டாப்பு அடிக்கலாம் - 3
Filed under டாப்பு , by Prabhu on 9/24/2009 10:03:00 PM
11
ரேடியோவில் 'இன்று ஒரு தகவல்' கேட்ட அனைவருக்கும் தென்கச்சி சுவாமிநாதன தெரிஞ்சிருக்கும். அவர் பேச்சக் கேட்க அவ்வளவு ஆர்வம் இருக்கும். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது தினமும் ஆறேமுக்கால் செய்திக்கு பிறகு வரும் இன்று ஒரு தகவல் கேட்ட பின்னரே குளிக்க ஓடுவேன். நல்ல துணுக்குகளுடன் அருமையாக பேசுவார். அவர் இறந்து விட்டார் என எண்ணும் போது சிறிது வருத்தம் தான்.
-------------------------------------------------------------------------------------------------
சமீபத்துல இப்படி ஒரு அதிர்ச்சி கேள்விப் பட்டவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. உங்களுக்கு தெரியுமா இலியானாவின் இப்போதைய நிலை? மிகவும் பரிதாபத்திற்குரியது. எப்படி உடுக்கு போன்ற இடையுடன் வலம் வந்தார். இப்பொழுது? ச்சே.... நல்லவங்களுக்கு காலமில்லை! கீழே பாருங்க எவ்வளவு குண்டாகிட்டாங்க!
முன்ன இருந்ததுக்கு குண்டுதாங்க! :)
-------------------------------------------------------------------------------------------------
போன வாரம் 'Immortel (ad vitam)' அப்படின்னு ஒரு படம் பார்த்தேன். ஃபிரஞ்சுகாரர்களால் எடுக்கப் பட்ட ஆங்கிலத் திரைப்படம். எகிப்து கடவுளுக்கு தண்டனை, பூமிக்கு வருகிறார், ஒரு பையனைத் தேடுகிறார், அவனை வைத்து ஒரு பெண்ணை தேடுகிறார், குவா குவா 'ஆக்சன்' காட்சிகள் அரங்கேறுகின்றன, அவர் காலம் பூமியில் முடிய மேலே செல்கிறார் தண்டனை அனுபவிக்க, கடைசியில் முன்ன செஞ்ச 'ஆக்சனால்' உயிர் பெறுகிறார் போல முடிகிறது. படத்தில் குறியீடுகள் எல்லாம் உள்ளது, முடிந்தால் அந்த காமிக் படித்து பாருங்கள்ன்னு idbmல சொல்றானுங்க. இப்ப உ.போ.ஒ ல குறியீடு படிச்சவங்க அதையும் விளக்கினா நல்லா இருக்கும். என்ன இழவோ எனக்கு ஒரு மண்ணும் புரியல. யாராவது பாத்திருந்தா சொல்லுங்கய்யா! படம் முடிந்ததும் என் நண்பன் கேட்டான்..... WTF?
-------------------------------------------------------------------------------------------------
உன்னைப் போல் ஒருவனில் ஒரு குறியீடு யாரும் கவனிக்கல. கணேஷ் வெங்கட்ராமனின் ஆரிஃப் கதாபாத்திரம் பைக்கில் வருவார் கான்ஸ்டபிளை அடிக்க. அந்த இடத்தில ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கல யாரும். அவரு உடம்ப முறுக்கிக்கிட்டே இறங்கி பைக் சாவிய எடுத்துப் போவார். அங்கதான் வச்சிருக்கம் ஒரு ட்விஸ்ட (அங்க கொண்டு போயா வச்சாங்க?). இதுக்கு தான் ஒரு முன்நவீனத்துவ நிபுணன் வேணும்ங்கிறது. அப்படி அவர் வண்டிய நிறுத்தி, ஸ்டாண்ட் போட்டு, சாவி எடுக்கும் போது வண்டி ஒரு குலுங்கு குலுங்கும். ஏன்னா அவரு கியர ந்யுட்ரலில் போட்டிருக்க மாட்டார். யோசிச்சு பாருங்க, ஒரு போலீஸ் அதிகாரிக்கு முதல் கியரில் இருந்து ந்யுட்ரல் கொண்டு வர தெரியாதா?. இது கமல் என்னவோ வேணும்னே வச்சிருக்காருன்னு தெரியுது. யாராவது இதை விலக்கினால் நன்றாக இருக்கும். அவங்களுக்கு உ.போ.ஒ. பட டிக்கட்(கள்) பரிசு! - இது ஆங்கிலத்தில் கூட Spoof movies மட்டுமே பார்ப்போர் சங்கத்து நோட்டீஸ்.
-------------------------------------------------------------------------------------------------
ஒரு chauvinistic joke (cliche)
பொதுவா நான் ஷாவனிஸ்டிக்கான ஆள் இல்லைன்னு தானே நினைச்சுக்கிட்டாலும் இந்த மாதிரியான ஜோக் ஆண்கள்க்கு நடுவில் இன்சைட் ஜோக்குகளா உலவும். பெண்கள் இந்த மாதிரியான ஜோக்கை எப்படி எடுத்துக்குறாங்கன்னு தெரியவில்லை.
"பெத்த மகளுக்கும், பரிட்சை பேப்பருக்குமான ஒத்துமை யாருக்காவது தெரியுமா?"
"ரெண்டையும் கட்டிக் குடுக்குற வரை வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டுதான் இருக்கனும்."
-இது அவ்வளவா ஷாவனிஸ்டிக்கா இல்லைன்னு நினைக்குறேன். அய்யோ இது ஜோக்கே இல்லை! அடுத்த தடவை இன்னும் நல்லா டிரை பண்ணுறேன். :)
-------------------------------------------------------------------------------------------------
Little John is known in his surroundings for his advanced knowledge on sex even though he is a kid. Even teachers fear him, as he always stuns the class with his sex talks and counters. One day a sex education class was arranged for kids. then teachers thought it would be the only right time to let john speak freely. So when he was asked to tell a story with sex education, he started , " You see 'Lone Ranger' in TV, right? One day Lone Ranger was riding along the mountains of Native Americans(red indians), on his horse. Suddenly, there came a horde of Native Americans, which tried to make him go away from their land. This led to a battle between them. Finally, the Lone Ranger won!". Teacher asked, "So.... Where is the sex education , we asked for". Little John said, "This should have taught the Natives a lesson right?, 'Nobody, fucks with the Lone Ranger' ".
-------------------------------------------------------------------------------------------------
இதெல்லாம் பேசிட்டே போகும் போது தங்க ரீகல் தியேட்டர் வந்துட்டது. எதிரில பார்த்தா பிரேம விலாஸ் அல்வாக் கடை. எப்ப போனாலும் சுடச் சுட அல்வா தர்றாங்க. என்ன ரகசியமோ? 5 ரூபாய்க்கு 50 கிராம் தாமரை இலையில ரோல் பண்ணி, அது மேல பேப்பர் சுத்தி தருவாங்க. நெய் பரவ, சரியான இனிப்புடன்..ம்ம்ம்... எழுதும் போதே நாக்கு இனிக்குது. சாப்பிட்டு முடிச்ச பிறகு இலையை குப்பையில் போட்டவுடன் கைய நீட்டனும். என்னடா காசு குடுக்காம பிச்சை எடுக்க சொல்லுறானேன்னு நினைக்காதீங்க! சப்பிட்டவுடன் கை நீட்டினால் கை நிறைய மிக்ஸர் குடுப்பது இந்தக் கடை கலாச்சாரம்! காசு அதன்பிறகு குடுத்துக்கலாம். அந்த நம்பிக்கையே அலாதிதான். அப்புறம் காசக் குடுத்துட்டு வரும் போது ஒரு சந்தோஷம் இருக்கும். :)
//இதெல்லாம் பேசிட்டே போகும் போது தங்க ரீகல் தியேட்டர் வந்துட்டது. எதிரில பார்த்தா பிரேம விலாஸ் அல்வாக் கடை. எப்ப போனாலும் சுடச் சுட அல்வா தர்றாங்க.//
நானும் அங்க அல்வா சாப்பிட்டு இருக்கேன் பப்பு. அருமையா இருக்கும். ஆனா மிக்ஸர் கொடுத்ததா ஞாபகம் இல்லயே....
ஜோக் செம கலக்கல் :)))) சிரிச்சுட்டே இருக்கேன்
அம்மணிய பார்த்தா குண்டு மாதிரி தெரியலையே!
உண்மையில் சொல்கிறேன் கொஞ்சம் "சுஜாதா" ..
டாப்பு.. டாப்பு தான்
\\பார்ப்போர் சங்கத்து நோட்டீஸ்.\\
என்ன ஒரு குறியீடு...! பீ கேர்ஃபுல் நைனா....!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
:)
இப்படிக்கு,
கொலைவெறியோடு குறியீடு தேடுவோர் சங்கம்.
எத்தியோப்பியா கிளை.
கஸகஸ்தான் மாவட்டம்.
கலந்து கட்டி அடிச்சு இருக்கிறது.. அருமை..:-)))
கலக்கல்ஸ்...:))
ஹையோ, அல்வா பத்தி ஞாபகப் படுத்தாதீங்க. எனக்கு அவ்ளோ பிடிக்கும்.
@ஆதவன்
முன்னவிட குண்டுங்க. முன்ன எப்படி இருந்தாங்க தெரியுமா? ம்ம்ம்.... அதெல்லாம் ஒரு நல்ல மனசுகாரனுக்குதான் தெரியும்! (இப்ப தெரியுமே... ஹி..ஹி)
@வினோத்
சுஜாதா? அப்படி தெரிகிறதா? நான் கொஞ்சம் அவர் ஸ்ட்யிலில் ட்ரை செய்யலயே! இது சும்மா எழுதுனது. அப்படியா தெரியுது? அப்போ என்ன செய்யலாம்!
@நசரேயன்
ரொம்ப நன்றிங்கோ!
@ராஜூ
யப்பா எனக்கே தெரியாத குறியீடு எல்லாம் என் பதிவுல கண்டுபிடிக்கிறீங்களே! இப்படிதான் எல்லாமேவா?
@கார்த்திகை பாண்டியன்
நன்றி!
@கார்த்திக்
இங்க வா. அல்வா தர்றேன்..
really intresting pappu..
Ileana irukkatum.. Aarumugathula Priyamnai iduppu summa aduppu maadhiri irukku
பக்கத்துல உட்கார்ந்து இருந்தா மாதிரி ஒரு ஃபீலிங்!
பப்பு சூப்பர்!