புயலுக்கு முந்தைய ஒரு வெயில் நாளில் அவள் சந்திப்பு. எத்தனையோ பெண்களைப் பார்த்து இருந்தாலும், இவள் உலகத்தை மிஞ்சியவள் இல்லை என்றாலும் நான் அவளை நினைவில் வைத்திருந்த காரணத்தை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். வேலை விட்டாலும் சுரப்பிகள் அவளை விடமாட்டாமல் மூளையின் ஏதோ ஒரு மூலையில் மடித்து வைத்துக் கொண்டது. பிறகு சுழல்களில் சிக்கிவிட்ட வாழ்க்கையில் எதிர்பாரா ஒரு வெயில் நாளில் அவளைக் கண்ட பொழுது ஏதோ துளிர்விட்டது. வயதின் சுரப்பிகளிற்கு வேலையில்லை. முகத்தின் வெடிப்புகள் வர வைத்து அவற்றை உடைக்கவும் யோசிக்கும். கண்ணாடியின் முன் காலங்கள் கழிந்தன. பார்ப்பதிலென்ன என்ற சின்ன ஆர்வமேற, அவளுக்கு இரு கண்கள் குத்தியிருப்பது தெரிந்தேயிருக்கவேண்டும். சில நாட்களில் நான் அவள் அட்டவணைப்படி என் வகுப்புகளுக்குச் சென்றேன். வெட்டியான வேளைகளில் பின்தொடர்வது ஒரு தொடர்ந்த அனுபவமாகிப் போனது. பிடித்திருந்தால் பேச வேண்டிய அவசியமின்மையை விவாதித்து மூளையுள்ளுள்ளவர்கள் மாநாடாகிக் கொண்டிருந்தார்கள். முடிவின் அருகாமை உந்த இலையும் கலையுமிழந்த அந்த மரத்தின் அடியில் அவளிடம் பேசிய போது பரிட்சை. அருகில் பார்க்க சிரித்து, ’நான் ..... நீ *** தானே.’ அவளைப் பற்றி கூறிய போது ஆச்சரியித்து, அவள் கேமரா இல்லாமல் புகைப்படக் கலை கற்கும் கதையை பேசிப் பிரியும் போது பிறகு சந்திப்போமெனக் கூறிய நான் அடுத்து பேசிய போது அவள் வயது 3 மாதம் அதிகம் ஆகியிருந்தது. அருகிலிருந்து சிரித்த அவள்’ஹாய்’க்கு பின்னாக எழுவாயை மறந்தே போயிருந்தாள். தன்னம்பிக்கை தெறிக்கும் சிரிப்பினூடே ஆச்சரியக் குரலில் மறு அறிமுகம் செய்து கொள்ள, மீண்டும் நான் அண்டார்டிகாவில் கிடைத்தால் படிக்கத் தயாராக இருக்கும் விவரத்தை உதட்டில் பூண்ட நகையுடன் கேட்டவளை நினைவிருக்கிறது. சில நிமிடங்களுள்ளான இந்த கிளர்ச்சியை நோக்கி நாட்கள் மிதந்தன. அடுத்து அந்தக் கார் கம்பெனிக்காரன் மருமகளுடன் பிரின்ஸ்பல் அலுவலகம் அருகில் அவள் படித்துக் கொண்டிருந்த போது அருகில் சென்ற பொழுது தோழி இடிக்க இவள் திரும்பிய பொழுது விழிகளின் மேல் வில்லாக இரு கேள்விக் குறிகள். சிரிக்காமல் கேட்டாள், ‘நீ யார்’ என்று. சிரித்த நான் மறு அறிமுகம் செய்ய தேடிய பொழுது பெயர் சிக்கவில்லை. பெயரிலியாகிவிட்டிருந்தேன்.
தனிமை (அ) விடியலின் வெளுப்பு
Filed under கவிதை , by Prabhu on 12/23/2009 11:03:00 AM
20
விழிகளைச் சிறையிட்ட வளையங்கள்
புத்தக வெள்ளையில் உதிர்ந்த முடிகள்
உலர்ந்த தோலின் வறட்சி
தனிமையின் காய்ந்த உதடுகள்
பென்சில் சிகரட்டில் இழுத்த
காற்று நிகோடின்
குளிர் காலத்தில் புகையாய் பரவ
தட்டில் வைத்த சோறு
வயிற்றிடம் செலவு கணக்கு கேட்டு
வெளியேறும்
புவியீர்ப்பில்லா பொழுதுகளில்
அவள் முகத்தில் முன்பு தோன்றிய
புன்னகையின் எச்சம்
என் உதடுகளில்
விரக்தியில், விட்டத்தின்
சிலந்தி வலை
வழித்துப் போட வலுவில்லை
வாழ்க்கையின் நகலெடுக் கருவி
நாளைய பிரதிக்காக
சூடாகிறது
நாளைய விடியலின்
வெளுப்பின் சந்தேகத்தின் நிழலில்
இன்றைய பொழுது.
-புலவர் பிரபுகுமார் (ராகமா இருக்குல்ல.. ஹி.. ஹி..)
பி.கு- காதல் கவிதை இல்லை. எனக்கு அந்த ரசனை இல்லைன்னு நினைக்குறேன். அப்படி எழுதப்போனா, ஏற்கனவே எழுதின இந்த ரகத்தில் தான் வரும். யாருக்காவது புரியலைன்னா எனக்கு வெற்றி. புரியாத கவிதை எழுதுறவங்க பெரிய ஆளாமே. புரியாத மாதிரி என்பதை விட எதையும் விளக்க முற்படாமை என சூரத் பல்கலைகழகத்தின் ஆங்கிலத் துறையில் வேலை பார்க்கும் கவிஞர் E.V.Ramakrishnan சொல்லிக் குடுத்தார். அது போல, இதனால போன்ற விஷயங்கள் கவிதைக்கு தேவையில்லை என்பதை ஆங்கிலத்தில் வழியுறுத்தினார்.
வெட்டியாகப் பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்குக் கவிதை என்னவாகத் தோன்றியது என கூசாமல் எழுதுங்கள். நான் வருத்தபட மாட்டேன். :)
மைக்ரோ ப்ளாக்கிங் 3
Filed under Micro blogging , சினிமா , மைக்ரோ ப்ளாக்கிங் , by Prabhu on 12/20/2009 09:39:00 PM
23
சமீபத்தில் எத்தனையோவாவது தடவையாக அன்பே சிவம் பார்க்க நேர்ந்தது. It gets better every time. ஒவ்வொரு தடவையும் ஏதோ இன்னும் மெருகேருவது போல, யாரோ மேலும் மேலும் ‘டச் அப்’ செய்வது போல இருக்கிறது. முதல் தடவை நல்ல கதை மட்டுமே தோன்றியது. போகப் போக technical perfectionம் இருப்பதாக புரிகிறது. சுந்தர்.சி யின் திரை வாழ்க்கையில் சொல்லக் கூடிய படம். எத்தனை தடவை பார்த்தாலும் கடைசி காட்சியில் கடிதம் படிக்கப்படும் காட்சியும், கமல் கேமராவிலிருந்து தொலைவில் சென்று மறையும் காட்சியும் சில நிமிடங்கள் என்னை அப்படியே சீட்டில் உட்கார வைத்துவிடும்.எல்லோருக்கும் பிடித்த இந்தப் படம் சரியாக ஓடாதது இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது.
‘ஹேராம்’ - நான் ஒன்றிரண்டு வருஷங்களுக்கு முன் தான் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. நன்றாக இருந்ததாகத் தோன்றியது. Chronicles என சொல்லக் கூடிய வகையில் ஒருத்தனின் கடந்த வாழ்க்கையின் ஒரு தொகுப்பாக எடுக்கபட்ட படம்(எ.கா-Forrest gump, வாரணம் ஆயிரம்). ஷாரூக் கமலை எதிர்கொள்ளும் சமயங்களில் வரும்வசனம் செம ஷார்ப். ஷாரூக்கை (முஸ்லிம் என்பதால்) பார்த்து கமல், ‘கைபர் கணவாய் வழியா வந்தவந்தான?” எனக் கேட்கும் போது ஷாரூக், ‘உங்க ராமசாமியே கைபர் வழியா வந்தவரு தான்னு சொல்றாங்க?’ எனக் கேட்பார். இந்த சந்தேகம் உண்மையில் சரித்திர ஆராய்ச்சியாளர்களில் உண்டு என எதிலோ படித்த ஞாபகம்.
எனக்கு ’மாறு’ கண் இல்லாததால் என் ’பார்வையில்’ எசகு பிசகான அர்த்தங்கள் தோன்றவில்லை.
ஒரு வேளை இப்பொழுது வெளியாயிருந்தால் நன்றாக ஓடியிருக்குமொ என்னவோ?
BTW, இந்த ப்ளாகில் இது 51வது பதிவு. 50 வந்தப்ப நான் கவனிக்கல. வேறு யாரும் கவனிச்சு சொல்லாததால் நான் இன்னும் ’பெரிய ஆள்’ ஆகலைன்னு தெரிகிறது. இன்னும் ஐநூறு பேரைக் கொன்றாவது அரை ப்ளாக்கன் ஆக முயற்சிக்கிறேன்.
மார்ஸில் !@#$%^&
Filed under காமிக் , நகைச்சுவை , by Prabhu on 12/17/2009 08:23:00 PM
12
எப்பவுமே மனுஷனுக்கு தன் வீட்டை விட பக்கத்து வீட்டு மேல கவனம் அதிகம். அறிவியலிலும் கூட நம்ம பூமியை பாதுகாக்க துப்பில்லாத நாம் அடுத்த கிரகங்களை நோக்குகிறோம். இப்பொழுதைக்கு செவ்வாய் மேல நமக்கு கண். செவ்வாயில் உயிராதாரங்களுக்கான தடயங்கள் இருக்கு என சொல்லும் நாம் விரைவில் அங்கு ஆராய்ச்சிக்கு ஆளனுப்பலாம். வழக்கம் போல ரஷ்யாவும் அமெரிக்காவும் முதலில் சென்று புது குடியிருப்பு அமைக்க முயலலாம். அங்கே..
ஆச்சரியக் கேள்வி - கடவுள் எல்லா இடத்துலயும் இருக்கிறதா சொல்லுறாங்க. என்னோட கேள்வி என்னன்னா, அவர் என்ன மலையாளியா?
இதை வினோத், ஆதவன் மற்ற எல்லா அமீரக ’தமிழ்’ நண்பர்களுக்கு சமர்பிக்கிறேன். ஹி.. ஹி...இன்சைட் ஜோக்குங்கோ!
எல்லாருக்கும் தெரிஞ்ச ஜோக்தான் என்றாலும் முதல் காமிக் முயற்சி என்பதால் சிம்பிளாக கான்செப்ட் எடுத்தேன். பெயிண்டில் தான் வரைந்தேன். வரைவதற்கு வேறு ஏதாவது தரமான மென்பொருள் இருந்தால் தெரியப் படுத்தவும். மேற்கொண்டு இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வசதியாக இருக்கும். (என் வரையும் திறமையப் பத்தியெல்லாம் யோசிக்காதீங்க. அமீபா வரையறதுக்குள்ளயே ஆறு தடவை அழிச்சும் வரையும் அருமையான படைப்பாளி).
டாப்பு அடிக்கலாம் - 6
Filed under சினிமா , டாப்பு , by Prabhu on 12/15/2009 01:36:00 PM
20
பட அறிமுகம்
லிட்டில் ஜான் : அம்மா, உன் வயசு என்ன?
பைரவன் கோவிலுக்கு வழி
Filed under என்னன்னே புரியல , சிறுகதை , by Prabhu on 12/13/2009 02:32:00 PM
13
வழக்கம் போல தூக்கிட்டு போயிட்டு எல்லாம் முடிஞ்சதும் வெளிய விட்டுருவானுங்கன்னு நினைச்சிட்டிருந்த என் பொழப்புல மண் விழுந்தது. இந்த தடவை எல்லாமே எண்கவுண்டர்தான் எனக் கேள்விப் பட்டேன். மூணாவது தெருவில இருக்கிற ஜான்சிய வேற பாக்க முடியல. என் பழக்கத்தால அவளயும் தூக்கிட்டு போயிருந்தா? சேசச்சே... நம்மள மாதிரி அநாதையா அவ? குடும்பம் இருக்கு. ராஜுகிட்டயும் சொல்லிவச்சேன். எப்பவும் தயாரா இரு, வாய்ப்பு கெடைச்சா ஓடிரலாம்னு. அவன், அப்ப ஜான்சி எனக் கேட்கிறான். அவளையும் கூட்டிட்டுதான்.
இதெல்லாம் நடக்கும் போதுதான் அன்னைக்கு எங்க தெருவுக்கு காக்கி சட்டைக் காரனுங்க வந்திருப்பது தெரிந்தது. போதாக்குறைக்கு தெருக்காரனுங்க லஞ்சம் குடுத்திருக்கானுங்க. சிக்கினா சோலி முடிஞ்சது. நான் வேகமா வந்து சந்துல பதுங்கிக் கிட்டேன். பின்னால் திரும்பினால் ராஜுவைக் காணோம். கொஞ்ச நேரம் கழித்து காலி ரத்தத்துடன் ஓடி வந்தான். அடிச்சிருக்காங்க. மறைவிடத்துக்கு வரும் முன்ன சொத்தென ஒரு அடி அவன் முதுகில் விழுந்தது. அவன் துள்ளித் துடித்தான். திமிறினான். அவனைப் பிடித்தவன் ராமு தாத்தாவைப் பார்த்து கேட்டான், ‘என்ன சார், உங்களுக்கு பழக்கம்னு சொன்னாங்க. நீங்க சொன்னீங்கன்னா விட்டுடறேன். ஃபார்மாலிட்டீஸ் வேணாம்”. ராமு தாத்தா, ‘பழக்கம் தான். அதுக்காக என்ன செய்வது. தூக்கி வச்சு கொஞ்சவா முடியும். தெரு நாய்தானே?’ என்றார். என் கண் முன்னே அவனைத் தூக்கிச் சென்றார்கள். தெரு நாய் தானாமே? இனி இங்க இருக்க முடியாது. ஜான்சி? இருக்கிற பிரச்சனைல அவ வேறயா? போற எடத்துல பொட்ட நாய் கிடைக்கிறதா கஷ்டம். போதாததுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கு. பக்கத்துல இருக்கிற கிராமத்துல பைரவர் கோயில் கட்டி நாயிக்கெல்லாம் கறி வைக்கிறாய்ங்களாமே? அந்த ஊருக்கு வழி சொல்லுங்களேன்.
பின் குறிப்பு : இதை என்ன கேட்டகரில வகைப்படுத்தன்னே தெரியல. என்னவோ எழுத ஆரம்பிச்சு ஆறு ஏழு மாற்றங்கள் அடைஞ்சு, சில மாதங்கள் கிடப்பில் கிடந்து, உள்ளயே ஏன் வைத்திருப்பானேன், படிக்கறவங்க கஷடம் என வெளியிட்டுட்டேன்.
12 Angry Men (1957)
Filed under விமர்சனம் , by Prabhu on 12/12/2009 01:19:00 PM
12
16x24 அறையில் பன்னிரண்டே பேர் அமர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள், படம் முழுக்க. சுவாரஸ்யமாக இருக்க முடியமா எனக் கேட்டால், இருக்க முடியும் என்று கூறுகிறது இந்தப் படம். சில வழக்குகளில் அவன் தவறுதான் செய்தான் என்றாலும் அதற்கு மனிதாபிமானக் காரணங்களை நோக்காமல் சட்டப்படி தண்டனை குடுக்கப் படுகிறது. ஆனால் இது போன்ற மனிதாபமான் நோக்கில் சில வழக்குகளை சிந்திக்கவே ஜூரிக்கள்(Jury) நியமிக்கப் படுகிறார்கள் என நினைக்கிறேன். இப்படி நியமிக்கப்படுகிற 12 ஜூரிக்கள் ஒரு வழக்கின் தீர்ப்பைத் தீர்மானிக்க விவாதம் செய்ய முற்படுவதே இந்தப் படம். இது முதலில் டிவியில் வந்த மேடை நாடகம் போன்ற ஒன்றின் திரைவடிவம்.
ஒரு சேரி பையன் மீது அவன் தந்தையைக் கொன்ற குற்றம் சுமத்தப் படுகிறது. அதனை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பு மரணம் அல்லது விடுதலை என்பதில் ஒன்றாகவே இருக்க வேண்டும், ஜூரிக்களை எந்த முடிவு எடுத்தாலும் பன்னிருவரும் ஒத்த முடிவெடுக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளோடு ஒரு தனி அறைக்குள் அனைவரையும் அனுப்புவதுடன் இத்திரைப்படம் ஆரம்பிக்கிறது. அத்தனை பேரும் அவன் குற்றவாளி என முடிவு செய்யும் போது Henry Fonda மட்டும் குற்றவாளி அல்ல என ஓட்டளிக்கிறார். ஏன் எனக் கேட்ட்கும் பொழுது, ‘எனக்கு தெரியல. ஆனா வாங்க பேசுவோம்’ என்கிறார். எல்லோரும் கோபமாக இவனை எதிர்கொள்ளும் போது, ‘ஒரு மனிதனின் உயிரை அவ்வளவு எளிதாக பறிக்க முடிவு செய்துவிடுதல் எனக்கு சரியாகப் படவில்லை. வாங்க பேசுவோம்’ என சாலமான் பாப்பையா ரேஞ்சுக்கு அழைக்கிறார்.
மெல்ல விவாதம் வழக்கின் ஆதாரங்கள், சாட்சிகள், அதன்

கொலையை காட்டாமலே க்ரைம் த்ரில்லர் பார்த்த மாதிரியான உணர்வு. கடைசி வரைக்கும் நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கும் காட்சியமைப்புகள்.
பன்னிரண்டு பேரும் பன்னிரண்டு விதமான பாத்திரப் படைப்புகள்.
ஒருவனுக்கு நியாயத்தினாலான தார்மீகக் கோபம், ஒருவனுக்கு prejudiceனால் வந்தக் கோபம்,
ஒருவனுக்கு சொந்த அனுபவங்களின் வெறுப்பினால் வந்த கோபம், ஒருத்தனுக்கு தானும் சேரிப் பிண்ணனி என விமர்சிக்கப்படும் போது கோபம், தான் பேஸ்பால் விளையாட்டுக்கு போவது கெட்டது என ஒருவனுக்குக் கோபம் என வெவ்வேறு வகையில் கோபம் பிரதிபலிக்கிறது. அசட்டை, prejudice, பயம், சந்தேகம், விரக்தி, தன்னம்பிக்கை, இரக்கம், எரிச்சல், பொறுமை என பன்னிரெண்டு குணநலன்கள்.
சில சமயங்களில் நம்மை அசரவைக்கும் விவாதங்கள் உண்டு. சில மாதங்கள் முன்பு இரவு ஒன்றரை மணிக்கு ஒரு காட்சி பார்க்கலாம் என ஆரம்பித்து மூட முடியாமல் பார்த்தேவிட்ட பிறகுதான் தூக்கம் வந்தது. நான் பழைய ஆங்கில படங்கள் பார்த்தது ஒன்றிரண்டே. ஒரு கருப்பு வெள்ளை படம் இவ்வளவு intense ஆக இருக்குமென கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை.
சட்டென்று ஒரு பாயிண்ட்டால் மற்றவரை மடக்கும் போது அந்தக் கதாபாத்திரம் திணறுவது வேடிக்கை. சில சமயங்களில் அது பின்னிரவு என்று கூட யோசிக்காமல் சிரித்திருக்கிறேன், தனியே. கத்திக் கூர்மை வசனங்கள். . பேப்பரில் எழுதும் போது திரைக்கதையாளர் என்ன நினைத்து எழுதினாரோ அதை நேரில் காட்டுகிறார்கள். வாரக் கணக்கில் நொங்கெடுத்ததால் மிக நேர்த்தியான் நடிப்பு. அளவான பட்ஜெட்டும் அதற்கு காரணமாக இருக்கலாம்.
படத்தில் ஆரம்பத்தில் வைட் ஆங்கிளில் ஆரம்பித்து முடியும் போது நெருக்கமாக வைத்து எடுத்திருப்பது டென்ஷனை அதிகரிக்க உதவியிருக்கிறது. ஆரம்பத்தில் வெப்பாமாக இருப்பதால் வெந்து வழிகிறார்கள், போகப் போக பெருமழை அடித்து படம் முடியும் போது ஓய்கிறது. அந்த காலத்தில் சன்னலுக்கு வெளியே கட்டடங்களாக செட் போடும் போது, மட்டமா இருக்கு என Fonda குறைபட்டுக் கொண்ட போது இயக்குனர், ஒளிப்பதிவாளர் பாத்துக்குவார் என பதில் கூறியது சால நிஜம். நம்மை அவை கன்வைன்ஸ் செய்கிறது. எடிட்டிங் கத்தி சுத்தம். ஓட்டையே இல்லையான்னு கேட்டா உண்டு, சின்ன லாஜிக். அட, அது கூட இல்லைன்னா எதுக்கு படம். டாகுமெண்ட்ரிதான் எடுக்கனும்.
96 நிமிடப் படத்தில் 93 நிமிடங்கள் ஒரே அறையில் நடக்கிறது. படம் அந்தக் காலத்திலிருந்து இப்பொழுது வரை சிறந்த நீதிமன்றம் சார்ந்த படமாகக் கருதப் படுகிறது. இப்பொழுது ஒரு வாக்கெடுப்பில் அந்தப் பிரிவில் இரண்டாவது ரேங்க். கண்டிப்பாக Rotten tomatoesல் 100 தேறும். ஆனாலும் இந்தப் படம் பெரிதாக ஓடவில்லை. இந்தப் படத்தை தானே தயாரித்த Fonda இத்துடன் தயாரிப்பை விட்டுவிட்டார். (Fondaவைப் பற்றி சிறு குறிப்பு வரைய பாலாவை அழைக்கிறேன். எனக்குத் தெரியாததால்.. இந்தப் படம் பாத்திருக்கீங்களா?).
மொத்ததில் ஒரு புத்துணர்வான, க்ளாஸிக் அனுபவத்திற்கு உத்தரவாதம்.
12 Angry Men - See if you are a smart 1.
சில படங்களின் அறிமுகம் ( F- Special) 18+
Filed under Movies , Parody , விமர்சனம் , by Prabhu on 12/11/2009 01:51:00 PM
14
இந்தப் பதிவு கண்டிப்பா 18+ தான். அதுவும் profanity தாங்காதவங்க ஓடிப் போயிருங்க. கலாச்சாராத்தை காலையில் கழிவறையில் கண்டதாக கூவும் கலாச்சாரக் காவலர்களுக்குத் தடை.
South Park - Bigger, Longer & Uncut (1999)
132 ’f’கள், 77 ‘s'கள், 66 மற்றவைகள் எனப் போகிறது. படம் முழுக்க ஆறு செகண்டுக்கு ஒரு கெட்ட வார்த்தையாவது இருக்கும்ங்கிறது ஒரு புள்ளி விவரம். இந்தப் படம் பல காலமாக டிவியில் ஒளிபரபாகும் South Park அனிமேஷன் சீரிஸில் இருந்து எடுக்கப் பெற்ற அனிமேஷன் படம். Parody, Sarcasm, satire வகைகளை ரசிக்கத் தெரிந்தவர்கள் பார்க்க வேண்டிய படம்.
F*ck (2005)
இது ஒரு டாகுமெண்ட்ரி. இதைப் பற்றி ஹாலிவுட் பாலா ஏற்கனவே சொல்லியிருக்கிறார். ரொம்ப காலமா பார்க்க நினைத்து பார்த்த படம். ஆனால் எதிர்பார்ப்புக்கு புஸ்ஸு. ஒண்ணு ரெண்டு நிஜ சம்பவங்களின் சுவாரஸ்யம் தவிர மற்ற படி ஒன்றும் இல்லை. அட, அந்த வார்த்தையின் ஆரம்பம் எதுவெனக் கூடத் தெரியவில்லை எவருக்கும். ‘Fornication Under the Consent of King' என பார்வர்ட் மெஸேஜில் வருவதை நம்பாதீர்கள் போன்ற அரிதான் தகவல்கள் உண்டு. மற்றபடி எனக்கு விசேஷமாக எதுவும் படவில்லை.
Young People F**king(2007)
கனடா நாட்டுப் படமான இதன் பெயரை பார்த்தால் என்ன தோணும் என புரிகிறது. அதனால் இதைப் பற்றிய எதிலோ படித்த விமர்சனத்தில் இருந்து ஒரு வரி, “இந்தப் படப் பெயரை பார்த்து உள்ளே வருகிறாவர்கள் இந்தப் படம் ரசிக்கும் படியாக இருக்காது. ரசிப்பவர்கள், இந்தப் பெயரைப் பார்த்து உள்ளே வர மாட்டார்கள்’. இது போதும் இந்தப் படத்தினைப் பற்றிக் கூற. ஐந்து வெவ்வேறு ஜோடிகள். கணவன்-மனைவி, நண்பர்கள், விவாகரத்தானவர்கள், முதல் டேட் முடிந்தவர்கள், நண்பனும் தனது காதலியும் செய்வதை வேடிக்கை பார்க்கும் நண்பன். Quentin படங்களை போன்று Prelude, Foreplay, sex, Orgasm என பாகங்களாக இருக்கிறது. ஆனால் கதை நேராகத் தான் ஓடுகிறது. ஐந்து ஜோடிகளையும் மாற்றி மாற்றி காட்டுவதில் எடிட்டிங் நன்றாக இருக்கிறது. ஒவ்வொருஜோடியும் ஈடுபடுவது ஒரே வேலை,sex. ஆனால் வெவ்வேறான நோக்கங்கள், எண்ண ஓட்டங்களுடன் என்பதைக் காட்டுவதான படம். சுமாரான அளவு பொறூமை தேவைபடுகிறது. ஆகச் சிறந்த படைப்பு இல்லையானாலும் பார்க்கத் தகுதியானதே.
(’மேற்படி’ விஷயங்களை பற்றி கேட்பவர்களுக்கு, இதுவரை இல்லாத ஒன்றை எதுவும் இவர்கள் காட்டிவிட வில்லை)
Team America: World Police ஒரு படம் இருக்கு. அதுவும் எதுக்கும் குறைஞ்சதில்லை. அமெரிக்காவின் உலக போலீஸ் அடாவடியை கிண்டல் செய்து எடுத்த Satire. அதைப் பற்றி சொல்ல நேரமின்மையால் விட்டு விடுகிறேன். நேரமும் ஆர்வமும் இருப்பின்* பாலா அவர்கள் சொல்லுமாறு அழைப்பு விடுக்கிறேன்.
South Park விமர்சனம் எழுத முயற்சி செய்து முடியாத காரணத்தால் இப்படி ஒரு கலப்பட அறிமுகம்.
ஹாரி பாட்டரும் மாயாபஜாரும்
Filed under Harry Potter , Parody , நகைசுவை , by Prabhu on 12/06/2009 12:33:00 AM
24

ஒரு தடவ சென்னை வந்திருந்தாங்க J.KRowling. அப்போ அவங்களுக்கு ஒரு கதை எழுதுற ஐடியா வந்திருந்ததே தவிர பேரு கூட முடிவு செய்யல. பொழுது போகாமல் ஹோட்டல் டிவி ரிமோட்டுக்கு உடல் நோவோ என்னவோ அந்த அமுக்கு அமுக்கி விட்டு கொண்டியிருந்தார். அந்த யோசனையுடன் சும்மா சானல் விட்டு சானல் ரிமோட் குரங்கு தாவும் பொழுது ஒரு காட்சி கவர்ந்துவிட்டது அவரை. அதன் கிராஃபிக்ஸால் பிரமித்து போன அவர் அதைத் தழுவி ஒரு கதை எழுதுனாங்க. அதில் அந்தப் படத்தில் இருந்து ஒரு சில காட்சிகளை சுட்டு வச்சுகிட்டாங்க. கண்ணாடி ஒன்று Harry Potter ல் 'The Mirror of Erised' (desire பின்னாலிருந்து erised) என்று ஒரு முக்கியமான, சுவாரஸ்யமான விஷயமாக கதையில் (முதல் பாகம்) காட்டப்பட்டிருக்கும். நாம் ஆசைபட்டதைக் காட்டும். இந்த கண்ணாடியை 60 வருடங்களுக்கு முன்னால் நம்ம ஊரு படத்தில் காட்டியிருக்கிறார்கள்.
‘மாயா பஜார்’ என்ற படமொன்று 1957ல் கருப்பு வெள்ளையில் வந்தது. தெலுங்கர்கள் எடுத்த இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப் பட்டு அடுத்த மாதம் தமிழ் நாட்டில் வெளிவந்து சக்கை போடு போட்டது வரலாறு. அதுவே ஆங்கிலத்தில் ‘ஹாரி பாட்டராக’ உரு பெற்றிருக்கிறது. அந்தப் படத்தில் இந்த கண்ணாடி போன்ற ஒரு விஷயத்தை பயன்படுத்தியிருப்பார்கள்.
அப்புறம் அந்த கடோத்கஜன் சாப்பிடும் காட்சியெல்லாம் நாம் மறக்க கூடிய விஷயமா? எல்லாம் அந்த காலத்திலே அதிகப்படியான கிராஃபிக்ஸ் காட்சிகள், State of the art என்று சொல்வார்களே, அது போல. அந்த கண்ணாடி மேடர சுட்டது போதாதுன்னு ரங்காராவ் ‘கல்யாண சமையல் சாதம்’ சாப்பிடும் முறைய காப்பி அடிச்சு அவங்க மொழிக்கு மாற்றும் போது அடையாளம் தெரியாமல் இருக்க லத்தின் மொழியில் 'Wingardium Leviosa', 'Liberocorpus' எனக் கூறி பொருட்களைப் பறக்கவிட்ட போது லவட்டினது நம்ம கோவணத்த தான் என்பது கூட தெரியாமல் வாயில் ஈ முட்டை போட இடம் கொடுத்து உட்கார்ந்துகிட்டு கை தட்டிகிட்டு இருக்கோம்.
(தெலுங்குப் பதிப்பே கிடைத்தது. தமிழில் கிடைக்கவில்லை. கிடைத்தால் சொல்லுங்க. எனக்கு பிடித்த பாட்டு. ஃபுல் மீல்ஸ் எஃபக்ட்.)
நம்ம கதையில் கிருஷ்ணர்தான் எல்லாமே தெரிந்தவர். என்னவெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுகிட்டு அதற்கேற்றாற் போல மற்றவர்களை இயங்க வைப்பார். ஒரு சில சமயங்களில் ஏன் இப்படி பண்றாருன்னு கூட இருக்கவங்களே வெறுத்தாலும் நம்பிக்கைக்குரியவர். கிருஷ்ணருக்கு இன்னொரு பேரு தாமோதர்னு தெரிஞ்சா ’Albus Dumbledore’ பத்தி உங்களுக்கு விளக்கத் தேவையில்லை.
கம்ஸன் பொதுவா நல்லவன்தான். ஆனால் தங்கையோட மகனால சாவு என அசரீரியால் தெரிந்த பிறகு அதை தடுக்கிற முயற்சியில் கெட்டவனாகிப் போய் அவர் கையால் சாகிறான். மூடிகிட்டு அவன் பாட்டுக்கு இருந்திருந்தா எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது. அரைகுறையாக கேட்ட தீர்க்கதரிசனத்த வச்சு தனக்கு சாவு ஹாரி கையால எனக் குருட்டுத்தனமாக முடிவு செஞ்சு செத்தத படிச்சவங்க மறந்திருக்க முடியாது. இப்படியெல்லாம் இங்கிருந்து கொண்டு போன சரக்கை மறைக்க அவங்க கலாச்சாரத்த கொண்டு மழுங்கடிச்சது மட்டுமில்லாமல் இந்திய கதாபாத்திரங்கள் இரண்டை கேவலமாகப் படைத்திருக்கிறார்.
இதற்கு மேலும் என்னால் பல விஷயங்கள் கூற இயலும். ஆனால் அதையெல்லாம் தக்க ஆதாரங்களுடன் விரைவில் சுப்பிரமணிய சுவாமியை சந்திக்க உள்ளேன்.
பின்குறிப்பு - அடுத்து நமது குழந்தைகள் படமான ‘கந்தசாமி’யை உல்டா செய்து அவர்கள் ஊர் குழந்தைகளுக்கு ஏற்றாற் போல வெளியிட்டு நம்மையும் ஏமாற்றிட உள்ளதாக நாம் அறிகிறோம். இது போன்ற காரியங்களை இதற்கு மேலும் நடக்காமல் தடுக்க தாக்கரே, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., ராமதாஸ் போன்ற நம் கலாச்சாரத்தை கழிவறையில் சுருட்டி வைத்து காப்பாற்றும் (பயன்படுத்தும்) காவலர்களை அழைக்கிறேன். இது மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அறைகூவல்!
Ninja Assassin - Movie
Filed under Movies , விமர்சனம் , by Prabhu on 12/02/2009 12:54:00 AM
10
நிஞ்சா இங்கே... கதை எங்கே?
மைக்ரோ ப்ளாக்கிங் 2
Filed under Micro blogging , மைக்ரோ ப்ளாக்கிங் , by Prabhu on 11/28/2009 10:00:00 AM
11
நேரமின்மையால் நிறைய விஷயங்கள் எழுத முடியாமல் போகிறது. ஆனால் எழுத வேண்டாம் என முடிவு செய்த பிறகுதான் ஏதாவது உருப்படியாக தோன்றும். அல்லது ஏதாவது சின்ன விஷயமாக பேசலாம் எனத் தோன்றும். அதற்காகத்தான் இந்த மைக்ரோ ப்ளாக்கிங்.
ஏதோ மைக்ரோ ப்ளாக்கிங்கை கண்டுபிடித்த மாதிரி பேசிக் கொண்டிருக்கிறேன். பொதுவா 'ட்விட்டரில்' நாம் பதிவு செய்யும் 'ட்வீட்'டுகளையும் மைக்ரோ ப்ளாக்கிங் என்றுதான் சொல்வார்கள். நானும் ட்விட்டரில் இருக்கிறேன் இப்ப. காலையில பல் விளக்குறதக் கூட அதுல போடுறாங்க. நாமளும் ஏன் போடக் கூடாது என முடிவு எடுத்து சேர்ந்துட்டேன். எல்லாரையும் அதுக்கு கூப்பிடறேன். வாங்க. ஏற்கனவே இருந்தா வலது பக்கத்தில் என் ட்விட்டர் பக்கத்துக்கு வழி கொடுத்திருக்கேன். வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.
ஒரு எசகுபிசகான ஜோக்
ஒரு நாள் வகுப்பை முடித்துக் கிளம்பும்போது ஆசிரியர், "நாளைக்கு ஒழுங்கா பரிட்சை எழுத வந்துறனும். வீட்டுல யாராவது இறந்தாலோ, இல்ல உன் உடம்புக்கு வர முடியாத அளவு ஏதாவது ஆனாலோ ஒழிய எந்த விதமாக சாக்கும் ஏத்துக்க மாட்டேன்". ஒரு குறும்புக்கார பையன், "செக்ஸால் எழுத முடியாத அளவு ரொம்ப டயர்டா ஆயிருந்தா?" அப்படின்னு கேட்டான். க்ளாசே குபீர்னு சிரித்தது. சிரிப்பலை அடங்கிய பிறகு ஆசிரியர், "அதெல்லாம் செல்லாது, செல்லாது. இன்னொரு கை வச்சு எழுது'ன்னு சொன்னாங்களாம்.
இந்த பதிவை சனிக்கிழமை 10 மணிக்கு செட் செய்திருந்தேன், ஒரு சோதனை முயற்சியாக. சரியாக என் பரிட்சை ஆரம்பமாகும் நேரம். இதுவும் போஸ்ட் ஆகல. பரீட்சையும் நடக்கல. அவனுங்க தொழில்நுட்ப சிக்கலில் எனக்கு இப்ப தடைபட்டு போய் என்ன செய்யவெனத் தெரியாமல் முழிக்கிறேன். சென்னை போய் வந்ததில் மன உளைச்சலும் அலுப்பும் தான் மிச்சம். எழுதி முட்டை வாங்கியிருந்தால், இந்த மதிப்பெண் என் கல்லூரி சேர்க்கைக்கு பயன்படாமல் போயிருந்தால் வருத்தப் படாமல் மற்ற பரீட்சையை கவனிக்கப் போயிருப்பேன். ஒரு வருடம் படிப்பை விட்டதில் முக்கியமான பரீட்சை எழுதக் கூட முடியாததுதான் வருத்தம். பரீட்சை வைத்த புண்ணியவான்களுக்கு மெயில் அனுப்பிவிட்டு அடுத்த பரீட்சைக்கு தயாராகிறேன். யாரும் வருத்தப்பட்டு இரங்கல் தெரிவிக்க வேண்டாம். நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் வருத்தத்துடன் கூறிக் கொள்கிறேன். :)
மைக்ரோ ப்ளாக்கிங் 1
Filed under Micro blogging , மைக்ரோ ப்ளாக்கிங் , by Prabhu on 11/26/2009 12:35:00 AM
9
'Paa' பாடல்கள் இளையராஜாவின் இசையில் அருமையாக வந்திருக்கு. தன்னுடைய பழைய பாடல்களை ரிப்பீட்டியிருக்கிறார் என்றாலும் அவரது ஆர்கெஸ்ட்ரேஷனும் துல்லியமும் வாய்பே இல்ல. அவ்வளவு அழகா வந்திருக்கு 'Gumsum' எந்தப் பாடலின் ட்யூன் என்று தெரியவில்லை. ஆனால் 'Halke se bole' , 'புத்தம் புது காலை' எனத் தொடங்கும் தமிழ் பாட்டு போன்று இருக்கிறது. 'Udhi udhi' எல்லா வெர்ஷனும் நல்லாருக்கு. அமிதாப் ஒரு பாட்டு சின்னப் பையன் மாதிரி பாடியிருக்கார். நல்லா இருக்குன்னுதான் நினைக்கிறேன், சரியா கேட்கவில்லை. தீம் ட்ரைலரில் கேட்டிருக்கலாம்.
மொத்தத்தில் Paa - soothing. தமிழில், இதமாக இருக்கிறது என்று சொல்லலாமோ?
'பையா' படப் பாடல்களும் வந்துவிட்டது. அப்பாகிட்ட ஐடியா கேட்பாரோ? இவரும் தன்னுடைய பழைய பாடல்களில் இருந்து இசையை மறுபதிப்பு செய்த மாதிரி இருக்கு. ஆனால் இந்தப் படப் பாடல்கள் வெற்றிக்கான அடையாளங்கள் தெரியுது. 'என் காதல் சொல்ல நேரமில்லை' என்ற பாடலில் யுவன் தன் குரலில் கிளப்பியிருக்கிறார். அவர் ரசிகர்களை பித்து பிடிக்க வைக்க இது போதும். பையா - அப்பாவுக்கு பையன்.
ஒரு நாள் சென்னையில எங்க சுத்தலாம்? ஐடியா தேவைப் படுகிறது. பதிவுலக ஐடியா மணிக்கள் வரவேற்க்கப் படுகிறார்கள்.
என்ன கொடும சரவணன் இது! அதுக்குள்ள CAT வந்துருச்சே. ரெண்டு நாளில் நான் பதிவு செய்த ஸ்லாட் வருவதால் CAT எழுத செல்கிறேன். எல்லாரும் கடவுளை வேண்டிக்க வேண்டுகிறேன். பாலா, தருமி, வால்ஸ் மாதிரி ஆட்கள் கடவுளை இல்லைனாலும் 'இந்தப் பையன் தேறனும்' என்று மனதுக்குள் ஒரு செகண்ட் நெனச்சுக்கோங்க.
டாப்பு அடிக்கலாம் - 5
Filed under டாப்பு , by Prabhu on 11/19/2009 05:00:00 PM
23
--------------------------------------------------------------------------------------------------------------
கவிதையெல்லாம் எழுதுவாங்க எல்லாரும். நான் ஒண்ணு இங்கிலிபீசுல எழுதினேன். பிரமாதமான வார்த்தைகள் எல்லாம். இல்லை; உரைநடை வார்த்தைகள் போன்று எளிமையாக எழுதினேன். ஆனால் ஒரு வலுவான மையக் கரு வைத்திருந்தேன். ஆனா அதெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியாது. சப்பயா நாலு டயலாக் சொல்லிட்டு கடைசி வரியில ஒரு இங்கிலீசு கெட்ட வார்த்தையோட முடிச்சிருக்கேன். யாராவது அதையும் மீறி ஆப்பு வேணும்கிறவங்க எ-கடிதம் மூலம் என்ன தொடர்புங்கோ!
கடவுள் என்ற வார்த்தையை எடுத்தாலே பிரச்சனை ஆகிவிடுகிறது. பிறகு கடவுள் இருக்கிறாரா என்ற தத்துவ விசாரணையை பேசுவதென்றால் எல்லாரும் அவரவர் கருத்தைக் கிட்டதட்ட திணிக்கும் தொனியில் பேச ஆரம்பிக்கின்றார்கள். கடவுள், மதம் போன்ற விஷயங்களைப் பேசுவதில் பெரும் பிரச்சனை என்னவென்று யோசித்தால், நாம் எப்பொழுது அதைப் பற்றி கூறினாலும் நமது தொனி நமது கருத்தை அடுத்தவர் மீது திணிப்பதாகவே தோன்றுகிறது. அடுத்தவரிடம் இருந்து நமது கருத்துக்கான பிரதியை எதிர்பார்க்கும் வகையில் நாம் அவர்கள் நம்பிக்கையில் கை வைப்பதாகத் தெரிகிறது. அதிலும் அதற்கு பதில் சொல்பவர்களைப் படிக்கும் போது அவர்கள் சிறிது சண்டை செய்வது போலவே 'தோன்றும்'. ஏனென்றால் அவரவருக்கு அவரவர் நம்பிக்கையில் பெரும் நம்பிக்கை.
கடவுளை நம்புவர்கள்தான் நல்லா சண்டை போடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு நிகராக சண்டை போடுகிறார்கள் கடவுள் மறுப்பாளர்கள். அதுவும் தமிழ் நாட்டு கடவுள் மறுப்பாளர்களின் 'கொள்கை பிடிப்பு' புல்லரிக்கிறது. நம்ம ஊரில் கடவுள் மறுப்பிற்கு பெயர் போனவர்கள் திராவிடக் கட்சியினர். அவர்களில் புகழ் பெற்ற தலைவரை எடுத்துக் கொள்வோம். அவர் கடவுளை மறுக்கிறார். மிக நல்லது. இந்து மதத்தையும் அதன் மூட நம்பிக்கைகளையும் சாடுகிறார். சரிதான். ஆனால் எனக்கு குழப்பம் நேருவது எவ்விடத்தில் என்றால், அவர் ரம்ஜானுக்கு கஞ்சி குடிப்பதும், கிருஸ்துமஸுக்கு கிருஸ்துவப் பாடல்கள் கேட்பதும் எவ்வகையில் சேத்தி எனத் தெரியவில்லை. அதற்கு அவருக்கு உரிமை இருந்தாலும், கடவுள் மறுப்பு இங்கே எங்கு வெளிப்படுகிறது என புரிபடவில்லை. ஒருவேளை இந்து மதம் பல மதங்களின் கலவை என்பதால் அதற்கு மத நம்பிக்கை அற்றவனைப் பற்றி பேச நேரமில்லாமல் போனதும், மைனாரிட்டி ஓட்டென்று வந்தால் கடவுள் என்ன, சாத்தானென்ன, வா, 60:40 வைத்துக் கொள்ளலாம் என்பதோ காரணமாக இருக்கலாம்.
கடவுள் எனப் பேசும் போது மதம் என்ற ஒன்று உள்ளே வந்து விழுகிறது. இது என்ன சொல்லுகிறது? ஆணுறை பயன்படுத்தாதே, மின்விசிறி பயன்படுத்து, புற்று நோயை குணப்படுத்து, ஆனால் விஞ்ஞானத்தை நம்பாதே. 2000 வருடங்கள் முன்னாலே அவர் இதைக் கூறினார், நடந்தது என்பதை நம்புகிறீர்களா? என்னைக் கேட்டால் நம்பும் போது நம்புகிறேன். யோசித்து பார்த்தால், கஷ்டம். அதிலும் இப்பொழுது வரும் விஞ்ஞான விஷயங்களை பைபிளில்அப்பொழுதே கூறியிருக்கிறார்கள் எனும் பொழுது, அடடா, அவங்கள விட்டுட்டு தேவையில்லாம கலிலியோவையும், கோபர்நிகஸையுமல்லவா கொன்னுட்டோம் எனத் தோன்றுகிறது.
மத அடிப்படைவாதத்தின் அர்த்தமும் என் சிறுவயது மூளைக்கு விளங்க மாட்டேங்கிறது. கருத்தடை, உயிர்தொழில் நுட்பவியல், காண்டோம், மிக்கி மவுஸ் இதெல்லாம் ஏன் மதங்களிடம் இந்தப் பாடுபடுகிறது எனத் தெரியவில்லை. கேட்டால், கடவுள் மீது அநியாயமாக பழி போடுகிறார்கள். ஒரு சின்ன குட்டி கதை. ஒரு பாதிரியார் புதிதாக சர்ச்சில் சேருகிறார். பின்னால் அவருக்கு கல்யாணமும் நடக்கிறது. சம்பள கூட்டப்படுகிறது. குழந்தை பிறக்கிறது, கூடுதல் சம்பளம். இரண்டாவது பிறக்கிறது, மீண்டும் கூட்டப் படுகிறது. இப்படியே குடும்ப உறூப்பினர் எண்ணிக்கையும் சம்பளமும் கூடிக் கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் சர்ச் ஒன்று கூடி ஒரு கூட்டம் நடத்தி அவரை எதிர்கொள்ளுகிறது. அதற்கு அவர், "குழந்தை மழையைப் போல கடவுள் கொடுத்த பரிசு. அதை மறுக்க நாம் யார்?" என்கிறார். கூட்டத்திலிருந்த ஒருவன் எழுந்து, "சாமி, கடவுள் கொடுத்த மழைதான். ஆனால் செருப்பும், குடையும் பயன்படுத்தறதில்ல? அதுமாதிரிதான். பாத்து இருந்துகங்க சாமி." என்றான்.
இன்னும் நான் கடவுளைப் பற்றி நான் பேசவில்லை என்று நினைக்கிறேன். இதுவரைப் பேசியது கடவுள் என நாம் பின்பற்றும் மதங்களின் நம்பிக்கைகள்.
இவ்வளவு பேச ஆரம்பித்த பிறகு நான் எதை நம்புகிறேன். கடவுளை நம்புவதா, கடவுளை நம்புவதை மறுப்பதை நம்புவதா என யோசிக்கும் பொழுது, இரண்டும் விவகாரமான விஷயம், இரண்டுமே வேண்டாமென நினைக்கிறேன். நம்புவதற்கென்ன? நம்புகிறேன். ஆனால் என் கேள்விகளுக்கு கடவுளிடம் இடமிருக்கிறதென்றாலும் மதங்களிடம் இடமில்லை. தமிழில் தெரியவில்லை. ஆங்கிலத்தில் சொல்கிறேன். Im an Agnostic. Agnostic? அடுத்த பதிவுல.
-தொடரும்
பின்குறிப்பு - ஒவ்வொருவருக்கு ஒரு நம்பிக்கை. நான் என்னைப் பற்றி சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். இதை நான் யாரையும் ஏற்கச் சொல்லவில்லை. உங்களுக்கு சுவையாகப் பட்டால் படிக்கலாம் என்கிறேன். இது ஓடும் எண்ண ஓட்டங்களும், சில சேகரித்த விஷயங்களுமே. அதப் படிச்சியா, இதப் படிச்சயான்னு கேக்கும் முன்னே அடுத்த பாகத்த பாத்து என்ன சொல்ல வருகிறேன்னு தெரிஞ்சுக்கோங்க.
வரவர நான் ரொம்ப பிஸி ஆகிட்டு வர்றேன். பரிட்சைகள் நெருங்குது. படிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. அதானால பதிவு எழுதுவது கொஞ்சம் கஷ்டம். அது எழுதும் நேரத்துல என்ன ஆயிரம் பேரு தேர்வுல முந்திகிட்டு இருப்பான். அதனால், நான் எழுதுவது நிறுத்திடலாம்னு......... சொல்லல. கிட்டதட்ட நிறுத்திக்கிறேன். ஆனா இடைவெளியில உங்களுக்கு டார்ச்சர் கொடுக்கனுமேன்னு யோசிச்சிக்கிட்டே இருந்தேன். கரப்பான் பூச்சிய பாத்தேனே, அதே மேஜையில் உட்கார்ந்து படிக்கும் முயற்சியில் புத்தகத்தில் நட்சத்திரங்களாக கிறுக்கிக் கொண்டிருந்த போது கண நேரத்தில் தோன்றியது இந்த யோசனை. மடமட வென்று அங்கயே உட்கார்ந்து செல்லில் ஒரு கவிதைய வடிச்சிட்டேன். எல்லாரும் அதை வடியாம, சிந்தாம, சிதறாம, பதறாம பருகி மகிழுங்கள். ஆனால், ஆங்கிலத்தில் எழுதி இருக்கேன். அப்பதான் என்ன எழுதினாலும் தப்பு ரொம்ப கண்டுபிடிக்க மாட்டாங்க. பல பேரு படிக்காம கூட நல்லாருக்குனு சொல்லுவாங்க. அதனால கோச்சிக்காம இங்கே(கிளிக்குங்க.. கிளிக்காம போறீங்க?) வந்து படிச்சிடுங்க!
ஆண்டவா இன்னும் இவ்வளவு இருக்கா படிக்க?
நேற்றைய நினைவுகள்....
Filed under அடிபட்டது , by Prabhu on 10/22/2009 11:33:00 AM
16
நேற்றும் வழக்கம் போல படித்துக் கொண்டிருந்தேன், வேறு வழியில்லாத காரணத்தால். நான் படிக்க பயன்படுத்தும் மேஜை ஜன்னலின் அடியில் இருக்கும். காலையில் வெயிலும், இரவில் காற்றும்(இருந்தால்...) வர வசதியாக அந்த அமைப்பு எனக் கூறினாலும் எனது வித்தியாசமான பழக்கத்திற்காக அப்படி அமைத்திருந்தேன் என் அறையை. படிக்கும் போது சோர்வடைந்தால் கால்களை மேஜைக்கடியில் நன்றாக நீட்டி, நாற்காலியில் உடம்பை சரித்துக் கொண்டு, கழுத்தை நாற்காலி முதுகின் விளிம்பில் முட்டு கொடுத்து மோட்டு வளையை பார்த்துக் கொண்டிருப்பேன். அஜய் அப்ப செல்லில் அழைத்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் எனக் கேட்டால், விட்டத்த(விட்டத இல்ல) பாத்துட்டிருக்கேன்னு சொல்வேன். அவனுக்கு புரியும். அப்படிஓய்வாக உட்கார்ந்து நம் எண்ணங்கள் எங்கெங்கல்லாம் ஓடுதுன்னு பார்கிற சுகம் இருக்கே....ஹும்.... வார்த்தை இல்லை. கொஞ்ச நேரத்தில மூளை ரிசார்ஜ் ஆகி நேரமானதை உணர்த்தும் போது நிமிர்ந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பிப்பேன்.
நேற்றும் அவ்வாறே ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கையில் நான் சன்னலிற்கு சிறிது மேலே பார்வையை செலுத்திக் கொண்டிருந்தாலும், பார்வையின் எல்லைக்குள் இருந்தாலும், அது என் பார்வை குவியிலின் வெளியே (Out of focus) இருந்திருக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து தான் கண்ணில் தட்டுபட்டது. கறுப்பாக நார் போன்ற இரண்டு நீட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் என் முகத்தின் அடியில் நம்பியார் போல் சிவப்பு விளக்கு எரியாத குறைதான். நான் சொன்னதில் இருந்து அது கரப்பான் பூச்சி எனக் கண்டுபிடித்திருந்தால் நீங்கள் 'யார் மனசுல யாரு' நடத்த போகலாம். என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஆனால் எங்க வீட்டுல கரப்பானை 'மிளகா பூச்சி'னு கூட சொல்லுவாங்க. பார்க்க மிளகாய் போல இருப்பதால் இருக்கலாம்.
அதை அடிக்க விளக்குமாறை எடுக்க கிளம்பிய பொழுது மதன் கூறியது நினைவுக்கு வந்தது, கரப்பான் பூச்சி தான் பயப்படும் உயிராகவும், அதுவும் பறக்கும் வகை என்றால் துண்டை தூக்கிக் கொண்டு கத்தி சுற்ற வைத்து விடும் என கூறியி்ருக்கிறார். விளக்குமாறை எடுத்து அடிக்குமுன் எந்த கோணத்தில் அடிக்கலாம் என கோணம் பார்த்த பொழுது கூட அந்த பூச்சி அசையவில்லை. என்ன நெஞ்சழுத்தம்! அடித்து துவம்சம் செய்து வெளியே தூக்கி எறிய முடிவு செய்தேன்.
அடித்த பொழுது சனியன் எப்படியோ தப்பியது மட்டுமல்லாமல் பறந்து வேற காட்டியது. அது சரி, அணு குண்டு போட்டாலும் தப்பி பிழைத்து மீசையை முறுக்கிவிட்டுக் கொள்ளும் இனமாச்சே! கணிணி மேஜைக்கடியில் இருக்கமென சென்றால் யுபிஎஸ் அடியிலிருந்து வெளியேறி வித்தை காட்டி விட்டு தப்பித்தது. ஒரு வழியாக அதை ஒரு முட்டு சந்தில் மடக்கி அடித்துவிட்டு அதை அவ்விடமிருந்து அகற்றும் பொழுது ஜங்கென்று குதித்து ஓடியது. கொலை வெறியோடு மேலும் மூணு போட்டதில் ஒரு கால் பிய்ந்து விழுந்தது. அப்படியும் ஆட்டம் குறைய வில்லை. அது ஒரு உண்மையான survivalist. தலையை எடுத்தாலும் முண்டமாக 13 நாள் வாழும். இதற்கு மேலும் 20 அடி தேவைப் பட்டது அதன் கதையை முடிக்க. கடந்த 25 கோடி வருஷமா கொஞ்சம் கூட மாறாமல் இருக்கும் ஒரே உயிரினம் கரப்பான் தானாம். ஒரு முழுமையான உயிரினமாக இருக்கும் போல. பரிமாண வளர்ச்சி தேவைப்படவில்லையே! அடித்து கொன்று வெளியே தூக்கி எரியும் போது ஏனோ சம்பந்தம் இல்லாமல் 'உன்னைப் போல் ஒருவன்' நினைவுக்கு வந்தது :).
பிறகு அஜய் வர, 'முருகா மன்னச்சிடு செய்யப் போற இந்தக் கொலைக்கு', என கூறிவிட்டு சிக்கன் க்ரில் சாப்பிட கிளம்பினேன். நேற்று சஷ்டி.
டாப்பு அடிக்கலாம் - 4
Filed under டாப்பு , by Prabhu on 10/13/2009 01:02:00 PM
25
அலாதீன் நினைவிருக்கா? அந்த விளக்கு பிடிச்சுக்கிட்டு திரியுற பையன்தான். அந்த கதைய இப்போ இந்தியில மாடர்ன் வெர்ஷன்ல எடுக்குறாங்க! ரிதேஷ் தேஷ்முக்(பழைய மகாராஷ்டிர முதல்வர் மகன்) தான் அலாதீன். பூதம் யாராக இருக்கப் போகுது, நம்ம Big B தான். ரொம்ப் பொருத்தம் தான் நினைக்கிறேன். வேற யாரு இந்த பாத்திரத்துக்கு இன்ஸ்டண்டா கிடைக்க போறாங்க? ஒரு நல்ல contemperory, stylish, rocking genie வேணும் என தான் எல்லாரும் நினைப்பாங்க இல்லையா? Right choice.
-------------------------------------------------------------------------------------------------
கொரிய படங்கள் எல்லாம் ஒரு மாதிரியாக நன்றாக இருக்கும் என்று என் நண்பன் கூறுவான். சின்ன பசங்க டுர்ர்ர்ர்ன்னு வண்டி ஓட்டுற மாதிரி ஒரு பேரு இருக்குமே....ஆங்.... இயக்குனர், கிம் டு கிக், (பாம்பே டூ கோவா மாதிரி இருக்கு பேரு!), அவரோட படம். ஒரு ஓடையின் ஓட்டம் போல் சலனம் இல்லாமல் சன்னமாக ஓடும்னு சொல்லுவான். ஆனா, ஒரு படத்துல தவளைய நிதானமா கொன்னு உருளைக்கிழங்கு போல தோலை உரிச்சு சாப்பிடுறது மாதிரியான சீன் இருக்காம், கொஞ்சம் ரியலா, கொடூரமா, அமெரிக்காக்காரனே கட் செய்யுற அளவு. இது எல்லாம் ஏன் tabooவா இருக்கனும் என்கிற சென்ஸில எடுத்திருப்பதா சொல்லுவான் என் ஃபிரண்டு. ஏன் இந்தக் கொலவெறி?
-------------------------------------------------------------------------------------------------
அதை விடுங்க. நான் ரொம்ப காலமா பார்க்கனும் என்று நினைத்த 'My sassy girl' படத்தை பார்த்தே விட்டேன். சமீபத்தில் இப்படி நன்றாக சிரித்து பார்த்த ரொமாண்டிக் காமெடி இதுதான். அதுவும் CAT கலக்கத்தில் இருந்த என்னையே சிரிக்க வைத்துவிட்டதால் உங்களுக்கு செம ட்ரீட் தான். அந்த படத்தின் ஹீரோயின் தான் show stealer. அந்தப் பெண் கதாநாயகனை அடித்த அடி ஒவ்வொன்றும் இன்னும் என் கன்னங்களில் வலிக்கிறது. ஜூன் ஜி ஹ்யூன் ஏற்று நடித்திருக்கும் கதாநாயகி பாத்திரத்துக்கு பெயர் படத்தில் குறிப்பிடப்பட்டதாக நினைவில்லை. இன்னமும் கண்ணை மூடினால் நினைவுக்கும் வரும் கொரிய அழகி. முடிய கோதுகிற அழகுக்கே இன்னொரு தடவை படம் பார்க்கலாம்... ஹும்...
-------------------------------------------------------------------------------------------------
பதிவுலகில் பதிவுகளைப் படிக்கிறேன் என்ற பேரில் எனது ப்ளட் பிரஷரை 'பம்ப்' செய்து கொண்டிருக்கும் வேளையில் எனக்கு சட்டென்று தோன்றியது இந்த விஷயம். எங்க ஊர்க்காரரு விஜயகாந்த் பத்திதான். அவர பத்தி பேசுனா பெரிய ரீச் ஆகுமே. ஆனா அவர் படங்களுக்குள் இருக்குற குறியீட கண்டுபிடிச்ச முதல் ப்ளாக்கர் நான் தான். வாசிம் கான், அந்த கான், இந்த கான், பாப்கார்ன் எனவெல்லாம் வில்லன்களுக்கு பெயர் சூட்டி அவர்களை வானத்தில் பறந்து பறந்து சுழட்டி சுழட்டி அடிக்கும் அவரின் பின்னால் இருக்கும் அந்த மறைமுக எண்ணங்கள் என கட்டுடைத்த முதல் பதிவர் நான் தான். மி த ஃபர்ஸ்ட். Catக்கு படிக்கும் வேளையிலும் இந்த கேடுகெட்ட வேலை உனக்கு எதுக்கு என ஒரு நண்பன் கேட்கிறான். பாலாண்ணே கூல்! (இது ஹாலி பாலா காண்டில் இருந்தப்போ எழுதிய மேட்டர்)
-------------------------------------------------------------------------------------------------
குட்டி ஜான் பத்தி குட்டி ஜோக்
லிட்டில் ஜான் பத்தி ஏற்கனவே ஆங்கிலத்தில் போன டாப்பில் சொன்னேன், பயபுள்ள வெவகாரமான ஆள்னு. ஒரு நாள் கிளாஸில் கிருஸ்மஸ் பண்டிகை வருவதால் கடவுளைப் பத்தி சொல்லி க்ளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தாங்க டீச்சர். அப்ப கடவுள் எங்க இருக்காங்க எனக் குழந்தைகள் கிட்டயே கேட்டு புரியவைக்க முயற்சி செய்துகிட்டிருந்தாங்க. ஒவ்வொரு குழந்தையும் எழுந்திருச்சு தனக்கு தோணினதை சொல்லிக்கிட்டு இருந்துச்சு. 'கடவுள் ஆகாயத்துல இருக்காரு', 'கடவுள் என் இதயத்தில இருக்காரு', 'கடவுள் சொர்கத்துல இருக்காரு' என பல பதில்கள்; ஏன், ஒரு குழந்தை 'அஹம் பிரம்மாஸ்மி'ன்னு கூட சொல்லுச்சு. நம்ம ஜானாண்ட வந்தப்போ எந்திரிச்ச ஜான் சொன்னான், "கடவுள் எங்க வீட்டு பாத்ரூமில தான் இருக்காரு!". டீச்சரும், க்ளாஸும் அப்படியே மெரண்டு போயிருச்சு. மெல்ல திடமாக்கிட்டு எப்படி கண்ணா எனக் கேட்டாங்க. அதுக்கு அவன் சொன்னான், "எங்கப்பாதான் தினமும் காலையில எந்திரிச்சதும் நேரா பாத்ரூம் போய் கதவை டம் டம்னு தட்டி, 'அய்யோ கடவுளே, நீ இன்னும் உள்ள தான் இருக்கயா'ன்னு கத்துறாறே!"
-------------------------------------------------------------------------------------------------
நரமாமிச உண்ணிகள் இருக்குற காட்டுக்கு சென்று மூன்று இளைஞர்கள் மாட்டிக் கொண்டார்கள். அங்கே அவர்களை வைத்து கபாப், சுக்கா, க்ரில் என ஒரு மெனுவே ரெடியாக, அவர்கள் மூவரும் தலைவன் காலில் விழுந்து கெஞ்சுகிறார்கள். சரி, நீங்கள் மூணு பேரும் காட்டுக்குள் போய் ஏதாவது ஒரு வகை பழத்தை 10 எண்ணிக்கையில் கொண்டு வாருங்கள் என்றான் தலைவன். முதலாமவன் கொய்யாப் பழம் கொண்டு வந்தான். இதை உன் 'பின்'னால் திணிக்க வேண்டும்; பத்தையும் முடிக்கும் வரையிலும் எந்த வகையான உணர்ச்சியும் காட்டக் கூடாது, காட்டினால் அவன் கழுத்தில் ஃபிஷ்க்! அவனும் மூன்றை திணித்துவிட்டான். நாலாவது செல்லும் போது சிறிது வலியில் கத்திவிட அவனைத் தூக்கிட்டாங்க! இரண்டாமவன் செர்ரி பழங்களை கொண்டு வர அவனுக்கு அதே கட்டளை. இவனும் சின்ன பழம்தானே என செய்து கொண்டிக்கும் எட்டாவது முடியும் வேளையில் சிரித்து விடுகிறான். அவனும் ஃபிஷ்க்! சொர்கத்தில் முதல் ஆள் இரண்டாமவனிடம் கேட்டான், "ஒழுங்காதானே பண்ணிகிட்டிருந்த. என்ன கேடு வந்துச்சுன்னு சிரிச்ச?". அதற்கு இரண்டாமவன், " என்ன செய்ய? மூணாவது ஆளு அன்னாசி பழத்தோட வந்ததப் பாத்ததும் என்னால அடக்க முடியல" என்றானாம்.
நொடிப் பொழுதில்... (வெர்ஷன் V1.5)
Filed under சிறுகதை , நச்னு ஒரு கதை போட்டி , by Prabhu on 9/30/2009 02:06:00 PM
32
அன்றைய பொழுதின் கடைசி வகுப்பு முடிவதற்கு சிறிது நேரமிருக்கையில் பின் வரிசையிலிருந்து இளையராஜாவின், 'மேகம் கருக்குது..' முணுமுணுப்பு கேட்டது. அவன் அமைதியான வகுப்பின் கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டு பாட்டுகளை முணுமுணுப்பது முன்னிருக்கும் இரண்டு வரிசைகளில் மிகப் பிரபலம்.மழையை பார்த்த பிறகு பேராசிரியருக்கே நடத்த விருப்பமில்லாமல் ஏதோ இடது பக்க முன்னிருக்கை மாணவனிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். கண்டிப்பாக அவர் கூறிய நகைச்சுவைதான்; முதல் வரிசைக்காரர்கள் சிரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். இரண்டாவது மூன்றாவது வரிசைக்காரர்கள் அவர்களுக்குள்ளாக ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். நமக்கே ஒரு பொண்ணு சிக்காத சமயத்தில் இந்த வழுக்குப் பாறைக்கு எப்படி எம்.எஸ்.ஸி பொண்ணு சிக்கியது என்ற குழாயடி கதைகளாக இருக்கலாம். கன்னத்தில் கை வைத்து மழையை வேடிக்கை பார்த்த எனக்கு நிகழுலகத்தை விட கடந்த காலம் இனிக்க டைம் மிஷினை தட்டி விட்டது மூளை.
அதுவும் ஒரு மழை நாள் தான். இதே கல்லூரியில், ஒரு வருடம் முன்பு தான் அவளைப் பார்த்தேன் என்று நினைக்கிறேன். கல்லூரியின் நீண்ட ஸ்டிரைக்கிற்கு இரண்டு நாள் முன் என்று நினைவடுக்குகளில் பதிந்திருகிறது. எங்கள் கல்லூரியில் கடந்த நூற்றாண்டின் எச்சமாக ஒரு மூடப்பட்ட கிணறு உண்டு. அதனருகில் வைத்துதான் அவளை முதலில் பார்த்தேன். விதியோ சதியோ அதன் பிறகு வந்த இரண்டு நாட்களும் அவளை அதிகமாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு நாட்கள் என்னைக் கடந்து செல்லுகையில் நான் பார்த்த ஒருத்தி மனதில் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பதை உணர்ந்தது அன்றுதான். அவளின் சாயல்... அந்த நினைப்பே எனக்கு ரத்தம் உறைய வைப்பதாக இருந்தது.
பிறகு ஸ்டிரைக் வந்து நான் ரத்த உறைய அடி வாங்கியதும், கல்லூரி தனது வரலாற்றில் மிகப்பெரிய ஸ்டிரைக்கிலிருந்ததும் வரலாறு. பிறகு நான் அவளை ஒரு மாதமாக கல்லூரியில் அவளைக் காணவில்லை. பின் எதிர்பாராத ஒரு நாள் கல்லூரி சிற்றாலயத்தின் வாசலில் வைத்து பார்த்த உடன் என் நுரையீரலில் காற்றை நிரப்பி அட்ரெனலின் நடத்திய விளையாட்டை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவளைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதுமென்று தோன்றிய நாட்கள். அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் இன்னொரு முகமும் வந்து என் மனதை பிசைவதையும் தவிர்க்க இயலவில்லை. ஒருவேளை இவளை எனக்கு முதல் பார்வையில் ஈர்த்தும் கூட இவளுள் நான் கண்ட அவளே காரணமாக இருக்கலாம்.
இது என் பார்வையின் கோளாறாக இருக்க வேண்டும். இல்லையெனில் உண்மையாக இருவருக்கும் ஒற்றுமைகள் உண்டு. இருவரும் சராசரி உயரத்திற்கு கம்மி. ஆனால் அதை நாம் கவனிக்க இயலாத அளவிற்கு அழகு. பார்த்தவுடன் அதிர வைக்கும் அழகு இல்லையானாலும் கடக்கும் போது கவனிக்கத் தவறாத முக அழகு. எளிமையான உடையே அணியும் வழக்கம். ஆனால் ஒரு கல்லூரி விழா இரவில் வெள்ளை உடையில் இருட்டின் நடுவே மெல்ல மெழுகுவர்த்தியுடன் அவள் வந்த பொழுது பாரதிராஜா, மணி ரத்னம் படங்களில் வரும் கதாநாயகி போல் தேவதையாக தெரிந்தாள். இன்னும் அதை நினைக்கையில் எனக்கு ஒருவித மயக்கமே வருகிறது.
இவளை பார்த்த உடனே எனக்கு எதுவும் அதே மயக்கத்தில் பொங்கி வழிந்துவிடவில்லை. ஆனால் ஒரு மாதம் பிறகு பார்த்த உடன் ஏற்பட்ட சந்தோஷம்தான் எனக்கு அவளின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. அவள் பெயர் அனு என பின்னர் அவள் சீனியர் கூற அறிந்து கொண்டேன்கடவுள் ஒரு மோசமான செக்ரட்டரியாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் அதிக அளவில் சந்திப்புகளை ஏற்படுத்தியவர், அவை தேவைப்படும் சமயத்தில் சந்திப்பதற்கு எப்படியெல்லாம் தடை ஏற்பட வேண்டுமோ அதை சரியாக செய்வார். ஒரு நாள் மழைக்கு அவள் நான் இருந்த ஜேம்ஸ் ஹாலிலேயே ஒதுங்கினாள். நான் அவளைப் பார்ப்பது அவளுக்கு தெரிந்துதான் இருக்க வேண்டும். என்னை பார்த்ததும் அவள் வேகம் குறைந்தது. பிரபு பின்னால் இருந்து சுரண்டினான். எனக்கு அது தேவைப்பட வில்லை. நேராக சென்று கேட்டேவிட்டேன், "நீ அனு தான?"
-------------------------------------------------------------------------------------------------
இப்பொழுது மழையின் தீவிரம் சற்றே குறைந்திருந்தது. எங்கள் வகுப்பின் 'பின்'னணி பாடகர்களின் ரஹ்மானின் 'மர்லின் மன்றோ', பாடலில் இப்பொழுது பாதி வகுப்பு கலந்திருந்தது. நான் பேண்ட் பைகளுக்குள் கைகளை நுழைந்துக் கொண்டு மெல்ல நடக்கையில் பிரபுவும் சேர்ந்து கொண்டான். மீண்டும் மழை அதிகரிக்கவே நாங்கள் கேண்டினுள் ஒதுங்க வேண்டியதாயிற்று. மழையின் பொழுது காபி குடிப்பது எனக்கு பிடிக்குமென தெரியுமென்பதால் பிரபு காபி வாங்கினான். கையிலிருந்த காபியிலிருந்து ஆவி பறந்து கொண்டிருந்தது.
ப்ரியாவுக்கும் ஆவி பறக்க காபி குடிப்பது பிடிக்கும். எனக்கு சூடென்றாலே ஆகாது. ஆனால் அவளுக்கோ எதுவானாலும் சூடு குறையக் கூடாது. காபியாக இருந்தாலும் செய்யவேண்டிய காரியமாக இருந்தாலும். என்னை விட ஒரு வயது இளையவள். ஆனால் பெயர் சொல்லித்தான் அழைப்பாள்; ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான். நான் அவளை கிண்டல் செய்யும் பொழுது தலையை ஒரு பக்கமாக சாய்த்து புருவங்களை உயர்த்தி என்னை நிமிர்ந்து பார்த்து சிரிக்கும் அவளை நான் இன்னும் மறந்தபாடில்லை.
இவள் மறக்கக்கூடிய முகமா என்ன? அனுவைக் காணும் போது எனக்கு தோணுவதை சொன்னால் என்ன நினைப்பாள் எனத் தெரியவில்லை. உன்னைப் பார்த்தால் இன்னொருவள் நினைவிற்கு வருகிறாள், அதனால் தான் உன்னிடம் பேசுகிறேன் என்றால் எந்தப் பெண்ணுக்கும் பிடிக்குமா? இவள் எனக்கு ஜூனியர் என்ற போதிலும் என் பெயரை சொல்லிதான் அழைக்கிறாள். எவ்வளவு பெரிய ஜோக் என்றாலும் முதலில் புருவம் சுருக்கி பின்பு நிதானமாக உதடுகளை பிரித்து சிரிக்கும் அழகிற்கு...ம்ம்ம்.... மேலெதுவும் சொல்வதற்கில்லை. அனுவேஒரு நாள் அவளது எண்ணை கொடுத்தாள். இப்பொழுது கைபேசியில் தொடர்கிறது.
கைபேசி அப்பொழுதுதான் வாங்கியிருந்தேன். ஒரே பேருந்தில் ப்ரியாவும் நானும் வெவ்வேறு இடங்களில் உட்கார்ந்து ஒரே கல்லூரிக்கு செல்லும்போது பொழுதுபோகாமல் விளையாட்டுக்கு அவள் என்னை திட்டி அனுப்பும் குறுஞ் செய்திகள் வந்து சேரும் சத்தத்திற்கு காத்திருந்த காலங்களின் சுவடுகள் கூட இன்னும் காயவில்லை. என் தலை முடியுள் உழுத அவள் விரல்களின் ஸ்ப்ரிசம் தீர வில்லை. அவள் வாசமா இல்லை அவள் போட்டுக் கொண்ட பவுடர் வாசமா என என்னால் கண்டறியப்படாத வாசம் இன்னும் நாசிகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது.
நாசியை நிரப்பும் காபியின் மணம் அமைத்துக் கொடுத்த எண்ண வெளியில் உலவிக் கொண்டிருந்த நான், பிரபு முழங்கை முதுகில் இடிக்க விழித்தேன். காற்றுடன் கலந்த புயல் மழையாதலால் குடையினால் சமாளிக்க முடியாமல் முகத்தில் தெறிக்கும் துளிகளுக்கு சிறிது எரிச்சலுடன் சுருக்கிய முகத்தை பதிலாக அளித்து உள்ளே வந்தவள் அனு. உள்ளே வந்தவள் குடையினை மடக்கும் வேளையில் என்னைப் பார்த்தவுடன் அவள் முகச் சுருக்கங்கள் ஒரே ஒரு வினாடி விரிந்து தனது ஆச்சரியத்தைத் தெரிவித்துவிட்டு திரும்பின. சைகை செய்தேன், 'காபி வேணுமா?'. உதட்டை சுழித்து வேண்டாமென்றாள். நல்ல வேளை கேட்கவில்லை; நான் ஏற்கனவே அதை குடித்து விட்டேன்.
அவள் குடுத்த பவண்டோவைக் குடித்து முடித்த நான் அவளுக்கு என்ன வேண்டும் எனக் கேட்க, பார்ட்டி என்னது, பரிசுதான் உன்னது என்றாள். சரி, பரிசுதான் என்ன வேண்டுமென்று கேட்டதற்கு, ஒரு நல்ல பரிசை யோசித்து தர துப்பில்லையா என்றாள். அப்ப, பத்தோடு பதினொன்னாக ஒரு பரிசளிக்காமல், ஏதாவது ஸ்பெஷலாக கொடு என்றாள். சிறிது யோசித்த நான் முதலில் தயங்கிய நான் பிறகு எழுந்து அவளருகில் சென்று அவள் நாடியை பிடித்து கன்னத்தில் முத்தமிட்டேன். அவளோ சிரித்துக் கொண்டே, இதை அப்பா குடுத்துவிட்டார், நீ என்ன கொடுக்கப் போகிறாயெனக் கேட்டாள். எனது பட்ஜெட்டுக்கு இதுதான் குடுக்க முடியும் என்றதற்கு பெரிய கஞ்சனடா நீ என்றாள். 'நல்ல வேளை நிறைய பரிசுன்னு சொல்லிருந்தா பட்ஜெட்ட காரணம் காட்டி என் கன்னத்தில மழை பெய்ஞ்ச மாதிரி ஆக்கியிருப்ப ',என சந்தோஷப் பட்டுக் கொண்டாள்.
மழை கிட்டத்தட்ட நின்றுவிட்ட சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்ட அவள் குடையுடன் கிளம்பினாள். பின்னாலிருந்த பிரபு என்னையும் அனுப்பி வைத்தான். இன்றாவது சொல்லிவிடு மனதிலிருப்பதை என்று. அவளுடனே சிறிது தூரத்தில் சென்று கொண்டிருந்தேன்.வாயிலைத் தொடுவதற்குள் மீண்டும் மழை பிடிக்க ஒரு மரத்தடியில் ஒதுங்க வேண்டியதாயிற்று. ஆனால் அந்த மரத்திலோ அம்மா ரவை சலிக்கும் உபகரணம் போல ஆயிரம் ஓட்டைகள், குடைக்குள் மழை. அவள் என்னைப் பார்த்த பார்வை அடுத்து அவள் குடைக்குள் அழைப்பாள் எனத் தோன்றியது. அழைத்தாலும் போக மனமில்லை. அழைக்கவும் செய்தாள். மெல்ல அருகில் சென்றவன், "ரொம்ப நாளா உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்னு இருந்தேன். தப்பா நினச்சுக்கக் கூடாது?" என்றேன். தயக்கமாக ,"சொல்லு" என்றாள். ஆனால் அவள் உதட்டோரப் புன்னகையை என்னால் படிக்க முடிந்தது. "எனக்கு தங்கச்சி ஒருத்தி இருந்தா உன்ன மாதிரி...", எனத் தொடங்கும் போதே அவள் பார்வையில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமா, இல்லை இவனைப் போல் கேனையன் உண்டா என கேட்கிறதா எனப் புரியாமல் நிறுத்திக் கொண்டு அந்த மழையில் விடு விடுவென நடக்க்த் தொடங்கினேன்.
Moral 1 - நான் ரொம்ப நல்லவன்
Moral 2 - நொடிப் பொழுதில் வாழ்க்கை மாறும் போது நாம ஏன் நிமிஷத்த நம்பனும்.... டொகொமோ... டொகொமோ.. டொ கொ மோஓஓஓஒ.....
பின் குறிப்பு - எனக்கு தங்கச்சியே கிடையாது
டிஸ்கி - எப்படி ஓ ஹென்றி மாதிரி நச்சுன்னு ஒரு ட்விஸ்ட வச்சோமா? சர்வேசன் ஒரு போட்டி வச்சிருக்காராம். முடிவுல O'Henry கணக்கா நச்சுனு ஒரு முடிவு வச்சு எழுதனுமாம். இது ஓக்கேவா.... இல்ல இன்னொன்னு நச் நச்சுனு எழுதிடுவோமா?
மை ப்ளேலிஸ்ட் (ரஹ்மான்)
Filed under Music , இசை , by Prabhu on 9/30/2009 12:21:00 AM
9
ம்ம்ம்.... என்னோட ப்ளேலிஸ்ட பகிர்ந்துக்குற சமயம் வந்திருச்சுன்னு நினைக்கிறேன். நம்மளோட ப்ளேலிஸ்ட் பொதுவா நம்மை அல்லது நமது ரசனைய படம்பிடித்துக் காட்டுமென நினைக்கிறேன். இது ஒரு சில வாரங்களுக்கு முன்னடி பதிவிட நினைத்த விஷயம். என் ப்ளேலிஸ்ட் எப்பவும் ஒரு குழப்படியான விஷயமாத்தான் இருக்கும். இந்தி, தமிழ், ஆங்கிலம் போதாதுன்னு இப்போ என்னவெனத் தெரியாமலே எவனோ கொடுத்த அராபிக் கூட கேட்டுக்கிட்டு இருக்கேன். பாட்ல்களும் புதுசு, பழசு, பாப், ராப் என ஒரு வகையாக இல்லாமல் கலப்படமா இருக்கும்.
எப்பொழுதும் மாற்றம் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கும் எனது ப்ளேலிஸ்டை கடந்த ஏழு, எட்டு மாதங்களாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது Delhi-6, Dev-D படப் பாடல்களே! இரண்டும் மிக வித்தியாசமான ஆலப்ங்கள். சான்ஸே கிடையாது! நான் இதை எழுத நினைத்த பொழுது புதிதாக வந்திருந்த A.R.Rehaman இசை அமைத்திருந்த ஹிந்தி பட ஆல்பமான 'Blue' பத்தி சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் அதற்கு முன் எங்க தலைவரின் ஆல்பம் ஒன்று வெளியாகி விட்டது! கண்டிப்பா வேட்டைக்காரன் இல்லீங்க! அதை கேட்க இன்னும் மனசு வரலை. எல்லாம் ஒரு பாட்டு மிர்ச்சியில் கேட்ட எஃபெக்ட்! நான் கூற வந்தது, ஏ.ஆர்.ரஹ்மானின் அடுத்த ஹாலிவுட் படைப்பான 'Couples Retreat' படத்தின் Sound track ரிலீஸ் பற்றித் தான். கேள்விபட்ட மறுநிமிடம் பதிவிறக்கி கேட்டுட்டோம்ல!
நான் ஏற்கனவே இட்ட இந்த பதிவில் கூறியிருப்பதைப் போன்று நான் சிறுவயது முதல் ரஹ்மான் ரசிகன் என்பது நாடறிந்த ஒன்று! (நாங்களும் செலிபிரிட்டி ஆவோம்ல!). 'Couples Retreat' official release டிஸ்க் வடிவில் வரவில்லையெனினும் நெட்டில் படத்தின் கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான Vince vaughn தனி வலைதளத்தில் ரிலீஸ் செய்ய அதை உருவி வலைதளங்களில் எல்லாரும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வடிவில் கிடைக்கச் செய்திருக்கிறார்கள் நம் வலையுலக கர்ணர்கள்!
ஓகே, இப்ப ஆல்பத்த கவனிப்போம்!
1.Sajna Sajna Re - ஹிந்திப் பாட்டு என நினச்சிராதீங்க! முதல் வார்த்தை மட்டும்தான் ஹிந்தி. இந்தப் பாடலை Vince Vaughn னே பாடியிருப்பதாக சொல்லியிருக்காங்க. இவரை 'Old School', 'The Lost World: Jurassic park'போன்ற படங்களில் பாத்திருப்பீங்க! நல்ல அழகான காதல் வரிகளை கொண்ட இந்த பாட்டு ஒரு இதமான அனுபவம். ஒரு கட்டத்தில் வயலின்களும் சேர்ந்து கொண்டு அந்த பாட்டை உச்சத்தில் சேர்க்கின்றன!
3.Jason and cynthia suite - வயலின் மற்றும் இன்னபிற வாத்தியங்களுடன் மெல்ல ஆரம்பித்து உச்சத்திற்கு சென்று ஒரு பிரம்மாண்டத்தை நம் மனக்கண்ணில் காட்டி டடான்ன்ன்.... என முடிய்கிறது என நினைக்கும் பொழுது புல்லாங்குழல் துவங்கி செல்ல அதன் பின்னே மற்ற வாத்தியங்கள் மெல்ல சேர்ந்து கொள்ள மீண்டும் அதே ட்யூன் அழகாக உருவெடுக்கிறது.
4.Nana - ஸ்பானிஷ் ட்யூனில் செல்லும் இந்த பாட்டு நம்மை ஆட வைப்பது நிச்சயம்! Blaaze மற்ற ராப்பர்களுடன் சேர்ந்து இந்த ஸ்பானிஷ் இசை, ஸிந்தடிக் டிரம்களின் நடுவே தனது வரிகளை பாடியுள்ளார். ஒரு கார்னிவல் எஃபெக்ட். இந்தப் பாடலின் இடையில் வரும் சின்னப் பையனின் குரல் ரஹ்மானின் மகன் அலிமின் குரல் என அறியமுடிகிறது. பிண்ணனிப் பாடகனாக ஆசையாம்! அதற்கென்ன, ஆகட்டும்!
5.Tour of Villas - sajna பாடலின் இன்ஸ்ட்ருமெண்டல் என்று பொதுவாக சொன்னால் இதற்கு நியாயம் செய்துவிட முடியாது. அதற்கு ஒரு ஆர்கெஸ்ட்ரல் வடிவத்திக் கொடுத்து அதில் cymbals போன்ற அடிக்கும்(percussion ஹி..ஹி..) வாத்தியங்களை பயன்படுத்தியுள்ளார். இடையில் புல்லாங்குழல் வந்து நம்மை அவ்வப்போது வருடிவிட்டு செல்கிறது.
6.Meeting Marcel - இது என்ன வகை என்று என் சிற்றறிவுக்கு எட்டாத்தால், நான் ஆராய்ந்ததில் தெரிந்ததை கூறுகிறேன். இது கொஞ்சம் spiritual மூடில் இருக்கிறது.
பிறகு உயர்ந்து வயலினுடன் இணைந்து ஆர்கெஸ்டரலாக மாறுகிறது. நமக்கு கொஞ்சம் பழக்கப்பட்டால்தான் பிடிக்கும்.
7.Itinerary - இது பிரம்மாண்டமான ஆர்கெஸ்ட்ரல் இசை. இதில் meeting marcelலின் தடங்களைக் காண் இயலுகிறது. வயலின் இழுக்கும் போது நம்மையும் உள்ளே இழுத்துக் கொண்டு செல்கிறது.
8.Undress - இது மிகவும் இந்திய சாயலான இசை. சித்தாருடன் ஆர்ம்பிக்கிறது கடமா அல்லது மிருதங்கமா எனப் புரியாமல் நான் யோசித்துக் கொண்டிருக்கிற வேளையில் அந்த இரண்டில் ஏதோ ஒன்று இந்த ஒன்றரை நிமிட இசையை முழுவதுமாக ஆக்கரமித்துக் கொள்கிறது. இது எப்படி அந்த ஹாலிவுட் படத்துடன் ஒத்துப்போகப் போகிறது என திரையில் காண ஆவலாக இருக்கிறது.
9.Sharks - இது கொஞ்சம் தீவிரமான வேகமான வயலினிசை. இதில் ஒரு ஆச்சரியம், உச்சக்கட்டம், வேகம், கொந்தளிப்பு போன்றவற்றிற்கான தடங்கள் இருக்கிறது. இறுதியில் ரஹ்மானின் குரல் கேட்க இயலுகிறது. இது ரஹ்மான் சாயல் பிண்ணனி இசையே!
10.Luau - படத்தின் இன்னொரு இசை அமைப்பாளரான John O’Brienனின் ஒரே சவுண்ட் ட்ராக் படைப்பு. ஹவாய் ஸ்டைலில் இருக்கிறது. கிடாரின் இசையும் காங்கோ டிரம்களும் ஒரு ஃபெஸ்டிவ் மூட் கொண்டு வருகின்றன. ஒரு நல்ல country (அவுங்க நாட்டுப்புறம் தான்!) இசை போன்ற உணர்வு. கேட்கும் போதே உட்கார்ந்திருந்தாலும் உடலை குலுக்கி ஆட வைக்கின்றது டிரம்களின் இசை.
11.Salvadore - ஸ்பானிஷ் கிடாருடன் ஆரம்பிக்கும் போது 'என் சுவாசக் காற்றே' படத்தில் வரும் 'ஜும்பலக்கா' பாடலின் ஆரம்பம் போன்றே இருக்கிறது. கைலாஷ் கெர்ரின் குரல் எனக் கூறப் படுகிறது. நன்றாகவே இருக்கிறது.
12.Intervention -இதுவும் சிம்பொனி வகை ஆர்கெஸ்டரல் இசையே. ரஹ்மானின் குரல் இதில் பதிவாகியிருக்கிறது. மிக அருமையாக உச்சத்திற்கும் செல்லும் நேரத்தில் ரஹ்மானின் ஹை பிட்ச் குரல் வருவதுடன் மென்மையான இடங்களில் வரும் ஹம்மிங் அருமை.
13.The waterfall - இது கண்டிப்பாக காட்சியமைப்பில் ஒன்றிய இசை. ஒரு குறிப்பிட்ட சிச்சுவேஷனுக்காக அருமையாக இசைக்கப் பட்டிருக்கிறது.
14. Jason and Cynthia - piano theme - 'Jason and cynthia suite' இசையின் பியானோ வெர்ஷனே இந்தப் இசை. கொஞ்சம் கூட ஆர்ப்பரிக்காமல் மெல்லிதான வயலின் பிண்ணனியில் சிறிது சிறிதாக தயங்கி தயங்கி வருவதைப் போல வரும் பியானோ இசை....
15. Animal Spirits - பெயர் உணர்த்துவது போல ஆரம்பமே நமது உற்சாகத்தை ஆரம்பிக்கும் வண்ணமாக ஆரம்பிக்கிறது. அதில் Brass வரும் பகுதி ஏற்கனவே தமிழில் கேட்ட பிண்ணனி ஏதோ இருப்பது போன்ற உணர்வு. பின்பகுதியில் இதே ஆல்பத்தில் கேட்ட பிற இசைகளின் கலவை தென்படுகிறது
இதில் நான் இரண்டாவது எண்ணைக் குறிக்கவில்லை என்பதை கவனித்தீர்களா? அது தவறுதலாக விடவில்லை. வேண்டுமென்றே செய்தது. அது ரஹ்மான் அளித்திருக்கும் ஒரு ஆச்சரியமான விஷயம். தமிழ் பாடலை என்றாவது ஒரு ஹாலிவுட் பட சவுண்ட் ட்ராக் டிஸ்கில் இடம் பெறும் என நினைத்திருகிறீர்களா? நடத்திக் காட்டிருக்கிறார் நமது ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ் பேச்சு மூச்சு என்பவர்களுக்கு நடுவில் சொன்னது மட்டுமல்லாமல் தமிழை உலகுக்கு அறிய வைக்க முயற்சியும் அவர் வழியில் எடுத்திருக்கிறாரே, பாராட்டுக்கள்!
2. குறு குறு கண்களிலே - 'குறு குறு கண்களிலே எனை அவள் வென்றாளே' என்று reggae இசையில்(நான் ஜாஸ் என்று நினைத்தேன். நம் அறிவு அவ்வளவுதான்!) துள்ளலாக செல்கிறது. இது ரஹ்மான் இல்லை Afro Nisha என்பவரின் குரல் என அறிவித்திருப்பதை பார்த்ததும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின்ன, குரல் ஒருவர் மாதிரி இன்னொருவருக்கு இருக்க முடியும். அவர் குரலே இவருக்கு இருப்பது போல இருக்கிறது. டிஸ்க் இன்னும் ரிலீஸ் ஆகாததால் மேல்விவரங்கள் அதிகமாக அறிய இயலவில்லை. யாருக்காவது உறுதி செய்ய்பபட்ட தகவல் தெரிந்தால் சொல்லுங்கோ!
அப்புறம் சொல்ல மறந்துட்டேனே, பல வலைதளங்களின் தீர்ப்பின் படி 'குறு குறு கண்களிலே' பாடல்தான் ஆல்பத்தின் சிறந்த தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
அப்புறம் இந்த மேட்டர பதிவுலகத்துக்கு சொன்ன நான் தான், மி த ஃபர்ஸ்ட்!
:)
டாப்பு அடிக்கலாம் - 3
Filed under டாப்பு , by Prabhu on 9/24/2009 10:03:00 PM
11
ரேடியோவில் 'இன்று ஒரு தகவல்' கேட்ட அனைவருக்கும் தென்கச்சி சுவாமிநாதன தெரிஞ்சிருக்கும். அவர் பேச்சக் கேட்க அவ்வளவு ஆர்வம் இருக்கும். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது தினமும் ஆறேமுக்கால் செய்திக்கு பிறகு வரும் இன்று ஒரு தகவல் கேட்ட பின்னரே குளிக்க ஓடுவேன். நல்ல துணுக்குகளுடன் அருமையாக பேசுவார். அவர் இறந்து விட்டார் என எண்ணும் போது சிறிது வருத்தம் தான்.
-------------------------------------------------------------------------------------------------
சமீபத்துல இப்படி ஒரு அதிர்ச்சி கேள்விப் பட்டவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. உங்களுக்கு தெரியுமா இலியானாவின் இப்போதைய நிலை? மிகவும் பரிதாபத்திற்குரியது. எப்படி உடுக்கு போன்ற இடையுடன் வலம் வந்தார். இப்பொழுது? ச்சே.... நல்லவங்களுக்கு காலமில்லை! கீழே பாருங்க எவ்வளவு குண்டாகிட்டாங்க! முன்ன இருந்ததுக்கு குண்டுதாங்க! :)
-------------------------------------------------------------------------------------------------
போன வாரம் 'Immortel (ad vitam)' அப்படின்னு ஒரு படம் பார்த்தேன். ஃபிரஞ்சுகாரர்களால் எடுக்கப் பட்ட ஆங்கிலத் திரைப்படம். எகிப்து கடவுளுக்கு தண்டனை, பூமிக்கு வருகிறார், ஒரு பையனைத் தேடுகிறார், அவனை வைத்து ஒரு பெண்ணை தேடுகிறார், குவா குவா 'ஆக்சன்' காட்சிகள் அரங்கேறுகின்றன, அவர் காலம் பூமியில் முடிய மேலே செல்கிறார் தண்டனை அனுபவிக்க, கடைசியில் முன்ன செஞ்ச 'ஆக்சனால்' உயிர் பெறுகிறார் போல முடிகிறது. படத்தில் குறியீடுகள் எல்லாம் உள்ளது, முடிந்தால் அந்த காமிக் படித்து பாருங்கள்ன்னு idbmல சொல்றானுங்க. இப்ப உ.போ.ஒ ல குறியீடு படிச்சவங்க அதையும் விளக்கினா நல்லா இருக்கும். என்ன இழவோ எனக்கு ஒரு மண்ணும் புரியல. யாராவது பாத்திருந்தா சொல்லுங்கய்யா! படம் முடிந்ததும் என் நண்பன் கேட்டான்..... WTF?
-------------------------------------------------------------------------------------------------
உன்னைப் போல் ஒருவனில் ஒரு குறியீடு யாரும் கவனிக்கல. கணேஷ் வெங்கட்ராமனின் ஆரிஃப் கதாபாத்திரம் பைக்கில் வருவார் கான்ஸ்டபிளை அடிக்க. அந்த இடத்தில ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கல யாரும். அவரு உடம்ப முறுக்கிக்கிட்டே இறங்கி பைக் சாவிய எடுத்துப் போவார். அங்கதான் வச்சிருக்கம் ஒரு ட்விஸ்ட (அங்க கொண்டு போயா வச்சாங்க?). இதுக்கு தான் ஒரு முன்நவீனத்துவ நிபுணன் வேணும்ங்கிறது. அப்படி அவர் வண்டிய நிறுத்தி, ஸ்டாண்ட் போட்டு, சாவி எடுக்கும் போது வண்டி ஒரு குலுங்கு குலுங்கும். ஏன்னா அவரு கியர ந்யுட்ரலில் போட்டிருக்க மாட்டார். யோசிச்சு பாருங்க, ஒரு போலீஸ் அதிகாரிக்கு முதல் கியரில் இருந்து ந்யுட்ரல் கொண்டு வர தெரியாதா?. இது கமல் என்னவோ வேணும்னே வச்சிருக்காருன்னு தெரியுது. யாராவது இதை விலக்கினால் நன்றாக இருக்கும். அவங்களுக்கு உ.போ.ஒ. பட டிக்கட்(கள்) பரிசு! - இது ஆங்கிலத்தில் கூட Spoof movies மட்டுமே பார்ப்போர் சங்கத்து நோட்டீஸ்.
-------------------------------------------------------------------------------------------------
ஒரு chauvinistic joke (cliche)
பொதுவா நான் ஷாவனிஸ்டிக்கான ஆள் இல்லைன்னு தானே நினைச்சுக்கிட்டாலும் இந்த மாதிரியான ஜோக் ஆண்கள்க்கு நடுவில் இன்சைட் ஜோக்குகளா உலவும். பெண்கள் இந்த மாதிரியான ஜோக்கை எப்படி எடுத்துக்குறாங்கன்னு தெரியவில்லை.
"பெத்த மகளுக்கும், பரிட்சை பேப்பருக்குமான ஒத்துமை யாருக்காவது தெரியுமா?"
"ரெண்டையும் கட்டிக் குடுக்குற வரை வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டுதான் இருக்கனும்."
-இது அவ்வளவா ஷாவனிஸ்டிக்கா இல்லைன்னு நினைக்குறேன். அய்யோ இது ஜோக்கே இல்லை! அடுத்த தடவை இன்னும் நல்லா டிரை பண்ணுறேன். :)
-------------------------------------------------------------------------------------------------
Little John is known in his surroundings for his advanced knowledge on sex even though he is a kid. Even teachers fear him, as he always stuns the class with his sex talks and counters. One day a sex education class was arranged for kids. then teachers thought it would be the only right time to let john speak freely. So when he was asked to tell a story with sex education, he started , " You see 'Lone Ranger' in TV, right? One day Lone Ranger was riding along the mountains of Native Americans(red indians), on his horse. Suddenly, there came a horde of Native Americans, which tried to make him go away from their land. This led to a battle between them. Finally, the Lone Ranger won!". Teacher asked, "So.... Where is the sex education , we asked for". Little John said, "This should have taught the Natives a lesson right?, 'Nobody, fucks with the Lone Ranger' ".
-------------------------------------------------------------------------------------------------
இதெல்லாம் பேசிட்டே போகும் போது தங்க ரீகல் தியேட்டர் வந்துட்டது. எதிரில பார்த்தா பிரேம விலாஸ் அல்வாக் கடை. எப்ப போனாலும் சுடச் சுட அல்வா தர்றாங்க. என்ன ரகசியமோ? 5 ரூபாய்க்கு 50 கிராம் தாமரை இலையில ரோல் பண்ணி, அது மேல பேப்பர் சுத்தி தருவாங்க. நெய் பரவ, சரியான இனிப்புடன்..ம்ம்ம்... எழுதும் போதே நாக்கு இனிக்குது. சாப்பிட்டு முடிச்ச பிறகு இலையை குப்பையில் போட்டவுடன் கைய நீட்டனும். என்னடா காசு குடுக்காம பிச்சை எடுக்க சொல்லுறானேன்னு நினைக்காதீங்க! சப்பிட்டவுடன் கை நீட்டினால் கை நிறைய மிக்ஸர் குடுப்பது இந்தக் கடை கலாச்சாரம்! காசு அதன்பிறகு குடுத்துக்கலாம். அந்த நம்பிக்கையே அலாதிதான். அப்புறம் காசக் குடுத்துட்டு வரும் போது ஒரு சந்தோஷம் இருக்கும். :)
இரு அவளுக்கு ஒரு அவன்
Filed under சிறுகதை , விஞ்ஞானப் புனைவு , by Prabhu on 9/23/2009 12:32:00 AM
19
அவர்கள் இருவரும் பிங் பாங் ஆடிக் கொண்டிருந்தார்கள். அது அவர்கள் ஊரின் விளையாட்டு அரங்கம். அந்த காலியான கூடத்தில் அவர்கள் பந்தை அடிக்கும் சப்தம் மட்டும் பேசிக் கொண்டிருந்தது.
டொக்! டொக்!
"அவகிட்ட பேசுறத பத்தி என்ன நினைக்கிற?", ஷான் என்ற ஷண்முக வேல்.
டொக்!
"அப்படி வா. எவ கிட்ட?"
டொக்!
"ம்ச்ச்... உன்கிட்ட யாரப் பத்தி பேச போறேன்? எல்லாம் அன்ஷு கிட்டதான்."
டொக்!
"நீ அதப் பத்தி மட்டும் என்கிட்ட பேசாதடா! எவ்வளவு காலமா இதப்பத்தி பேசிக்கிட்டே இருக்க? அவகிட்ட போய் பேசுடான்னா, அவகிட்ட பேசுறதப் பத்தியே மணிகணக்கா பேசிக்கிட்டிருக்க!"
டொக்!
.........
டொக்!
"என்ன?"
டொக்!
"ம்ம்..." என்றபடியே ஷான் முனையில் பட்டு தெறிக்க இருந்த பந்தை தூக்கி கொடுக்க அஜய், "சிக்கிட்ட. smashடா!" என ஓங்கி அடிக்க, பந்து ஷானின் கையை தாண்டி போனது.
"Fuck!"
"விடுடா. ஆனால் நாளைக்கு அந்த வாய்ப்ப விட்டுடாத!", என்றான் அவனது நீண்ட கால நண்பனும் சக ஆராய்ச்சியாளனுமான அஜய்.
டேபிளின் ஓரத்தில் இருந்த பட்டனை தட்ட, டேபிள் தனது இயந்திர குரலில் அஜயின் வெற்றியை உறுதிபடுத்தியது.
"ஒரு Rally போடுவோமா?"
"இன்னைக்கு இது போதும்" என்றபடியே முழங்கையில் இருந்து உள்ளங்கை வரை வந்து முடியும் அந்த வினோத சாதனத்தின் புறங்கை பகுதியில் உள்ள அஜய் எலக்ட்ரோடைத் தட்ட கையில் இருந்த 3-D sim Bat மறைந்தது. அப்படியே டேபிளையும் தட்ட, அது ஹாலோகிராபிக் டேபிள், மறுப்பு சொல்லாமல் மென்மையாக மறைந்தது.
-------------------------------------------------------------------------------------------------
வியர்வை துடைத்துக் கொண்டே வெளியே வந்தனர். நிழற்குடையின் கீழ் வந்து "ஹோவோ" என்ற பட்டனை அஜய் அழுத்த, "டேய், எதுக்குடா ஹோவோல போகனும்? வாடகைய ஏத்தி சொல்வான்டா. வெட்டி செலவு."
"களைப்பா இருக்குடா, என்னால கூட்டு உந்துல எல்லாம் ஏறி முன்னூறு பேரோட போராட முடியாது?
"அப்போ என்னால காசெல்லாம் கொடுக்க முடியாது. நீயே கொடுத்துக்கோ"
"மவனே, ராத்திரி இன்னொரு புரோட்டோ பிஸ்கட்வேணும்னு கேக்குறப்ப இருக்குடா" என கறுவிக் கொண்டிருக்கும் போது, ஒரு ஹோவோ கார் வந்து மிதந்தது. ஹோவோ காரில் ஏறி அமர்ந்து, "புறநகர் 67ம் குடியிருப்பு, 47ம் கட்டிடம், 23ம் மாடி, எவ்ளோ ஆகும்". "300ரூபா ஆகும் சார்"
"என்னய்யா இது அநியாயமா இருக்கு. வரும் போது 150க்கு தானயா வந்தோம்"
"என்ன சார் சொல்றீங்க! கூட்டு உந்து நிலையத்துக்கே100 ரூபா வாங்குறோம்."
"150னாதான் வருவோம்"
"சார் ஹைட்ரஜன் கேட்ரிட்ஜ் விக்கிற விலையில........ 250 ரூபா கொடுங்க"
"150 தாங்க. டேய் ஷான், இறங்குடா. வேற ஹோவோ பாத்துக்கலாம்"
இறங்க முற்பட, "200 ரூபா சார்"
"150ரூபா"
"சரிங்க சார், உட்காருங்க"
-------------------------------------------------------------------------------------------------
ஹோவோவில் ஏறி அமர்ந்ததும் அது மெல்ல காற்றில் ஏறி விரைந்தது.
"இன்னைக்கு எப்போ ராமசாமியின் ஆராய்ச்சி நிலையத்துக்கு போற? ராமசாமி தான? இல்ல ரங்கசாமியா?", என்றான் அஜய்.
"ரங்கநாதன் டா. 5 மணிக்கு."
"எனக்கும் ஆராய்ச்சி நிலையத்துல வேலை இருக்கு. ஒண்ணா போகலாம்.... சரி...கூட்டு உந்துல போகலாம். நீயே காசு போடு, நான் ஏன்னு கேக்கல. என் மாடுயுல்ல கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சு குடுக்கலைன்னா ஐன்ஸ்டீன் கொன்னுடுவான்."
"அடுத்தவன் காசு போட்டா குளிருமே! சரி போடறேன். ஏன்டா அந்த ஆள ஐன்ஸ்டீன்னு கூப்பிடுறீங்க?"
"ஐன்ஸ்டீன்னா அந்த ஆளு அறிவாளின்னு நெனச்சயா? அந்த ஆளு முடி ஐன்ஸ்டீன் மாதிரி நட்டுக்கிட்டு நிக்கும், அதான். நாங்க தான் எல்லா வேலையும் பண்ணுவோம். அந்த ஆளு பேர போட்டுக்குவான்"
நகைத்த ஷான், "இப்போ எதுல ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கீங்க?"
"நவீன மிண்ணனுவியல எப்படி உயிர் தொழில்நுட்பவியலிலுக்கு ஏற்றாற் போல மாற்றிக் கொடுக்கலாம்னு ஆராய்ச்சி"
"டேய், ஏன் அரசியல்வாதிகள் சொல்லுற மாதிரி சொல்லுற? நானும் அறிவியல் மாணவன் தானடா"
"Nanotech ஐ மனிதனுக்குள் புகுத்த முடியும் என்ற கணிப்பு பொய்யா போனதால, அதிலும் சிறிய picotech உபயோகப்படுத்தி picobotsஐ மனிதனிக்குள் infuse செய்தால், உயிர்வேதியியல் மாற்றங்களை கத்தியின்றி, ரத்தமின்றி, க்ளோரோஃபார்ம் யத்தனங்கள் இன்றி, நுணுக்கமான அளவில காட்டும். இது ஆதார உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை ஆராய்ச்சி செய்ய உதவும்"
"முடிச்சிட்டயா, இப்போ இதனால என்ன சொல்ல வர்றீங்க?"
"உனக்கு கோபம், காதல், பசி, மகிழ்ச்சி, பிழைக்கும் மனப்பான்மை ஆகியவை ஆதார உணர்ச்சிகளை ஆராய முடிவதோடு, ஏதேனும் வெளிப்பொருட்கள் உடலில் நுழைந்தால் மூளைக்கு தெரிவதற்கு முன் நமக்கு தெரியும்"
"ஓஹோ"
--------------------------------------------------------------------------------------------------
வீடு. நுரை பொங்கும் காப்பியுடன் மேஜையில அமர்ந்த அஜய், "எந்நேரமும் ஏதாவது சிக்கலை கிறுக்கித் தீர்த்து கொண்டிருக்கிறாயே, ஏன்?"
நிமிராமல், "ஆராய்ச்சியின் இறுதி கட்டம். சாவகாசத்துக்கு நேரமில்லை." என்றான் ஷான்.
"உனக்கு ஓய்வு தேவைப்படுது."
"நீ டாக்டரா?"
"உன் கண்ணைச் சுற்றி இருக்கும் கருவளையங்களைப் படிக்க டாக்டராக இருக்க வேண்டிய அவசியமில்லை. காபி வேண்டுமா? இல்லை சில்லுன்னு ஏதாவது குடிக்கறாயா? குடிச்சிட்டு வேற ஏதாவது பண்ணு. இதுல முடங்கிடாத."
"சரி. ஆங்.. டிஜிலைப்ரரிக்கு போகலாம். ரிலேட்டிவிட்டி டிஜிபுத்தகம் ஒன்றை ரெனுவல் செய்யனும்"
"அதற்கு மூன்று நாட்கள் இருக்கிறதே.", என்றான் சந்தேகப் பார்வையோடு.
"முன்னதாக முடித்துக் கொள்வது நல்லதுதானே. இனி சிறிது காலத்திற்கு இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை."
"இன்று வியாழக்கிழமை"
"அதனால்?"
, நீ யாரென எனக்குத் தெரியும். என்னைப் பற்றி உனக்குத் தெரியும்.", என்று சிரித்துக் கொண்டே அஜய் சொன்னான்.
உதட்டோர சிரிப்புடன் முறுவலுடன், "சரி, காபி எடு போ!", பக்கத்தில்ருந்த பந்தை அஜய் மேல் வீசி விரட்டினான் ஷான்.
------------------------------------------------------------------------------------------------
லைப்ரரி அருகில் ஒரு பெட்டிக்க்டை. அஜய் கடையில் ஏதோ வாங்கினான்.
"சிகரெட்?"
"நான் பிடிக்கறதில்லை. உனக்குத் தெரியாதா?",என்றான் ஷான்புருவத்தை சுருக்கியபடி.
அஜய் கண்களை இடுக்கி தலையை சாய்த்து நக்கலாக, "நான் பிடிக்கற மாதிரியா தெரியுறேன். இது சிகரெட் இல்ல. புகை மட்டும் வரும். எலக்ட்ரானிக்ஸ் மாற்று. சென்ற நூற்றாண்டில் புகைப் பழக்க அடிமைகளுக்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்டு தோல்வி அடைந்த ஒரு வஸ்து, இந்த நூற்றாண்டின் இளைஞர்களின் ஸ்டைல். History repeats as a parody of pasts."
"அவள் வரும் நேரம். அந்தக் கருமத்தை அணை!"
"எப்படித் தெரியும்? டெலிபதியில் சொன்னாளா?"
"இல்லை, கடிகாரம் சொல்கிறது"
"இவள் லைப்ரரிக்கு ஏன் வியாழக்கிழைமையே வருகிறாள்?"
"தோஷ பரிகாரம்?"
"வந்துவிட்டாள். போய் பேசிடேன்"
"இல்லை வேணாம். அதற்கு காலம் வரவில்லை."
"காலம் வண்டியில் வருவதில்லை நண்பா. நாம் உண்மையை எதிர்கொள்ளத் தயாராகும் நேரம்தான், சரியான நேரம். போய் பேசு. இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டிருவோம். நூற்றாண்டுகள் கடந்தும் ஆண்கள் கற்றுக்கொள்ளாத வித்தை ஒரு பெண்ணை எதிர்கொண்டு காதலை சொல்வதுதான்."
"இதுதான் இப்பொழுது எனது கேள்வியே. இதற்கு உன் picobot கள் என்ன காரணம் கற்பிக்கிறது? கூட்டுந்து வந்து விட்டது".
------------------------------------------------------------------------------------------------
இருவருக்கும் சீட்டு ஓட்டுநரின் அருகிலிருக்கும் இயந்திரத்துடன் பேசிப் பெற்றுக் கொண்ட பிறகு அஜயின் அருகில் அமர்ந்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கத் துவங்கினான் ஷான்.
பார்வையை வெளியிலிருந்து உள்ளிழுக்காமல் அஜய் பேசத் துவங்கினான், "நீ வெளியே சொன்ன விஷயங்கள் எனக்கு விளங்கவில்லை. எதற்கான விளக்கங்களை நீ எனது கண்டுபிடிப்பகளிடம் கேட்கிறாய்?"
"காதலுக்கான விளக்கத்தை. ஒரு ஆண் ஒருபெண் பின்னால் சுற்றுவதன் சூட்சுமத்தை. "
"சாத்தியமுள்ளது. வயரில்லா செயற்கைக்கோள் தொழில்நுட்பம் என்பதால் ஒருவன் தனது தின அலுவல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கவனிக்க இயலுவதால் அவனது ரசாயன வேறுபாடுகளை வைத்து அவன் காதலிக்கிறானா எனக் கண்டுபிடிக்க முடியும்.", நிறுத்தியவன் யோசித்து, "2 சதவீத வாய்ப்புண்டு".
"இல்ல, சில கேள்விகளை எழுப்பி பார். உதாரணத்துக்கு காதல் என்ற கேள்விக்கு விடை அறிந்தால்தானே உன்னால் அது இருக்கா, இல்லையா என தீர்மானம் செய்ய முடியும். காதல் hormonal interplay என நினைக்கிறாயா? அது தப்பான பதிலத்தான் கொடுக்கும். உன் முழுமையடையாத ஆராய்ச்சியை வைத்து முடிவு செய்யாத. அப்ப ஒருத்திய பாத்து வரக்கூடிய செக்ஷுவல் அட்ராக்ஷனயும் இதயும் பிரிக்கக் முடியுமா? அதே ஹார்மோன்கள்தான். காதல phyisicalஆக பாக்காத, அதுல பாதி metaphysical."
"உன் கதைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"
"நான் எனக்கும் சில கேள்விகளை வைத்திருக்கிறேன்."
"சபாஷ், நீ க்விஸ் போட்டியே நடத்தலாம்."
"ஷட் அப்"
"நீ cynicஆ? ஒன்றை புரிந்துகொள். நீ கி.மு 5ம் நூற்றாண்டில் துண்டை சுற்றிக் கொண்டு ரோம் தெருக்களில் திரியும் துறவி அல்ல. ஏன் இவ்வளவு cynicalஆக பேசுற? இப்போ அன்ஷு விஷயத்தில உனக்கு என்ன பிரச்சனை?"
"cynical இல்லை. நான் ஏன் பேசனும் என யோசிக்கிறேன். எனக்கு அவள பிடிச்சிருக்கு. அதற்காக பேசனும் என்ற கட்டாயத்தை உருவாக்கிக் கொள்ள் விரும்பவில்லை. நான் பேசுவதால் என்ன புதிதாக கிடைத்து விடப் போகிறதென்று புரியவில்லை. சரி, பார்க்கறேன், பிடித்திருக்கு, பேசுகிறேன், மிஞ்சி போனால் உறவு கொள்கிறேன், பிறகு? நாளை இன்னொருவளைப் பிடித்தால்? இரண்டிற்கும் வித்தியாசம் இருக்குமென்கிறாயா? அதை உணரும் நாள் எனது பயத்தையும் மீறி அவளிடம் பேசுகிறேன். அவளிடம் பேச வேண்டுமென்பது எனது உள் மனதின் நிஜ எண்ணமா அல்லது இந்த சமூகத்தினால் திணிக்கப்பட்ட ஒரு பாவ்லோவ் உணர்ச்சியா என்பதை கண்டறியும்வரை அவளிடம் பேசுவதில் பயன் இருப்பதாக தெரியவில்லை. Man's path and nature is made by the choices he make."
"எனக்கு இப்ப புரிகிறது. My god! My friend is a fuckin existentialist!"
"ஹேய், பகவத் கீதையில் கூட மனிதனின் தேர்வுகள்(choices), செயலின் விளைவுகள் பற்றிப் பேசும் போது எக்ஸிஸ்டென்ஸியலிஸ வாடை அடிக்கிறது. அப்ப நம்ம கிருஷ்ணர் கூட ஒரு existentialist தான். ஆனா நான் அப்படியெல்லாம் இல்லடா. சிம்பிளா, குழப்பமடைய கூடிய சாதாரண இளைஞன்".
"உன்னோட blasphemyக்கு நான் தயாரில்லை. உனக்கு ஆராய்ச்சிக் கூடத்தில் Material physicsல ஆராய்ச்சியா? இல்ல Metaphysicsல ஆராய்ச்சியா?"
"ரெண்டும்தான்", என்றான் ஷான் புன்னைகையோடு.
"நல்லாதானடா இருந்த? ஏன் இப்படி? என்ன ஆராய்ச்சிதான் அது."
அதற்குள் தேசிய ஆராய்ச்சி நிலைய நிறுத்தம் வர, இறங்கிய ஷான், "காலம்தான் பதில் சொல்லும்" , என விஷம புன்னகையோடு அவனது பிரிவிற்கு பிரிந்து செல்ல, அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த அஜய் முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்தான், "காலம்தான் பதில் சொல்லும், *&%$#".
------------------------------------------------------------------------------------------------
இரவு- வீடு. "என்ன தலைவா, ரொம்ப தாமதமா வருகிறீர்கள்? உங்க ஆய்வுக் கூடம் பக்கத்துல இருக்குற பழைய பதிவுகள் காப்பதுக்குள்ள உன் இதயத்த தேடிட்டுவந்தயா? அவளை அழைத்து உன் கைப்பையில வச்சிருக்கயான்னு கேக்கலாம் என இருந்தேன்." , என்ற அஜய் புரோட்டோ ஒன்றை கடித்துக் கொண்டே பாட்டு ஒன்றை ஹோலோவிஷனில் பார்த்துக் கொண்ட்ருந்தான்.
பல்வலி வந்தவன் போல பல்லை கண்பித்துக் கொண்டு, "டேய், புரோட்டோ ஒண்ணு கொடுடா. இன்னைக்கு பசி கொல்லுது. சமையலயும் நீயே பண்ணு. களைப்பா இருக்கு" என்றான் ஷான்.
"ஏன் அய்யா பல மைலுக்கு அப்பால இருந்து வர்றீங்களோ? இம்புட்டு நேரம்?"
ஏதோ ஜோக் கேட்டது போல, "இல்லை, பல வருடங்களுக்கு அப்பால் இருந்து வருகிறேன்" எனக் கூறி சிரித்தான்.
அவனை ஒருமாதிரியாக பார்த்துவிட்டு, "லூசுப் பய" என்பது போல என்னவோ முனகிக் கொண்டே சென்றான்.
----------------------------------------------------------------------------------------------
தட்டு நிறைய உணவை கொட்டிக் கொண்டே, "புரோடோடைப் தயாராகிடுச்சு", என்றான் ஷான்.
"....."
"என்ன? அவ்வளவுதானா?"
"எதுக்கு? கேட்டா ராணுவ ரகசியம்னு சொல்லுவ. எனக்கு தேவையா?"
சிரித்த முகத்துடன்,"சரி. கேளு?"
"உன் ஆராய்ச்சி? என்ன அது?"
"காமிக்ல படிச்சிருப்பயே, டைம் டிராவல்"
"Are u shitting me?"
" இல்ல, நிஜமாகத்தான்."
"எப்படி?"
"காமிக் போல wormhole தான்"
"அது சாத்தியமா. ரொம்ப ஹைபோதெடிகல் இல்ல?"
"ம்ஹூம். ரிலேட்டிவிட்டி தியரில தான் இதுக்கு பதில் இருக்கு. பொதுவா காலத்தை பிரபஞ்சத்துக்கும் பொதுவா, மாற்றமில்லாததா வைத்தே போன நூற்றாண்டு வரைக்கும் கணக்கு பண்ணிக் கொண்டிருந்தோம், ரிலேட்டிவிட்டி அதற்கு ஒரு நூற்றாண்டு முன்பே கண்டுபிடித்திருந்தாலும்..."
"தொழில்நுட்ப விளக்கங்களை விடு".
"சரி. போன நூற்றாண்டுகள் வரை மூன்று பரிமாணங்கள்(dimensions)தான் என எண்ணிக் கொண்டிருந்த போது fractals அதை மாற்றிக் காட்டியது. பிறகு மூன்றுக்கும் மேற்பட்ட பரிமாணங்களை ஏற்றுக் கொண்டபிறகு, காலத்தையும் ஒரு பரிமாணமாக ஏற்று..."
"இன்னும்..."
"பொறு. Spacetime/ time space conitnuum எனக் காலத்தையும் ஸ்பேஸயும் ஒரே பிளேனில் வைத்த கதை குழந்தைக்குக் கூட தெரியும். அதுல கறுப்புத் துளை(black hole), வெள்ளைத் துளை(white hole)யும் உனக்குத் தெரியும்."
"யாரு அந்தக் குழந்தை? நீயா?"
"சரி, ஸ்பேஸும் காலமும் இரண்டறக் கலந்ததாக அனுமானித்துக் கொள். இப்ப புரியுதா?"
" கறுப்பு துளை எதையும் உள்ளிழுக்கும் தன்மைக் கொண்ட ஒரு இடம். ஒளியை கூட விழுங்கும் அரக்கன். வெள்ளை?"
"சரியே. வெள்ளை என்பது கறுப்பு உள்ளிழுத்தவற்றை வெளியிடும் ஒரு துளை. புரியுதா?"
"இதன் மூலமாக பிரபஞ்சத்தின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் நொடியில் பயணம் செய்ய முடியும். ஆனால்?"
"இங்கே புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் அது பிரபஞ்சத்தில் நடுவிலான குறுக்குப் பாதை மட்டுமல்ல. Spacetime இழைகளில் ஏற்பட்ட ஒரு பிழை. ஒரு ஓட்டை. அதனால் அது நமக்கு பிரபஞ்சத்தின் ரகசியங்களை எட்டிப் பார்க்கும் சாவித் துவாரம். இங்க குவாண்டம் கம்ப்யூட்டிங் தெரியனும்".
"அய்யோ, ஏன் கெஸ்ட் லெக்சர் மாதிரி கொல்லுற?"
"படம் பாத்திருக்கேல்ல்? இவன் இதை செஞ்சா என்ன ஆகும், இல்ல செய்யலைனா ஆகும் என விதவிதமாக எடுத்திருப்பார்களே? அதுதான் குவாண்டம் கம்ப்யூண்டிங். ஆனால் கொஞ்சம் சிக்கலானது. நீ எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு ரியாலிட்டி உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்ப இங்கே வந்து கொண்டிருக்கும் போது நான் அடிபட இருந்தேன். இப்பொழுது நான் அடிப்பட்டிருந்தால் என்ன ஆகியிருப்பேன், படாததால் என்ன ஆகியிருக்கேன். இதெல்லாம் alternate reality(மாற்று நிகழ் உலகம்) என சொல்லுவோம். பல ரியாலிட்டி இருக்கு. பல பிரபஞ்ச சாத்தியக் கூறுகள் இருக்கு. ஸோ, பல நிகழ் உலகங்கள் இருக்கு. ஒண்ணுல நீ பிரதமரா இருக்கலாம். ஒண்ணு இதைவிட முன்னேறிய சமுதாயமா இருக்கலாம். இல்லை காட்டுமிராண்டித்தனமாக இருக்கலாம். ஒண்ணுல நீ செத்துக்கூட போயிருக்கலாம்."
"டைம் டிராவல்னு சொன்ன மாதிரி இருந்தது".
"அங்கதான் வரேன். காலம் மற்ற பரிமாணங்களைப் போல அல்லாததால ரிவர்ஸ் கியரில போய்விட இயலாது. வார்ம் ஹோல் வழியாக வேறு ஒரு நிகழுலகத்திற்(ரியாலிட்டி)க்கு போய் அங்கிருந்துதான் இந்த நிகழுலகத்தின் முற்காலத்திற்க்கு வர முடியும்."
"இன்னும் இதற்கு சூயஸ் கால்வாய் கண்டுபிடிக்கலையா? இதனால எந்தப் பிரச்சனையும் இல்லயா?"
"இல்ல. ஆனால் பொதுவா கதைகளில் சொல்லுவது போல அங்க போனா மியூசியம்குள்ள போனமாதிரியா எதையும் தொடாம வரணும். நீ அங்க போய் தும்மல் போட்டால் கூட டைம் லைன் மாறிடும்ங்கிற கட்டுப்பாடு இருந்தாலும் யாரும் பின்பற்றுவதில்லை. மிரக்கிள் சொல்லப்படுறதில பாதி விஷயங்கள் வெவ்வேறு டைம்லைனில் இருந்து சென்றவர்கள்தான் என ஒரு தியரி இருக்கு. கிருஷ்ணர் வேறு ரியாலிட்டியாத்தான் இருக்கனும். யோசி, நீல நிறம், மனித வடிவம், உருவ மாற்று சக்திகள், டெலிபோர்ட்டேஷன் வசதிகள், அந்தப் போர்கூட ஒரு நவீன யுத்தமாக இருந்திருக்கக் கூடிய அடையாளம் தெரிவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏசுவுக்கும் அதே கதைதான்"
"என்னால நம்பவே முடியல. மனித சமுதாய்த்தின் நம்பிக்கை வேர்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதன் விளைவு? ரொம்ப இம்மாரல் ஆகிடாது?"
"இந்த ஆராய்ச்சி இத்துடன் புதைக்கப்பட்டு விடும். வேறு ஒரு ஆராய்ச்சியின் பெயரில் அரசாங்கம் விருது கொடுத்துவிட்டு ராணுவ ரகசியக் காப்பகத்தில் சேர்த்துவிடும்".
"அதைத் தயாரிப்பானேன்? மறைப்பானேன்?"
"எந்தக் காலத்திலும் இல்லாத அளவு இப்பொழுது ஆராய்ச்சியின் இறுதி கட்டம் நெருங்கியுள்ளது. வேறு டைம் டிராவலர்களால் எந்த ஆபத்தும் வராமல் காப்பதற்கான இறுதி ஆயுதம்".
"..."
"என்ன?
"ஒண்ணுமில்ல. கதைல படிக்கிற அளவு நல்லாயில்ல. கொஞ்சம் கேனத்தனமா இருக்கு".
"ஏன் சொல்ல மாட்ட? ஒருத்தன் இத்தனை வருசமா கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சிருக்கான்ல, கேனப் பயதான்".
"எத்தன தடவ பயணம் பண்ணிருக்க? இதுக்கு தகுதி எதுவும் இருக்கா?"
"15.விண்வெளிவீரன் மாதிரிதான். ஆனா எங்க புரொபசர் நிறைய மெடாஃபிசிக்ஸ்(இருத்தல் தத்துவம்) படிக்க வச்சார்"
"Satre படிக்க சொன்னாரா?"
"அது எக்ஸிஸ்டென்ஸியலிஸ்ட். இது கொஞ்சம் பழசு. கிரேக்க ஞானிகள் உருவாக்கினது. பிரபஞ்சத்தப் பத்தி பேசுவாங்க ".
"ஹெ... கோமணாண்டிஸ்! Cynic! "
"Shit!"
"சரி எனக்கு ஏதாவது ஞாபகச் சின்னம் கொண்டு வந்தயா?"
"உனக்கில்ல. அன்ஷுவுக்குதான் இருக்கு."
"அடப்பாவி, மங்கையென்று வாழ்வில் வந்துவிடில் நட்பும் சுற்றமும் நாட்டில் கேலியென்பார்னு கம்பர் 7ம் நூற்றாண்டிலயே சொல்லிருக்கார். நீ கொண்டு வந்தயே அவளுக்கு, என்ன அது?"
"ஒரு புத்தகம். கிடைப்பதற்கரிய காகிதப் புத்தகம். அது இன்னும் புழக்கத்துல இருக்குற வேற ஒரு நிகழ் உலக(alternate reality)த்துல எனக்கு கொடுத்தது, அன்ஷுகிட்ட போய் பேசு என்ற அறிவுரையுடன்".
"யாரு அது? உனக்கு உருப்படியான அறிவுரையெல்லாம் கொடுக்குறது." என்றபடியே அஜய் பிரித்து பார்த்தான், பவுண்டைன் பேனாவின் குழிகளில் வழிந்த மை காகிதத்தில் அழகாக பரவியிருந்தது, 'இரு அவளுக்கு ஒரு அவன்' என்ற தலைப்பின் கீழ்,"அன்புடன் An.D".
"and? யாரு அது conjunctionல பேரு வச்சிருக்கது?", என்றவன் விழிகள் விரிந்தது ஷான் அந்தப் பக்கத்தின் கீழே எழுதியிருப்பதைக் காட்டிய பொழுது,
"Anshu Devi"
-------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி - முதலில் இது விஞ்ஞானப் புனைவு என்பதை என்னைப் போன்ற அறிவாளிகள்(!) புரிந்து கொள்ள கூறுகிறேன். இக்கதையில் பல குறியீடுகள்(அப்படியென்றால் என்னவென்றே தெரியாவிட்டாலும்!) ஒளித்து வைத்திருக்கிறேன், கண்டுபிடியுங்கள் ஈஸ்டர் முட்டை போல எனக் கூறும் வேளையில் எனது கைபேசி கூவி, நீ அனுப்பிய மெயிலில் கதையை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என நண்பன் கேட்கிறான். நீங்களாவது அதைக் கண்டுபிடுத்து ஒப்படையுங்கள். கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு என்றால் அதுவும் வேண்டாமென்கிறான் நண்பன், அவனுக்கு தெரியும் கண்டுபிடிப்பவர்களுக்கு அதையே பரிசளித்துவிடுவேன் என்று. அதான் வேணாமென்கிறான் (அவன் என் நாறிப் போன சாக்ஸை கண்டுபிடித்துக் கொடுத்தவன், பரிசுக்காக!)
:)