பெங்களூரூ வாழ்வின் கொலாஜ்

Filed under , by Prabhu on 3/10/2011 11:29:00 PM

2




இந்த சமயத்தில் நான் பெங்களூர் வீட்டில் ஐந்து பரீட்சைகளுக்கும் இரண்டு பரீட்சைகளுக்கும் நடுவிலான் இடைப்பட்ட திரிசங்கில் இருக்கிறேன். இந்த திரிசங்கு தெரியுமா? சொர்கமும் இல்லாமல் பூமியுமில்லாமல் நடுவில் தொங்கி கொண்டிருக்கிறானாம். நான் லீவு என்ற சொர்கத்துக்கும் ப்ரீட்சை என்ற ரியாலிட்டிக்கும் நடுவில்  MI Tom Cruise போல தலைகீழாக தொங்கி டைப்பிக் கொண்டிருக்கிறேன். (டைப்பி பல காலமாகிவிட்டது)

பெங்களூர் வாழ்க்கை ஒரு வகையா செட்டில் ஆச்சு. பெங்களூரென சொல்வதே ஒரு மாதிரியா இருக்கு. ஒரு மாதிரி கடை கோடியில இருக்கேன். சிட்டிக்கு வாரத்துக்கு ஒரு தடவை போகும் வகையில் இருக்கேன். என்ன செய்ய? கைப்பிடி மணல எண்ணுற அளவு வேலை இருக்கு. கேட்டா காலேஜில் மனோ பாலா மாதிரி ‘MBA MBA’ ங்கிறாங்க. ட்ரைமஸ்டர் சிஸ்டம் வேணாமென சொன்னா கேட்டாதான? இதோ ஒரு ட்ரைமஸ்டர் முடிந்தது.(இப்ப 2ம் ஆச்சு. 3வது ரன்னிங்) அதனால் பெங்களூர் லைஃப் என சொல்றத விட காலேஜ் லைஃப் என சொல்வதே பொருத்தமாக இருக்கும். இருந்தாலும் முதல் ஒரு மாசம்கோரமங்களா’……… இருந்த்தால பேசவே நிறையா இருக்கு. இல்லைன்னாலுமே நான் நிறையவே பேசுவேன்னு மதுரைக்கே தெரியும்.

கோரமங்களா கிட்ட ஒரு கேப் விட்டிருக்கேன் பாத்தீங்களா? அந்த பேரு சிங்க் இன் ஆகத்தான். நல்ல ஏரியா. என்ன குட்டியூண்டு வீட்டுக்கு 6000 ரூபாய் கேட்கிறார்கள். 20 வருஷம் முன் கிராமம். பூனைக்கும் காலம் வருது. இப்ப Forum, PVR எல்லாம் இங்கேதான். Hot and Happening. என் அண்ணன் வீட்டு பக்கம் எல்லோருக்கும் தமிழ் தெரியுது. ‘பேண்ட்’ , ‘alter’ , ’எஷ்டு’?’ என பிளறி.. சாரி.. உளறிக் கொண்டிருக்கும் போது, ‘பேண்ட் alter பண்ண 40 ரூபா ஆகும் சார்என பல்பு கொடுத்து விட்டார் டெய்லர்.

ஓவ், இப்படி ஒரு ப்ளாக் எழுத ஆரம்பித்த்து எனக்கே நினைவில்லை. மடிக்கண்ணியை நோண்டும் போது கிடைத்த்து. அப்பொழுது என்ன மாதிரியான எண்ண அலைகள் ஓடிக் கொண்டிருந்த்து என நினைவில்லை. இப்பவும் கூட விட்ட இட்த்தில் இருந்து பெங்களூரைப் பற்றிப் பேச நிறைய சரக்கு இருக்கிறது. ரெண்டு நாள் முன் தான் ஊரிலிருந்து வந்த நண்பர்களுடன் ஊர் சுற்றினேன். ஆனால் நான் சுற்றிய இடங்களைப் பற்றி பேச மூட் இல்லை. போரடிக்கிறது. வேறு ஏதாவது பேசலாம். ஏன் முதல் பத்தியில் பேச ஆரம்பித்தகுவாட்டர் கட்டிங்கிலேயே தொடரலாம்.

பாட்டு ரிலீசின் பொழுது எழுத ஆரம்பித்த பதிவு படம் வெளியாகி ஒரு மாதம் ஆன பின்னும் முடியவில்லை. எங்கயோ தப்பு நடக்குதுங்க! சிவா கோவை பாஷையில் பேசியது அவ்வளவா சுவாரசியமா இல்லைன்னாலும், படத்தோட கன்செப்சுவலைசேஷன் பிடித்திருந்தது. நல்ல ப்ளாட் தான் என்றாலும் டைமிங் காமெடி இல்லாமல் தடுமாறியது. படம் முழுக்க அங்கங்கே ஆணியில் கட்டிய வெடித்த பலூன் போல தொய்ந்து தொங்கினாலும், மொத்த்தில் சுவாரசியமான படமாகத் தான் பட்ட்து. முழுவதும் த்ராபையென ஒதுக்க இயலாது. ஒவ்வொருவரும் வைத்திருக்கும் குட்டி கதைகள் தான் படத்தில் நன்றாக இருந்தது. அதுவும் அந்த தீக்குச்சியின் கதை அந்நியன் போன்ற படங்களைன் சரியான வாரல். ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.

அதில் பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து தரும் நாயரைப் பார்த்ததும் பல மல்லு ஜோக்குகள் தான் நினைவுக்கு வருகிறது. இங்கு என்னைச் சுற்றி பல மலையாளிகள். இந்த ஊரில் பேக்கரி என்றாலே மலையாளிகள் தான். எந்த ஏரியா பேக்கரி என்றாலும் பழைய பெங்களூரில் முன்னிருந்தே அய்யங்கார் பேக்கரிகள் தான். இப்பொழுது எங்கு புது பேக்கரி திறந்தாலும் உள்ள போய், ‘யாவு பேக்கு?’ என்ற கேள்விக்கு, ‘ஒரு பிரட் பேக்கெட் மதிஎன்லாம். என்னைப் போல் மீசையை மழிக்கும் மாநிற தமிழர்கள், ‘மலையாளியானோ?’, ‘Are you malayali?’, ’மல்லு ஹை க்யா?’ போன்ற விஷமப் பேச்சுகளுக்கு ஆளாகலாம். மீசை வைத்தாலும் என்னை பார்த்துதெலுகு?’ என்கிறார்கள். அவர்களுக்கு தம் ஆட்களுடன் யாரைப் பார்த்தாலும், ‘மணவாடா?’ என்பதில் சம்பாஷணை தொடங்குகிறது. அருமையான மனிதர்கள்.

இதற்கு நடுவில் வடக்கர்கள். அவர்கள் எல்லாவற்றையும் ‘basically’ என தொடங்குகிறார்கள். ‘மகாபிரபு’ படத்தில் வெள்ளை குர்தா ஓட்டுகிட்டு வந்து பேட்டி கொடுப்பார், ‘basicalla நான் ஒரு naarth Indian’ என சொல்வார். அதுமாதிரி தான் இருக்கு. அந்த காமெடியே வேணுமென்றே ஒருவாக்குனாப்புல இருக்கு சரியான stereotyping.

ஒரு பேச்சுக்கு ஒரு புள்ளி விவரத்தை உருவுவோம். பெங்களூரில் 47% கன்னடர்கள், அதன் பின் மெஜாரிட்டி தமிழர்கள் 25%, ஆமா, இந்த ஒரு ஊரில ஒரு விதிவிலக்கு. தரவாதா மணவாடு 14%, பின்னேமல்லுக்கள்(இப்படி அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். முன்னேஅந்தப் படங்களுக்கு தானே இந்தப் பெயர்?) – 10%. ஆச்சரியமா இங்கே மற்றவர்களைவிட அவர்கள் கம்மி. ஒரு தத்துவ கதையில் சொல்வது போல இந்த நிலையும் ஒரு நாள் மாறும். Beyond this, Foreigners – 8%. பக்காவான காஸ்மோபாலிடன். வெளியே வந்தால் அம்மா திருவாதிரைக்கு செய்யும் பொறியலில் எல்லா காய்களும் இருப்பது போல எல்லாவகையான ஆசாமிகளும் சகட்டு மேனிக்கு கண்ணில் படுகிறார்கள். கலர் கலராக இருக்கிறார்கள், மெய்யாகவே. சில சமயங்களில் நன்றாக இருக்கிறது.

இது எழுதியும் 3 மாசம் ஆச்சு. ஒண்ணுமில்லாத பதிவை வருசமாக எழுதுகிறேன். இதெல்லாம் பின்னவீனத்திற்கே அடுக்காது. மூணு மாதத்திற்கு ஒரு முறை  இந்தப் பதிவை எழுதுகிறேன். கஷ்டம். அரை வேக்காடா இதை பப்ளிஷ் பண்ணிரலாமான்னு யோசிக்க்க்க்…

Comments Posted (2)

:-)))

தங்கள் கதையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_16.html

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!