஐடியா தேவைப் படுகிறது. பதிவுலக ஐடியா மணிக்கள் வரவேற்க்கப் படுகிறார்கள்.

என்ன கொடும சரவணன் இது! அதுக்குள்ள CAT வந்துருச்சே. ரெண்டு நாளில் நான் பதிவு செய்த ஸ்லாட் வருவதால் CAT எழுத செல்கிறேன். எல்லாரும் கடவுளை வேண்டிக்க வேண்டுகிறேன். பாலா, தருமி, வால்ஸ் மாதிரி ஆட்கள் கடவுளை இல்லைனாலும் 'இந்தப் பையன் தேறனும்' என்று மனதுக்குள் ஒரு செகண்ட் நெனச்சுக்கோங்க.

Comments Posted (9)

தேறிடுவீங்க......!!! வாழ்த்துகள்.

முடிச்சிட்டு வந்தா போதும்.....!!!!

CAT க்கு மணி கட்ட வாழ்த்துக்கள்

gum sum தும்பைப்போல் னு ஒரு மலையாலப்பாட்டு, தமிழ்ல "என்னுள்ளே என்னுள்ளே சின்னஞ்சிறு மாற்றம் " வள்ளி படத்துல ஜானகி அம்மா பாடின பாட்டு. gum sum அந்த தும்பைப்போல் பாட்டோட 8வது வெர்ஸனாம்.

//CAT க்கு மணி கட்ட வாழ்த்துக்கள்//
நசரேயன் உங்களுக்கு ஓவர் குசும்புங்க

CATக்கு பப்பு மணி கட்ட வாழ்த்துக்கள்

இப்படி மாத்திக்கலாமா?

இந்த வாக்கியத்தை வைத்து அப்படியே பின்னாடி வரவங்க தொடர் பிண்ணூட்டமா ஆரம்பிங்கப்பா

good luck

all the very best, pappu.

உங்க நண்பர் 'கார்த்தி' கிட்ட கேளுங்க... அவருக்கு சென்னையில தெரியாத இடமில்லை... அவர் படிக்கும் லயோலாவே கொள்ளை அழகா இருக்கும்!.

ஆமா இந்த மாதிரி வர பசங்க ஒரு பிளானோடதான் வராங்கலாமே!

CAT பாஸானதும் ட்ரீட் கொடுக்க மறந்திராதீங்க பப்பு :)

நான் சென்னை திரும்பிட்டேன். எங்க இருக்கீங்க? :) :)

@கிருஷ்ணா : ஹிஹி :)

பா இனிமேதான் கேட்கணும். கேட்டுட்டு சொல்றேன்.

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!