Filed under , by Prabhu on 8/23/2012 12:54:00 AM
0
புது வருஷக் கொண்டாட்டம்ங்கிறதே ஒரு மொக்கையான விஷயமா படுது. ஆங், நான் RSSதனமா எதுவும் சொல்லல.புது வருடம்னா என்ன பெருசா நடந்திடப் போகுது. என்ன 2010ல் கடைசியில் இருக்கும் முட்டைக்கு பதிலா 1. இதுல போதாக்குறைக்கு வயசு வேறக் கூடித் தொலைஞ்சிரும். புது வருஷத்தை பொறுத்த வரை கிக்கான விஷயமே பல நாள் கழித்து நினைவிற்கு வரும், அந்த ‘சகலகலாவல்லவன்’ படப் பாடல் தான். இன்னும் அதற்கு ஒரு ரீப்ளேஸ்மெண்ட் இல்லை, பார்த்தீங்களா?
அடுத்த மொக்கை இடத்தில் இருப்பது, புது வருட பிரமாணங்கள். அது என்ன இன்னைக்கு மட்டும் புது முடிவுகள், மாற்றாங்கள். மாறணும் என முடிவு பண்ணிட்டா ஒண்ணாந் தேதி வரையுமா காத்திருக்கிறது. இது சுத்த பேத்தலா இருக்கே! ஒண்ணாந் தேதி வரை வெயிட் பண்ணி தொடங்கற ஆசாமிகள் தொடருவதாய் தெரியவில்லை.
இப்படி ஒரு நெகடிவ் நோட்டிலா நான் இந்த வருடத்தை ஸ்டார்ட் செய்ய வேண்டும்? எனக்கு செண்டிமெண்டுகள் அற்றுப் போய்கொண்டிருகின்றன. இதோ இந்த வருடத்தில் பார்த்த முதல் படம் 'Paranormal Activity'. பின் ‘விருத்தகிரி’ பார்க்கவிருக்கிறேன். வருட ஆரம்பத்திலேயே இரண்டு horror படத்தோட ஆரம்பிச்சிருக்கிறேன்.
ம்ஹூம்... சரியில்லை. இப்படியெல்லாம் வருடத்தின் முதல் பதிவுலேயே உருப்படாத விஷயமா எழுத நான் ஒன்றும் ராகு காலம் பார்த்து தொடங்குவதில்லை. வருட ஆரம்பம் ஒண்ணும் எல்லாம் ஒரு தினசரி வாழ்க்கைதான். இப்படியே மெல்ல பின்னால் திரும்பி பார்த்தால் தெருக் கோடியில் தெரியும் நாய் போல சிறிதாக நினைவிலிருக்கிறது போன வருட தொடக்கம்.
போன இந்த சமயத்தை ஒட்டியே ட்விட்டர், ஃபேஸ் புக்கை கட்டி அழ ஆரம்பித்தேன். பின் ஆறு மாதம் போனதே தெரியவில்லை. அந்த சமயம் போன வருடத்தின் உருப்படியான விஷயம் Christ Universityல் எம்பிஏ சேர்ந்தது தான். அதன் பின்? அவ்வளவுதான்!
ஒரு மாதிரியாக போகுதில்ல? MBA MBA. After two months MBA stops being fun. இன்னும் சில மாதங்களில் முகத்தில் சுருக்கங்கள் விழுந்துவிடும் போல. இப்படியெல்லாம் சொல்வதால் ரொம்ப கஷ்டப் படுவதாக் நினைக்க வேண்டாம். கொஞ்சம் வேலை ஜாஸ்தி. லூஸ்ல விடலாம். இதற்கு மேல் எழுதினால் சொந்த கதை சோக கதை எல்லாம் கொட்டிவிட நேரிடும் அபாயம் இருப்பதால் இப்படியே முடித்து விடுகிறேன். இந்தப் பதிவும் ஏன் எழுதின எனக் கேட்டால், இனிமேல் தொடர்ந்து எழுதவும், இன்னும் கொஞ்சம் எழுத்தை சுவாரஸ்யமானதாக்கவும் முயற்சிக்க இருப்பதை நமக்காகவவாவது நம்பிக்கை ஏற்பட Tangibleஆன ஒரு செயல் வேண்டாமா, மலை உச்சியில் இருந்து விழும் நாயகனுக்கு கையில் ஏதோ வேர் சிக்குவதைப் போலான ஒரு சடங்குதான். Symbolic.
கொஞ்ச காலம் கழிச்சு வந்து எழுதும் போது, ஏதோ புதுசா யாரு வீட்டுக்குள்ளயோ போய் சீட்டு நுனியில் உட்காருவது போலான ஃபீலாக இருக்கிறது. பதிவு ஏத்திட்டு செக் செய்கிறப்போ முன்ன அளவு மக்கள் வந்து பாக்குறதுமில்லங்கிறப்போ, ‘சரி, நியாயம் தான்’ எனத் தோன்றுகிறது. திரும்பவும் இங்க வந்து நிலைநிறுத்திக்க கொஞ்ச நாளாகும். நமக்கே இப்படி இருக்கே, குப்ரிக் மாதிரி ஆசாமிகள் எப்படி 50 வருஷத்துக்கு 12ஏ படம் எடுத்துட்டு இப்படி நிலைத்து இருக்கிறார்கள்?
இது ஒரு சின்ன பதிவுதான். ஒரு அப்சர்வேஷன் அல்லது ‘ஒ’ப்சர்வேஷன் ;).
தமிழில் சூப்பர் ஹீரோ படங்களே எடுப்பது இல்லையே என்ற நினைப்பு உண்டு. ஆனால், அந்த மாதிரி படங்களுக்கு முக்கிய தேவையான தாவுவதற்கு உயரமான கட்டடங்களும் ஆக்சிடண்ட் ஆகி வில்லனாவதற்கு தேவையான அதிநவீன ஆராய்ச்சிக் கூடங்களும் இல்லாமல் போனதாலோ என்னவோ படங்கள் வரவில்லை. முக்கியமாக காமிக் படிக்கும் வழக்கம் வேறு இல்லை. அங்கோ ஒரு 60 வருட பாரம்பரியம் இருக்கிறது. இன்னும் ஓவ்வொரு கதையும் revamp ச்செய்தால் வாங்கிப் படிக்கிறார்கள். மாதாமாதம் இழுவையாய் செல்லும் கதைகளையும் படிக்கிறார்கள்.
இதிலும் ஒவ்வொரு காலக்கட்டக்களிலும் ஒவ்வொருவிதமான மனநிலை மக்களின் இடையில் நிலவும் போது காமிக்குகளிலும் அதே நிலை இருக்கும். 50களிலும் 60களிலும் உலகப் போரின் தாக்கம் அதிகம் இருந்தது. உதாரணம் - Marvelன் Captain America. அதன்பின் எல்லா கதைகளிலும் குளிர் போரின் தாக்கம் இருந்தது. கதைகளில் சோவியத் சூப்பர் வில்லன்கள் இருந்தார்கள். இதே போல DC comicsம் Golden Age, SIlver Age, Modern என கதையை புதுப்பித்துக் கொண்டே இருப்பார்கள். மார்க்கெட்டும் அவ்வப்பொழுது விழுந்து எழுந்திருத்துக் கொண்டே இருக்கும்.
இதே போல போன decade ல் காமிக் மற்றும் அதன் சார்ந்த படங்களும் விழுந்தபின் மறுமலர்ர்ச்சியை SpiderMan மூலம் கண்ட பொழுதுதான் நம் மக்களுக்கும் டப்பிங்கில் அவற்றை பார்க்க ஆரம்பிக்க, அந்த படம் ஓடிய தைரியத்தில் இன்ன பிற காமிக்களும் திரைக்கு வர ஆரம்பித்தன.
இப்படியே அங்க வெட்டிவிட்டு நம்ம ஊருக்கும் வருவோம். நம்ம ஊரிலும் காமிக் தீவிர ஃபாலோயிங் இருந்தது. அதுவும் இப்பொழுது டப்பிங் படம் போல டப்பிங் காமிக்குள் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தன. எனக்கு இவைப் பற்றி நேரடி அனுபவம் அதிகம் இல்லை. தமிழ் காமிக்குகளின் இறுதிகாலத்தை ஒட்டியே என் சிறுவயது இருந்தது. அதனால் என்னதான் காமிக்குகள் படித்திருந்தாலும் பின்புலன் தெரிய வாய்ப்பில்லை. ’கருந்தேள்’ க்கு அதிகம் தெரிய வாய்ப்புண்டு. இங்கே ப்ளாக்குகளிலேயே இதற்கு அதிக மக்கள் உலவுகிறார்கள். நிறைய பழைய வரலாற்றை எழுதுகிறார்கள்.
தமிழ் காமிக்குகளின் முன்னோடி அம்புலிமாமாவாகத் தான் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. சின்ன வயதில் வெளியூர் போகும் முன் பழைய புத்தகக் கடையில் இருந்து அம்புலிமாமா வாங்கிக் கொடுப்பார் அப்பா. திடீர் பயணமென்றால் பேருந்து நிலைய தமிழ் காமிக்குகள். அதிலும் இரண்டு பதிப்பகங்கள்தான் எனக்கு தெரியும். ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ். நான் படித்தது பெரும்பாலும் லயன் தான். கொஞ்சம் கவ்பாய், மாயாவி மற்றும் கருஞ்சிறுத்தை டைப் சரக்குகளைப் படித்திருக்கிறேன். இதில் சூப்பர் ஹீரோக்கள் இல்லை. மாயாவி The Phantomல் இருந்து வந்த விஜிலாண்டி ரகம்.
டைட்டிலுக்கு வந்தாச்சு. எழுத ஆரம்பிச்சதே ஏன் தமிழில் அல்லது இந்தியாவில் சூப்பர் ஹீரோ அல்லது விஜிலாண்டி டைப் படங்கள் இல்லை என்பதுதான். சூப்பர் ஹீரோ உங்களுக்குத் தெரிந்தது தான். பூச்சி கடித்ததில் இருந்து பிற கிரகங்களில் வந்தவன் என்கிற வகையில் பல காரணங்களால் ஆகிறவன். இந்த வகையில் நம் ஊரில் வந்த ஒரே சரக்கு ‘சக்திமான்’ - சூப்பர்மேனின் rip-offஆக இருந்தாலும் இந்தியாவின் ஆகமவிதிகளின் படி அமைந்த கதை. நல்ல ரெஸ்பான்ஸ் பார்வையாளர்கள் இருந்தாலும், ரொம்பவும் நீளுவதாக மக்கள் கருதியதால் தொடர் முடிந்தது. நம் மக்கள் வில்லனை முடித்து சுபம் போட்டுவிட எண்ணுகிறார்கள். அறுபது வருஷமாக ஆனானப்பட்ட சூப்பர்மேன் கண்களிலேயே கண் விட்டு ஆட்டும் Lex Luthor இன்னும் இருப்பதை யாரும் அங்கே கேட்பதில்லை. மக்களின் மனநிலை வித்தியாசம் அந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் இருப்பதே இதற்கு காரணம்.
அடுத்து விஜிலாண்டி(Vigilante). விஜிலாண்டி படங்களும் ஒரு வகையில் நம் ஊரில் இல்லை. விஜிலாண்டி என்பது முகமுடி மாட்டிக் கொண்டு எந்த சூப்பர் பவரும் இல்லாமல் சாதாரண பலத்தாலோ இல்லை உபகரணங்கள் கொண்டோ அநியாயத்து எதிராக சண்ண்டையிடுபவன். சோ, நியாயப்படி பார்த்தால் Batman சூப்பர் ஹீரோ இல்ல. ஒரு vigilante. இதே போல Punisher, Dare Devil என ஒரு லிஸ்ட் இருக்கு.
பக்கத்து ஆராய்ச்சி கூடத்தில் வேலை செய்யும் நண்பனும் அறைத் தோழனுமான் அஜயுடன் ரொட்டி சாப்பிடும் நேரத்தில் விவாதம் தொடங்கியது. பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டாவென ஒரு நூற்றாண்டாக தேய்ந்த பதிப்பில் முத்துராமன் கேட்டது பற்றி அல்ல. அவள் அழகா என்பதில். அவனுக்கு நான் அவளைப் பின்தொடரும் இந்த நேர விரய பழக்கங்கள் ஆகவில்லை. ஆனால், நானோ அந்த தருணங்களைச் சேமித்து அசைபோட்டு செரிக்கும் ரகம். அவனிற்கு ஆராய்ச்சியைத் தவிர எதிலும் பொறுமை கிடையாது. கழிக்கும் நேரத்திலேயே பல் விளக்கும் ஜாதி அவன். நானோ கழிப்பறையில் உலகை சிருஷ்டிப்பவன்.
பேச்சை மாற்றும் நோக்கோடு ஆராய்ச்சியைப் பற்றி பேசினால் அவனது கூடத் தலைவரின் ‘ஐன்ஸ்டைன்’ கனவுகளைப் பற்றிய பினாத்தல் தொடர்ந்தது. லைப்ரரியின் வாசலில் சிகரட் பதிலாக வெற்றுப் புகை கக்கும் எலெக்ட்ரானிக் சிகரட் உதட்டுடன் பேசிக் கொண்டிருக்கும் எனக்கு, அவள் வந்தால் சிகரட்டை மறைத்து நல்லவனாக முயற்சிக்காகவா? அப்படிநல்லவனாக பிம்பம் ஏற்படுத்துவதும் கெட்ட எண்ணமோ? நீரில் விழுந்த நாய் போல மிகைப்படுத்தப்பட்ட எண்ணங்களை சிலுப்பி உதறுகிறேன். அவள் வருகிறாள்.
அருகிலிருக்கும் அஜய் முதுகில் இடிக்க, வருபவளிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்,
'என் பெயர் அன்ஷு. ச்சீ... அன்ஷூ, என் பெயர் ராஜ்’,
ம்ஹூம்.. இப்படி இல்லை, அவளிடம் கேட்டேன், "நீ அன்ஷூ தான? கவிதா சொன்னாங்க”.
அவள்,”யாரு கவிதா?”.
“அதானே? யாரு? தூக்கத்தில் உன்னிடம் பேசச் சொன்னவள்.”
அவள் புருவம் உயர்த்தும் பொழுது,”இது ஜோக், ஹா.. ஹ.. என் பெயர் ராஜ்.” என்ற பொழுது அவள் புருவம் உதடு மேல் நோக்கி வளைந்தது..
ம்ம்ம்.. இல்லை... இப்படியும் வேண்டாம் என ஆயிரத்தெட்டு சிமுலேஷன்களுக்கு மத்தியில் schizophreniaவின் அறிகுறிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பிதேன்.காதல் ஒரு மிகைப்படுத்தபட்ட உணர்ச்சியாக படுகிறது. 21ம் நூற்றாண்டின் இறுதியில் காதலிற்கு புனித பட்டம் குடுப்பதையோ அது நம்மைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தமாக இருப்பதையோ நான் விரும்பவில்லை.
அஜயிடம் இருந்து நான் பிரிந்து எனது ஆராய்ச்சிக் கூடத்துக்கு சென்ற பொழுது பே.ரா. ராமசாமி உணவை உண்டு கொண்டிருந்தார். இப்பொழுது போனால அதை விட்டுவிட்டு மனுஷன் ஆராய்ச்சி பற்றி பேச ஆரம்பித்து விடுவார். நேரம் கொடுப்போம்.
இவரின் ஆராய்ச்சிக்கு எனக்கு மூன்றாவது கண் தேவைப்படுகிறது. கால எந்திரம் செய்கிறார். உங்களுக்கு கால-வெளி தொடர்புகளைப் (Time-Space continuum) பற்றித் தெரியுமா? தெரியாமல் எப்படிப் போகும். நூற்றாண்டு காலமாக கதைகளிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்பீர்கள். அதைக் கொஞ்சம் திரித்தால் இவர் தியரி வந்து விடும். காலம்-வெளி இரண்டையும் கலந்த ஒரு 4 பரிமாண உலகை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். Graphல் குறிக்க முடியுமா எனக் கேட்டால் கொஞ்சம் கடினமானாலும் இப்பொழுது இருக்கும் நேரத்தை ரெஃபரன்ஸாக வைத்து பின்னோக்கி அல்லது முன்னோக்கி கணக்கிடலாம். சிறு அவகாச நேரங்களுக்குள் செய்வது இதனால் கடினமாகிறது. இந்த தேவையில்லாத சரக்கு எதற்கு. காரில் போவது போல காலவெளியிலும் ஸ்ட்ரெயிட்டா போய் லெஃப்டுக்கா கட் பண்ணி நேரா போய் யு-டர்ன் போடமுடியும். அதுதான் விஷயம்.
இதற்கு மேல் அறிவியல் வேண்டாம். சில நாட்களாக ஒரு மாதிரியாக இருக்கிறது. அதிகபட்சமான சந்தோஷத்தில் ஏதோ தொண்டைக்குள் எழுவது போல. அஜயிடம் கேட்டால், ’மசக்கையாய் இருக்கிறாய், மாங்காய் வாங்கி சாப்பிடு’ என்பான். அவள் மேலான ஈர்ப்புதான் காரணம் என நினைக்கிறேன். இது 20ஆம் நூற்றாண்டின் எச்சமான சில உணர்வுகள். மனம் வழக்கத்திற்கும் மாற்றத்திற்கும் நடுவில் சிக்கித் தவிக்கிறது. கட்டமைப்பிற்குள் வாழும் மனது, அந்தக் கட்டமைப்பில் வாழுகின்றதன் செக்குமாட்டுத்தன்மையின் வெறுப்பில் உழல்கிறது. இதற்கு இதுதான் செய்தல் வேண்டுமென்ற கட்டாயங்கள் பிடிக்கவில்லை. எல்லாரும் இது போல்பேசுவதால் நானும் அவளிடம் போய் ஏதாவது பேச வேண்டுமா? இல்லை, என் அவசியத்திற்க்காக, எனக்கு அவளைப் பிடிப்பதனால் நான் பேசித் தான ஆக வேண்டுமா என மண்டையடிக்கிறது. சமூகத்தில் பின்தொடருவதால் சில பழக்க வழக்கங்களை நமக்குத் தேவையில்லாமலே கடைபிடிக்கிறோம். அதில் ஒன்று இதுவோ என தோணுகின்றது.
ராமசாமி வர, ‘ஏன் சார், சாப்பிடவில்லையா?’ என்றேன்
‘சாப்பிட்டேனே’.
‘நான் பார்த்துக் கொண்டிருந்தேனே’
‘டைம்லைன் இருக்கே’
‘சாப்பிடக் கூட டைம் ட்ராவல் அதிகமாப் படலை?’
‘இல்லை. இது காலப் பயணம் இல்லை. நாம் அவ்வளவு தூரம் போகவில்லை’
’என்ன? பின் நாம் செய்த வேலை அனைத்தும்? சோதனைக்கு தயாரென சொன்னது?’
’‘ரியாலிட்டி வார்ப்பிங்’ தான் நிஜமாக நாம் கண்டுபிடித்திருப்பது’
என் பார்வையை கண்ட அவர், ’ நீ இருப்பது ஒரு ரியாலிட்டி. ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு செயலும் அதற்கேற்ற பின்விளைவுகளைத் தீர்மானிக்கின்றன. உன்னுடைய தேர்வுகளே உன் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. இது போல பல்லாயிரக்கணக்கான கட்டமைப்புகளின் (சிஸ்டம்ஸ்) ஒன்றுடன் ஒன்று இயைந்த தேர்வுகளும் வேறுபாடுகளுமே வெவ்வேறு உலகம் அல்லது ரியாலிட்டியை உருவாக்குகின்றன. உதாரணத்திற்கு கிளம்பும் முன் ஒரு காபி குடிக்கலாமென்ற் ஆசையில் கடைக்கு சென்று, வண்டியை தவற விடுகிறாய் அல்லது காபியை தியாகம் செய்து விட்டு வண்டியை பிடித்து விடுகிறாய். இப்பொழுது உன் வாழ்க்கையில் இரண்டு ரியாலிட்டிகளாக பிரிகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் பயணிக்கிறது. இதன் மூலம் ஒரு ரியாலிட்டியில் கூலித் தொழிலாளியாகவும் இன்னொரு ரியாலிட்டியில் ராஜாவாகவும் இருக்கலாம். வாழ்வு தேர்வுகளினால் ஆனது. கால-வெளி இழைகளின் இயற்கையான பிழைகளின் மூலம் நீ பயணம் செய்து வேறு ரியாலிட்டியின் வேறு காலத்திற்குக் கூட செல்ல முடியும். நான் மதுரையில் யாருடன் உணவு உட்கொண்டேன் என்றால் நீ நம்ப மாட்டாய்.’ என்க...
’இது நம்பும் படியாகவா இருக்கிறது. அவர் 12ம் நூற்றாண்டு. அழிவதற்கு முன்பான சில வெற்றிகளின் விளிம்பில் இருந்த சமயம். நீயும் நம்புகிறாயா’ என்றான் அஜய்.
நானே பயணம் செய்தேன் என்ற பொழுது அவனுக்கு நேற்று தின்ற கோழி வயிற்றில் இருந்து கூவுவது போல உணரவே கழிவறை சென்று அது வெளியேறிவிட்டதை உறுதி செய்து கொண்டான்.
எனக்கு மௌரிய காலத்து விஷயம் ஏதாவது கிடைக்குமா எனக் கேட்ட அஜயிடம், ‘நான் அடுத்து போன காலத்தில் அரசரே கிடையாது. நூற்றுக்கணக்கானவர் சேர்ந்து தான் ஒரு நாட்டுக்கு ராஜா ’ என்றேன்.
‘நம்ம ஊர்ல இருக்கிற மாதிரி அரசர்?”
“ம்ஹூம். மக்கள் தான் தேர்ந்து எடுக்கிறார்கள், ஒரு குழுவை”
’ஏதோ விஞ்ஞானப் புனைவில் படிப்பது போல கேவலமான ஒரு utopia வாக படுகிறதே? ஏதாவது ஆதாரம்?’ எனக் கேட்ட அஜயிடம் எதோ பொருளை எடுத்துக் காண்பித்தான்.
’என்ன இது?’
’இது புத்தகம். மரத்தால் செய்த இதை காகிதம் என்கிறார்கள். அந்த உலகத்தில் எல்லாவற்றையும் இதில் பதித்து தான் படிக்கிறார்கள்’
அதை வாங்கி பிரித்தான், “இரு அவளுக்கு ஒரு நான் - மறுபதிப்பு”
’தீராக் காதலுடன்’ யாரோ எழுதி அதன் கீழ் பவுண்டன் பென் குழிகளில் வழிந்த மை, ‘Anshu D' எனப் பரவியிருந்தது.