டாப்பு அடிக்கலாம் - 5

Filed under , by Prabhu on 11/19/2009 05:00:00 PM

23

சமீபத்தில் ( 16.11.09) செய்தி கேட்டுக் கொணடிருந்தேன். இந்திய மீனவர்களை இலங்கை வீரர்கள் தாக்கிய சம்பவம் பற்றி கூறிக் கொண்டிருந்தார்கள். வழக்கமா அவனுங்க பண்ணுற அநியாயம் தான என கேட்டா ஒரு விந்தையான விஷயம் சிக்கியது. அவர்களை அடித்ததவர்களில் சீனர்களும் இருந்திருக்கிறார்கள். சீனக்காரர்களுக்கு இங்கு என்ன வேலை என்று நீங்கள் கேட்கலாம். அதுதான் புரியவில்லை. ஏற்கனவே இலங்கையில் ரேடார் வைக்க முயற்சிகள் நடந்தன. இதைப் பற்றியெல்லாம் ஏற்கனவே இங்கு பேசியிருக்கிறேன். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் விமானங்கள் கொடுத்ததுடன் பயிற்சியும் கொடுத்துள்ளது. மியான்மரில் விமானதளம் வைத்துள்ளது. 1982லபாக்.,கிற்கு  ந்யூக் கொடுத்ததா கேள்வி. என்ன பண்ணுறாய்ங்கன்னு தெரியல. விரைவில் உலக போலீஸ்-2 ஆகலாம். ஏன்னா நம்மளப் பற்றி பல வகையில புலம்ப ஆரம்பிச்சிருக்காங்க (அமெரிக்கா பிடிக்காதவங்களப் பத்தி புலம்புற மாதிரி).
---------------------------------------------------------------------------------------------------------------
விஜய் 'மதுர', அஜித் 'ரெட்', விஷால் 'திமிரு' என பல தேறாத படங்கள் மதுரையை மையமாக வைத்து எடுத்த போது கூட நான் கவலைப் படவில்லை. ஆனால் இப்போ 'மதுரை சம்பவம்' என ஒரு படம் வந்தது பாருங்க, அதுமாதிரி ஒரு அவமானம் கிடையவே கிடையாது இந்த ஊருக்கு. கொஞ்ச நாள் முன்ன வரை அப்பப்ப விளம்பரம் வேற டிவியில் போட்டு கொன்னுட்டாங்க. எல்லாருக்கும் ஒரு படம் பிடிக்க வில்லை என்றால் வெறுப்பு வரலாம். ஏன் கோபம் கூட வரலாம். உ.ம்.சன் திரைப்படங்கள். ஆனால் இந்த படத்தின் டிரைலர் பார்க்கும் போதெல்லாம் ஒரு மாதிரி கூசுது, அவமானம் எனக் கூட சொல்லலாம். எனக்குதான் என நினைத்தால் எனக்கு தெரிஞ்சு நண்பர்கள் பற்பல மக்கள் இதைத்தான் சொல்றாங்க. எங்கம்மாவுக்கே எரிச்சலா இருக்கு.  இந்த அவமானம் தேவையா? அதுவும் அந்த ஹீரோ பேசுற தமிழ் இருக்கே... யப்பா.... மதுரைத் தமிழாம். இந்த ஒத்த வார்த்தைக்கே தூக்கு போட்டுக்கலாம் போல. ஹாலில் தனியாக டிவி பார்க்கும் பொழுது இந்த டிரைலர் போட்டால் ஒரு முறை சுற்றிப் பார்த்துக் கொள்வேன், யாரும் நம்மள பாக்கலையே!

மதுரை சிட்டி. நான் சிட்டி யூத். எங்க ஊரில யாரும்  தாவணியில் கல்லூரிக்கு போவதில்லை(கார்த்திக் நோட் பண்ணிக்கோ!). எல்லோரும் ஜீன்ஸ் அணிகிறோம். காஃபி ஷாப் போகிறோம். பீஸா, பர்கர் போன்ற உடலுக்கு ஒவ்வாதவைகளை உள்ளே தள்ளுகிறோம். அதனால நாங்களும் சிட்டிதான்! இனிமே எவனாவது வந்து தாவணி, பட்டிகாடு, அரிவாள், ரவுடி, கிராமத்து காதல் கதைனு வந்தீங்க..... நடக்குறதே வேற.

 --------------------------------------------------------------------------------------------------------------
 அப்பா நல்லெண்ணெய் பாக்கெட்டை வெட்டி ஊற்ற வேண்டிய வேலை இருந்தது. நான் பாக்கெட்டை பிடித்துக் கொள்ள அப்ப வெட்ட தயாரானார். நான் சரியாக பிடிக்கவில்லை என நினைக்கிறேன். "ஏய், வெட்டுறதுக்கு எசவாப் பிடிடா", என்றார். பொதுவாக பயன்படுத்தும் வார்த்தை என்றாலும் அந்த 'எசவா' என்ற வார்த்தை பொறி தட்டியது. நல்ல தமிழில் 'இசைதல்' எனற வினைச்சொல் இருக்கிறது. ஆமோதித்தல், வளைந்து கொடுத்தல் போன்ற சமயங்களில் பயன்படுத்துவோம். 'இசைவாக' என்பதைத்தான் நாம் கொச்சையாகப் பயன்படுத்துகிறோம் என நினைக்கிறேன். இந்த வார்த்தைப் பிரயோகம் எல்லோர் வட்டார மொழியிலும் இருக்கிறதா? இங்க கொஞ்சம் தனித்துவமா இருக்குமோ என்ற நினைப்பில் எழுதினேன்.

இப்ப சொன்னேன் பாத்தீங்களா? இது மதுரைத் தமிழ். நல்ல தமிழ்.
---------------------------------------------------------------------------------------------------------------

லிட்டில் ஜான்
நம்ம ஜானுக்கு ஒரு  குட்டி சைக்கிள் வாங்கனும் என ரொம்ப நாள் ஆசை. அம்மாகிட்ட கேட்டான். அதற்கு அவன் அம்மா, ஜீசஸிற்கு கடிதம் எழுது, அவர் நிறைவேற்றி வைப்பார் என சொல்கிறாள். அவனும் எழுத அமர்கிறான். "அன்புள்ள ஏசுவே, நான் ரொம்ப நல்ல பையனா இருந்துகிட்டிருக்கேன். எனக்கு ஒரு சைக்கிள் வேணும். இப்படிக்கு ஜான்" என எழுதுகிறான். பிறகு யோசனையுடன் அதைக் கிழித்துவிட்டு, "அன்புள்ள ஏசுவிற்கு, நான் சில சமயங்களில் நல்ல பையனாக இருந்திருக்கிறேன். எனக்கு ஒரு சைக்கிள் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு ஜான்", என எழுதி அதையும் கிழித்துவிட்டு புதிதாக எழுதத் தொடங்கினான். "அன்புள்ள ஏசுவே, நான் நல்ல பையனாக இருக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளேன். எனக்கு நீங்கள் ஒரு குட்டி சைக்கிள் தர வேணும். இப்படிக்கு ஜான்", என எழுதினான். இதுவும் பிடிக்காம கிழித்துவிட்டு வெளியே சென்றான். செல்லும் வழியில் ஒரு வீட்டு வாசலில் மாதா சிலையை பார்த்ததும் அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு விடுவிடுவென ஓடி வந்தவன், அதை படுக்கையின் அடியில் வைத்து விட்டு கடிதம் எழுதினான். "அன்புள்ள ஏசுவிற்கு, நீங்க உங்க அம்மாவ மறுபடி பார்க்கனும்னு நினைச்சீங்கன்னா மரியாதையா எனக்கு ஒரு சைக்கிள் அனுப்பி வைங்க. இப்படிக்கு ஜான்".
---------------------------------------------------------------------------------------------------------------

நம்ம ஊருகாரன் அமெரிக்காவுல இருக்கான். அவன் ஒரு ஓரினச் சேர்க்கையாளன். ஒருநாள் சோகமாக 'Gay பாரில் மார்டினி(ஸ்ட்ராங். டயர்டா/சோகமா இருந்தா அடிப்பாங்க போல) ஆர்டர் செய்கிறான். ரெண்டு, மூணு ரவுண்டு கப் கப்புனு அடிக்கிறத பாத்த பார்மேன், "என்னப்பா ஏதாவது கஷடமா?" எனக் கேட்டான். அதற்கு அவன், "எங்க அண்ணனும் 'gay'யாம். எனக்கு இன்னைக்கு தெரிஞ்சப்போ எவ்வளவு அதிர்ச்சி தெரியுமா?" என்றான். பார்டெண்டர், இந்தாப்பா இன்னொன்னு போட்டுக்கோ எனக் கொடுக்கிறான். அடுத்த நாள் அவன் வருகிறான். மீண்டும் தாறுமாறாக தண்ணி அடிக்கிறான். என்னவென்று கேட்டதற்கு, "என்னோட ரெண்டாவது அண்ணனும் gayயாம் இன்னைக்கு தெரிஞ்சது. இவ்வளவு காலமாக இந்த உண்மை எனக்கு தெரியவே தெரியாது" என்றான். பரிதாபப்பட்ட பார்டெண்டர் இன்னும் கொஞ்சம் ஊத்திக் கொடுத்தான். மறு நாளும் அவன் வந்தான். இன்னைக்கு என்ன என்று பார்டெண்டர் கேட்டதற்கு, "என் தம்பியும்..." எனக் கூறக் கடுப்பான பார்டெண்டர், "ஏன்யா, உங்க குடும்பத்துல யாருமே பொம்பளைய லவ் பண்றவங்களே இல்லயா?" எனக் கேட்க அவன் அப்பாவியாய், "ஏன் இல்ல? என் தங்கச்சி இருக்காளே".
--------------------------------------------------------------------------------------------------------------
கவிதையெல்லாம் எழுதுவாங்க எல்லாரும். நான் ஒண்ணு இங்கிலிபீசுல எழுதினேன். பிரமாதமான வார்த்தைகள் எல்லாம். இல்லை; உரைநடை வார்த்தைகள் போன்று எளிமையாக எழுதினேன். ஆனால் ஒரு வலுவான மையக் கரு வைத்திருந்தேன். ஆனா அதெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியாது. சப்பயா நாலு டயலாக் சொல்லிட்டு கடைசி வரியில ஒரு இங்கிலீசு கெட்ட வார்த்தையோட முடிச்சிருக்கேன். யாராவது அதையும் மீறி ஆப்பு வேணும்கிறவங்க எ-கடிதம் மூலம் என்ன தொடர்புங்கோ!

Comments Posted (23)

நண்பர்கள் கவனத்திற்கு

Tamil Web Submit Tamil News Submit English Top Blogs Cinema Cine Gallery

2012 உலகம் அழியப்போகுது. சீனாவுல செய்யிற கப்பல் தான் எல்லாரையும் காப்பாத்த போகுது. அதுனால இந்தியாவை சீனாவோட சேர்த்துடறது தான் பாதுகாப்பு :)

//இப்போ 'மதுரை சம்பவம்' என ஒரு படம் வந்தது பாருங்க, //

அது வந்து சில பல மாசங்கள் ஆச்சே... இன்னுமா டிரைலர் ஓடுது?

//எல்லோரும் ஜீன்ஸ் அணிகிறோம். காஃபி ஷாப் போகிறோம். பீஸா, பர்கர் போன்ற உடலுக்கு ஒவ்வாதவைகளை உள்ளே தள்ளுகிறோம். அதனால நாங்களும் சிட்டிதான்!//

அதெல்லாம் சரி காதுல சொருகி வச்சிருக்கிற பேனாவை எடு முதல்ல...

ரெண்டு ஜோக்கும் நல்லா இருக்கு மக்கா

:-)))))

ஜோக்கு அருமை ராசா...கலக்கு...பரீட்ச்சை எல்லாம் எப்படி எழுதினே?

மதுரையை பத்தி இனிமே எவனாவது இப்படி கேவலப் படுத்த வந்தா என்னையும் உன்னோட சேர்த்துக்கோ....:-)

பிஸ்ஸா.. பர்கர்..... ஹும்...., கண்டுபுடிச்சவனே.. சாப்படாம.. எஸ்கேப் ஆவறானுங்க.

இதெல்லாம் சாப்ப்ட்டாதான்.. ‘சிட்டி’யா? வெளங்கிடும்!

ஜோக் ரெண்டும் சூப்பரு!!!

//////
நம்ம ஊருகாரன் அமெரிக்காவுல இருக்கான்./////

யாரை நினைச்சி.. இதை எழுதினீங்க? :) :)

@ஆதவன்
காதுல சொருகின பேனாவா? தலைவா இவ்வளவு குசும்பு ஆகாது.

@ஸ்ரீ
நல்லா சிரிக்கிறீங்க!

@ரோஸ்விக்
இன்னும் பரிட்சை எழுதவே இல்லை.

@பாலா
அய்யோ, சாமீ இந்த கதைய எழுதும் போது நான் உங்களை நினைக்கவே இல்ல. நீங்களாதான் வந்து கன்ஃபெஷன் குடுத்து..... ஹி.. ஹி...

எனக்கும் நிறைய சமயம் தோணிச்சி பப்பு.. இப்போ நம்பிட்டேன்.. மதுரை சிட்டி தான்..

ஜோக் ரெண்டும் செம லந்து..

கன்ஃபெஷனா?

நான் வேற ஒன்னு.. எழுதி.. பப்ளிஷ் பண்ணியிருக்கேன். அந்த நேரத்துல இது வேறயா?

கிழிஞ்சது! :)

cycle?good boy john.

Merci mon frère.

//எங்க ஊரில யாரும் தாவணியில் கல்லூரிக்கு போவதில்லை//

அச்ச்சச்சோ.. அப்போ நான் தாவணி பெண்களை பார்க்க எங்க போகனும்? இத வேற பெருமையா சொல்லிக்கிட்டு.. போப்பா போப்பா..

@கிஷோர்
நீங்க நம்புவீங்க. நம்மாளாச்சே!

@பாலா
கதை ஜூப்பரு.

@கார்க்கி
பெருமையில்ல கார்க்கி. உங்களை அறியாமையில் இருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரேன். இப்படி தப்பான தகவல் கொடுத்து எல்லாரும் மதுரைக்கு வந்தா இப்படியெல்லாம் பாக்கலாம் நினைக்கவச்சு ஏமாத்துறாங்க

செம சுவாரஸியம்யா உங்க எழுத்து நடை...!
செம ஸ்பீடா படிச்சுட்டேன்.

//உங்களை அறியாமையில் இருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரேன். //

அய்யா காமராஜரே!! எங்க கண்ண தொறந்திட்ட சாமீ :))))))

அப்ப கூட நான் மதுரை வந்தா தாவணிய பார்த்துட்டுதான் போவேன். எப்படி சொல்லு?

@ராஜூ
நன்றி :)

@கார்க்கி
அது எப்பிடி? நீங்களே சொல்லுங்க. :)
something fishy. யாரையாவது ஆல்ரெடி பாத்து வச்சிருக்கீங்களோ?

ஹாஹா..மாட்டு தாவணி பார்ப்போம் இல்ல..

மதுரையைப் பத்தி நியாயமான கோபம். ஆனாலும், மதுரை சிட்டின்னு எல்லாம் காமெடி பண்ணக் கூடாது பப்பு.

தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் நல்லா இல்லாமலா...

லிட்டில் ஜான் - ரசிக்க முடிந்தது.

பப்பு மதுரயில நீங்க எங்க?
எங்க பாட்டி வீடு நேதாஜி ரோடுல உண்டு,
எனக்கு மதுரை ஹாஃப் ஹோம்டவ்ன்.
ஓட்டுக்கள் போட்டாச்சு

அந்த மதுரை சம்பவத்தை பாக்கசொல்ல எனக்கு ஒரு கொலைவெறி வரும் பாரு..

மதுரை சிட்டியா அது சரி..மூணாவதும் ஜோக்ம் சூப்பராக்கீது..:)

@கார்க்கி
யப்பா, முடியல. அப்புறம் அழுதுறுவேன்! :) நீங்க எப்பவுமே இப்படித்தானா? ;)

@விக்கி
அய்ய, நம்ம சிட்டின்னு சொல்லலைன்னா யாரு சொல்லுவா? இது கொஞ்சம் சின்ன சிட்டி அவ்வளவே!

@கார்த்தி
அட என் பழைய ஏரியா கிட்ட! இப்போ ஜெய்ஹிந்த்புரம்

@வினோத்
அதே. அதெல்லாம் ஒரு ஆள்னு..... தலை எழுத்து. அந்த தமிழக் கேட்டு எனக்கு நாலு நாள் அஜீரணம்.

//இனிமே எவனாவது வந்து தாவணி, பட்டிகாடு, அரிவாள், ரவுடி, கிராமத்து காதல் கதைனு வந்தீங்க..... நடக்குறதே வேற.//
மதுரையில்தான் தாவணி இருக்குப்பா.......மாட்டுத்தாவணி (தல, எப்புடி நம்ம கடி?)

ஜான் ஜோக் சூப்பர். Gay ஜோக் சூப்பரோ..............சூப்பர்!

//எங்க ஊரில யாரும் தாவணியில் கல்லூரிக்கு போவதில்லை(கார்த்திக் நோட் பண்ணிக்கோ!)

அப்ப உங்க ஊருக்கு நான் வரல. ;))

ஜோக்ஸ் கலக்கல். :D

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!