நொடிப் பொழுதில்... (வெர்ஷன் V1.5)

Filed under , , by Prabhu on 9/30/2009 02:06:00 PM

32

அன்றைய பொழுதின் கடைசி வகுப்பு முடிவதற்கு சிறிது நேரமிருக்கையில் பின் வரிசையிலிருந்து இளையராஜாவின், 'மேகம் கருக்குது..' முணுமுணுப்பு கேட்டது. அவன் அமைதியான வகுப்பின் கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டு பாட்டுகளை முணுமுணுப்பது முன்னிருக்கும் இரண்டு வரிசைகளில் மிகப் பிரபலம்.மழையை பார்த்த பிறகு பேராசிரியருக்கே நடத்த விருப்பமில்லாமல் ஏதோ இடது பக்க முன்னிருக்கை மாணவனிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். கண்டிப்பாக அவர் கூறிய நகைச்சுவைதான்; முதல் வரிசைக்காரர்கள் சிரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். இரண்டாவது மூன்றாவது வரிசைக்காரர்கள் அவர்களுக்குள்ளாக ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். நமக்கே ஒரு பொண்ணு சிக்காத சமயத்தில் இந்த வழுக்குப் பாறைக்கு எப்படி எம்.எஸ்.ஸி பொண்ணு சிக்கியது என்ற குழாயடி கதைகளாக இருக்கலாம். கன்னத்தில் கை வைத்து மழையை வேடிக்கை பார்த்த எனக்கு நிகழுலகத்தை விட கடந்த காலம் இனிக்க டைம் மிஷினை தட்டி விட்டது மூளை.


அதுவும் ஒரு மழை நாள் தான். இதே கல்லூரியில், ஒரு வருடம் முன்பு தான் அவளைப் பார்த்தேன் என்று நினைக்கிறேன். கல்லூரியின் நீண்ட ஸ்டிரைக்கிற்கு இரண்டு நாள் முன் என்று நினைவடுக்குகளில் பதிந்திருகிறது. எங்கள் கல்லூரியில் கடந்த நூற்றாண்டின் எச்சமாக ஒரு மூடப்பட்ட கிணறு உண்டு. அதனருகில் வைத்துதான் அவளை முதலில் பார்த்தேன். விதியோ சதியோ அதன் பிறகு வந்த இரண்டு நாட்களும் அவளை அதிகமாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு நாட்கள் என்னைக் கடந்து செல்லுகையில் நான் பார்த்த ஒருத்தி மனதில் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பதை உணர்ந்தது அன்றுதான். அவளின் சாயல்... அந்த நினைப்பே எனக்கு ரத்தம் உறைய வைப்பதாக இருந்தது.

பிறகு ஸ்டிரைக் வந்து நான் ரத்த உறைய அடி வாங்கியதும், கல்லூரி தனது வரலாற்றில் மிகப்பெரிய ஸ்டிரைக்கிலிருந்ததும் வரலாறு. பிறகு நான் அவளை ஒரு மாதமாக கல்லூரியில் அவளைக் காணவில்லை. பின் எதிர்பாராத ஒரு நாள் கல்லூரி சிற்றாலயத்தின் வாசலில் வைத்து பார்த்த உடன் என் நுரையீரலில் காற்றை நிரப்பி அட்ரெனலின் நடத்திய விளையாட்டை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவளைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதுமென்று தோன்றிய நாட்கள். அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் இன்னொரு முகமும் வந்து என் மனதை பிசைவதையும் தவிர்க்க இயலவில்லை. ஒருவேளை இவளை எனக்கு முதல் பார்வையில் ஈர்த்தும் கூட இவளுள் நான் கண்ட அவளே காரணமாக இருக்கலாம்.

இது என் பார்வையின் கோளாறாக இருக்க வேண்டும். இல்லையெனில் உண்மையாக இருவருக்கும் ஒற்றுமைகள் உண்டு. இருவரும் சராசரி உயரத்திற்கு கம்மி. ஆனால் அதை நாம் கவனிக்க இயலாத அளவிற்கு அழகு. பார்த்தவுடன் அதிர வைக்கும் அழகு இல்லையானாலும் கடக்கும் போது கவனிக்கத் தவறாத முக அழகு. எளிமையான உடையே அணியும் வழக்கம். ஆனால் ஒரு கல்லூரி விழா இரவில் வெள்ளை உடையில் இருட்டின் நடுவே மெல்ல மெழுகுவர்த்தியுடன் அவள் வந்த பொழுது பாரதிராஜா, மணி ரத்னம் படங்களில் வரும் கதாநாயகி போல் தேவதையாக தெரிந்தாள். இன்னும் அதை நினைக்கையில் எனக்கு ஒருவித மயக்கமே வருகிறது.

இவளை பார்த்த உடனே எனக்கு எதுவும் அதே மயக்கத்தில் பொங்கி வழிந்துவிடவில்லை. ஆனால் ஒரு மாதம் பிறகு பார்த்த உடன் ஏற்பட்ட சந்தோஷம்தான் எனக்கு அவளின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. அவள் பெயர் அனு என பின்னர் அவள் சீனியர் கூற அறிந்து கொண்டேன்கடவுள் ஒரு மோசமான செக்ரட்டரியாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் அதிக அளவில் சந்திப்புகளை ஏற்படுத்தியவர், அவை தேவைப்படும் சமயத்தில் சந்திப்பதற்கு எப்படியெல்லாம் தடை ஏற்பட வேண்டுமோ அதை சரியாக செய்வார். ஒரு நாள் மழைக்கு அவள் நான் இருந்த ஜேம்ஸ் ஹாலிலேயே ஒதுங்கினாள். நான் அவளைப் பார்ப்பது அவளுக்கு தெரிந்துதான் இருக்க வேண்டும். என்னை பார்த்ததும் அவள் வேகம் குறைந்தது. பிரபு பின்னால் இருந்து சுரண்டினான். எனக்கு அது தேவைப்பட வில்லை. நேராக சென்று கேட்டேவிட்டேன், "நீ அனு தான?"
-------------------------------------------------------------------------------------------------
இப்பொழுது மழையின் தீவிரம் சற்றே குறைந்திருந்தது. எங்கள் வகுப்பின் 'பின்'னணி பாடகர்களின் ரஹ்மானின் 'மர்லின் மன்றோ', பாடலில் இப்பொழுது பாதி வகுப்பு கலந்திருந்தது. நான் பேண்ட் பைகளுக்குள் கைகளை நுழைந்துக் கொண்டு மெல்ல நடக்கையில் பிரபுவும் சேர்ந்து கொண்டான். மீண்டும் மழை அதிகரிக்கவே நாங்கள் கேண்டினுள் ஒதுங்க வேண்டியதாயிற்று. மழையின் பொழுது காபி குடிப்பது எனக்கு பிடிக்குமென தெரியுமென்பதால் பிரபு காபி வாங்கினான். கையிலிருந்த காபியிலிருந்து ஆவி பறந்து கொண்டிருந்தது.

ப்ரியாவுக்கும் ஆவி பறக்க காபி குடிப்பது பிடிக்கும். எனக்கு சூடென்றாலே ஆகாது. ஆனால் அவளுக்கோ எதுவானாலும் சூடு குறையக் கூடாது. காபியாக இருந்தாலும் செய்யவேண்டிய காரியமாக இருந்தாலும். என்னை விட ஒரு வயது இளையவள். ஆனால் பெயர் சொல்லித்தான் அழைப்பாள்; ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான். நான் அவளை கிண்டல் செய்யும் பொழுது தலையை ஒரு பக்கமாக சாய்த்து புருவங்களை உயர்த்தி என்னை நிமிர்ந்து பார்த்து சிரிக்கும் அவளை நான் இன்னும் மறந்தபாடில்லை.

இவள் மறக்கக்கூடிய முகமா என்ன? அனுவைக் காணும் போது எனக்கு தோணுவதை சொன்னால் என்ன நினைப்பாள் எனத் தெரியவில்லை. உன்னைப் பார்த்தால் இன்னொருவள் நினைவிற்கு வருகிறாள், அதனால் தான் உன்னிடம் பேசுகிறேன் என்றால் எந்தப் பெண்ணுக்கும் பிடிக்குமா? இவள் எனக்கு ஜூனியர் என்ற போதிலும் என் பெயரை சொல்லிதான் அழைக்கிறாள். எவ்வளவு பெரிய ஜோக் என்றாலும் முதலில் புருவம் சுருக்கி பின்பு நிதானமாக உதடுகளை பிரித்து சிரிக்கும் அழகிற்கு...ம்ம்ம்.... மேலெதுவும் சொல்வதற்கில்லை. அனுவேஒரு நாள் அவளது எண்ணை கொடுத்தாள். இப்பொழுது கைபேசியில் தொடர்கிறது.

கைபேசி அப்பொழுதுதான் வாங்கியிருந்தேன். ஒரே பேருந்தில் ப்ரியாவும் நானும் வெவ்வேறு இடங்களில் உட்கார்ந்து ஒரே கல்லூரிக்கு செல்லும்போது பொழுதுபோகாமல் விளையாட்டுக்கு அவள் என்னை திட்டி அனுப்பும் குறுஞ் செய்திகள் வந்து சேரும் சத்தத்திற்கு காத்திருந்த காலங்களின் சுவடுகள் கூட இன்னும் காயவில்லை. என் தலை முடியுள் உழுத அவள் விரல்களின் ஸ்ப்ரிசம் தீர வில்லை. அவள் வாசமா இல்லை அவள் போட்டுக் கொண்ட பவுடர் வாசமா என என்னால் கண்டறியப்படாத வாசம் இன்னும் நாசிகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

நாசியை நிரப்பும் காபியின் மணம் அமைத்துக் கொடுத்த எண்ண வெளியில் உலவிக் கொண்டிருந்த நான், பிரபு முழங்கை முதுகில் இடிக்க விழித்தேன். காற்றுடன் கலந்த புயல் மழையாதலால் குடையினால் சமாளிக்க முடியாமல் முகத்தில் தெறிக்கும் துளிகளுக்கு சிறிது எரிச்சலுடன் சுருக்கிய முகத்தை பதிலாக அளித்து உள்ளே வந்தவள் அனு. உள்ளே வந்தவள் குடையினை மடக்கும் வேளையில் என்னைப் பார்த்தவுடன் அவள் முகச் சுருக்கங்கள் ஒரே ஒரு வினாடி விரிந்து தனது ஆச்சரியத்தைத் தெரிவித்துவிட்டு திரும்பின. சைகை செய்தேன், 'காபி வேணுமா?'. உதட்டை சுழித்து வேண்டாமென்றாள். நல்ல வேளை கேட்கவில்லை; நான் ஏற்கனவே அதை குடித்து விட்டேன்.

அவள் குடுத்த பவண்டோவைக் குடித்து முடித்த நான் அவளுக்கு என்ன வேண்டும் எனக் கேட்க, பார்ட்டி என்னது, பரிசுதான் உன்னது என்றாள். சரி, பரிசுதான் என்ன வேண்டுமென்று கேட்டதற்கு, ஒரு நல்ல பரிசை யோசித்து தர துப்பில்லையா என்றாள். அப்ப, பத்தோடு பதினொன்னாக ஒரு பரிசளிக்காமல், ஏதாவது ஸ்பெஷலாக கொடு என்றாள். சிறிது யோசித்த நான் முதலில் தயங்கிய நான் பிறகு எழுந்து அவளருகில் சென்று அவள் நாடியை பிடித்து கன்னத்தில் முத்தமிட்டேன். அவளோ சிரித்துக் கொண்டே, இதை அப்பா குடுத்துவிட்டார், நீ என்ன கொடுக்கப் போகிறாயெனக் கேட்டாள். எனது பட்ஜெட்டுக்கு இதுதான் குடுக்க முடியும் என்றதற்கு பெரிய கஞ்சனடா நீ என்றாள். 'நல்ல வேளை நிறைய பரிசுன்னு சொல்லிருந்தா பட்ஜெட்ட காரணம் காட்டி என் கன்னத்தில மழை பெய்ஞ்ச மாதிரி ஆக்கியிருப்ப ',என சந்தோஷப் பட்டுக் கொண்டாள்.

மழை கிட்டத்தட்ட நின்றுவிட்ட சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்ட அவள் குடையுடன் கிளம்பினாள். பின்னாலிருந்த பிரபு என்னையும் அனுப்பி வைத்தான். இன்றாவது சொல்லிவிடு மனதிலிருப்பதை என்று. அவளுடனே சிறிது தூரத்தில் சென்று கொண்டிருந்தேன்.வாயிலைத் தொடுவதற்குள் மீண்டும் மழை பிடிக்க ஒரு மரத்தடியில் ஒதுங்க வேண்டியதாயிற்று. ஆனால் அந்த மரத்திலோ அம்மா ரவை சலிக்கும் உபகரணம் போல ஆயிரம் ஓட்டைகள், குடைக்குள் மழை. அவள் என்னைப் பார்த்த பார்வை அடுத்து அவள் குடைக்குள் அழைப்பாள் எனத் தோன்றியது. அழைத்தாலும் போக மனமில்லை. அழைக்கவும் செய்தாள். மெல்ல அருகில் சென்றவன், "ரொம்ப நாளா உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்னு இருந்தேன். தப்பா நினச்சுக்கக் கூடாது?" என்றேன். தயக்கமாக ,"சொல்லு" என்றாள். ஆனால் அவள் உதட்டோரப் புன்னகையை என்னால் படிக்க முடிந்தது. "எனக்கு தங்கச்சி ஒருத்தி இருந்தா உன்ன மாதிரி...", எனத் தொடங்கும் போதே அவள் பார்வையில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமா, இல்லை இவனைப் போல் கேனையன் உண்டா என கேட்கிறதா எனப் புரியாமல் நிறுத்திக் கொண்டு அந்த மழையில் விடு விடுவென நடக்க்த் தொடங்கினேன்.


Moral 1 - நான் ரொம்ப நல்லவன்
Moral 2 - நொடிப் பொழுதில் வாழ்க்கை மாறும் போது நாம ஏன் நிமிஷத்த நம்பனும்.... டொகொமோ... டொகொமோ.. டொ கொ மோஓஓஓஒ.....



பின் குறிப்பு - எனக்கு தங்கச்சியே கிடையாது



டிஸ்கி - எப்படி ஓ ஹென்றி மாதிரி நச்சுன்னு ஒரு ட்விஸ்ட வச்சோமா? சர்வேசன் ஒரு போட்டி வச்சிருக்காராம். முடிவுல O'Henry கணக்கா நச்சுனு ஒரு முடிவு வச்சு எழுதனுமாம். இது ஓக்கேவா.... இல்ல இன்னொன்னு நச் நச்சுனு எழுதிடுவோமா?

Comments Posted (32)

ஆகா டெம்ப்ளேட் மாத்திட்ட போல :) இரு படிச்சுட்டு வரேன்

நல்ல வர்ணனை!

எழுத்துலகில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு பப்பு!

தொடர்ந்து எழுதுங்க!

//ஓ ஹென்றி மாதிரி நச்சுன்னு ஒரு ட்விஸ்ட வச்சோமா//

அய்யே... :) இது பாக்யராஜ் ஸ்டைல் ட்விஸ்ட். இதுக்கு இவ்ளோ மெனக்கெட்டிருக்க வேணாமே :))

நல்லா இருக்குங்க நடை. எனக்கு பிடிச்சிருக்கு.

அது என்னங்க Google Accountன்னு தேர்வு செய்திட்டு மூன்று முறை post செய்ய வேண்டியிருக்கு. அப்புறம்தான் கமெண்ட் தெரியுது :)

முதல் கமெண்டுக்கு மட்டும்தான் அப்படிப் போல. அடுத்த கமெண்ட் எல்லாம் சரியா வருது.

வாழ்த்துகள் :)

போய்ய்ய்ய்ய்ய்யா..அப்புறம் எதுனா சொல்ல போறேன்

பப்பு நல்ல எழுத்து நடை. ஆனா இந்த மாதிரி மொக்கை மாதிரி ஒரு முடிவு என்னமோ பண்ணது. இன்னும் ட்ரை பண்ணு பப்பு நல்லா வரும்

@நான் ஆதவன்
எசகு பிசகா எழுதனும்னு நெனச்சு எழுதுனதுங்க. அப்படி இப்படி தான் இருக்கும் முடிவு. இருந்தாலும் நடை தப்பி இருக்கும் முடிவு என நினைக்குறேன். ஆனால் வழக்கமா எழுதுனா, 'முடிவு எதிர்பார்த்ததுதான்:)' என ஒரு ஸ்மைலியப் போட்டு முடிச்சிறக்கூடாதுன்னு தான் ஒரு வித்தியாசமான நடையில இஸ்டோரி. எப்பூடி? :)

@வால்பையன்
நீங்க நானே கூச்சப் படுற அளவு ஓவரா புகழுறீங்கோ!

@ஸ்ரீதர்
பாக்யராஜா? என்னங்க பல்ப் ஆக்கிட்டீங்க! ஆனா அவரும் இந்த மாதிரி வித்தியாசமான ஆளு தான! இப்படி சொல்லி எஸ்கேப் ஆயிக்குவோம்!

ச்சே.. நான் தான் ஃபர்ஸ்ட் ஓட்டுன்னு நினைச்சேன். ஜஸ்ட் மிஸ்ல.. வினோத் ஜெயிச்சிட்டாரு!

கொடுத்த பில்டப்புக்கு..., ட்விஸ்ட் சூப்பரப்பு. ஆனாலும்.. எங்கயோ படிச்ச மாதிரி தெரியுதே?? (முடிவு மட்டும்).

கதையை ட்ரிம் பண்ணி... போட்டிக்கு அனுப்புங்க பப்பு. ஒரு கதைதான் அனுப்பனுமா?

பப்பு உன்கிட்ட இருந்து இன்னும் இன்னும் அதிகமா அதிகமா எதிர்ப்பார்க்கிறேன் ..

எழுத்து நடை அட்டகாசம்..

அனுவும் இல்லையா வேற யாரு தான்...:)

@பாலா
பரவாயில்ல. உங்க ஓட்டு போட்ட பெருந்தன்மையத் தான் பாராட்டனும்.

இது என் மூளையில தோணுனதுங்க! நமக்கே அப்பப்ப தான் ஸ்பார்க் அடிக்குது... அதுக்கும் ஆப்பா?

@வினோத்
நன்றி!

நமக்கில்லாததா? இன்னைக்கு காலேஜ் போறேன் :)

நல்லா இருக்கு பப்பு.. ட்விஸ்ட் சூப்பரப்பு .. நைட்டு படிச்சி இருக்கலாம்.. கொஞ்சமா மிஸ் ஆகிடிச்சி.. really nice.. keep it up

செம..செம..!
வால்ஸை வழி மொழிகின்றேன்.

வித்தியாசமான முயற்சி! நல்லாயிருக்கு பிரபு..

//வினோத்கெளதம் said...
பப்பு உன்கிட்ட இருந்து இன்னும் இன்னும் அதிகமா அதிகமா எதிர்ப்பார்க்கிறேன்//

என்னடா எதிர்பார்க்குற? இன்னம் 2 பாராகிராப் அதிகமாவா?

அடேங்கப்பா. படிக்க சுவாரஸ்யமா இருந்துச்சு.

ஆனா, 'சிறு'கதைக்கு வர்ணனை கொஞ்சம் ஓவரா இருக்கு.

உ.ம்.
///செம்மண்ணில் நீர்விழுந்து, மண்ணை அரித்துக் கொண்டு தனக்கென பாதை அமைத்து வழிந்தோடி கல்லூரி நடுவில் இருக்கும் கால்வாயை நோக்கி செல்லும் செந்நீரைக் காணும்போது கல்கி 'பார்த்திபன் கன'வில் எழுதிய வெண்ணிப்பரந்தலை போர்க்களம் போல இருந்தது. அந்த கால்வாயின் சுழல்களில் என் பார்வை சிக்கிக் கொள்ள என் நினைவோ பின்னோக்கிச் சென்றது.///

நச் இருக்கத்தான் செய்யுது.

போட்டிக்கு இன்னும் டைம் இருக்கு. அடுத்த நச் 'ஸ்பார்க்' ஆகலன்னா, இத்தையே தாராளமா அனுப்பலாம். ட்ரிம் பண்ணினா பெட்டரா இருக்குங்கரது என் பர்சனல் எண்ணம் :)

nice.. some problem in posting comments.. pl check..

இத நேத்து நடுராத்திரியே படிச்சேன்..போன் பண்ணி பாவத்தை வாங்கிக் கட்டிக்க வேணாம்னு விட்டேன்..சூப்பர்பா இருக்கு..:))

cool template...:)

'அம்மா ரவை சலிக்கும் சல்லடையான மர இலைகள்' போன்று மற்ற வர்ணனைகளும் அற்புதம்.

கலர் எழுத்துக்களிலும் கலக்கியிருக்கிறீர்கள்.

உங்களோடதும் 'நச்' தான். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

//இது வந்தா 'நச்'சைக் கெடுக்கும் என்பதால் ரசிகப் பெருமக்களுக்காக தனியே டேரடக்கர் கட்டு! வினோத் ஓக்கேயாப்பா? ஆதவன் அண்ணே? //

ஆகா தம்பி ரொம்ப மெனக்கெட்டுருக்கையோ? யாருக்காவும் உன் கதையில காம்பரமைஸ் ஆகாதே. ஒரு கதைய பற்றி பல வித கருத்துகள் வரத் தான் செய்யும். ஸோ நெக்ஸ்ட் கதை ‘நச்’ன்னு ரெடி பண்ணிட்டு வா :)

அப்படி இல்ல... அது சும்மா காமெடிக்கு...மத்த படி அது கதை இல்ல... நம்ம பேசிக்கிற மாதிரின்னு வச்சுக்கோங்களேன்! கமெண்ட்ஸுக்குள்ள போட வேண்டியது. ஓ.கே. அத எடுத்து நான் கமெண்ட்ஸுக்கு நடுவுல போட்டுடறேன்...

///Director's Cut - பல பேருக்கு முடிவு புடிக்குதோ இல்லையோன்னு நெனச்சேன். நம்ம வினோத் கூட ரொம்ப ஃபீல் பண்ணினாப்ல! இந்த கதையில இருக்கிற லூப் ஹோல் புரியலயா? ஒரு பொண்ணு தங்கச்சி மாதிரி இருக்குறா என்பதால தங்கச்சின்னே முடிவு பண்ணிருவீங்களா? அப்ப பொண்டாட்டி மாதிரி இருந்தா? அடுத்த நாள் பேசி கீசி கரெக்ட் பண்ணிரமாட்டாப்லயா ஹீரோ? உங்க ப்ளட் ஓ நெகடிவ்வா கூட இருக்கலாம். பட் பிரசனைனு வந்தா பி பாஸிடிவ்!

And they lived happily for ever.....

இது வந்தா 'நச்'சைக் கெடுக்கும் என்பதால் ரசிகப் பெருமக்களுக்காக தனியே டேரடக்கர் கட்டு! வினோத் ஓக்கேயாப்பா? ஆதவன் அண்ணே? ////
ஒகேவா... இப்படி போடறதத் தான் எல்லாரும் பாக்கட்டும் சும்மான்னு அங்க போட்டேன். கதைய மத்திட்டேன்னு நெனச்சுட்டீங்களோ!

சூப்பரா இருக்குங்க பப்பு.. அதுவும் நீங்க சொன்ன உவமைகள் எல்லாமே ‘நச்’

நான் ‘ஒ ஹென்றி’ அவரோட கதை எதுவும் படிச்சது இல்ல... படிக்கணும்.. :)

ஃபைனல் வேர்ஷனா? லாக் பண்ணிடவா? லாக் பண்ணியாச்சுன்னா வேர கதையை மாத்த முடியாது :)

அருமை பப்பு:)! நல்லாயிருக்கு மாரல்ஸ்:))! கூடவே அந்த பின் குறிப்பும்:)!

//லாக் பண்ணியாச்சுன்னா வேர கதையை மாத்த முடியாது :)//

சர்வேசன் ஒரு தடவை சொன்னா ஆயிரம் தடவை சொன்ன மாதிரி பப்பு:)! நாங்க எத்தனை ஆயிரம் கேட்டிருக்கோம் PiT-ல்:))! யோசிச்சு சொல்லுங்க, நவம்பர் 15 வரை தேதி தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது, தெரியும்தானே:)?

ஆனால் இந்தக் கதையே ‘நச்’தான்!

சூப்பரா இருக்கு பப்பு..

உண்மையிலேயே "நச்" கதைதான். வாழ்த்துகள்.

முதலில் முடியாவிட்டாலும், இரண்டு வரிகளுக்கு முன் "நச்" ஊகிக்க முடிகிறது. எனினும் உங்கள் கதையின் தாக்கம் வெகு நேர்த்தி. கதையின் கூடவே வாசகர்களை பயணிக்க வைக்கும் அபார எழுத்துத் திறமை.

பரிசு பெற வாழ்த்துக்கள். ரொம்ப ரசித்தேன் உங்கள் கதையை

கதை எவ்வளவு தூரம் வாசகனை பாதிக்கிறது என்பதைப் பொருத்தே அதன் வெற்றி. மிக இயல்பான விவரிப்புக்கள்.


நான் ரசித்தவை

//கடவுள் ஒரு மோசமான செக்ரட்டரியாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் அதிக அளவில் சந்திப்புகளை ஏற்படுத்தியவர், அவை தேவைப்படும் சமயத்தில் சந்திப்பதற்கு எப்படியெல்லாம் தடை ஏற்பட வேண்டுமோ அதை சரியாக செய்வார். //

:D

//பிரபு பின்னால் இருந்து சுரண்டினான். எனக்கு அது தேவைப்பட வில்லை. நேராக சென்று கேட்டேவிட்டேன், "நீ அனு தான?"//

//'காபி வேணுமா?'. உதட்டை சுழித்து வேண்டாமென்றாள். நல்ல வேளை கேட்கவில்லை; நான் ஏற்கனவே அதை குடித்து விட்டேன். //

புன்முறுவல் பூக்க வைக்கும் ஹாஸ்யம்

வாழ்த்துக்கள்.

சூப்பர்..,

Suuuuuuuuuuuuuuuuuuuuuuuperapppppppppppppuuuuuuuuuuuuuuuuuuuu.............

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!