கூ.....கூ........ வடக்கே போகும் ரயில்

Filed under , by Prabhu on 8/27/2009 08:10:00 AM

5

எல்லாம் சரியா இருக்கா? வீட்ட பூட்டிட்டயா? இழுத்துப் பார்த்தயா? ப்ரஷ் எடுத்து வச்சயா? முதல்ல நாளைக்கு போட ஜட்டி எடுத்து வச்சயா? இப்படி பல ஆதாரக் கேள்விகள் கேட்கப்பட்டதென்றால் ஊருக்கு கிளம்புகிறேன் என்று அர்த்தம். ஆனா ஊருக்கு போவதற்குள் ஒவ்வொருத்தரும் பண்ணுகிற ஆயுத்தம் இருக்கிறதே! எனக்கு தெரிந்து ஒரு காம்பௌண்ட்டில் வாழும் நபர், தனது கழிவறையை மட்டும் பூட்டி விட்டு செல்வார், பூட்டு போட்டு! அங்க என்னங்க தங்கமலை ரகசியமா இருக்கு என கேட்கலாம்! ஆனால், பூட்டாமல் நாலு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் அவசரமாக கழிவறைக்கு செல்லும் போது, எவனோ திருட்டுத்தனமாக நாலு நாளைக்கு முன்னால் பண்ணிய அசிங்கம் காய்ந்து இருந்தால் அதன் அத்தியாவசியம் தெரியும்.

அப்புறம் மற்ற ஊரிலிருந்து சென்னைக்கு போறவங்க கனவு, அங்க போனதும் அதப் பாக்கனும், இதப் பாக்கனும், அப்படியே பீச் போகனும், சத்யம் சினிமாஸ் போகனும் என பல. ஆனால் அங்க இருக்குறவன், நான் கடைசியா பீச்சுக்கு போனது பன்னிரண்டாம் வகுப்பு லீவுல என்பான், சரி, சத்யம் கூட்டிட்டு போவான்னு பாத்தா சத்தியமா காசு இல்ல மாப்ள் என்பான். இவனுங்கள நம்பி பிரயோஜனம் இல்லன்னு புரிஞ்சுக்கிட்டு, நண்பனப் பாக்கப் போறேன்னு நம்மளே ஊரச் சுத்திட்டு வந்திடனும்.

இது பத்தாதுன்னு இன்னொரு குரூப் அலையுறானுங்க! கடலை போட கெளம்பிடுறானுங்க! ஆர்குட்ல மீட் பண்ணி ஸ்கராப் அனுப்பிக்குறாங்க, அப்புறம் மொபைலுக்கு தாவிடறாங்க! அடுத்து சென்னைக்கு நுழைவுத்தேர்வு எழுத அனுப்புனா, ரெண்டு நாளைக்கு முன்னாடியே போய் கடலை போட்டுகிட்டு ஊரச் சுத்துறானுங்க! நமக்கு வயிறு எரியுது பாஸ்! அதுவும் நாம ஒரு பையனோட ஸ்பென்சர்ல சுத்திட்டு இருக்கும் போது, அங்கயும் அவனுங்க எதிர்பாராம வந்து கடுப்ப கெளப்புவானுங்க! போங்கடா, சென்னைல வேற இடமா இல்ல! நாங்க போற இடத்துக்கா வருவீங்க?

எங்க போனாலும் அங்க அத வாங்கிட்டு, இங்க இத வாங்கிட்டு வான்னு ஒரு குரூப் அலைவானுங்க! சின்னப் பையன் என்பதால் எனக்கு அந்தப் பிரச்சனை இல்ல. ஆனா, ஊருக்கு போய் வந்த பிறகு அந்த ஊர் பொண்ணுங்க எப்படின்னு சில குறுந்தகவல் விசாரிப்புகள் இருக்கும்!

எனக்கு பொதுவாகவே பஸ் பயணங்கள் அவ்வளவாக பிடிப்பதில்லை. ரயில் பயணங்களையே விரும்புகிறேன். அந்த தடக் தட்க்குடன், சிறு குலுக்கல்களுடன், ஒரு சிப்ஸ் பாக்கெட்டோ, இல்ல கொண்டு செல்லும் உணவோ, காதில் இயர் போன்களுடன்... பயணமே தெரிவதில்லை. ரயில் அனுபவங்கள் பல. ஒரு நண்பன் கூட கிடைத்திருக்கிறான். இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என யோசிக்கலாம். நாளைய வைகை எக்ஸ்பிரஸில் சென்னை செல்கிறேன். ஞாயிறு வரை அங்கிருப்பேன்.ஞாயிறு மதியம் அங்கிருந்து கிளம்புகிறேன். My senseless, silly romantic non-poetic poem but with rhyme and hymn could be found here.

கந்தசாமி - வந்த கதை, போன கதை

Filed under , by Prabhu on 8/21/2009 11:53:00 PM

12

ஒரு கம்ஃபோர்ட் ஜீன்ஸ், டீ-ஷர்ட் எடுத்து போட்டுக்கிட்டு, கூலிங் கிலாஸ போட்டுக்கிட்டு காலேஜ்க்கு மத்தியானம் போல போயும் கண்ணுல ஒரு அழகான பொண்ணும் அகப்படாத போதே சகுனம் புரிஞ்சு முயற்சிய கை விட்டுருக்கனும்.விதி யாரவிட்டது? இல்ல ரிசர்வ் பண்ண கொடுத்த பணமாவது விடுமா? கொஞ்சமா மழை பெய்யும் போது பைக்க எடுத்துக்கிட்டு கோரிப்பாளையம், சினிப் பிரியா தியேட்டர் வழியாக அண்ணாநகர்(மதுரையிலயும் ஒண்ணு இருக்கு!) போய் ஃபிரண்டு வீட்டுல 'Quickgun Murugun'டிரைலரையும் அதோட க்ளாசிக் எபிசோட்ஸையும் பாத்தவன், அதையே மூணு மணிநேரம் பாத்துக்கிட்டே உக்காந்திருக்கனும். அப்பயும் புத்தி வரலை.

அங்க தியேட்டருக்கு போனா அவனோட நண்பர்கள் பத்து பேரு காத்துக்கிட்டு இருந்தானுங்க. மதுரையில முதல் நாள் படத்துக்கு போனா குட்டி பையனா நம்மளோட ஜட்டிகூட போடாம விளையாண்ட நண்பனக்கூட கண்டுபிடிச்சிடலாம் போல! என்கூட 10வரைக்கும் படிச்சவன், 12ம்வகுப்ப்கு படிச்சவன், காலேஜ்ல 1 மாசம் வந்துட்டு இன்ஜினியரிங் காலேஜ் போனவன்னு ஒரு கூட்டத்தையே பாத்தேன். அப்ப கூட ஒருத்தன் எழுபது ரூபா டிக்கட்ட நூறுக்கு கேட்டான். இந்த வருஷம் நான் பாக்குற இரண்டாவது தமிழ் படம் இதுதான்னு முடியவே முடியாது்ன்னுட்டேன். இது எல்லாம் படம் சுமார் என விமர்சனம் கேள்வியுற்றபின்! விதி.... வலியது!

பிக் சினிமாஸ் ஜாஸ் தியேட்டரின் சில்லென்ற அரங்கில் நுழைந்த பிறகுதான் படம் எப்படி இருக்குமோ என்ற எண்ணமே வந்தது. படம் ஆரம்பிக்கும்போது என் பக்கத்தில் என் பெயரையே உடைய இரு நண்பன் உட்கார்ந்தான். என் பேரு வச்சவனுங்களுக்கெல்லாம் ஸ்பீக்கர் குரலும், காது வரைக்கும் வாயும் இருக்கும் போல. இதற்கு அவனும் விதி விலக்கல்ல. 'இளைய திலகம்'பிரபு பேருக்கு விசில் அடிக்கும் போதே அவன் ஆட்டம் ஆரம்பிச்சிருச்சு. வசூல்ராஜாவில இருந்து இப்பவரைக்கும் ஹீரோவ விட்டுட்டு வம்புக்குன்னே பிரபுவுக்கு விசில் அடிக்கிறதுல அவனுக்கு அலாதி பிரியம். கோழி வேஷ விக்ரம் அவுட்லைனா கிராஃபிக்ஸ்ல ட்ட்ர்ர்ரும்ம்ம்ம்னு சத்தம் வரும்போதே வித்தியாசமா இருந்ததுன்னு சொன்னா அத படத்தோட சேத்து புரிஞ்சிக்க கூடாது.

எடுத்த உடனே திருப்போரூர் கந்தசாமி கோவில்ல ஒரு ஏழை வேண்டிக்கும் போது அய்யர் மரத்துல எழுதி கட்டிவச்சு வேண்டிக்க சொல்ல, அவங்க கட்டி வைக்க, அவங்க வீட்டு வாசல்ல திடீரென பணமிருக்க, அத இன்ஸ்பெக்டர் மன்சூர் அலிகான் கிட்ட கொடுக்க, அவன் ஆட்டயப் போட, ராத்திரி தண்ணி போட, அப்புறம் குறட்டை போட(ரைமிங்குக்காக போடன்னு மாத்திருக்கேன், டைமிங்க டிஸ்டர்ப் பண்ணாதீங்க!) போட, அப்போதான் கால்ல தேள் கொட்டுன மாதிரி ஹைபிட்சுல தேவிஸ்ரீபிரசாத்(DSP) கத்த .... உர்ர்ர்ட்ட்ர்ர்ரூம்(டிரம்ஸ் உருமல்!) கந்தசாமீஈஈஈஈஈ..என்ற சத்ததோட அப்படியே கைய விரிச்சுக்கிட்டே குதிக்கும்போது, தப்பா சொல்லிட்டாங்களா? படம் நல்லாருக்குமோன்னு நினைக்கும் போதே சொதப்பிட்டாங்க! தேவையில்லாம ஸ்லோ மோஷன ஃபைட்டுல காட்டுறது. உண்மையிலயே ஃபாஸ்ட்டா காட்டுனா செம ஃபைட்டா வர வேண்டியது. தேவையில்லாம இழுக்குது. அதுக்கப்புறம் கந்தசாமி(you know, tamil god)தான் எல்லாம் செய்யுறாருன்னு பணத்த திருப்பி கொடுத்துறாரு மன்சூர். இப்படி கடவுள் தான் நிறைய செய்யுறாருன்னு நம்ப வச்சுடறாரு விக்ரம். இந்த பாராவ குறிச்சுக்கோங்க. சொல்லும் போதெல்லாம் திரும்ப படிச்சுக்கோங்க. ஏன்னா இதைதான் படம் முழுக்க செய்யுறாரு.

அப்புறம் சி.பி.ஐ. கந்தசாமி விக்ரம். இவரு ரெய்டுல ஆசிஷ் வித்யார்த்திய பிடிச்சிடுறாரு. அவரு வலிப்பு வந்த மாதிரியா பெத்த பொண்ணு ஸ்ரேயா முதற்கொண்டு எல்லாரிடமும் நாடகம் ஆட, ஸ்ரேயா காதல் வழியாக பழிவாங்க துடிக்கிறார். இதுக்கு நடுவுல இன்னொரு வில்லன் வேற. அப்புறம் திரும்பவும் மேற்சொன்ன பாராவில இருந்து சில சாகச பிட்டுகள திரும்ப சேத்துக்கோங்க. அது மூலமாக வழக்கமான ராபின்ஹூட் வேலைய கந்தசாமி(கடவுள்) பேரில கந்தசாமி(சி.பி.ஐ) பண்ணிக்கிட்டு இருக்காரு. மெக்சிகோ போயும் செய்யுறாரு(அங்கயுமா?). கடைசில மக்கள முன்னாடி வில்லன தோலுரிக்கிறார்.
சரி... ராபின் ஹூட் ஆவதற்கான காரணம் - may be lamest reason of the century. ஆனால் chaos தியரி வச்சு சரிகட்டிடலாம் என தோணுது.
ஏன்யா கடைசி காட்சியில மக்கள் திடீரென தெரியாத ஒருத்தருக்காக போராடுறது, அப்புறம் ஒவ்வொரு விஷயம் நடக்கும் போது இதுக்ல்லாம் ஒருத்தன் வருவான்டான்னு சொல்லுறது, அப்புறம் ஹீரோ மறைமுகமா என்னமாவது செய்யும் போது டிவி, பேப்பர் பாத்துட்டு வச்சுட்டாண்டா ஆப்பு, இனிமே அவ்வளவுதாம் லஞ்சம் பஞ்சம் எல்லாம் குடும்பத்தோட இந்தியாவ விட்டுப் போய் பசிபிக் கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிக்கும்ங்கிற ரேஞ்சுல பேசுறது, இதை எல்லாம் பாக்கும்போது கடுப்பா இருக்கு. சுசி நீங்களுமா?

முதல் கேள்வி எனக்கு தோன்றியது என்னவென்றால், இதையா ரெண்டு வருஷமா எடுத்தாங்க, இந்த கோமனத் துணி கதையத் தான் பெருசா இருக்குற மாதிரி சொல்லிருக்கேன். இண்டர்வெல்லில் படம் சுமார் என சொன்னதற்கு அப்படியெல்லாம் சொல்லி மனச ஆத்திக்க வேண்டியதான்னு சொல்லிட்டான் பக்கதுல இருந்தவன். சென்சார் போர்ட் சர்டிபிகேட்ல இருந்து கிளைமாக்ஸ் வரைக்கும் கதை நகரவே மாட்டேங்குது. குச்சி வச்சு குத்தினாலும் நுரை தள்ளின மாடு மாதிரி நிக்குது.கதையில லாஜிக் ஓட்டைங்கிறது உளுந்த வடையில ஓட்டை மாதிரி இருக்கனும். ஆனா, படமோ கண்ணாடி வளையல் அளவு ஓட்டைதான் பெருசா இருக்கு. சுத்தி கதை ஒண்ணும் இல்ல.

விக்ரம் - செம ஸ்மார்ட். நல்ல நடிப்பு. சின்சியாரிட்டி. சேவல் தோற்றத்தில் செய்யு மேனரிஸம் எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது. அசால்ட்டா ஸ்மைல் பண்ணும் போது அழகாக இருக்கிறார். என்ன செய்வது விக்ரம்? கதை இல்லயே? ஸ்ரேயா- அழகு. கட் செய்த முடி பொருந்துகிறது. கவர்ச்சியான ஆடை அணிந்து செதுக்கி வைத்த மாதிரியான உடலை காட்டுவதில நல்ல கவனத்தை செலுத்தியிருப்பது,பக்கத்து சீட்டிலிருப்பவன் ஸ்ரேயாவை பார்க்கும்போதெல்லாம் நெளிவதில் தெரிந்தது (இன்னைக்கு தூங்கின மாதிரிதான்னு அவன் சொன்னது வேற கதை). வடிவேலு வேஸ்ட். படத்துல கொஞ்ச நஞ்சம் இண்ட்ரெஸ்ட் இருந்தாலும் கெடுக்கிறார். இவ்வளவு மொக்கையை சமீபத்தில் நான் அனுபவிச்சதே இல்லை. சுசி கணேசனே தோன்றி நடிக்க முயற்சி செய்து உள்ளார். ரெண்டு வில்லனுங்களும் சுத்த வேஸ்ட். இவ்வளவு சப்பையான வில்லன்களா? விக்ரம் மேலதிகாரியா மட்டமான தமிழ் பேசுறவர் தான் எங்கள் டோலிவுட் சிங்கம், தன்மான தங்கம் 'பிரின்ஸ்' பாபு (அ) மகேஷ் பாபுவின் தந்தை என்பதாக கேள்வி. நல்லா பாத்துக்கோங்க!

ஒவ்வொருத்தனும் ஓடிவரும்போது கண்ணைக் கட்டி இருந்தாலும் சத்தத்தை வைத்து ஒண்ணு, ரெண்டு என எண்ணுவது, 'உங்கப்பனுக்கு நிஜ வலிப்பில்ல, வலது கை இழுத்தா வாய் இடது பக்கம் கோணும்" உங்கப்பனுக்கு வலது பக்கம் கோணுது' என சொல்லுவது என பல விஷயங்கள ஆங்கில பட அளவுக்கு நுணுக்கம் கொண்டுவர முயற்சி செய்திருக்காங்க.

டெக்னிக்கலா பெர்ஃபெக்ஷன் கொண்டு வர முயற்சி செய்ததன் அடையாளங்கள் தெரிகிறது. படத்தின் சுற்றுசூழல் ஒரு plush செட்டடிங்கில் இருக்கிறது.ஆர்ட் வொர்க் அபாரம். ஆனால் இந்தியா ஒளிர்கிறது மாதிரி இவ்வளவு அழகாகவா சி.பி.ஐ. ஆபிஸ் இருக்கு? சி.பி,ஐ ஐஸ்ல முகத்த முக்கி அடிக்கிறதுக்கு கூட க்ளாஸ் பவுல யூஸ் பண்ணுது. அத விடுங்க கரண்ட் ஷாக் குடுக்க கூட கம்ப்யூட்டர் பயன்படுத்துறாங்க! ஆங்கில படங்களின் சைட் எஃபெக்ட்! ஸ்டண்ட் நன்றாக் இருந்தது. ஆடை வடிவமைப்பு மிக அருமை. ஸ்ரேயாவின் டிசைனர் ஆடைகள் மறைப்பதை விட காட்டுவது அதிகம். கேமரா நல்ல ஸ்டைலிஷ் ஹேண்டிலிங். கேமரா வோட வெயிட்லதான் படமே நிக்குது. ஆனா, சேஸிங் காட்சியில் கேமரா வேகம் பத்தல. ஹெலி கேமரால எடுக்கும் போது ஏதோ சாதாரணமாக போவது போல உள்ளது. இயக்கம் ஓக்கே. ஆனால் எழுத்து ...ம்ஹூம்... தேறாது. இந்த வருடத்தின் பல முண்ணனி இயக்குனர்கள் போன்று இவரும் ஸ்கிரிப்டுல கவுந்துட்டார். நிறைய ஸ்கோப் இருந்தது விக்ரமோட சேவல் கேரக்டரில, ஆனா அதுக்கேத்த கதையில்ல!

பக்கத்திலிருந்த நண்பன் படம் முடிஞ்சு வெளி வந்ததும் ஒருவன் படம் எப்படியிருக்கு என கேட்க, நல்லாருக்கு போய் பாருங்கன்னு சொல்லிட்டான். நாம பாத்துட்டோம் அவன் எப்படி தியேட்டர் வாசல் வரைக்கும் வந்து தப்பிக்கிறது என கேக்குறான். ஆனா டிரைல பார்க்கும் போதே இந்த படமும் கருப்புப் பணம் அப்படி இப்படின்னு இருக்கும்னுதான் நான் நினைச்சேன். ஆனா, கொஞ்சம் வித்தியாசமா எடுப்பனுங்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.கதைய சொன்ன என் பிரண்டு bull shitனு ஃபோன வச்சுட்டான். அட, படமே பாக்காத எங்க அம்மாகூட வந்த உடனே என்ன, அந்நியன்' மாதிரியா? கந்தசாமின்னு உருமும் போதே தெரியும்டாங்கிறாங்க! பாருங்கய்யா, இவங்கள்ளாம் கூட கண்டுபிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க! கதைய மாத்துங்கய்யா!
Old wine in a new stylish goblet. My god! the wine stinks!
கந்தசாமி - நொந்தசாமி!
டிஸ்கி - படத்துலதான் கதை இல்லையேன்னு நான் படத்துக்கு போன கதைய இங்க சொன்னேன். ரெண்டு கிராமம் தத்தெடுத்துருக்காம் படக்குழு. அதுக்கு இந்த எழுபது ரூபாயை மொய் எழுதியதா நினைத்துக் கொண்டேன்.

டாப்பு அடிக்கலாம் - வீடியோ ஸ்பெஷல்

Filed under , , by Prabhu on 8/15/2009 03:15:00 PM

7

ரொம்ப நாளா பதிவு போடலயே, ஏன்னு கேக்கலாம் நீங்க(ஜுனூன்!). என்னங்க செய்யுறது! என்னுடைய அலுவல்கள் சூப்பர் மேன் ஜட்டி கணக்கா tight ஆயிடுச்சுங்க! அதுக்கென்ன இப்போ? அதை ஈடு செய்ய உங்களுக்கு ஒரு அனுகுண்டு அறிவிப்பு வச்சிருக்கேன். அது பதிவின் இறுதியில் சொன்ன உடனே இறுதிக்கு போய்டீங்கனா, பல வீடியோக்கள மிஸ் பண்ணிருவீங்க.

ஒரு வீடியோ ஸ்பெஷல் போடனும்னு ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தேன். இந்த டாப்ப நம்ம வீடியோஸ், அப்புறம் என்ன தோணுதோ பேசுவோம். வீடியோன்னு சொன்னதும் சில யூத்துகள் 'அப்படி'ன்னு நினைப்பாங்க. ஆனா, எல்லாமே இப்படிதான். சிலதுகள் அப்படி இப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. சில பாட்டெல்லாம் கேட்ட மாதிரி இருக்கும். ஆனா எங்க கேட்டேனே தெரியல. கேட்டிருக்கேனா எனவே ஒரு சந்தேகம் தோன்றுவதுண்டு.
அதுதான் இந்த பதிவு. இதெல்லாம் மட்டும் பிடிச்ச பாடல்கள்னு சொல்லல, மூளையின் பதிவுகளில் அவுட் ஆஃப் போகஸான இடங்களில் இருந்து பளிச்சிடும் சில விஷயங்களின் தொகுப்பு.

முதல்ல சொல்ல வர்ற பாட்டுக்கு கண்டிப்பா நம்ம இயக்குனர் விஷ்ணு வர்த்தனுக்கு நன்றி சொல்லனும். 'மெல்ல மெல்ல என்னை தொட்டுங்கிற' பாட்ட எல்லாத்துக்கு நினைவு படுத்தினாரு. மலேசியா வாசுதேவனோ? சில்க் ஸ்மிதாவும் ரவிசந்திரனும் வர்ற பாட்டு. இது டிஸ்கோ பீரியட்ல வந்த சாங்கோ? அதுவா முக்கியம் இப்போ? இளையராஜா, சில்க் ரெண்டு பேரும் சேர்ந்ததால வந்த மேஜிக் நம்பர் 1. பாருங்க!



அடுத்து வர்ற வீடியோவும் சில்க் ஸ்மிதாவேதான்! 'பூவே இளைய பூவே' - இது கோழி கூவுதுன்னு ஒரு படமாமே! கங்கை அமரனோட பாட்டுன்னு நினைக்கிறேன். பிரபு பூதாகரமா தெரிகிறார். இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் பாடிருக்கார். கடந்த பல வருடங்களா அவர் பாடுவதேயில்லை. வயதானதால் பாடுவதை நிறுத்திவிட்டாரா? குரல் போயிடுச்சுன்னு பேசிக்கிறாங்க. என்னவோ இந்த பாடலையும் இதோ பாருங்க!



'பொன்மேனி உருகுதே' - இதுவும் போன தலைமுறையினருக்கு தெரிந்த பாடல்தான். இதுவும் சில்க்தான். இளையராஜா தான். கமல் கூட இருக்கார். 'மூன்றாம் பிறை'. எல்லாருக்கும் தெரிந்த படம். பாட்டுல சில்க் அவ்ளோ செக்ஸியா இருக்காங்க. ஒரு வித்தியாசமான டான்ஸ் கூட ஆடுறாங்க. Erotic! ஏதோ war dance மாதிரி இருக்கு! என்ன டான்ஸ்னு தெரிஞ்சா சொல்லுங்க!



'குழழூதும் கண்ணனுக்கு' - இந்த பாட்டு தெரியாத தமிழன் இருக்க முடியாது. ராதா கூ கூ ன்னு சவுண்டு விட்டுட்டு ஓடுவாங்க. 'மைக்' மோகன் புல்லாங்குழல் வச்சுக்கிட்டு வாசிக்க தெரிஞ்சவங்களவிட ஓவரா சீன் போட்டுக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுறதுக்கும் நடக்குறதுக்கும் நடுவில ஒரு வித்தைய செய்து கொண்டிருப்பார். பாட்டோட சுவாரசியமான விஷயமே ரெண்டு வேற தலைமுறையை சேர்ந்த ஜாம்பவான்கள் இசையமைத்துதான். அது இளையராஜா, எம்.எஸ்.வீ.



'It's my life' -இது Bon Jovi யின் பாடல். இந்த பாடல் காதலி 5 நிமிஷத்தில வந்து சேரனும்னு சொன்ன உடனே கடல் தாண்டி மலை தாண்டி வர்ற மாதிரி ஊரு முழுக்க பாய்ந்து விழுந்தடிச்சு வந்து சேரும் கதாநாயகனப் பத்தின பாட்டு. இது தான் வாழ்க்கை. போனா வராது, போன் போட்டா கிடைக்காது(It's my life. It's now or never)ன்னு சொல்லுறதுதான் ஹைலைட்டான லைன். கண்டிப்பா பிடிக்கும் பாருங்க. ஏற்கனவே அர்ஜுன் காப்பி அடிச்சிட்டாரேன்னு நீங்க கண்டுபிடிச்சா நான் பொறுப்பல்ல!




இப்ப ஒரு தீவிரமான (சீரியஸ்?) வீடியோ. வந்து கொண்டிருக்கும் ஒரு புது இந்தி திரைப்படம். 'Slumdog millionaire' விநியோகம் செய்த Fox Starஆல் விநியோகம் செய்யப்பட உலகமே காத்திருக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் திருவிழா, 'Quickgun Murugan' -Mind it! இதில் ராஜேந்திர பிரசாத், நாசர், ரம்பா, சண்முகராஜன், ராஜு சுந்தரம், மேலும் பல இந்தி நட்சத்திரங்கள் மிரட்டியுள்ளார்கள். தமிழிலும் வர உள்ளது. கண்டிப்பா இந்த டிரைலர் பாக்காம வெளிய போகாதீங்க! பின்னால் வருத்தப்படுவீங்க! 'Quickgun Murugan - The Indian Cowboy.


இது ஆங்கில ட்ரைலர். ஹிந்தியிலயே செம டெரர்தான்:) having my fingers crossed for the release.

இன்னும் பாட்டு பட்டியல் பெருசா வச்சிருக்கேன், கருணாநிதி அவர் குடும்பத்துக்கு சேர்த்த சொத்து கணக்கா! ஆனால், இப்ப இது போது. இந்த பதிவுல நிறைய சில்க் பாட்டு வந்திருச்சுல! அப்போ அவங்களுக்கே டெடிகேட் பண்ணிடுவோம். எனக்கென்னவோ சில்க் பாக்கும்போது கழுதைப் பாலில் குளித்த கிளியோபாட்ராதான் நினைவுக்கு வர்றாங்க. ரெண்டு பேரும் கருப்பழகிகள் என்பதாலோ என்னவோ! ஜெய் சில்க் ஸ்மிதா!

அணுகுண்டு அறிவிப்பு - நான் பல காலமாக எழுததாலும், (எனக்கு நானே எழுதிக் கொண்ட) வாசகர் கடிதங்கள் காரணமாக அதை ஈடு செய்ய ஒரு சிறுகதை எழுதி கொண்டிருக்கிறேன். இது fantasy, futuristic, sci-fi இப்படி பல வகைல சேர்க்கலாம். நீ ஒரு வகைல எழுதினாலே படிக்கமுடியாதுன்னு யாருப்பா சொல்றது? வேணாம் விட்டுருங்க. (விடலைனா?) நான் விட்டுடறேன்! அடுத்த டாப்புல பாக்கலாம்.

டிஸ்கி : நிறைய வீடியோ வச்சிருக்கேன். அதனால லோட் ஆக லேட் ஆனதென்றால், "மன்னிக்க வேண்டுகிறேன்...." கவலைப்படாதிங்க! இதுக்கு வீடியோ சேர்க்கல.

சரக்குள்ள பதிவு (செம சரக்கு!)

Filed under , by Prabhu on 7/23/2009 07:33:00 AM

14

"சொல்லுங்க பப்பு, இப்போ எப்டி feel பண்றீங்க?"
"எனக்கு என்ன சொல்றதுன்னே தெர்ல. i feel excited. யுஷுவலா நான் அவார்ட் expect பண்ணி பதிவெழுறதில்ல. But if i got the award, எனக்கு சந்தோஷம் தான்."
இப்படியெல்லாம் தமிழக் கொல பண்ணி பேட்டி கொடுத்தாதான் நான் பெரிய பருப்புன்னு நம்புறானுங்க! என்ன செய்யுறது?

அதில்லாமலே நான் பெரிய பருப்பு தான். அதுக்கு என் வரலாறையும், என் பெயர் காரணத்தையும் எழுதனும். அதனால அந்த மேட்டர 50 வது பதிவுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். அப்புறம் என்னத்த எழுதுறதுக்காக இந்த பதிவ போட்டிருக்கன்னு நீங்க கேக்கலாம்.

அப்டி கேளு நைனா, நான் பாட்டுக்கு சும்மாக்காச்சு போகச்சொல்லா, நான் ஆதவன்ங்கிற பேர்ல குப்ப போடுற ஒரு பெர்ய மன்ஷன் ஏதோ அவார்ட் கொடுக்காராமே! என் பேரயும் அந்தாண்ட போட்டிருக்காராம். இன்னடா இது மெர்சலா கீதுன்னு போய் பாத்தா... அட, மெய்யாலுமே தான்! இன்னா விஷயம், காசு கீசு தர்வீங்களான்னு கேட்டு பாத்தா, அதெல்லாம் இல்ல, உனக்கு அவார்டே ஓவர்னு சொல்டாரு. சரிதான், இந்த வேர்ல்டுல சுளுவா கெடக்கிறது அட்வைசும், பதிவுலக அவார்டும்தான் போல.

அவராண்ட போய் கேட்டேன், அண்ணாத்த எனக்கிலாம் அவார்ட் கொடுக்கறயே எப்படின்னு? அதுக்கு அவரு, தம்பி உன் பதிவெல்லாம் படிச்சேன். செம தமாசுப்பா, நான் அப்படியே மெர்சலாய்டேன்னார். ஏம்பா, நம்மளா பாத்தா காமெடி பீஸாட்டமா இருக்கு? உளவுத் துறையெல்லாம் வச்சி விசாரிச்சாராம். நான் உளவுத் துறையளவெல்லாம் நான் வொர்த் இல்ல தல.

அப்பால நான் வாங்கசொல்ல அவார்ட் வாங்கின இளைய பல்லவன், ஆ!இதழ்கள் எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்லிக்கிறேன். அதில இளைய பல்லவன் படிச்சப்போ அவர் நான் படிச்ச கதையில இருந்து பேர் எடுத்து வச்சிருக்காருன்னு தெர்து. அதோட அவரே சரித்திர கதயெல்ல்ம் எழுதுறாராம். அங்கங்க எல்லாரும் சரித்தரக் கதை எழுதும்போது பப்பு, உன் கத மட்டும் ஏன் தரித்தரமா இருக்குன்னு கேட்டீங்கன்னா... பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது.

இப்படிக்கா ஒரு சோக்கு சொல்லிட்டு அப்படிக்கா ஜகா வாங்கிக்குறேன்! எங்க எஸ்கேப்பு ஆவுற? நீ யாருக்கு கொடுக்குறன்னு சொல்லிட்டு போ. அய்யோ, அதெல்லாம் கேக்காதீங்க. நான் அவ்ளோ வொர்த் இல்ல. அப்புறம் இன்னொரு விஷயம்.
எல்லா புகழும் இறைவனுக்கே! அவார்ட் வாங்குறப்போ இப்படி சொல்லனுமாம். அப்ப தான் நம்மள பெரிய ஆளுன்னு சொல்வாங்க.


அது என்ன அவார்டுனே சசொல்ல மறந்துட்டேன் பாத்தீங்களா! அது 'Interesting Blog Award' (அ) சுவாரஸ்ய பதிவர் விருதாம். நல்ல சரக்கு இருக்குறவங்களுக்குதான் கொடுக்கனும், உனக்கேன்னு கேக்கலாம். அதான் இந்த பதிவோட சரக்க ஏத்த கீழ ஒரு சரக்கு சோக்கு. அதுவும் பாரின் சரக்கு!

எனக்கு இப்ப ஜோக் சொல்லியே ஆகணும்.

அமெரிக்கால ஒரு சிட்டி. அங்க ஒரு பார். டிடர்ஜண்ட் பாரான்னு கேக்குறவங்கள கஸாப் தம்பின்னு புடிச்சு குடுத்திருவோம். ஒரு குடிக்கிற பார். அங்க ஒரு பொண்ணு வர்றா. வந்த உடனே எவன்ட பேசலாம்னு பாக்குறா. அப்போ நம்ம ஆளு கண்ணுல படுறான்.
"நீ என்ன சரக்கு அடிக்கிற?"
"இதுக்கு பேரு மாய சரக்கு"
இவன பாத்தா சுண்ட கஞ்சி ரேஞ்சுக்கு இருக்கான். ஓவர் மப்புல இருக்கான் போல என அவன விட்டுட்டு பார்ல ஒரு ரவுண்டு வர்றா. எல்லாரும் முழு மப்புல இருக்கானுக, இல்ல ஆஃப் பாயில் போட்டுட்டு இருக்கானுக. இதுக்கு அவனே தேவலைன்னு வர்றா.
"ஆமா.... நீ மாய சரக்குன்னு சும்மாக்காச்சு தான சொன்ன?"
நம்மாளு, "இல்ல, நிஜம்தான்".
"நான் நம்ப மாட்டேன்"
இப்ப பாருங்கன்னு சொல்லிட்டு, ஒரு ரவுண்டு ஊத்திக்கிட்டு, ஒடிப் போயி ஜன்னலில குதிச்சிட்டான். அய்யோன்னு இவ எட்டிப் பாத்தா, அவன் பறந்துட்டே பில்டிங்க மூணு ரவுண்டு அடிச்சிட்டு வந்து உள்ள இறங்கினான். வாயப் பிளந்து ஆச்சரியப்பட்ட அவளுக்கு இன்னும் சந்தேகம் தீர்க்க இன்னொரு ரவுண்டு விட்டுக்கிட்டு நாலு ரவுண்டு அடிச்சான், அந்த பில்டிங்க. அந்த பொண்ணு எனக்கும் வேணும்னு சொல்ல, "யோவ் பார்டெண்டர், இதே சரக்க அந்த பொண்ணுக்கும் கொடுய்யா". அத குடிச்சிட்டு அந்த பொண்ணு நேரா போய் ஜன்னல் வழியா குதிச்ச........... சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்.... சப். கீழ இருக்குற அவ கார்ல போய் விழுந்து அவுட்.

இதப் பாத்த பார்டெண்டர், "யோவ், உன்னோட இதே வேலையா போச்சு. பக்கார்டி நாலு உள்ள போனா நீ பக்கா பாஸ்டர்டு டா, சூப்பர் மேன்".

ஹாரி பாட்டரும் muggle ராஜகுமாரனும்

Filed under , by Prabhu on 7/18/2009 09:32:00 PM

15

ஹாரி பாட்டர் கதைகள தீவிரமா படிச்ச என்ன மாதிரியான ரசிகர்களுக்குதான் இந்த படங்களுக்கான காத்திருப்புக்கான அர்த்தம் தெரியும். அதுவும் என்னைய மாதிரியான ஹாரி பாட்டர் fanatics களுக்கு இது ரஜினி படம். அத விட மோசம். கதைய படிச்சிட்டு எப்படி எடுத்துருப்பானோ, ஒழுங்கா எடுத்துருக்கனுமேன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதுக்கு காரணம் Rowling ஓட எழுத்துக்கள். படிக்கும் போதே நமக்குள்ள mixed emotions தான். குறிப்பா என்னை போன்ற adolescents
(அட, படிக்கும் போது அடலசண்ட் தாம்பா).

இது ஹாரி பாட்டர் படத்தோட விமர்சனமான்னு கேட்டா அதுவும் தான். நான் விமர்சனம் எழுத ஏற்கனவே ட்ரை பண்ணி பெரிசா வரலன்னு எனக்கு தோணுது. இப்போதான் ஆதவன் என்னையும் படிச்சு ஏமாந்து சரக்கிருக்கிற பதிவுன்னு சொல்லிருக்காரு. அத நம்பி வர்றவங்கள ஓடவிட விருப்பமில்ல.அதனால அந்த படத்த பத்தி என்னவெல்லாம் தோணுதோ எழுதுறேன். ஆமா,....'ஹாரி பாட்டரும் மாயராஜகுமாரனும்' தான படத்தோட பேரு நீ என்ன 'muggle ராஜகுமாரனும்'னு போட்டிருக்கனு கேக்கலாம். சொல்றேன். விடை பதிவின் கடைசியில்னு போட்டா கடைசி போயிட்டு, சூப்பர்னு போட்டோ போடாமலோ போய்விட வாய்ப்பிருக்கிறதால, நடுவால எங்கயாவது சொறுகி விடுறேன். படிச்சிக்கோங்க!

முதல்ல விளக்க வேண்டியது படத்தோட தலைப்பு. 'Harry Potter and the Half-Blood Prince' ஓட தமிழாக்கம் தான் இந்த படம். படத்துக்கு 'ஹாரி பாட்டரும் அரை ரத்த அரசகுமாரனு'ம்னு பேர் வைப்பாங்களோன்னு நெனச்சோம். பரவாயில்ல கொஞ்சம் நல்லாருக்கனுங்கிற எண்ணத்துல வச்சிருக்காங்க. half-blood ங்கிறது மந்திரம் தெரிஞ்ச ஆண்/பெண் , சாதாரண ஆண்/பெண் (இவங்களத்தான் muggleனு சொல்வாங்க!) கலப்பில் பிறக்கிற கலப்பினத்த சொல்வாங்க.

போன பாகமான 'Harry Potter and the Order of the Phoenix' விட்ட இடத்துல இருந்து தொடங்குது படம். Harry காபி ஷாப்ல ஒரு பொண்ணோட கடலை போட ட்ரை பண்ணும் போது இடையில Dumbledore(Principal) வந்து ரிடையர் ஆன Horace Slughornன எதுக்காகவோ ப்ரொபசரா ஆக்குறதுக்கு இவன அழைச்சிட்டு முயற்சி பண்ணுறாரு. அப்புறம், Draco Malfoy கிட்ட ஒரு மூக்குடைப்போட ஹாரியின் பள்ளி வாழ்க்கை அந்த வருடம் 'இனிதே' துவங்குது.


அதன் பிறகு Malfoyஓட ரகசிய நடவடிக்கைகள், Ron-Hermione நடுவில நடக்கிற ஊடல்-கூடல், Harry-Ginny நடுவில புதுசா வொர்க் அவுட் ஆகுற long felt chemistry, Dumbledore கிட்ட ஸ்பெஷல் கிளாஸ் என ஓடிட்டிருக்குற கதையில ஒரு சின்ன நெருடல் தான் ஹாரியோட potions book. அந்த புத்தகத்தோட பழைய சொந்தகாரன் பல உபயோகமான குறிப்புகளையும், மந்திரங்களையும் நுணுக்கி வச்சிட்டு போயிருப்பான். அட்டையில 'இந்த புத்தகம் மாயராஜகுமாரனோடது'(Property of Half-blood Prince) என போட்டிருக்கும். இந்த புத்தகம் மேல Hermione, Ginnyக்கு சந்தேகம் இருந்தாலும் அந்த புத்தகத்தின் மேல அபார நம்பிக்கை வச்சிருப்பான். ஆனா, அவன் நம்பிக்கை தவறுது. அது அவனுக்கு ஆபத்தானதால Ginny அதை மறைச்சு வைக்கிறா.

Snape ஒரு மீறமுடியாத சத்தியத்த(Unbreakable Vow) Malfoy அம்மாக்கு செஞ்சு தந்திருக்கானு ஒட்டு கேக்கிறான் ஹாரி. Dumbledoreஅ கொல்ல ஒரு சபிக்கப்பட்ட நெக்லஸ் ஒரு பொண்ணு மூலமா வந்தது பாத்ததும், அதுவும் Malfoy வேலையா இருக்கும்னு ஹாரி நினைக்கிறான்.

Dumbledore அடிக்கடி வெளிய போறதுக்கான காரணங்களையும், வோல்டிமோர்ட் சம்பந்தப்பட்ட சில பழைய நினைவுகளையும் ஹாரிக்கு விளக்கும் போது வேல்டிமோர்ட் கிட்டத்தட்ட சாகாவரம் பெற்றவங்கிற விவரம் தெரிய வருது. Slughorn கிட்ட இருக்கிற அந்த முக்கியமான நினைவு என்ன? வோல்டிமோர்டோட அந்த கிட்டதட்ட சாகாவர ரகசியம் என்ன? Dumbledore ஹாரிகிட்ட ஒப்படைக்கிற பொறுப்பு என்ன? யாரு அந்த மாயராஜகுமாரன்? Malfoyஓட ரகசியம் என்ன? Snape எதுக்காக சத்தியம் பண்ணி கொடுத்தான்? இதுக்கெல்லாம் விடை தெரிய படம் பார்க்கனும். ஓசில கதை கேக்கலாம்னு நெனச்சீங்களா?

புத்தகத்தை த்ழுவி எடுத்திருந்தாலும், அப்படியே எடுக்காமல் ஒரு சில விஷயங்கள படத்துக்காக உருவாக்கியிருப்பது கதையின் விறுவிறுப்புக்கு கை கொடுப்பதோட, புத்தகத்த படிச்சவங்களுக்கு போனஸ்! உதாரணம் Weasley இல்லத்துக்கு Bellatrix வந்து , அதனால் உருவாகும் ஒரு சண்டை காட்சி. புத்தகக் கதையை போல அல்லாமல் படத்தில் ஆரம்பத்திலேயே Ginny மேல் Harryக்கு ஒரு 'இது' இருக்கு. தேவையில்லாத புத்தகத்தின் கொசுறு விஷயங்களில் கவனம் காட்டி புத்தக எழுத்தாளர், வாசகர்கள திருப்தி படுத்த நினைக்காம, படிக்காதவங்களும் பார்க்கும் படியா எடுத்துருக்காங்க. காட்சிகளுக்கு காட்சி நகர்ற வேகம் அற்புதம்.

இந்த கதை, புத்தகம் பற்றிய பொதுவான கருத்து, இது சின்னப் பசங்க கதை/ படம் என்பது. ஆனா, இது ஒரு சாதாரண fantasy வகையா இல்லாமல், ஒரு திரில்லராகவும் எடுத்திருக்காங்க. அப்புறம் நிறைய, ரொமான்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை வச்சிருக்காங்க. முக்கால்வாசி Ron-Hermione-lavender முக்கோணக் காதல், Ginny-Harryக்கு இடையான ஒரு கெமிஸ்ட்ரி என ஹார்மோன்களின் வேலையாகவே இருக்கிறது. ஹாரியின் முக்கிய ரசிகர்களின் (இவர்களின் டீன் ஏஜில் தான் கதைகள் வெளியாயின) வயது 20ஐ நெருங்கி இருக்றதாலயும், அவங்க வாழ்க்கையில சந்திக்க கூடியதாவும் இருக்கிறதால இந்த மாதிரி எடுத்திருக்க வாய்ப்புகள் உண்டு (எனக்கு 20 உனக்கு 18ஆ?). அத விட முக்கியமான காரணம் ஏழாவது பாகத்த ரெண்டா வெட்டுறதால இதுலயும் சண்டைகள் நிறைய வச்சா ஓவர் டோஸ் ஆயிடும்னு பயப்படுறாரு.

படத்தோட CG பிச்சிருக்காங்க. ஆரம்பத்தில பாலத்த முறுக்கிறதில இருந்து கடைசியில அந்த குகைக் காட்சிகள் வரைக்கும் அருமையா இருந்துச்சு. Dumbledore கடைசியில உருவாக்கிற சீறிக்கிட்டு வரும்நெருப்பு வட்டம் செம சீனு. புத்தக அட்டையில வந்த காட்சி போலவே இருந்தது. Cinematographer தன்னோட பங்க சிறப்பா செஞ்சிருக்காரு. அதுவும் அந்த ஆரம்ப காட்சியில் காமரா கிளம்பி புயலோடு சென்று பாலத்தை அடையும் lengthy shot.... it was breathtaking. எடிட்டிங் செம க்ரிஸ்ப். ஆனால் சில இடங்களில் காட்சிகளை விட்டு தவ்வியது போன்று தோன்றுவது அதே எடிட்டிங்கின் குறைபாடு. கடைசியில் ஹாரி தண்ணீரில் கைவிடும் போது அவன் கைய தண்ணில இருந்து ஒரு கை பிடிக்கும்னு கதையில் படிச்சு தெரிஞ்ச என்னையவே மிரட்டுச்சுன்னா, தியேட்டர்ல பல பேர் அந்த சீன்ல ஜெர்க் ஆனாங்கன்னு சொல்ல தேவையில்ல. செம த்ரில் அந்த ஒரு காட்சி.

படம் மட்டும் பார்க்க வர்றவங்க ரொம்ப மாயாஜாலத்த எதிர்பார்த்தா, ஏமாற்றம்தான். ஏன்னா இன்னும் ரெண்டு பாகம் முழுக்க ஆக்ஷனா ரெடியாகும் போது, இதயும் அதிரடியா எடுத்தா அலுத்துப் போயிடலாம். அதான்.
மொத்தத்தில ஒரு த்ரில்லர் ஆனாலும், ஆங்காங்கே நகைச்சுவை பளிச்சிட கொடுத்திருக்காங்க.

இப்ப முக்கியமான பார்ட். முகமெல்லாம் பிரகாசமாகுதே! கரெக்ட்! நம்ம Emma Watson பத்தியும்தான். எப்பவும் போல பொண்ணு அழகுதான். அப்பப்ப ரகசியமா வெட்க்கப்பட்டு முகம் சிவக்கும்போது, அடடா.... ஹீரோவுக்கு இல்லாத சவுண்டு தலைவிக்குதான். வந்த உடனே என்னா சவுண்டு! Rupet Grint (Ron Weasley)- காமெடிக்கு யூஸ் பண்ணிருக்காங்க. Daniel Radcliffe (Harry Potter) - இவரும் ஓகே தான். Bonie Wright (Ginny Weasley) - பொண்ணு கடமைய சரியா செஞ்சுட்டு போயிருக்கு. எனக்கு இந்தப் பொண்ணயும் பிடிச்சது. எல்லாரும் எம்மா வாட்சனப் பாக்கும் போது நீ ஏன் இவளயும் பாக்குறன்னு கேட்டா அதுக்கு ஒரு extensive தியரியே வச்சிருக்கேன். அப்புறம்! Alan Rick (Severus Snape) - இவரோட நடிப்பு ரொம்ப அருமை. இவர் கேரக்டருக்கான ஆழம் இனி மேலும் கூடப்போகுதுங்கிறத உணர்ந்து நடிச்சிருக்காரு. Very defining. இது போக Professor Slughornஆ வர்ற Jim Broadbent நல்ல நகைச்சுவை கலந்த கதாபாத்திரமா வந்திருக்காரு.

திரைக்கதை எழுதிய Stephen Knovles ஐ பாராட்டியே ஆகனும். ஏன்னா இந்த புத்தகத்த திரைக்கதையாக்குறது கஷ்டம். அவ்ளோ பெரிய புத்தகத்த செல்லுலாய்டுக்கு ஏற்றாற் போல கொண்டு வந்திருக்கிறார். Director David Yates நல்லா எடுத்திருக்கார். அடுத்த பார்ட்ட்களின் நம்பிக்கையை உண்டாக்குகிறார். மொத்தத்தில் இது ஐந்தாம் பாகத்தை விட அருமையாக இருக்கிறது.

நெகடிவ் பாயிண்ட்ஸே இல்லையா? ஏன் இல்ல? மாயாஜாலத்த எதிர்பார்த்து போற நம்ம ஊரு மக்களையும், சின்ன் பசங்களையும் கொஞ்சம் ஏமாத்திருக்கு. எடிட்டிங் சில இடங்களில் கொடுத்த காசுக்கு ஓவராவே வேலை பாத்திருக்காங்க. யப்பா, சீக்கிரம் படத்த எடுத்து முடிங்கப்பா! முதல் பாகம் எடுக்கும் போது அவங்களுக்கும், ஹாரி பாட்டர் கதாபாத்திரங்களுக்கும் ஒரே வயசு. இப்போ மாடு மாதிரி வளர்ந்துட்டானுங்க. 20 வயசு ஆன பிறகு இன்னமும் 16 வயசுன்னு சொல்லிக்கிட்டு.... இந்த படத்த மற்ற இரண்டு பாகங்களுக்கு ஒரு முதல் படியாக பயன்படுத்திருக்காங்க. அதனால அடுத்த பாகங்களில் நீங்கள் சூட எதிர்பார்க்கலாம். இப்பொழுதைக்கு ஒரு நல்ல ப்டம் ரசிக்க. ஆறினாலும் அருமையான டீ.


ஹாரிபாட்டரும் மாயராஜகுமாரனும் - குறைவான மாயாஜாலங்களுடன்

தரம் - நல்ல படம். பார்க்கலாம், குறிப்பாக ஹாரியின் புத்தக ரசிகர்கள்.


டிஸ்கி- ஹாரி பாட்டரும் muggle ராஜகுமாரனும் -என் தலைப்ப யோசிச்சிங்களா?
அது நான் தான். எப்படின்னு யோசிங்க! என் பெயர் பிரபுகுமார்.

டிஸ்கி 2 : ஹாரி பாட்டர் கொட்டை வடிவில்( in a nutshell) தர முடிவு செய்துள்ளேன். ஆனால் அது பெரிய வேலை. உங்கள் ஆதரவு இருந்தால் தான் அதை செய்ய இயலும். சொல்லுங்க! ஆரம்பிச்சிருவோமா?

High definition trailer

டாப்பு அடிக்கலாம்

Filed under , by Prabhu on 7/05/2009 11:10:00 PM

19

டாப்படிக்கிறதுங்கிறது ஒருத்தர் ரெண்டு பேருன்னு இல்லாம பல பேரு கூடி ஒரே இடத்தில மொக்க போடுறது. அதுவும் பொது இடம் என்றால் மிகவும் நலம். அதுவும் தெரு முனைகளில் அடிப்பது அந்த ஏரியாவில் பெரும் புகழை பெற்றுத் தரும். ஆனா, இதெல்லாம் எங்கள மாதிரியான காலேஜ், ஸ்கூல் மாணவர்களுக்கு மட்டும்தான். பதிவுகல நடுத்தர வயது 'யூத்'களுக்கு அல்ல. இது பொதுவான வார்த்தைப் பிரயோகம்னு நினைத்துக் கொண்டிருந்த பொழுது, 'சுப்ரமணியபுரம்' படத்துல "தேநீரில் ஸ்நேகிதம்" பாடலில் சுவத்துல 'மாப்ள்' போன்ற வட்டார சொற்களோட எழுதிருப்பாங்க. (அய்யோ...விஷயத்துக்கு வாடா..) இதனால என்ன சொல்றேனா, டாப்பு அடிக்கிறது என்ற புதிய சொல்லாடலை(பிரபல பதிவர்னா இந்த வார்த்தைய அப்பப்ப சொல்லனுமாம்!) பதிவுலகத்துக்கு அறிமுகம் செய்யுறேன்.
--------------------------------------------------------------------------------------------------
எல்லாரும் குருமா, கொத்து புரோட்டா, கொத்துமல்லி சட்டினி என சரக்கில்லாதப்போ மொக்க போடுறதுக்கு ஒரு பேர் வச்சிருக்கா மாதிரி நம்மளும் ஏதாவது செய்யனுமேனு யோசிச்சப்போ, கண்ட சரக்க கலந்து கொடுக்கிறதால காக்டெயிலுன்னு வைக்கலாம்னா அது கார்க்கிட்ட, சரி நம்ம எழுதறது மேட்டரே இல்லாம சும்மா தான எழுதுறோம் சும்மானு பேர் வச்சா தமிழ்மாங்கனி காயத்ரி கோவிச்சுக்குவாங்க, புரோட்டா குருமானுனு கூட வைக்க முடியல. அதான் கொஞ்சம் regional and cultural டச்சா எங்க slangல டாப்பு அடிக்கலாம்னு வச்சேன். இதுல பல பரிமாணங்களில் மொக்க போட போறேன். Be careful!
--------------------------------------------------------------------------------------------------

சமீபத்துல ஒரு ஹை கோர்ட் குடுத்த ஒரு தீர்ப்பப் பத்தி பதிவுலகமே 'பத்தி' எரியும் நெனச்சேன். புஸ்வானமா போச்சு. கேஸே பத்தி எரியுறதப் பத்திதான். IPC377 ஒழிக்கச் சொல்லி சிபாரிசு பண்ணியிருக்காங்க. அந்த் செக்ஷன் sodomy பத்தினது. அதான் ஹோமோ செக்ஷுவாலிட்டி! ஓரினச் சேர்க்கைய குற்றமா அறிவிச்ச அந்த பிரிவத் தூக்குவதன் மூலமா ஓரினச் சேர்க்கை இந்தியாவில் சட்ட பூர்வமானதா ஆகுறதுக்கான அடையாளம் தெரிகிறது. அதுக்கு அமெரிக்காவின் புகழ் பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளா(கவிஞ)ரான 'விக்ரம் சேத்' கூட மகிழ்ச்சி தெரிவிச்சிருக்காரு. அந்த ஆளே ஓரினச்(அல்லது ஈரினச்(bisexual) சேர்க்கையாளர்ங்கிறது கொசுறு செய்தி. அடுத்து அவங்க திருமணம் செஞ்சுக்கறதுக்கு கூட சட்டம் வரலாம்!
--------------------------------------------------------------------------------------------------

வெள்ளிக் கிழமை என் பிரண்டு அஜயோட அழகர் கோவில் போயிருந்தேன். அங்க மலை மேல பைக்க நிறுத்திட்டு ரெண்டு அடி எடுத்து வைக்கல, 'தம்பி, பைக்குல எதுவும் வச்சிருந்தா எடுத்துக்கோப்பா'னு ஒருத்தரு சொன்னாரு. என்னன்னு திரும்பி பாத்தா, குரங்கு என் பைக்குல ஏறிடுச்சு. திருட்டு குரங்குங்க.! பைக் டாங்க் மேல இருக்குற pouchல கூட கை விடுதுங்க. ஒருத்தர் பைக்குல வச்சிருந்த சாப்பாடெல்லாம் எடுத்துருச்சு. என் பைக்குல ஏறுன குரங்கு, pouchஅ திறந்து பாத்துட்டு அமைதியா இறங்கி போயிருச்சு. அனேகமா என்னோட பைக் துடைக்கிற அழுக்குத் துணிய மோந்து பாத்திருக்கும்! நானும் ரெண்டு நாளா மதுரை மாவட்டச் செய்திகள பாத்துக்கிட்டு இருக்கேன், 'அழகர் கோவிலில் ஒரு குரங்கு மர்மமான முறையில் சாவு'ன்னு நியூஸ் வருமானு.
என் பைக்க பைய திறக்குது பாருங்க, திருட்டு குரங்கு!


அங்கயும் பொரி, கடலை எல்லாம் விக்குறாங்க. அத வாங்கினாலும் குரங்கு பிடுங்கிட்டு போயிரும். இந்த பொரி கடை காரங்கதான் தங்களோட தொழில டெவலப் பண்ண இந்த குரங்குகள வளர்கிறாங்கன்னு ஒரு conspiracy theory கூட வச்சிருக்கேன்.

நாங்களும் ட்ரை பண்ணுவோம்ல! அதுங்கள ஒழிக்க கமாண்டோ ட்ரைனிங்!
-------------------------------------------------------------------------------------------------
எல்லாரும் பினிசிங் டச்சா கவிதை, நகைச்சுவைனு எழுதுவாங்க. நமக்கு கவிதைன்னு நாலு வாட்டி சொன்னாலே 'ஜல்ப்பு' பிடிச்சிக்கும். அதனால ஒரு ஜோக். அதுவும் 'ஏ' ஜோக்தான் சொல்லனும்னு ஆசை. ஆனா, வரிசையில் முதல் பதிவு என்பதால சைவம்!

விவசாயியும் புது மனைவியும்

ஒரு அமெரிக்க குடியானவன்(?!) சரி, உங்க பாஷையில விவசாயிக்கு கல்யாணம் நடந்தது. அவன் தன் புது மனைவியோட குதிரை வண்டியில போறான்.
அப்போ அந்த குதிரை மக்கர் பண்ணுது. அவனுக்கு சரியான கோபம். 'ஒண்ணு' அப்படின்னு சொன்னானாம். பொண்டாட்டிக்கு புரியல!
இன்னொரு தடவ மக்கர் பண்ணுச்சு அந்த குதிர. 'ரெண்டு' அப்படின்னு சொன்னான். என்னடா, வடிவேலு கணக்கா காமெடி பண்ணிக்கினு இருக்கான், என அவன் பொண்டாடி நெனச்சா.
அடுத்த தடவ மக்கர் பண்ணப்போ, 'மூணு' அப்படின்னு சொல்லிட்டு துப்பாக்கிய எடுத்து அந்த குதிரைய நோக்கி வச்சு......டுமீல்!
அதப் பாத்த அவன் மனைவி, "அடப் பாவி மனுஷா! அநியாயமா ஒரு குதிரைய கொன்னுட்டியே! வாயில்லா ஜீவன் அது! அந்த பாவம் நம்மல சும்மா விடுமா!" என அவன கரித்துக் கொட்ட, அவன் அவளை நோக்கி திரும்பி அமைதியாகச் சொன்னான்,
"ஒண்ணு"

நாட்குறிப்பில் ஒரு நாள்.......

Filed under , , by Prabhu on 6/23/2009 10:33:00 AM

10


“ச்சே.... வர வர தூக்கம் ரொம்பதான் அழுத்துது. தலவலிடா. அம்மாஆஆ... மணி என்ன?
“ஏழு மணியாச்சுடா.
“என்னம்மா, உன்ன அஞ்சு மணிக்கே எழுப்பிவிடச் சொன்னேன்ல? ஏழு மணி வரைக்கும் தூங்க விட்டிருக்க? (இன்னைக்கு பதிவ வேற பப்ளிஷ் பண்ணனுமே!)
“சனியனே, உன்ன அஞ்சு மணியில இருந்து எத்தன தடவ எழுப்புறது?
“ஓ, எழுப்பினயா? சரி விடும்மா. (ராத்திரி ப்ளாக் பக்கம் போறத நிறுத்தனும்)
பதிவ வெளியிட்டுட்டு, பழைய பதிவுக்கு வந்த கமெண்ட்டுகளுக்கு எதிர் மொக்கைகள போட்டுட்டு, நிமிர்ந்து பாத்தா மணி ஏழு. டிரஸ் எடுக்க ஓடினேன்.
“டேய், குளிடா!
“அம்மா, அதுக்கெல்லாம் நேரமில்லமா. காலேஜ்க்கு லேட் ஆயிடுச்சு.
“சாப்பிடலயா?
“ம்ம்ம்.... மூணு சப்பாத்தி எடுத்து வை.
“அதான பாத்தேன். லேட்டா போனாலும் கொட்டிக்காம போக மாட்டியே!
எடுத்து வச்சிருக்கேன். காலேஜ்க்கு ஆறு எடுத்து வச்சிருக்கேன்.
“ஃபிரண்ட்ஸ்க்கு ஒன்னு ரெண்டு சேத்து வை. நாய்ங்க கேக்காம டப்பாக்குள்ள கை விடுவானுக. “
“போய்டு வரேன்மா!
“நேரம் நல்லாதான் இருக்கு, போய்டுவா!
பைக்க எடுத்துக்கிட்டு விரட்டினா, மனசுக்குள்ள ஏ.ஆர்.ரஹ்மான் வந்து 1,2,3,4...என்றென்றும் புன்னகைனு பாட, பக்கத்தில ஒரு Lady Doak college பொண்ணு ஸ்கூட்டி போனா, ஸ்பீடோமீட்டர் தானாக அவ ஸ்கூட்டி ஸ்பீடுக்கு அட்ஜெஸ்ட் ஆகுது, என்ன செய்ய? இன்னைக்கும் லேட்தான்.

அங்க லேட்டா போய் பைக் ஸ்டாண்டில பைக்க போட்டுட்டு, ஹேர் ஸ்டைல சரி பார்த்துட்டு வேகமா க்ளாஸுக்கு ஓடினா, பாதி வழியில ஒருத்தன் ஆமை வேகத்தில போய்க்கிட்டிருப்பான். என்னடா இன்னைக்கும் லேட்டா, வாடா சீக்கிரம் போயிடுவோம்னு சொன்னா, லேட் ஆகிப் போச்சு இனிமே அவசரமாப் போனா டயத்துக்கு போனதா ஆகிடாது, லேட்டா போனா புதுசாத் தப்பாயிடாதுன்னு விசு மாதிரி குழப்பி மெதுவா கூட்டிட்டு போனா, அங்க சிரிச்சு சிரிச்சே கழுத்தறுக்குற white openஓட க்ளாஸ். யூ ஆஸ்க் மி வாட் இஸ் வொயிட் ஓபன். வொயிட் மீன்ஸ் வெள்ளை, அண்ட் ஓபன் மீன்ஸ் தொர, டோடலி இட்ஸ் வெள்ளைதுரை,எங்க Plant Biotech professor. Why late? குழந்தை எந்த நாடாயிருந்தாலும் முதல்ல ம்மா...ன்னு சொல்லுற மாதிரி ஸ்டூடண்ட்களுக்கான default பதில், “லேட்டாயிருச்சுன்னு சொன்னதும், மூஞ்சில்லாத துப்பாத குறையா, கேவலமாப் பார்த்துட்டு, Come inside”. உள்ள போனதும் (சுண்டு)சுந்தர பாத்து சிரிச்சுக்கிட்டே பக்கத்தில போய் உக்காந்தா, “மச்சான் மொக்க போடுறான் டா என அவன் கம்ப்ளைன் பண்றான். “விடுறா பாத்துக்கலாம்டாஆஆஆஆஆஅஹ்ஹ் என சொல்லி முடிக்கும் முன்னே கொட்டாவி வந்து விடுகிறது. அப்புறம் ஆபத்தில வந்த ஆபத்பாந்தவனாய் வைப்ரேட்டில் போட்ட மொபைலில் மெசேஜ் வந்து என் பேண்ட் பாக்கெட்டில் துடிக்க, திறந்து பாத்தா, ஒரு மொக்க! L? அப்புறம் அவன திட்டினேன். அவன் எதுக்குடா திட்டுனன்னு கேக்க, நான் பதிலுக்கு திட்டன்னு அந்த கேம் ரெண்டு பீரியட் தாங்குச்சு.

லன்ச் சாப்பிடற டயம் வந்த்தும் கேண்டீனுக்கு போய் அவன் கிட்ட சாப்பாடு வாங்காம, அவன் முன்னாடியே டிஃபன் பாக்ஸ திறந்திட்டு உக்கார்றது. அவன் பாத்தா ஒரு சிரிப்ப்ப் போட்டு, “அண்ணே, பிஸினஸ் எப்படி போகுதுன்னு கேட்டு கரெக்ட் பண்ணிக்குவோம். அங்க வேட்டையாடு விளையாடு க்ரூப்ஸ் வர்றதுக்குள்ள சாப்பிடறதுதான் முதல் வேலை. அதென்ன வேட்டையாடு விளையாடு க்ரூப்ஸ் எனக் கேட்டீங்கன்னா, as the name indicates, டிபன் பாக்ஸ் திறந்தா மானக் கண்ட சிங்கம் மாதிரி பாயுவானுங்க, அவனுங்க சாப்பிட்டுட்டு போனபின் அந்த டேபிள் சிங்கம் குதறின மான் மாதிரி இருக்கும், அன்னைக்கு அந்த மேஜையில எவனும் சாப்பிட முடியாது. அப்படி நாறடிப்பானுங்க.

உண்ட களைப்பு தீர ரெண்டு மணி நேரம் க்ளாஸில தூங்கினப் பிறகு, வெளிய டாப்பு. ஆனா, எங்க கேங்குக்கு ஒரு வித்தியாசமான ஒரு பழக்கம் உண்டு. க்ளாஸ் முடிந்தாலும், கட் அடிச்சாலும் வீட்டுக்கு போகிற வரை kaaleeகாலேஜ் விட்டு வெளியே போக மாட்டோம். அப்புறம் வழக்கம் போல ராஜாபார்லி பேக்கரி போய்டு உள்ள வரும் போது, “ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே....... எனப் பாடிட்டே வந்தா, பக்கத்திலிருந்த சுண்டு என்னப் பார்த்து சிரித்தான்., எதற்கு என நிமிர்ந்து பார்த்தா..........எதிரில அனு. குட்டியா, க்யூட்டா.......அழகான அனு.... ம்ம்ம்ம்.... அவளப் பாத்தா மூச்ச இழுத்து விடும் போது பல தடுப்புகளை சந்திக்குது. அந்த மூச்சுத் திணறல் அவஸ்தை இல்ல, இன்பம் தான் என நானும் சொன்னா அது monotonica இருக்காது? ரோலர் கோஸ்டர்ல விர்ர்ர்ர்னு போகும் போது ஒரு திகில் இருக்கும், அதே நேரத்தில் ஒரு போதையும், its intoxicating. இது கொஞ்சம் பின்நவீனத்துவ பாணியில இருக்குல்ல? வெரி குட்.(பதிவரானதோட சைட் எஃபெக்ட்!). அப்போதான் அவகிட்ட ஒரு வித்தியாசம் இருக்குறத கவனிச்சேன். அட, அவ முடி..... அதுக்குள்ள சுண்டு- “டேய், அவ ஹேர் ஸ்டைல் மாத்திட்டாடா. நல்லாதான் இருக்குஇதேதான் நானும் சொல்ல வந்தேன். அவ ஹேர் கொஞ்சம் கட் பண்ணி pony tail போட்டிருந்தா, சான்ஸே இல்ல... ஹைய்ய்ய்ய்யோ, தேவதையேதான்! “இப்படி சைட் அடிச்சே பொழப்பு ஓடுதே, என்னக்கிடா பேசப் போற?. “பேசுவோம் டா. “என்னக்கி........

வீட்டிலிருந்து “என்னடா காலேஜ் முடிஞ்சு இவ்ளோ நேரம் ஆச்சு, என ஃபோன் வர, வீட்டுக்கு கிளம்ப வேண்டியதாப் போச்சு. வந்த பிறகு கொஞ்ச நேரம் பதிவுலகத்த மேய்ஞ்சுகிட்டு இருந்தப்போ, ஜிங்குன்னு சவுண்டு கொடுத்திட்டு ஜிமெயிலில் எட்டிப் பார்த்தார், நம்ம கிஷோர்.
hi
hi
அப்புறம் ஆறாவது தடவையா நீங்க என்ன பண்றீங்கன்னு கேட்டு அவர காண்டாக்கினேன். இது பரவாயில்ல, ஒரே நாளில் ஒருத்தன பஸ்ல, க்ளாஸ்ரூம்ல, காரிடார்ல, டாய்லெட்லனு எல்லா இட்த்திலயும் பேரக் கேட்டு அவன் கடிக்க வந்த கதை அவருக்கு தெரியாது.

அப்புறம் அஜய் சிக்கினான், அவன்ட்ட mental masturbationஓட(ச்சீன்னு சொல்லாதீங்க......... அதப் பத்தி வேற ஒரு பதிவுல!) சைக்காலஜி பத்தி பேசும்போது, சரண்யா smsல வசமா மாட்டினா.
“சரண்யா, wat doing?
summa iruken.
i lov you, kuty
“டேய், ஆரம்பிச்சுட்டயா?
“நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆச்சு.
“பப்பு, உனக்கு வேற யாரும் சிக்கலயா, என்கிட்ட ஆரம்பிசுட்ட.
“உன் ஒருத்திய பாத்தாதான் லவ்வெல்லாம் வருது
“டேய், உன் மொக்கய நிறுத்துடா
“அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.
“அய்யோ, நீ ஸ்டார்ட் பண்ணா நிறுத்த மாட்டியே
“நீ என்னய லவ் பண்றதா சொன்னா விட்டுடறேன்.
“டேய், போய் அனுகிட்ட மொக்க போடுடா, என்னய விடுடா!
“உன்னய அவ்ளோ ஈசியா விட முடியாதே
“திடீரென எதுக்குடா என்னய ஓட்ட ஆரம்பிச்சிட்ட? எப்ப இருந்து இப்படி?
“உன்ன பாத்திலிருந்தே இப்படிதான்.
“......
“ஹலோ
“....
ம்ஹூம்.... இன்னும் ரெண்டு நாளைக்கு மெசேஜ் ஓபென் பண்ணவே பயப்படுவா. சரி, அடுத்து யாரு? சுண்டு!
“டேய் சுண்டு, wat doing.....”
அப்படியே சாப்பிடுற நேரம் ஆயிட்டதால சூப்பர் சிங்கர்ல வர்ற ரேணுவ சைட் அடிச்சுக்கிட்டே சாப்பிட்டு முடிச்சா, நாளைக்கு இண்டர்னல்ஸ்னு மெசேஜ் வந்தது. நாளை என்பது கடவுளுக்கு, இன்று என்பது மனிதருக்குன்னு மொக்கத்துவம் சொல்லி அவன துரத்திவிட்டுட்டு, லேட்டாயிடுச்சு தூங்கடான்னு சொன்ன அம்மாவ சமாளிச்சிட்டு, கம்ப்யூட்டரில வந்து உக்காந்து வேர்ட் ப்ராச்சர திறந்து அடிக்க ஆரம்பிச்சேன், “நாட்குறிப்பில் ஒரு நாள்.......