ஹாரி பாட்டரும் muggle ராஜகுமாரனும்

Filed under , by Prabhu on 7/18/2009 09:32:00 PM

15

ஹாரி பாட்டர் கதைகள தீவிரமா படிச்ச என்ன மாதிரியான ரசிகர்களுக்குதான் இந்த படங்களுக்கான காத்திருப்புக்கான அர்த்தம் தெரியும். அதுவும் என்னைய மாதிரியான ஹாரி பாட்டர் fanatics களுக்கு இது ரஜினி படம். அத விட மோசம். கதைய படிச்சிட்டு எப்படி எடுத்துருப்பானோ, ஒழுங்கா எடுத்துருக்கனுமேன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதுக்கு காரணம் Rowling ஓட எழுத்துக்கள். படிக்கும் போதே நமக்குள்ள mixed emotions தான். குறிப்பா என்னை போன்ற adolescents
(அட, படிக்கும் போது அடலசண்ட் தாம்பா).

இது ஹாரி பாட்டர் படத்தோட விமர்சனமான்னு கேட்டா அதுவும் தான். நான் விமர்சனம் எழுத ஏற்கனவே ட்ரை பண்ணி பெரிசா வரலன்னு எனக்கு தோணுது. இப்போதான் ஆதவன் என்னையும் படிச்சு ஏமாந்து சரக்கிருக்கிற பதிவுன்னு சொல்லிருக்காரு. அத நம்பி வர்றவங்கள ஓடவிட விருப்பமில்ல.அதனால அந்த படத்த பத்தி என்னவெல்லாம் தோணுதோ எழுதுறேன். ஆமா,....'ஹாரி பாட்டரும் மாயராஜகுமாரனும்' தான படத்தோட பேரு நீ என்ன 'muggle ராஜகுமாரனும்'னு போட்டிருக்கனு கேக்கலாம். சொல்றேன். விடை பதிவின் கடைசியில்னு போட்டா கடைசி போயிட்டு, சூப்பர்னு போட்டோ போடாமலோ போய்விட வாய்ப்பிருக்கிறதால, நடுவால எங்கயாவது சொறுகி விடுறேன். படிச்சிக்கோங்க!

முதல்ல விளக்க வேண்டியது படத்தோட தலைப்பு. 'Harry Potter and the Half-Blood Prince' ஓட தமிழாக்கம் தான் இந்த படம். படத்துக்கு 'ஹாரி பாட்டரும் அரை ரத்த அரசகுமாரனு'ம்னு பேர் வைப்பாங்களோன்னு நெனச்சோம். பரவாயில்ல கொஞ்சம் நல்லாருக்கனுங்கிற எண்ணத்துல வச்சிருக்காங்க. half-blood ங்கிறது மந்திரம் தெரிஞ்ச ஆண்/பெண் , சாதாரண ஆண்/பெண் (இவங்களத்தான் muggleனு சொல்வாங்க!) கலப்பில் பிறக்கிற கலப்பினத்த சொல்வாங்க.

போன பாகமான 'Harry Potter and the Order of the Phoenix' விட்ட இடத்துல இருந்து தொடங்குது படம். Harry காபி ஷாப்ல ஒரு பொண்ணோட கடலை போட ட்ரை பண்ணும் போது இடையில Dumbledore(Principal) வந்து ரிடையர் ஆன Horace Slughornன எதுக்காகவோ ப்ரொபசரா ஆக்குறதுக்கு இவன அழைச்சிட்டு முயற்சி பண்ணுறாரு. அப்புறம், Draco Malfoy கிட்ட ஒரு மூக்குடைப்போட ஹாரியின் பள்ளி வாழ்க்கை அந்த வருடம் 'இனிதே' துவங்குது.


அதன் பிறகு Malfoyஓட ரகசிய நடவடிக்கைகள், Ron-Hermione நடுவில நடக்கிற ஊடல்-கூடல், Harry-Ginny நடுவில புதுசா வொர்க் அவுட் ஆகுற long felt chemistry, Dumbledore கிட்ட ஸ்பெஷல் கிளாஸ் என ஓடிட்டிருக்குற கதையில ஒரு சின்ன நெருடல் தான் ஹாரியோட potions book. அந்த புத்தகத்தோட பழைய சொந்தகாரன் பல உபயோகமான குறிப்புகளையும், மந்திரங்களையும் நுணுக்கி வச்சிட்டு போயிருப்பான். அட்டையில 'இந்த புத்தகம் மாயராஜகுமாரனோடது'(Property of Half-blood Prince) என போட்டிருக்கும். இந்த புத்தகம் மேல Hermione, Ginnyக்கு சந்தேகம் இருந்தாலும் அந்த புத்தகத்தின் மேல அபார நம்பிக்கை வச்சிருப்பான். ஆனா, அவன் நம்பிக்கை தவறுது. அது அவனுக்கு ஆபத்தானதால Ginny அதை மறைச்சு வைக்கிறா.

Snape ஒரு மீறமுடியாத சத்தியத்த(Unbreakable Vow) Malfoy அம்மாக்கு செஞ்சு தந்திருக்கானு ஒட்டு கேக்கிறான் ஹாரி. Dumbledoreஅ கொல்ல ஒரு சபிக்கப்பட்ட நெக்லஸ் ஒரு பொண்ணு மூலமா வந்தது பாத்ததும், அதுவும் Malfoy வேலையா இருக்கும்னு ஹாரி நினைக்கிறான்.

Dumbledore அடிக்கடி வெளிய போறதுக்கான காரணங்களையும், வோல்டிமோர்ட் சம்பந்தப்பட்ட சில பழைய நினைவுகளையும் ஹாரிக்கு விளக்கும் போது வேல்டிமோர்ட் கிட்டத்தட்ட சாகாவரம் பெற்றவங்கிற விவரம் தெரிய வருது. Slughorn கிட்ட இருக்கிற அந்த முக்கியமான நினைவு என்ன? வோல்டிமோர்டோட அந்த கிட்டதட்ட சாகாவர ரகசியம் என்ன? Dumbledore ஹாரிகிட்ட ஒப்படைக்கிற பொறுப்பு என்ன? யாரு அந்த மாயராஜகுமாரன்? Malfoyஓட ரகசியம் என்ன? Snape எதுக்காக சத்தியம் பண்ணி கொடுத்தான்? இதுக்கெல்லாம் விடை தெரிய படம் பார்க்கனும். ஓசில கதை கேக்கலாம்னு நெனச்சீங்களா?

புத்தகத்தை த்ழுவி எடுத்திருந்தாலும், அப்படியே எடுக்காமல் ஒரு சில விஷயங்கள படத்துக்காக உருவாக்கியிருப்பது கதையின் விறுவிறுப்புக்கு கை கொடுப்பதோட, புத்தகத்த படிச்சவங்களுக்கு போனஸ்! உதாரணம் Weasley இல்லத்துக்கு Bellatrix வந்து , அதனால் உருவாகும் ஒரு சண்டை காட்சி. புத்தகக் கதையை போல அல்லாமல் படத்தில் ஆரம்பத்திலேயே Ginny மேல் Harryக்கு ஒரு 'இது' இருக்கு. தேவையில்லாத புத்தகத்தின் கொசுறு விஷயங்களில் கவனம் காட்டி புத்தக எழுத்தாளர், வாசகர்கள திருப்தி படுத்த நினைக்காம, படிக்காதவங்களும் பார்க்கும் படியா எடுத்துருக்காங்க. காட்சிகளுக்கு காட்சி நகர்ற வேகம் அற்புதம்.

இந்த கதை, புத்தகம் பற்றிய பொதுவான கருத்து, இது சின்னப் பசங்க கதை/ படம் என்பது. ஆனா, இது ஒரு சாதாரண fantasy வகையா இல்லாமல், ஒரு திரில்லராகவும் எடுத்திருக்காங்க. அப்புறம் நிறைய, ரொமான்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை வச்சிருக்காங்க. முக்கால்வாசி Ron-Hermione-lavender முக்கோணக் காதல், Ginny-Harryக்கு இடையான ஒரு கெமிஸ்ட்ரி என ஹார்மோன்களின் வேலையாகவே இருக்கிறது. ஹாரியின் முக்கிய ரசிகர்களின் (இவர்களின் டீன் ஏஜில் தான் கதைகள் வெளியாயின) வயது 20ஐ நெருங்கி இருக்றதாலயும், அவங்க வாழ்க்கையில சந்திக்க கூடியதாவும் இருக்கிறதால இந்த மாதிரி எடுத்திருக்க வாய்ப்புகள் உண்டு (எனக்கு 20 உனக்கு 18ஆ?). அத விட முக்கியமான காரணம் ஏழாவது பாகத்த ரெண்டா வெட்டுறதால இதுலயும் சண்டைகள் நிறைய வச்சா ஓவர் டோஸ் ஆயிடும்னு பயப்படுறாரு.

படத்தோட CG பிச்சிருக்காங்க. ஆரம்பத்தில பாலத்த முறுக்கிறதில இருந்து கடைசியில அந்த குகைக் காட்சிகள் வரைக்கும் அருமையா இருந்துச்சு. Dumbledore கடைசியில உருவாக்கிற சீறிக்கிட்டு வரும்நெருப்பு வட்டம் செம சீனு. புத்தக அட்டையில வந்த காட்சி போலவே இருந்தது. Cinematographer தன்னோட பங்க சிறப்பா செஞ்சிருக்காரு. அதுவும் அந்த ஆரம்ப காட்சியில் காமரா கிளம்பி புயலோடு சென்று பாலத்தை அடையும் lengthy shot.... it was breathtaking. எடிட்டிங் செம க்ரிஸ்ப். ஆனால் சில இடங்களில் காட்சிகளை விட்டு தவ்வியது போன்று தோன்றுவது அதே எடிட்டிங்கின் குறைபாடு. கடைசியில் ஹாரி தண்ணீரில் கைவிடும் போது அவன் கைய தண்ணில இருந்து ஒரு கை பிடிக்கும்னு கதையில் படிச்சு தெரிஞ்ச என்னையவே மிரட்டுச்சுன்னா, தியேட்டர்ல பல பேர் அந்த சீன்ல ஜெர்க் ஆனாங்கன்னு சொல்ல தேவையில்ல. செம த்ரில் அந்த ஒரு காட்சி.

படம் மட்டும் பார்க்க வர்றவங்க ரொம்ப மாயாஜாலத்த எதிர்பார்த்தா, ஏமாற்றம்தான். ஏன்னா இன்னும் ரெண்டு பாகம் முழுக்க ஆக்ஷனா ரெடியாகும் போது, இதயும் அதிரடியா எடுத்தா அலுத்துப் போயிடலாம். அதான்.
மொத்தத்தில ஒரு த்ரில்லர் ஆனாலும், ஆங்காங்கே நகைச்சுவை பளிச்சிட கொடுத்திருக்காங்க.

இப்ப முக்கியமான பார்ட். முகமெல்லாம் பிரகாசமாகுதே! கரெக்ட்! நம்ம Emma Watson பத்தியும்தான். எப்பவும் போல பொண்ணு அழகுதான். அப்பப்ப ரகசியமா வெட்க்கப்பட்டு முகம் சிவக்கும்போது, அடடா.... ஹீரோவுக்கு இல்லாத சவுண்டு தலைவிக்குதான். வந்த உடனே என்னா சவுண்டு! Rupet Grint (Ron Weasley)- காமெடிக்கு யூஸ் பண்ணிருக்காங்க. Daniel Radcliffe (Harry Potter) - இவரும் ஓகே தான். Bonie Wright (Ginny Weasley) - பொண்ணு கடமைய சரியா செஞ்சுட்டு போயிருக்கு. எனக்கு இந்தப் பொண்ணயும் பிடிச்சது. எல்லாரும் எம்மா வாட்சனப் பாக்கும் போது நீ ஏன் இவளயும் பாக்குறன்னு கேட்டா அதுக்கு ஒரு extensive தியரியே வச்சிருக்கேன். அப்புறம்! Alan Rick (Severus Snape) - இவரோட நடிப்பு ரொம்ப அருமை. இவர் கேரக்டருக்கான ஆழம் இனி மேலும் கூடப்போகுதுங்கிறத உணர்ந்து நடிச்சிருக்காரு. Very defining. இது போக Professor Slughornஆ வர்ற Jim Broadbent நல்ல நகைச்சுவை கலந்த கதாபாத்திரமா வந்திருக்காரு.

திரைக்கதை எழுதிய Stephen Knovles ஐ பாராட்டியே ஆகனும். ஏன்னா இந்த புத்தகத்த திரைக்கதையாக்குறது கஷ்டம். அவ்ளோ பெரிய புத்தகத்த செல்லுலாய்டுக்கு ஏற்றாற் போல கொண்டு வந்திருக்கிறார். Director David Yates நல்லா எடுத்திருக்கார். அடுத்த பார்ட்ட்களின் நம்பிக்கையை உண்டாக்குகிறார். மொத்தத்தில் இது ஐந்தாம் பாகத்தை விட அருமையாக இருக்கிறது.

நெகடிவ் பாயிண்ட்ஸே இல்லையா? ஏன் இல்ல? மாயாஜாலத்த எதிர்பார்த்து போற நம்ம ஊரு மக்களையும், சின்ன் பசங்களையும் கொஞ்சம் ஏமாத்திருக்கு. எடிட்டிங் சில இடங்களில் கொடுத்த காசுக்கு ஓவராவே வேலை பாத்திருக்காங்க. யப்பா, சீக்கிரம் படத்த எடுத்து முடிங்கப்பா! முதல் பாகம் எடுக்கும் போது அவங்களுக்கும், ஹாரி பாட்டர் கதாபாத்திரங்களுக்கும் ஒரே வயசு. இப்போ மாடு மாதிரி வளர்ந்துட்டானுங்க. 20 வயசு ஆன பிறகு இன்னமும் 16 வயசுன்னு சொல்லிக்கிட்டு.... இந்த படத்த மற்ற இரண்டு பாகங்களுக்கு ஒரு முதல் படியாக பயன்படுத்திருக்காங்க. அதனால அடுத்த பாகங்களில் நீங்கள் சூட எதிர்பார்க்கலாம். இப்பொழுதைக்கு ஒரு நல்ல ப்டம் ரசிக்க. ஆறினாலும் அருமையான டீ.


ஹாரிபாட்டரும் மாயராஜகுமாரனும் - குறைவான மாயாஜாலங்களுடன்

தரம் - நல்ல படம். பார்க்கலாம், குறிப்பாக ஹாரியின் புத்தக ரசிகர்கள்.


டிஸ்கி- ஹாரி பாட்டரும் muggle ராஜகுமாரனும் -என் தலைப்ப யோசிச்சிங்களா?
அது நான் தான். எப்படின்னு யோசிங்க! என் பெயர் பிரபுகுமார்.

டிஸ்கி 2 : ஹாரி பாட்டர் கொட்டை வடிவில்( in a nutshell) தர முடிவு செய்துள்ளேன். ஆனால் அது பெரிய வேலை. உங்கள் ஆதரவு இருந்தால் தான் அதை செய்ய இயலும். சொல்லுங்க! ஆரம்பிச்சிருவோமா?

High definition trailer

Comments Posted (15)

padathula vara scena vida namma madurai KUDIMAGANGAL kodutha scene dhan semaya irundhuchu.. voldemortnu sonna OLDMONKa nu kekuranga.. kaiya kathula aati "napoleane vanu" magic panradhu.. apuram dhidirnu "thala sasikumar valga"nu kathuradhunu sema comedy dhan ...
padam patha idam:manicka vinayagar..

movie sucks. movie is not honest to the book. david yates again messed. david yates and steve kloves sucks. //டிஸ்கி 2 : ஹாரி பாட்டர் கொட்டை வடிவில்( in a nutshell) தர முடிவு செய்துள்ளேன். ஆனால் அது பெரிய வேலை. உங்கள் ஆதரவு இருந்தால் தான் அதை செய்ய இயலும். சொல்லுங்க! ஆரம்பிச்சிருவோமா?//

thaevaiyey illa. please leave the book as it is. just only my request

நல்ல விமர்சனம் பப்பு.. :)

படம் சுமார்-னு தான் கேள்விபட்டேன்.. அடுத்த வாரம் தான் பாக்கனும்..

/* ஹாரி பாட்டர் கொட்டை வடிவில்( in a nutshell) தர முடிவு செய்துள்ளேன். ஆனால் அது பெரிய வேலை. உங்கள் ஆதரவு இருந்தால் தான் அதை செய்ய இயலும். சொல்லுங்க! ஆரம்பிச்சிருவோமா?
*/

நல்ல முயற்சி..
காபிரைட்ஸ் பிரச்ச்னை வந்துற போகுது... எதுக்கும் Bloomsbury-க்கு ஒரு வாட்டி சொல்லிடுங்க :P :P

புத்தகத்தில் இருந்த கெத்து படத்தில் இல்லைன்னு தான் சொல்லணும்.. நீங்க எழுதுங்க பப்பு.. படிக்கலாம்

பப்பு.. பப்பு... பப்பு ..

யோவ் கிஷோரு,... என்னையா வம்பு இழுக்குறீரா?
எனக்கென்னவோ அசோகன் மாதிரி சிரிக்கிறாப்ல தெரியுதே?

எதுக்கு?

onnum illada.. un peru thananu check pani parthen..

ajay neenga solrathu sarithan nadodikal ponra oru yadhartha padatha partha namma pasanga, intha mayazala padathukku konjam kandu ananka ana pona partukku ithu evvolovo better

prabhu kathaya tamilil eluthunga evanum ketka mattan

Payapulla unakku English Ellam Theriyumaa..?

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....நமக்கும் இதுக்கும் ரொம்ம்ம்ம்ம்ப தூரம்.

திரட்டு டி.வி.டி யிலே கண்டிப்பா பார்க்கிறேன்

நல்ல விமர்சனம்!

என்னை தனிமையில் விட்டு சென்றதால் படம் சொதப்பிரும்னு எதிர்பார்த்தேன்!

செம விமர்சனம். நான் இன்னும் படம் பார்க்கலை. :)

Nice dispatch and this mail helped me alot in my college assignement. Gratefulness you as your information.

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!