கூ.....கூ........ வடக்கே போகும் ரயில்

Filed under , by Prabhu on 8/27/2009 08:10:00 AM

5

எல்லாம் சரியா இருக்கா? வீட்ட பூட்டிட்டயா? இழுத்துப் பார்த்தயா? ப்ரஷ் எடுத்து வச்சயா? முதல்ல நாளைக்கு போட ஜட்டி எடுத்து வச்சயா? இப்படி பல ஆதாரக் கேள்விகள் கேட்கப்பட்டதென்றால் ஊருக்கு கிளம்புகிறேன் என்று அர்த்தம். ஆனா ஊருக்கு போவதற்குள் ஒவ்வொருத்தரும் பண்ணுகிற ஆயுத்தம் இருக்கிறதே! எனக்கு தெரிந்து ஒரு காம்பௌண்ட்டில் வாழும் நபர், தனது கழிவறையை மட்டும் பூட்டி விட்டு செல்வார், பூட்டு போட்டு! அங்க என்னங்க தங்கமலை ரகசியமா இருக்கு என கேட்கலாம்! ஆனால், பூட்டாமல் நாலு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் அவசரமாக கழிவறைக்கு செல்லும் போது, எவனோ திருட்டுத்தனமாக நாலு நாளைக்கு முன்னால் பண்ணிய அசிங்கம் காய்ந்து இருந்தால் அதன் அத்தியாவசியம் தெரியும்.

அப்புறம் மற்ற ஊரிலிருந்து சென்னைக்கு போறவங்க கனவு, அங்க போனதும் அதப் பாக்கனும், இதப் பாக்கனும், அப்படியே பீச் போகனும், சத்யம் சினிமாஸ் போகனும் என பல. ஆனால் அங்க இருக்குறவன், நான் கடைசியா பீச்சுக்கு போனது பன்னிரண்டாம் வகுப்பு லீவுல என்பான், சரி, சத்யம் கூட்டிட்டு போவான்னு பாத்தா சத்தியமா காசு இல்ல மாப்ள் என்பான். இவனுங்கள நம்பி பிரயோஜனம் இல்லன்னு புரிஞ்சுக்கிட்டு, நண்பனப் பாக்கப் போறேன்னு நம்மளே ஊரச் சுத்திட்டு வந்திடனும்.

இது பத்தாதுன்னு இன்னொரு குரூப் அலையுறானுங்க! கடலை போட கெளம்பிடுறானுங்க! ஆர்குட்ல மீட் பண்ணி ஸ்கராப் அனுப்பிக்குறாங்க, அப்புறம் மொபைலுக்கு தாவிடறாங்க! அடுத்து சென்னைக்கு நுழைவுத்தேர்வு எழுத அனுப்புனா, ரெண்டு நாளைக்கு முன்னாடியே போய் கடலை போட்டுகிட்டு ஊரச் சுத்துறானுங்க! நமக்கு வயிறு எரியுது பாஸ்! அதுவும் நாம ஒரு பையனோட ஸ்பென்சர்ல சுத்திட்டு இருக்கும் போது, அங்கயும் அவனுங்க எதிர்பாராம வந்து கடுப்ப கெளப்புவானுங்க! போங்கடா, சென்னைல வேற இடமா இல்ல! நாங்க போற இடத்துக்கா வருவீங்க?

எங்க போனாலும் அங்க அத வாங்கிட்டு, இங்க இத வாங்கிட்டு வான்னு ஒரு குரூப் அலைவானுங்க! சின்னப் பையன் என்பதால் எனக்கு அந்தப் பிரச்சனை இல்ல. ஆனா, ஊருக்கு போய் வந்த பிறகு அந்த ஊர் பொண்ணுங்க எப்படின்னு சில குறுந்தகவல் விசாரிப்புகள் இருக்கும்!

எனக்கு பொதுவாகவே பஸ் பயணங்கள் அவ்வளவாக பிடிப்பதில்லை. ரயில் பயணங்களையே விரும்புகிறேன். அந்த தடக் தட்க்குடன், சிறு குலுக்கல்களுடன், ஒரு சிப்ஸ் பாக்கெட்டோ, இல்ல கொண்டு செல்லும் உணவோ, காதில் இயர் போன்களுடன்... பயணமே தெரிவதில்லை. ரயில் அனுபவங்கள் பல. ஒரு நண்பன் கூட கிடைத்திருக்கிறான். இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என யோசிக்கலாம். நாளைய வைகை எக்ஸ்பிரஸில் சென்னை செல்கிறேன். ஞாயிறு வரை அங்கிருப்பேன்.ஞாயிறு மதியம் அங்கிருந்து கிளம்புகிறேன். My senseless, silly romantic non-poetic poem but with rhyme and hymn could be found here.

Comments Posted (5)

பயணம் சிறக்க வாழ்த்துகள் பப்பு. வைகை எக்ஸ்பிரஸில் பயணம்னாலே ஜாலி தான். ஒரு கம்பார்ட்மெண்டே ஒரு குடும்பம் மாதிரி ஜாலியான விசயம் நிறைய நடக்கும்.

ஒரு தடவை நான் சென்னையில இருந்து மதுரை போகும் போது எதிர் சீட்ல தாவணியில ஒரு அழகான பொண்ணு இருந்தது. நானும் கொஞ்சம் இங்கிலீஷ்ல ஏதாவது பேசிட்டு “ஓ..ஸாரி அதுக்கு தமிழ்ல என்ன?”னு கேட்டு ரொம்ப சீன் போட்டேன். நடுவுல நான் நீங்க என்ன பண்றீங்கன்னு கேட்டப்ப ஐ.ஐ.டியில பி டெக் படிக்கிறதா சொல்லுச்சு...அவ்வ்வ்வ்வ் அதுக்கப்பறம் கப்சிப் ஆகிட்டேன்

டாய்லெட்ட பூட்ட மறக்க வேணாம் :)

சென்னை வரேன்னு முன்னாலயே எங்கிட்டலாம் சொல்லப்படாதோ???

/*அந்த தடக் தட்க்குடன், சிறு குலுக்கல்களுடன், ஒரு சிப்ஸ் பாக்கெட்டோ, இல்ல கொண்டு செல்லும் உணவோ, காதில் இயர் போன்களுடன்... பயணமே தெரிவதில்லை.*/

unmaiyilaye rayil payanam siranthathu than.. aanal perundhu payanamum ipothellam enaku pidithirukkirathu :)) athuvum perunthil puthagam padipathu migavum pidithirukkirathu :))

chennai ku vareengala.. vaanga.. vaanga.,.. :))

chennai ungalai anbodu varaverkirathu :)))

சென்னை போனோமா வந்தோமான்னு அடக்க ஒடுக்கமா இருக்கணும்.. புரிஞ்சுதா? ஹாப்பி ஜர்னி..

//ஊருக்கு போய் வந்த பிறகு அந்த ஊர் பொண்ணுங்க எப்படின்னு சில குறுந்தகவல் விசாரிப்புகள் இருக்கும்!//

தலையில ரெண்டு கொம்பும், பின்னாடி ஒருவாலும் இருக்கும்னு திரும்ப எஸ்.எம்.எஸ் அனுப்புங்க பப்பு!

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!