டாப்பு அடிக்கலாம் - வீடியோ ஸ்பெஷல்
Filed under Video , டாப்பு , by Prabhu on 8/15/2009 03:15:00 PM
7
ரொம்ப நாளா பதிவு போடலயே, ஏன்னு கேக்கலாம் நீங்க(ஜுனூன்!). என்னங்க செய்யுறது! என்னுடைய அலுவல்கள் சூப்பர் மேன் ஜட்டி கணக்கா tight ஆயிடுச்சுங்க! அதுக்கென்ன இப்போ? அதை ஈடு செய்ய உங்களுக்கு ஒரு அனுகுண்டு அறிவிப்பு வச்சிருக்கேன். அது பதிவின் இறுதியில் சொன்ன உடனே இறுதிக்கு போய்டீங்கனா, பல வீடியோக்கள மிஸ் பண்ணிருவீங்க.
ஒரு வீடியோ ஸ்பெஷல் போடனும்னு ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தேன். இந்த டாப்ப நம்ம வீடியோஸ், அப்புறம் என்ன தோணுதோ பேசுவோம். வீடியோன்னு சொன்னதும் சில யூத்துகள் 'அப்படி'ன்னு நினைப்பாங்க. ஆனா, எல்லாமே இப்படிதான். சிலதுகள் அப்படி இப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. சில பாட்டெல்லாம் கேட்ட மாதிரி இருக்கும். ஆனா எங்க கேட்டேனே தெரியல. கேட்டிருக்கேனா எனவே ஒரு சந்தேகம் தோன்றுவதுண்டு.
அதுதான் இந்த பதிவு. இதெல்லாம் மட்டும் பிடிச்ச பாடல்கள்னு சொல்லல, மூளையின் பதிவுகளில் அவுட் ஆஃப் போகஸான இடங்களில் இருந்து பளிச்சிடும் சில விஷயங்களின் தொகுப்பு.
முதல்ல சொல்ல வர்ற பாட்டுக்கு கண்டிப்பா நம்ம இயக்குனர் விஷ்ணு வர்த்தனுக்கு நன்றி சொல்லனும். 'மெல்ல மெல்ல என்னை தொட்டுங்கிற' பாட்ட எல்லாத்துக்கு நினைவு படுத்தினாரு. மலேசியா வாசுதேவனோ? சில்க் ஸ்மிதாவும் ரவிசந்திரனும் வர்ற பாட்டு. இது டிஸ்கோ பீரியட்ல வந்த சாங்கோ? அதுவா முக்கியம் இப்போ? இளையராஜா, சில்க் ரெண்டு பேரும் சேர்ந்ததால வந்த மேஜிக் நம்பர் 1. பாருங்க!
அடுத்து வர்ற வீடியோவும் சில்க் ஸ்மிதாவேதான்! 'பூவே இளைய பூவே' - இது கோழி கூவுதுன்னு ஒரு படமாமே! கங்கை அமரனோட பாட்டுன்னு நினைக்கிறேன். பிரபு பூதாகரமா தெரிகிறார். இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் பாடிருக்கார். கடந்த பல வருடங்களா அவர் பாடுவதேயில்லை. வயதானதால் பாடுவதை நிறுத்திவிட்டாரா? குரல் போயிடுச்சுன்னு பேசிக்கிறாங்க. என்னவோ இந்த பாடலையும் இதோ பாருங்க!
'பொன்மேனி உருகுதே' - இதுவும் போன தலைமுறையினருக்கு தெரிந்த பாடல்தான். இதுவும் சில்க்தான். இளையராஜா தான். கமல் கூட இருக்கார். 'மூன்றாம் பிறை'. எல்லாருக்கும் தெரிந்த படம். பாட்டுல சில்க் அவ்ளோ செக்ஸியா இருக்காங்க. ஒரு வித்தியாசமான டான்ஸ் கூட ஆடுறாங்க. Erotic! ஏதோ war dance மாதிரி இருக்கு! என்ன டான்ஸ்னு தெரிஞ்சா சொல்லுங்க!
'குழழூதும் கண்ணனுக்கு' - இந்த பாட்டு தெரியாத தமிழன் இருக்க முடியாது. ராதா கூ கூ ன்னு சவுண்டு விட்டுட்டு ஓடுவாங்க. 'மைக்' மோகன் புல்லாங்குழல் வச்சுக்கிட்டு வாசிக்க தெரிஞ்சவங்களவிட ஓவரா சீன் போட்டுக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுறதுக்கும் நடக்குறதுக்கும் நடுவில ஒரு வித்தைய செய்து கொண்டிருப்பார். பாட்டோட சுவாரசியமான விஷயமே ரெண்டு வேற தலைமுறையை சேர்ந்த ஜாம்பவான்கள் இசையமைத்துதான். அது இளையராஜா, எம்.எஸ்.வீ.
'It's my life' -இது Bon Jovi யின் பாடல். இந்த பாடல் காதலி 5 நிமிஷத்தில வந்து சேரனும்னு சொன்ன உடனே கடல் தாண்டி மலை தாண்டி வர்ற மாதிரி ஊரு முழுக்க பாய்ந்து விழுந்தடிச்சு வந்து சேரும் கதாநாயகனப் பத்தின பாட்டு. இது தான் வாழ்க்கை. போனா வராது, போன் போட்டா கிடைக்காது(It's my life. It's now or never)ன்னு சொல்லுறதுதான் ஹைலைட்டான லைன். கண்டிப்பா பிடிக்கும் பாருங்க. ஏற்கனவே அர்ஜுன் காப்பி அடிச்சிட்டாரேன்னு நீங்க கண்டுபிடிச்சா நான் பொறுப்பல்ல!
இப்ப ஒரு தீவிரமான (சீரியஸ்?) வீடியோ. வந்து கொண்டிருக்கும் ஒரு புது இந்தி திரைப்படம். 'Slumdog millionaire' விநியோகம் செய்த Fox Starஆல் விநியோகம் செய்யப்பட உலகமே காத்திருக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் திருவிழா, 'Quickgun Murugan' -Mind it! இதில் ராஜேந்திர பிரசாத், நாசர், ரம்பா, சண்முகராஜன், ராஜு சுந்தரம், மேலும் பல இந்தி நட்சத்திரங்கள் மிரட்டியுள்ளார்கள். தமிழிலும் வர உள்ளது. கண்டிப்பா இந்த டிரைலர் பாக்காம வெளிய போகாதீங்க! பின்னால் வருத்தப்படுவீங்க! 'Quickgun Murugan - The Indian Cowboy.
இது ஆங்கில ட்ரைலர். ஹிந்தியிலயே செம டெரர்தான்:) having my fingers crossed for the release.
இன்னும் பாட்டு பட்டியல் பெருசா வச்சிருக்கேன், கருணாநிதி அவர் குடும்பத்துக்கு சேர்த்த சொத்து கணக்கா! ஆனால், இப்ப இது போது. இந்த பதிவுல நிறைய சில்க் பாட்டு வந்திருச்சுல! அப்போ அவங்களுக்கே டெடிகேட் பண்ணிடுவோம். எனக்கென்னவோ சில்க் பாக்கும்போது கழுதைப் பாலில் குளித்த கிளியோபாட்ராதான் நினைவுக்கு வர்றாங்க. ரெண்டு பேரும் கருப்பழகிகள் என்பதாலோ என்னவோ! ஜெய் சில்க் ஸ்மிதா!
அணுகுண்டு அறிவிப்பு - நான் பல காலமாக எழுததாலும், (எனக்கு நானே எழுதிக் கொண்ட) வாசகர் கடிதங்கள் காரணமாக அதை ஈடு செய்ய ஒரு சிறுகதை எழுதி கொண்டிருக்கிறேன். இது fantasy, futuristic, sci-fi இப்படி பல வகைல சேர்க்கலாம். நீ ஒரு வகைல எழுதினாலே படிக்கமுடியாதுன்னு யாருப்பா சொல்றது? வேணாம் விட்டுருங்க. (விடலைனா?) நான் விட்டுடறேன்! அடுத்த டாப்புல பாக்கலாம்.
டிஸ்கி : நிறைய வீடியோ வச்சிருக்கேன். அதனால லோட் ஆக லேட் ஆனதென்றால், "மன்னிக்க வேண்டுகிறேன்...." கவலைப்படாதிங்க! இதுக்கு வீடியோ சேர்க்கல.
சில்க் பத்தி நியாபக படுத்தி என் பிஞ்சு மனச கஷ்டப்படுத்திட்டப்பா... சில்க்kikku நிகரான வடிவத்த இப்பூவுலகத்தில் பாத்தில்லப்பா...
//கமல் கூட இருக்கார்//
நல்ல சிரியஸான லொள்ளு
//இன்னும் பாட்டு பட்டியல் பெருசா வச்சிருக்கேன், கருணாநிதி அவர் குடும்பத்துக்கு சேர்த்த சொத்து கணக்கா! //
கட்டம் கட்டிட வேண்டியது உங்களுக்கு....
//நான் பல காலமாக எழுததாலும், (எனக்கு நானே எழுதிக் கொண்ட) வாசகர் கடிதங்கள் காரணமாக அதை ஈடு செய்ய ஒரு சிறுகதை எழுதி கொண்டிருக்கிறேன்.//
உங்க பாலோவரா இருக்குறத கேன்சல் பண்ணவேண்டிய நேரம் வந்திடுச்சு நினைக்கிறேன் :))
இம்புட்டு வீடியோ உள்ள பதிவ போட்டுடீங்க...லோட் ஆகுறதுக்கு கடுப்பாகிடுச்சு. எனிவே ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. வெல்கம் பேக் :)
”க்விக் கன் முருகன்” டிரைலர் சூப்பர் :)
hahaha... i like pon meni song! the dance...haha... no comments!
:-)))))))
எனக்கும் சில்க்குன்னா ரொம்ப பிடிக்கும் மக்கா!
சில்க் சில்க் தான்....