டாப்பு அடிக்கலாம் - 4

Filed under , by Prabhu on 10/13/2009 01:02:00 PM

25

அலாதீன் நினைவிருக்கா? அந்த விளக்கு பிடிச்சுக்கிட்டு திரியுற பையன்தான். அந்த கதைய இப்போ இந்தியில மாடர்ன் வெர்ஷன்ல எடுக்குறாங்க! ரிதேஷ் தேஷ்முக்(பழைய மகாராஷ்டிர முதல்வர் மகன்) தான் அலாதீன். பூதம் யாராக இருக்கப் போகுது, நம்ம Big B தான். ரொம்ப் பொருத்தம் தான் நினைக்கிறேன். வேற யாரு இந்த பாத்திரத்துக்கு இன்ஸ்டண்டா கிடைக்க போறாங்க? ஒரு நல்ல contemperory, stylish, rocking genie வேணும் என தான் எல்லாரும் நினைப்பாங்க இல்லையா? Right choice.
-------------------------------------------------------------------------------------------------
கொரிய படங்கள் எல்லாம் ஒரு மாதிரியாக நன்றாக இருக்கும் என்று என் நண்பன் கூறுவான். சின்ன பசங்க டுர்ர்ர்ர்ன்னு வண்டி ஓட்டுற மாதிரி ஒரு பேரு இருக்குமே....ஆங்.... இயக்குனர், கிம் டு கிக், (பாம்பே டூ கோவா மாதிரி இருக்கு பேரு!), அவரோட படம். ஒரு ஓடையின் ஓட்டம் போல் சலனம் இல்லாமல் சன்னமாக ஓடும்னு சொல்லுவான். ஆனா, ஒரு படத்துல தவளைய நிதானமா கொன்னு உருளைக்கிழங்கு போல தோலை உரிச்சு சாப்பிடுறது மாதிரியான சீன் இருக்காம், கொஞ்சம் ரியலா, கொடூரமா, அமெரிக்காக்காரனே கட் செய்யுற அளவு. இது எல்லாம் ஏன் tabooவா இருக்கனும் என்கிற சென்ஸில எடுத்திருப்பதா சொல்லுவான் என் ஃபிரண்டு. ஏன் இந்தக் கொலவெறி?

-------------------------------------------------------------------------------------------------
அதை விடுங்க. நான் ரொம்ப காலமா பார்க்கனும் என்று நினைத்த 'My sassy girl' படத்தை பார்த்தே விட்டேன். சமீபத்தில் இப்படி நன்றாக சிரித்து பார்த்த ரொமாண்டிக் காமெடி இதுதான். அதுவும் CAT கலக்கத்தில் இருந்த என்னையே சிரிக்க வைத்துவிட்டதால் உங்களுக்கு செம ட்ரீட் தான். அந்த படத்தின் ஹீரோயின் தான் show stealer. அந்தப் பெண் கதாநாயகனை அடித்த அடி ஒவ்வொன்றும் இன்னும் என் கன்னங்களில் வலிக்கிறது. ஜூன் ஜி ஹ்யூன் ஏற்று நடித்திருக்கும் கதாநாயகி பாத்திரத்துக்கு பெயர் படத்தில் குறிப்பிடப்பட்டதாக நினைவில்லை. இன்னமும் கண்ணை மூடினால் நினைவுக்கும் வரும் கொரிய அழகி. முடிய கோதுகிற அழகுக்கே இன்னொரு தடவை படம் பார்க்கலாம்... ஹும்...

-------------------------------------------------------------------------------------------------
பதிவுலகில் பதிவுகளைப் படிக்கிறேன் என்ற பேரில் எனது ப்ளட் பிரஷரை 'பம்ப்' செய்து கொண்டிருக்கும் வேளையில் எனக்கு சட்டென்று தோன்றியது இந்த விஷயம். எங்க ஊர்க்காரரு விஜயகாந்த் பத்திதான். அவர பத்தி பேசுனா பெரிய ரீச் ஆகுமே. ஆனா அவர் படங்களுக்குள் இருக்குற குறியீட கண்டுபிடிச்ச முதல் ப்ளாக்கர் நான் தான். வாசிம் கான், அந்த கான், இந்த கான், பாப்கார்ன் எனவெல்லாம் வில்லன்களுக்கு பெயர் சூட்டி அவர்களை வானத்தில் பறந்து பறந்து சுழட்டி சுழட்டி அடிக்கும் அவரின் பின்னால் இருக்கும் அந்த மறைமுக எண்ணங்கள் என கட்டுடைத்த முதல் பதிவர் நான் தான். மி த ஃபர்ஸ்ட். Catக்கு படிக்கும் வேளையிலும் இந்த கேடுகெட்ட வேலை உனக்கு எதுக்கு என ஒரு நண்பன் கேட்கிறான். பாலாண்ணே கூல்! (இது ஹாலி பாலா காண்டில் இருந்தப்போ எழுதிய மேட்டர்)

-------------------------------------------------------------------------------------------------
குட்டி ஜான் பத்தி குட்டி ஜோக்
லிட்டில் ஜான் பத்தி ஏற்கனவே ஆங்கிலத்தில் போன டாப்பில் சொன்னேன், பயபுள்ள வெவகாரமான ஆள்னு. ஒரு நாள் கிளாஸில் கிருஸ்மஸ் பண்டிகை வருவதால் கடவுளைப் பத்தி சொல்லி  க்ளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தாங்க டீச்சர். அப்ப கடவுள் எங்க இருக்காங்க எனக் குழந்தைகள் கிட்டயே கேட்டு புரியவைக்க முயற்சி செய்துகிட்டிருந்தாங்க. ஒவ்வொரு குழந்தையும் எழுந்திருச்சு தனக்கு தோணினதை சொல்லிக்கிட்டு இருந்துச்சு. 'கடவுள் ஆகாயத்துல இருக்காரு', 'கடவுள் என் இதயத்தில இருக்காரு', 'கடவுள் சொர்கத்துல இருக்காரு' என பல பதில்கள்; ஏன், ஒரு குழந்தை 'அஹம் பிரம்மாஸ்மி'ன்னு கூட சொல்லுச்சு. நம்ம ஜானாண்ட வந்தப்போ எந்திரிச்ச ஜான் சொன்னான், "கடவுள் எங்க வீட்டு பாத்ரூமில தான் இருக்காரு!". டீச்சரும், க்ளாஸும் அப்படியே மெரண்டு போயிருச்சு. மெல்ல திடமாக்கிட்டு எப்படி கண்ணா எனக் கேட்டாங்க. அதுக்கு அவன் சொன்னான், "எங்கப்பாதான் தினமும் காலையில எந்திரிச்சதும் நேரா பாத்ரூம் போய் கதவை டம் டம்னு தட்டி, 'அய்யோ கடவுளே, நீ இன்னும் உள்ள தான் இருக்கயா'ன்னு கத்துறாறே!"

-------------------------------------------------------------------------------------------------
நரமாமிச உண்ணிகள் இருக்குற காட்டுக்கு சென்று மூன்று இளைஞர்கள் மாட்டிக் கொண்டார்கள். அங்கே அவர்களை வைத்து கபாப், சுக்கா, க்ரில் என ஒரு மெனுவே ரெடியாக, அவர்கள் மூவரும் தலைவன் காலில் விழுந்து கெஞ்சுகிறார்கள். சரி, நீங்கள் மூணு பேரும் காட்டுக்குள் போய் ஏதாவது ஒரு வகை பழத்தை 10 எண்ணிக்கையில் கொண்டு வாருங்கள் என்றான் தலைவன். முதலாமவன் கொய்யாப் பழம் கொண்டு வந்தான். இதை உன் 'பின்'னால் திணிக்க வேண்டும்; பத்தையும் முடிக்கும் வரையிலும் எந்த வகையான உணர்ச்சியும் காட்டக் கூடாது, காட்டினால் அவன் கழுத்தில் ஃபிஷ்க்! அவனும் மூன்றை திணித்துவிட்டான். நாலாவது செல்லும் போது சிறிது வலியில் கத்திவிட அவனைத் தூக்கிட்டாங்க! இரண்டாமவன் செர்ரி பழங்களை கொண்டு வர அவனுக்கு அதே கட்டளை. இவனும் சின்ன பழம்தானே என செய்து கொண்டிக்கும் எட்டாவது முடியும் வேளையில் சிரித்து விடுகிறான். அவனும் ஃபிஷ்க்! சொர்கத்தில் முதல் ஆள் இரண்டாமவனிடம் கேட்டான், "ஒழுங்காதானே பண்ணிகிட்டிருந்த. என்ன கேடு வந்துச்சுன்னு சிரிச்ச?". அதற்கு இரண்டாமவன், " என்ன செய்ய? மூணாவது ஆளு அன்னாசி பழத்தோட வந்ததப் பாத்ததும் என்னால அடக்க முடியல" என்றானாம்.

Comments Posted (25)

:-))))))))))))))

தவளையை கொன்னு அல்லது உயோரிடு தோலை உறித்து சாப்பிடுவது நமக்கு புதுசு! ஆனா கொரியகாரனுக்கு அது கிராமிய தேசிய உணவு!

இங்க ஆட்டை வெட்டுறதும், கொழியை வெட்டுறதும் வெளிநாட்டுகாரன் பார்த்து இந்தியாவில் இருப்பது அனைவரும் காட்டுமிராண்டி பயல்கள், எவனுக்கும் நாகரீகம் இல்லை என்பான்!

சரியா!?

கடைசி ஜோக் சூப்பர்!

என்னாலயும் சிரிப்ப அடக்க முடியல!

cool..:-))))))))

அலாதீன் ஓடாதுனு நினைக்கிறேன்.. :P பார்க்கலாம்... :)

உங்க ஃப்ரண்டு உலகப்படங்களை கரைச்சு குடிச்சிருப்பார் போல.. விஸ்காமா?

நம்மூர்ல மல்லிகா ஷெராவத்த வெச்சு காப்பி அடிச்சாங்களே!! அதோட ஒரிஜினல்தான மை ஸாஸி கேர்ள்? பார்க்க ட்ரை பண்றேன்...:))

அவ்வ்.. நீங்களும் பிந பதிவர் ஆயிட்டீங்களா???

ஜோக்ஸ் 2ம் சான்ஸே இல்ல!! :)))

ஹா.. ஹா. ஹா..! கடைசி ஜோக்... :) :) :D :D :D

=======

////////////
பாலாண்ணே கூல்! (இது ஹாலி பாலா காண்டில் இருந்தப்போ எழுதிய மேட்டர்)
///////////

இன்னாபா.. காண்டு? ஒன்னும் புர்லீயே? இதுல என்னோட டபுள் மீனிங் புர்லன்னு கம்ப்ளைண்டு வேற! :) :)

உங்க மீனுங்களுக்கு புவ்வா.. போட்டு கட்டுப்படியாகலை. துன்னுகிட்டே இருக்குதுங்க. தின்னிப் பண்டாரம் மாதிரி! :)

@சென்ஷி
சிரிச்சதுக்கு நன்றி!

@வால்பையன்
அண்ணன் அத விட இன்னும் மோசமான விஷயம் எல்லாம் சொன்னான். நம்ம ப்ளாக் 'போர்னோ'னு சொல்லிடக்க் கூடாதுன்னு விட்டுட்டேன்.

@கார்த்தி
ஆமா, ஓடாம போறதுக்கான வாய்ப்புகள் அதிகம். தேஷ்முக் படம் ரீசண்டா எதும் தேறல.

அதே காப்பி தான் அதே படம் தான். தமிழலயும் அத நிறைய தழுவியிருக்காங்க!

கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிடிங்களே! :)

@பாலா
தலைவா, கவிதையெல்லாம் எழுதிட்டிருந்தீங்களே... அப்போ எழுதினது. புரியும்னு நினைக்குறேன்!

மூணாவது ஆளு "பலாபழத்தோட" வந்தான்னுல்ல நான் படிச்சசேன்!
:-)

டாப்பு டோப்பு அடிச்ச மாதிரி சும்மா 'கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ங்குது'

//நம்ம ப்ளாக் 'போர்னோ'னு சொல்லிடக்க் கூடாதுன்னு விட்டுட்டேன்.//

ஒன்றை மறைத்து மறைத்து காட்டுவதை விட திறந்தே காட்டுவதில் ஈர்ப்பு குறைவு!
இன்றும் ஆங்கில படங்களை நாம் குடும்பத்தோரு காண அது தான் காரணம்!

தமிழ் படத்தில் வருவது போல் மட்டமான போர்னோ வேறு எதிலும் இல்லை!

//////கவிதையெல்லாம் எழுதிட்டிருந்தீங்களே... அப்போ எழுதினது. புரியும்னு நினைக்குறேன்!//////

ஆங்... புரியுது.. புரியுது!!! இனிமே.. நானும் காண்டாகி.. மத்தவங்களையும் காண்டாக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிதான்.. அதை தூக்கிட்டேன்.

என்னை மட்டும் திட்டுனா பரவாயில்ல... கமெண்ட் போட்டவங்களையும் திட்டிட்டாங்க. என்னால நீங்க ஏன் திட்டு வாங்கனும்னுதான் இந்த முடிவு.

ஸோ... நோ மோர் சீரியனஸ்! ஒன்லி குஜால். நவம்பரில் 18+ க்கு ரெடியாகிக்கங்க.

@கலை
பலாப்பழம் விட அன்னாசில முள்ளு ஷார்ப்ல! :)

@வாலு
அதுவும் சரிதான். உதட்டில முத்தம் குடுக்கிறத விட கழுத்துல குடுக்கறது லஸ்ட்னு எவன் யோசிக்கிறான்?

@பாலா
அப்படி போடு! 18+? போடுங்க. அதை எல்லாம் பாத்து பிறவிப் பயன அடைஞ்சுக்கிறேன்.

//மூணாவது ஆளு "பலாபழத்தோட" வந்தான்னுல்ல நான் படிச்சசேன்!
:-)//

கரெக்ட் மச்சி.. எங்க ஸ்கூல்ல கூட அப்படி தான் சொல்லி குடுத்தாங்க.. பப்பு கதைய மாத்தாத....

கலக்கல் டாப்பு பப்பு..

//மூணாவது ஆளு "பலாபழத்தோட" வந்தான்னுல்ல நான் படிச்சசேன்!

//கரெக்ட் மச்சி.. எங்க ஸ்கூல்ல கூட அப்படி தான் சொல்லி குடுத்தாங்க.. பப்பு கதைய மாத்தாத....

அவ்வ்.. இது சிலபஸில் இருந்த ஜோக்கா? நான் இப்பதான் படிக்கிறேன்.. எனக்கு யாரும் சொல்லிக் கொடுக்கலியே!! :((

@கிஷோர்
கதைய மாத்தலைண்ணே! நான் ஃபாரீன் புக்ல படிச்சிட்டேன். எங்க காலேஜ்ல லோகல் ஆதர் வேணாம்னு சொல்டாங்க!

@கார்த்திக்
என் பேட்சில இருந்து புது சிலபஸ்ல! நமக்கு இதெல்லாம் அதான் வரல!

//'பின்'னால் திணிக்க வேண்டும்//

அப்படி பண்ணால் "பின்" வளையும்..இதில் என்னா இருக்கிறது..:)

//ஒரு மாதிரியாக நன்றாக இருக்கும் //

அது எந்த மாதிரின்னு கொஞ்சம் விளக்க முடியுமா..!!!

//தவளையை கொன்னு அல்லது உயோரிடு தோலை உறித்து சாப்பிடுவது நமக்கு புதுசு! ஆனா கொரியகாரனுக்கு அது கிராமிய தேசிய உணவு!

இங்க ஆட்டை வெட்டுறதும், கொழியை வெட்டுறதும் வெளிநாட்டுகாரன் பார்த்து இந்தியாவில் இருப்பது அனைவரும் காட்டுமிராண்டி பயல்கள், எவனுக்கும் நாகரீகம் இல்லை என்பான்!//

எங்கயோ போய்ட்டீங்க வால்ஸ்..

@வினோத்

அப்பா, மொக்க பாண்டி... முடியலப்பா... முடியல.... :)

விளக்குறதுக்கு அது என்ன பாத்திரமா?
நாங்களும் மொக்க போடுவோம்!

//இன்றும் ஆங்கில படங்களை நாம் குடும்பத்தோரு காண அது தான் காரணம்!//
சொல்லவே இல்ல!!!!!

//கதைய மாத்தலைண்ணே! நான் ஃபாரீன் புக்ல படிச்சிட்டேன். எங்க காலேஜ்ல லோகல் ஆதர் வேணாம்னு சொல்டாங்க!//
நாங்க ஸ்கூல்ல படிச்சத இப்போ தான் பயபுள்ள காலேஜ்ல படிக்குது.. ஹையோ ஹையோ..

இத கிண்டர் கார்டன்ல இல்ல.. எனக்கு சொன்னாங்க?!

@ஸ்ரீ
அதான் இப்ப சொல்லிட்டம்ல! வருகைக்கு நன்றிங்கண்ணோவ்.

@கிஷோர்
என்னய இப்படி அறியாப் பிள்ளையா வளத்துட்டாங்க.

@பாலா
எனக்கு தெரியும் பாலா. இப்படி வெவகாரமா பேசும் போதே பிஞ்சிலே பழுத்த கேஸுன்னு தெரியும். எல்.கே.ஜில லவ் லெட்டர் குடுத்தவரு நீங்க தான?

டாப்பு சும்மா கும்முன்னு இருக்குப்பா :)

ஏற்கனவே Boothnath ல அவர பூதமாக்கினாங்க. அது இதுல கண்டின்யூ ஆகுதா...

நான் கொரியப் படங்கள் பார்த்ததில்லை. பார்த்திட்டு சொல்றேன்.

My sassy Girl - பார்த்திடலாம்.

அப்படி என்ன கண்டுபிடிச்சீங்க விஜயகாந்த் பத்தி?

Seedless grapes அந்த காட்டுல இருந்து இருந்தா மூணு பேருமே தப்பிச்சி இருக்கலாம். ராஜாவுக்கும் fresh juice கொடுத்து கவுரவம் பண்ணி இருக்கலாம். ஹாஸ்யமா இருந்தது பப்பு...Keep it up.

Enakku anda HINDI film flop aaganum!! Deshmukh en figure Geneliava Love panraan pa (Inda vishayam Genekku theriyuma keka koodadu) Avanukku genelia pidikkumgradaala thaan GENE character ulla inda padathula nadikkiraan x-(... Vidu machi.. Vivek Oberoi miss panna Ice maadhiri, gene ivana miss pannidum nambikka irukku!! :D


My Sassy girl naa 10 times paarthuten.. note panniya saga, padam fulla Heroine per sollirukka maatanga.. No kiss, Not even ILU.. :D Inda padathoda prelude (ava First love) WINDSTRUCK... Adhu kidachaalum paaru!! :D MSG konjam connections irukkum.. Adhaan pre-lude sonnen.. But not a complete one!!

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!