சரக்குள்ள பதிவு (செம சரக்கு!)

Filed under , by Prabhu on 7/23/2009 07:33:00 AM

14

"சொல்லுங்க பப்பு, இப்போ எப்டி feel பண்றீங்க?"
"எனக்கு என்ன சொல்றதுன்னே தெர்ல. i feel excited. யுஷுவலா நான் அவார்ட் expect பண்ணி பதிவெழுறதில்ல. But if i got the award, எனக்கு சந்தோஷம் தான்."
இப்படியெல்லாம் தமிழக் கொல பண்ணி பேட்டி கொடுத்தாதான் நான் பெரிய பருப்புன்னு நம்புறானுங்க! என்ன செய்யுறது?

அதில்லாமலே நான் பெரிய பருப்பு தான். அதுக்கு என் வரலாறையும், என் பெயர் காரணத்தையும் எழுதனும். அதனால அந்த மேட்டர 50 வது பதிவுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். அப்புறம் என்னத்த எழுதுறதுக்காக இந்த பதிவ போட்டிருக்கன்னு நீங்க கேக்கலாம்.

அப்டி கேளு நைனா, நான் பாட்டுக்கு சும்மாக்காச்சு போகச்சொல்லா, நான் ஆதவன்ங்கிற பேர்ல குப்ப போடுற ஒரு பெர்ய மன்ஷன் ஏதோ அவார்ட் கொடுக்காராமே! என் பேரயும் அந்தாண்ட போட்டிருக்காராம். இன்னடா இது மெர்சலா கீதுன்னு போய் பாத்தா... அட, மெய்யாலுமே தான்! இன்னா விஷயம், காசு கீசு தர்வீங்களான்னு கேட்டு பாத்தா, அதெல்லாம் இல்ல, உனக்கு அவார்டே ஓவர்னு சொல்டாரு. சரிதான், இந்த வேர்ல்டுல சுளுவா கெடக்கிறது அட்வைசும், பதிவுலக அவார்டும்தான் போல.

அவராண்ட போய் கேட்டேன், அண்ணாத்த எனக்கிலாம் அவார்ட் கொடுக்கறயே எப்படின்னு? அதுக்கு அவரு, தம்பி உன் பதிவெல்லாம் படிச்சேன். செம தமாசுப்பா, நான் அப்படியே மெர்சலாய்டேன்னார். ஏம்பா, நம்மளா பாத்தா காமெடி பீஸாட்டமா இருக்கு? உளவுத் துறையெல்லாம் வச்சி விசாரிச்சாராம். நான் உளவுத் துறையளவெல்லாம் நான் வொர்த் இல்ல தல.

அப்பால நான் வாங்கசொல்ல அவார்ட் வாங்கின இளைய பல்லவன், ஆ!இதழ்கள் எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்லிக்கிறேன். அதில இளைய பல்லவன் படிச்சப்போ அவர் நான் படிச்ச கதையில இருந்து பேர் எடுத்து வச்சிருக்காருன்னு தெர்து. அதோட அவரே சரித்திர கதயெல்ல்ம் எழுதுறாராம். அங்கங்க எல்லாரும் சரித்தரக் கதை எழுதும்போது பப்பு, உன் கத மட்டும் ஏன் தரித்தரமா இருக்குன்னு கேட்டீங்கன்னா... பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது.

இப்படிக்கா ஒரு சோக்கு சொல்லிட்டு அப்படிக்கா ஜகா வாங்கிக்குறேன்! எங்க எஸ்கேப்பு ஆவுற? நீ யாருக்கு கொடுக்குறன்னு சொல்லிட்டு போ. அய்யோ, அதெல்லாம் கேக்காதீங்க. நான் அவ்ளோ வொர்த் இல்ல. அப்புறம் இன்னொரு விஷயம்.
எல்லா புகழும் இறைவனுக்கே! அவார்ட் வாங்குறப்போ இப்படி சொல்லனுமாம். அப்ப தான் நம்மள பெரிய ஆளுன்னு சொல்வாங்க.


அது என்ன அவார்டுனே சசொல்ல மறந்துட்டேன் பாத்தீங்களா! அது 'Interesting Blog Award' (அ) சுவாரஸ்ய பதிவர் விருதாம். நல்ல சரக்கு இருக்குறவங்களுக்குதான் கொடுக்கனும், உனக்கேன்னு கேக்கலாம். அதான் இந்த பதிவோட சரக்க ஏத்த கீழ ஒரு சரக்கு சோக்கு. அதுவும் பாரின் சரக்கு!

எனக்கு இப்ப ஜோக் சொல்லியே ஆகணும்.

அமெரிக்கால ஒரு சிட்டி. அங்க ஒரு பார். டிடர்ஜண்ட் பாரான்னு கேக்குறவங்கள கஸாப் தம்பின்னு புடிச்சு குடுத்திருவோம். ஒரு குடிக்கிற பார். அங்க ஒரு பொண்ணு வர்றா. வந்த உடனே எவன்ட பேசலாம்னு பாக்குறா. அப்போ நம்ம ஆளு கண்ணுல படுறான்.
"நீ என்ன சரக்கு அடிக்கிற?"
"இதுக்கு பேரு மாய சரக்கு"
இவன பாத்தா சுண்ட கஞ்சி ரேஞ்சுக்கு இருக்கான். ஓவர் மப்புல இருக்கான் போல என அவன விட்டுட்டு பார்ல ஒரு ரவுண்டு வர்றா. எல்லாரும் முழு மப்புல இருக்கானுக, இல்ல ஆஃப் பாயில் போட்டுட்டு இருக்கானுக. இதுக்கு அவனே தேவலைன்னு வர்றா.
"ஆமா.... நீ மாய சரக்குன்னு சும்மாக்காச்சு தான சொன்ன?"
நம்மாளு, "இல்ல, நிஜம்தான்".
"நான் நம்ப மாட்டேன்"
இப்ப பாருங்கன்னு சொல்லிட்டு, ஒரு ரவுண்டு ஊத்திக்கிட்டு, ஒடிப் போயி ஜன்னலில குதிச்சிட்டான். அய்யோன்னு இவ எட்டிப் பாத்தா, அவன் பறந்துட்டே பில்டிங்க மூணு ரவுண்டு அடிச்சிட்டு வந்து உள்ள இறங்கினான். வாயப் பிளந்து ஆச்சரியப்பட்ட அவளுக்கு இன்னும் சந்தேகம் தீர்க்க இன்னொரு ரவுண்டு விட்டுக்கிட்டு நாலு ரவுண்டு அடிச்சான், அந்த பில்டிங்க. அந்த பொண்ணு எனக்கும் வேணும்னு சொல்ல, "யோவ் பார்டெண்டர், இதே சரக்க அந்த பொண்ணுக்கும் கொடுய்யா". அத குடிச்சிட்டு அந்த பொண்ணு நேரா போய் ஜன்னல் வழியா குதிச்ச........... சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்.... சப். கீழ இருக்குற அவ கார்ல போய் விழுந்து அவுட்.

இதப் பாத்த பார்டெண்டர், "யோவ், உன்னோட இதே வேலையா போச்சு. பக்கார்டி நாலு உள்ள போனா நீ பக்கா பாஸ்டர்டு டா, சூப்பர் மேன்".

ஹாரி பாட்டரும் muggle ராஜகுமாரனும்

Filed under , by Prabhu on 7/18/2009 09:32:00 PM

15

ஹாரி பாட்டர் கதைகள தீவிரமா படிச்ச என்ன மாதிரியான ரசிகர்களுக்குதான் இந்த படங்களுக்கான காத்திருப்புக்கான அர்த்தம் தெரியும். அதுவும் என்னைய மாதிரியான ஹாரி பாட்டர் fanatics களுக்கு இது ரஜினி படம். அத விட மோசம். கதைய படிச்சிட்டு எப்படி எடுத்துருப்பானோ, ஒழுங்கா எடுத்துருக்கனுமேன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதுக்கு காரணம் Rowling ஓட எழுத்துக்கள். படிக்கும் போதே நமக்குள்ள mixed emotions தான். குறிப்பா என்னை போன்ற adolescents
(அட, படிக்கும் போது அடலசண்ட் தாம்பா).

இது ஹாரி பாட்டர் படத்தோட விமர்சனமான்னு கேட்டா அதுவும் தான். நான் விமர்சனம் எழுத ஏற்கனவே ட்ரை பண்ணி பெரிசா வரலன்னு எனக்கு தோணுது. இப்போதான் ஆதவன் என்னையும் படிச்சு ஏமாந்து சரக்கிருக்கிற பதிவுன்னு சொல்லிருக்காரு. அத நம்பி வர்றவங்கள ஓடவிட விருப்பமில்ல.அதனால அந்த படத்த பத்தி என்னவெல்லாம் தோணுதோ எழுதுறேன். ஆமா,....'ஹாரி பாட்டரும் மாயராஜகுமாரனும்' தான படத்தோட பேரு நீ என்ன 'muggle ராஜகுமாரனும்'னு போட்டிருக்கனு கேக்கலாம். சொல்றேன். விடை பதிவின் கடைசியில்னு போட்டா கடைசி போயிட்டு, சூப்பர்னு போட்டோ போடாமலோ போய்விட வாய்ப்பிருக்கிறதால, நடுவால எங்கயாவது சொறுகி விடுறேன். படிச்சிக்கோங்க!

முதல்ல விளக்க வேண்டியது படத்தோட தலைப்பு. 'Harry Potter and the Half-Blood Prince' ஓட தமிழாக்கம் தான் இந்த படம். படத்துக்கு 'ஹாரி பாட்டரும் அரை ரத்த அரசகுமாரனு'ம்னு பேர் வைப்பாங்களோன்னு நெனச்சோம். பரவாயில்ல கொஞ்சம் நல்லாருக்கனுங்கிற எண்ணத்துல வச்சிருக்காங்க. half-blood ங்கிறது மந்திரம் தெரிஞ்ச ஆண்/பெண் , சாதாரண ஆண்/பெண் (இவங்களத்தான் muggleனு சொல்வாங்க!) கலப்பில் பிறக்கிற கலப்பினத்த சொல்வாங்க.

போன பாகமான 'Harry Potter and the Order of the Phoenix' விட்ட இடத்துல இருந்து தொடங்குது படம். Harry காபி ஷாப்ல ஒரு பொண்ணோட கடலை போட ட்ரை பண்ணும் போது இடையில Dumbledore(Principal) வந்து ரிடையர் ஆன Horace Slughornன எதுக்காகவோ ப்ரொபசரா ஆக்குறதுக்கு இவன அழைச்சிட்டு முயற்சி பண்ணுறாரு. அப்புறம், Draco Malfoy கிட்ட ஒரு மூக்குடைப்போட ஹாரியின் பள்ளி வாழ்க்கை அந்த வருடம் 'இனிதே' துவங்குது.


அதன் பிறகு Malfoyஓட ரகசிய நடவடிக்கைகள், Ron-Hermione நடுவில நடக்கிற ஊடல்-கூடல், Harry-Ginny நடுவில புதுசா வொர்க் அவுட் ஆகுற long felt chemistry, Dumbledore கிட்ட ஸ்பெஷல் கிளாஸ் என ஓடிட்டிருக்குற கதையில ஒரு சின்ன நெருடல் தான் ஹாரியோட potions book. அந்த புத்தகத்தோட பழைய சொந்தகாரன் பல உபயோகமான குறிப்புகளையும், மந்திரங்களையும் நுணுக்கி வச்சிட்டு போயிருப்பான். அட்டையில 'இந்த புத்தகம் மாயராஜகுமாரனோடது'(Property of Half-blood Prince) என போட்டிருக்கும். இந்த புத்தகம் மேல Hermione, Ginnyக்கு சந்தேகம் இருந்தாலும் அந்த புத்தகத்தின் மேல அபார நம்பிக்கை வச்சிருப்பான். ஆனா, அவன் நம்பிக்கை தவறுது. அது அவனுக்கு ஆபத்தானதால Ginny அதை மறைச்சு வைக்கிறா.

Snape ஒரு மீறமுடியாத சத்தியத்த(Unbreakable Vow) Malfoy அம்மாக்கு செஞ்சு தந்திருக்கானு ஒட்டு கேக்கிறான் ஹாரி. Dumbledoreஅ கொல்ல ஒரு சபிக்கப்பட்ட நெக்லஸ் ஒரு பொண்ணு மூலமா வந்தது பாத்ததும், அதுவும் Malfoy வேலையா இருக்கும்னு ஹாரி நினைக்கிறான்.

Dumbledore அடிக்கடி வெளிய போறதுக்கான காரணங்களையும், வோல்டிமோர்ட் சம்பந்தப்பட்ட சில பழைய நினைவுகளையும் ஹாரிக்கு விளக்கும் போது வேல்டிமோர்ட் கிட்டத்தட்ட சாகாவரம் பெற்றவங்கிற விவரம் தெரிய வருது. Slughorn கிட்ட இருக்கிற அந்த முக்கியமான நினைவு என்ன? வோல்டிமோர்டோட அந்த கிட்டதட்ட சாகாவர ரகசியம் என்ன? Dumbledore ஹாரிகிட்ட ஒப்படைக்கிற பொறுப்பு என்ன? யாரு அந்த மாயராஜகுமாரன்? Malfoyஓட ரகசியம் என்ன? Snape எதுக்காக சத்தியம் பண்ணி கொடுத்தான்? இதுக்கெல்லாம் விடை தெரிய படம் பார்க்கனும். ஓசில கதை கேக்கலாம்னு நெனச்சீங்களா?

புத்தகத்தை த்ழுவி எடுத்திருந்தாலும், அப்படியே எடுக்காமல் ஒரு சில விஷயங்கள படத்துக்காக உருவாக்கியிருப்பது கதையின் விறுவிறுப்புக்கு கை கொடுப்பதோட, புத்தகத்த படிச்சவங்களுக்கு போனஸ்! உதாரணம் Weasley இல்லத்துக்கு Bellatrix வந்து , அதனால் உருவாகும் ஒரு சண்டை காட்சி. புத்தகக் கதையை போல அல்லாமல் படத்தில் ஆரம்பத்திலேயே Ginny மேல் Harryக்கு ஒரு 'இது' இருக்கு. தேவையில்லாத புத்தகத்தின் கொசுறு விஷயங்களில் கவனம் காட்டி புத்தக எழுத்தாளர், வாசகர்கள திருப்தி படுத்த நினைக்காம, படிக்காதவங்களும் பார்க்கும் படியா எடுத்துருக்காங்க. காட்சிகளுக்கு காட்சி நகர்ற வேகம் அற்புதம்.

இந்த கதை, புத்தகம் பற்றிய பொதுவான கருத்து, இது சின்னப் பசங்க கதை/ படம் என்பது. ஆனா, இது ஒரு சாதாரண fantasy வகையா இல்லாமல், ஒரு திரில்லராகவும் எடுத்திருக்காங்க. அப்புறம் நிறைய, ரொமான்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை வச்சிருக்காங்க. முக்கால்வாசி Ron-Hermione-lavender முக்கோணக் காதல், Ginny-Harryக்கு இடையான ஒரு கெமிஸ்ட்ரி என ஹார்மோன்களின் வேலையாகவே இருக்கிறது. ஹாரியின் முக்கிய ரசிகர்களின் (இவர்களின் டீன் ஏஜில் தான் கதைகள் வெளியாயின) வயது 20ஐ நெருங்கி இருக்றதாலயும், அவங்க வாழ்க்கையில சந்திக்க கூடியதாவும் இருக்கிறதால இந்த மாதிரி எடுத்திருக்க வாய்ப்புகள் உண்டு (எனக்கு 20 உனக்கு 18ஆ?). அத விட முக்கியமான காரணம் ஏழாவது பாகத்த ரெண்டா வெட்டுறதால இதுலயும் சண்டைகள் நிறைய வச்சா ஓவர் டோஸ் ஆயிடும்னு பயப்படுறாரு.

படத்தோட CG பிச்சிருக்காங்க. ஆரம்பத்தில பாலத்த முறுக்கிறதில இருந்து கடைசியில அந்த குகைக் காட்சிகள் வரைக்கும் அருமையா இருந்துச்சு. Dumbledore கடைசியில உருவாக்கிற சீறிக்கிட்டு வரும்நெருப்பு வட்டம் செம சீனு. புத்தக அட்டையில வந்த காட்சி போலவே இருந்தது. Cinematographer தன்னோட பங்க சிறப்பா செஞ்சிருக்காரு. அதுவும் அந்த ஆரம்ப காட்சியில் காமரா கிளம்பி புயலோடு சென்று பாலத்தை அடையும் lengthy shot.... it was breathtaking. எடிட்டிங் செம க்ரிஸ்ப். ஆனால் சில இடங்களில் காட்சிகளை விட்டு தவ்வியது போன்று தோன்றுவது அதே எடிட்டிங்கின் குறைபாடு. கடைசியில் ஹாரி தண்ணீரில் கைவிடும் போது அவன் கைய தண்ணில இருந்து ஒரு கை பிடிக்கும்னு கதையில் படிச்சு தெரிஞ்ச என்னையவே மிரட்டுச்சுன்னா, தியேட்டர்ல பல பேர் அந்த சீன்ல ஜெர்க் ஆனாங்கன்னு சொல்ல தேவையில்ல. செம த்ரில் அந்த ஒரு காட்சி.

படம் மட்டும் பார்க்க வர்றவங்க ரொம்ப மாயாஜாலத்த எதிர்பார்த்தா, ஏமாற்றம்தான். ஏன்னா இன்னும் ரெண்டு பாகம் முழுக்க ஆக்ஷனா ரெடியாகும் போது, இதயும் அதிரடியா எடுத்தா அலுத்துப் போயிடலாம். அதான்.
மொத்தத்தில ஒரு த்ரில்லர் ஆனாலும், ஆங்காங்கே நகைச்சுவை பளிச்சிட கொடுத்திருக்காங்க.

இப்ப முக்கியமான பார்ட். முகமெல்லாம் பிரகாசமாகுதே! கரெக்ட்! நம்ம Emma Watson பத்தியும்தான். எப்பவும் போல பொண்ணு அழகுதான். அப்பப்ப ரகசியமா வெட்க்கப்பட்டு முகம் சிவக்கும்போது, அடடா.... ஹீரோவுக்கு இல்லாத சவுண்டு தலைவிக்குதான். வந்த உடனே என்னா சவுண்டு! Rupet Grint (Ron Weasley)- காமெடிக்கு யூஸ் பண்ணிருக்காங்க. Daniel Radcliffe (Harry Potter) - இவரும் ஓகே தான். Bonie Wright (Ginny Weasley) - பொண்ணு கடமைய சரியா செஞ்சுட்டு போயிருக்கு. எனக்கு இந்தப் பொண்ணயும் பிடிச்சது. எல்லாரும் எம்மா வாட்சனப் பாக்கும் போது நீ ஏன் இவளயும் பாக்குறன்னு கேட்டா அதுக்கு ஒரு extensive தியரியே வச்சிருக்கேன். அப்புறம்! Alan Rick (Severus Snape) - இவரோட நடிப்பு ரொம்ப அருமை. இவர் கேரக்டருக்கான ஆழம் இனி மேலும் கூடப்போகுதுங்கிறத உணர்ந்து நடிச்சிருக்காரு. Very defining. இது போக Professor Slughornஆ வர்ற Jim Broadbent நல்ல நகைச்சுவை கலந்த கதாபாத்திரமா வந்திருக்காரு.

திரைக்கதை எழுதிய Stephen Knovles ஐ பாராட்டியே ஆகனும். ஏன்னா இந்த புத்தகத்த திரைக்கதையாக்குறது கஷ்டம். அவ்ளோ பெரிய புத்தகத்த செல்லுலாய்டுக்கு ஏற்றாற் போல கொண்டு வந்திருக்கிறார். Director David Yates நல்லா எடுத்திருக்கார். அடுத்த பார்ட்ட்களின் நம்பிக்கையை உண்டாக்குகிறார். மொத்தத்தில் இது ஐந்தாம் பாகத்தை விட அருமையாக இருக்கிறது.

நெகடிவ் பாயிண்ட்ஸே இல்லையா? ஏன் இல்ல? மாயாஜாலத்த எதிர்பார்த்து போற நம்ம ஊரு மக்களையும், சின்ன் பசங்களையும் கொஞ்சம் ஏமாத்திருக்கு. எடிட்டிங் சில இடங்களில் கொடுத்த காசுக்கு ஓவராவே வேலை பாத்திருக்காங்க. யப்பா, சீக்கிரம் படத்த எடுத்து முடிங்கப்பா! முதல் பாகம் எடுக்கும் போது அவங்களுக்கும், ஹாரி பாட்டர் கதாபாத்திரங்களுக்கும் ஒரே வயசு. இப்போ மாடு மாதிரி வளர்ந்துட்டானுங்க. 20 வயசு ஆன பிறகு இன்னமும் 16 வயசுன்னு சொல்லிக்கிட்டு.... இந்த படத்த மற்ற இரண்டு பாகங்களுக்கு ஒரு முதல் படியாக பயன்படுத்திருக்காங்க. அதனால அடுத்த பாகங்களில் நீங்கள் சூட எதிர்பார்க்கலாம். இப்பொழுதைக்கு ஒரு நல்ல ப்டம் ரசிக்க. ஆறினாலும் அருமையான டீ.


ஹாரிபாட்டரும் மாயராஜகுமாரனும் - குறைவான மாயாஜாலங்களுடன்

தரம் - நல்ல படம். பார்க்கலாம், குறிப்பாக ஹாரியின் புத்தக ரசிகர்கள்.


டிஸ்கி- ஹாரி பாட்டரும் muggle ராஜகுமாரனும் -என் தலைப்ப யோசிச்சிங்களா?
அது நான் தான். எப்படின்னு யோசிங்க! என் பெயர் பிரபுகுமார்.

டிஸ்கி 2 : ஹாரி பாட்டர் கொட்டை வடிவில்( in a nutshell) தர முடிவு செய்துள்ளேன். ஆனால் அது பெரிய வேலை. உங்கள் ஆதரவு இருந்தால் தான் அதை செய்ய இயலும். சொல்லுங்க! ஆரம்பிச்சிருவோமா?

High definition trailer

டாப்பு அடிக்கலாம்

Filed under , by Prabhu on 7/05/2009 11:10:00 PM

19

டாப்படிக்கிறதுங்கிறது ஒருத்தர் ரெண்டு பேருன்னு இல்லாம பல பேரு கூடி ஒரே இடத்தில மொக்க போடுறது. அதுவும் பொது இடம் என்றால் மிகவும் நலம். அதுவும் தெரு முனைகளில் அடிப்பது அந்த ஏரியாவில் பெரும் புகழை பெற்றுத் தரும். ஆனா, இதெல்லாம் எங்கள மாதிரியான காலேஜ், ஸ்கூல் மாணவர்களுக்கு மட்டும்தான். பதிவுகல நடுத்தர வயது 'யூத்'களுக்கு அல்ல. இது பொதுவான வார்த்தைப் பிரயோகம்னு நினைத்துக் கொண்டிருந்த பொழுது, 'சுப்ரமணியபுரம்' படத்துல "தேநீரில் ஸ்நேகிதம்" பாடலில் சுவத்துல 'மாப்ள்' போன்ற வட்டார சொற்களோட எழுதிருப்பாங்க. (அய்யோ...விஷயத்துக்கு வாடா..) இதனால என்ன சொல்றேனா, டாப்பு அடிக்கிறது என்ற புதிய சொல்லாடலை(பிரபல பதிவர்னா இந்த வார்த்தைய அப்பப்ப சொல்லனுமாம்!) பதிவுலகத்துக்கு அறிமுகம் செய்யுறேன்.
--------------------------------------------------------------------------------------------------
எல்லாரும் குருமா, கொத்து புரோட்டா, கொத்துமல்லி சட்டினி என சரக்கில்லாதப்போ மொக்க போடுறதுக்கு ஒரு பேர் வச்சிருக்கா மாதிரி நம்மளும் ஏதாவது செய்யனுமேனு யோசிச்சப்போ, கண்ட சரக்க கலந்து கொடுக்கிறதால காக்டெயிலுன்னு வைக்கலாம்னா அது கார்க்கிட்ட, சரி நம்ம எழுதறது மேட்டரே இல்லாம சும்மா தான எழுதுறோம் சும்மானு பேர் வச்சா தமிழ்மாங்கனி காயத்ரி கோவிச்சுக்குவாங்க, புரோட்டா குருமானுனு கூட வைக்க முடியல. அதான் கொஞ்சம் regional and cultural டச்சா எங்க slangல டாப்பு அடிக்கலாம்னு வச்சேன். இதுல பல பரிமாணங்களில் மொக்க போட போறேன். Be careful!
--------------------------------------------------------------------------------------------------

சமீபத்துல ஒரு ஹை கோர்ட் குடுத்த ஒரு தீர்ப்பப் பத்தி பதிவுலகமே 'பத்தி' எரியும் நெனச்சேன். புஸ்வானமா போச்சு. கேஸே பத்தி எரியுறதப் பத்திதான். IPC377 ஒழிக்கச் சொல்லி சிபாரிசு பண்ணியிருக்காங்க. அந்த் செக்ஷன் sodomy பத்தினது. அதான் ஹோமோ செக்ஷுவாலிட்டி! ஓரினச் சேர்க்கைய குற்றமா அறிவிச்ச அந்த பிரிவத் தூக்குவதன் மூலமா ஓரினச் சேர்க்கை இந்தியாவில் சட்ட பூர்வமானதா ஆகுறதுக்கான அடையாளம் தெரிகிறது. அதுக்கு அமெரிக்காவின் புகழ் பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளா(கவிஞ)ரான 'விக்ரம் சேத்' கூட மகிழ்ச்சி தெரிவிச்சிருக்காரு. அந்த ஆளே ஓரினச்(அல்லது ஈரினச்(bisexual) சேர்க்கையாளர்ங்கிறது கொசுறு செய்தி. அடுத்து அவங்க திருமணம் செஞ்சுக்கறதுக்கு கூட சட்டம் வரலாம்!
--------------------------------------------------------------------------------------------------

வெள்ளிக் கிழமை என் பிரண்டு அஜயோட அழகர் கோவில் போயிருந்தேன். அங்க மலை மேல பைக்க நிறுத்திட்டு ரெண்டு அடி எடுத்து வைக்கல, 'தம்பி, பைக்குல எதுவும் வச்சிருந்தா எடுத்துக்கோப்பா'னு ஒருத்தரு சொன்னாரு. என்னன்னு திரும்பி பாத்தா, குரங்கு என் பைக்குல ஏறிடுச்சு. திருட்டு குரங்குங்க.! பைக் டாங்க் மேல இருக்குற pouchல கூட கை விடுதுங்க. ஒருத்தர் பைக்குல வச்சிருந்த சாப்பாடெல்லாம் எடுத்துருச்சு. என் பைக்குல ஏறுன குரங்கு, pouchஅ திறந்து பாத்துட்டு அமைதியா இறங்கி போயிருச்சு. அனேகமா என்னோட பைக் துடைக்கிற அழுக்குத் துணிய மோந்து பாத்திருக்கும்! நானும் ரெண்டு நாளா மதுரை மாவட்டச் செய்திகள பாத்துக்கிட்டு இருக்கேன், 'அழகர் கோவிலில் ஒரு குரங்கு மர்மமான முறையில் சாவு'ன்னு நியூஸ் வருமானு.
என் பைக்க பைய திறக்குது பாருங்க, திருட்டு குரங்கு!


அங்கயும் பொரி, கடலை எல்லாம் விக்குறாங்க. அத வாங்கினாலும் குரங்கு பிடுங்கிட்டு போயிரும். இந்த பொரி கடை காரங்கதான் தங்களோட தொழில டெவலப் பண்ண இந்த குரங்குகள வளர்கிறாங்கன்னு ஒரு conspiracy theory கூட வச்சிருக்கேன்.

நாங்களும் ட்ரை பண்ணுவோம்ல! அதுங்கள ஒழிக்க கமாண்டோ ட்ரைனிங்!
-------------------------------------------------------------------------------------------------
எல்லாரும் பினிசிங் டச்சா கவிதை, நகைச்சுவைனு எழுதுவாங்க. நமக்கு கவிதைன்னு நாலு வாட்டி சொன்னாலே 'ஜல்ப்பு' பிடிச்சிக்கும். அதனால ஒரு ஜோக். அதுவும் 'ஏ' ஜோக்தான் சொல்லனும்னு ஆசை. ஆனா, வரிசையில் முதல் பதிவு என்பதால சைவம்!

விவசாயியும் புது மனைவியும்

ஒரு அமெரிக்க குடியானவன்(?!) சரி, உங்க பாஷையில விவசாயிக்கு கல்யாணம் நடந்தது. அவன் தன் புது மனைவியோட குதிரை வண்டியில போறான்.
அப்போ அந்த குதிரை மக்கர் பண்ணுது. அவனுக்கு சரியான கோபம். 'ஒண்ணு' அப்படின்னு சொன்னானாம். பொண்டாட்டிக்கு புரியல!
இன்னொரு தடவ மக்கர் பண்ணுச்சு அந்த குதிர. 'ரெண்டு' அப்படின்னு சொன்னான். என்னடா, வடிவேலு கணக்கா காமெடி பண்ணிக்கினு இருக்கான், என அவன் பொண்டாடி நெனச்சா.
அடுத்த தடவ மக்கர் பண்ணப்போ, 'மூணு' அப்படின்னு சொல்லிட்டு துப்பாக்கிய எடுத்து அந்த குதிரைய நோக்கி வச்சு......டுமீல்!
அதப் பாத்த அவன் மனைவி, "அடப் பாவி மனுஷா! அநியாயமா ஒரு குதிரைய கொன்னுட்டியே! வாயில்லா ஜீவன் அது! அந்த பாவம் நம்மல சும்மா விடுமா!" என அவன கரித்துக் கொட்ட, அவன் அவளை நோக்கி திரும்பி அமைதியாகச் சொன்னான்,
"ஒண்ணு"