எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு!

Filed under , , by Prabhu on 6/16/2009 09:02:00 AM

3

காதல்......ம்ம்ம்ம்....அது ஒரு தனி ஃபீல் தான் (இவனும் ஆரம்பிச்சுட்டானா, டேய் நல்லாதானடா இருந்தீங்க?). ஆனா அது என்னன்னு தான் புரியல.(டேய், ஏற்கனவே மண்ட காஞ்சு போய்தான் இங்க வர்றோம். இங்க நீயுமா?). சரி இப்படி சொல்லலாம், காதல்னா ஒரு அரை நிமிஷம் என்னன்னு யோசிங்க? இப்போ சொல்லுங்க, அப்படின்னா என்ன? ஒண்ணும் தோணலயா? இததாங்க சொன்னேன். இதுக்கு விளக்கம் கொடுக்க முடியாது.(முடியல....)


நானும் பல பெண்களை லவ் பண்ணி பாத்துட்டேன். என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? லவ் பண்ணவள பாத்துக்கிடே இருந்தா நம்ம கண்ணு முன்னாடியே இன்னொருத்தன் அவள லவ் பண்ண ஆரம்பிச்சதுதான் நடந்தது. ஆனா நம்ம லவ் பண்றத விட அவனவன் லவ் பண்ற கதைய கேட்டுப் பாருங்க, ரொம்ப சுவாரசியமா இருக்கும். அவனவன் படுற கஷ்டத்தைக் கேட்டா காமெடியா இருக்கும்.(இந்த ரணகளத்திலயும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குது?)


சில பேரு பிறக்கும் போது கடவுள் அரைக் கிலோ மச்சத்த பார்சல் பண்ணி கூடவே வச்சு அனுப்புவாரு போல!(கிலோக் கணக்கில இருந்தா அது கேன்சர்டா!). எங்க போனாலும் அவனுங்கள பொண்ணுங்க துரத்துறாங்க. நம்ம ஒரு பொண்ண சைட்டே அடிச்சாலும் திரும்ப ஒரு லுக்க கூட விட மாட்டேங்றாங்க. மேலூர்ல இருந்து எங்க காலேஜ் வந்து படிக்கிற ஒருத்தன் முதல் வருஷமே எங்க மதுரை சிட்டில(நாங்களும் சிட்டிதான்பா! படத்துலதான் ஏதோ கிராம்ம் மாதிரி காட்டி கிண்டல் பண்றாய்ங்க!). ஒரு ஸ்கூல் பொண்ண காலையும் மாலையும் பின்தொடருவத ஒரு வேண்டுதலாவே பண்ணிக்கிடிருந்தான், அவ மதிக்கல. அவன் படிக்காம நாசமாப் போறத பாத்து ஒருத்தன் ‘ஏண்டா இப்படி’ன்னு மொக்கய போட்டு அவன திருத்தி வழிக்கு கொண்டுவந்தா, இப்போ அவ வந்து இவன லவ் பண்றேங்கறா!(இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ்!). இப்போ அவன் அவள ஏத்துக்கல; நான் படிக்கனும்னு சொல்லிட்டான்(டேய், நான் உன்ன காலேஜ்லயே பாத்த்தில்லயே!)


இதுக்கு அடுத்த வருஷம் கடைசியில இவன் ஒருத்தியப் பத்தி பேசிட்டிருக்கறதப் பார்த்து, “ரமணி, நீ இன்னும் அவள விடலயா?” எனக் கேட்ட்துக்கு, பக்கத்திலிருந்தவன் “இது வேற ஒருத்திடா. அவங்க ஊர்க்காரி.” எனக் கூறிவிட்டு, “அவன் கிடக்குறான், நீ சொல்லுடா மாப்ள” எனக் கதையில் மூழ்கினான். என்ன்ன்னு கேட்டா அது எசகுபிசகான அவன் காதல் லீலைகள். ஏண்டா இப்படி அலையுறீங்கன்னு கேட்டுக்கிட்டே நானும் அவன் பக்கத்துல உக்காந்தேன் (ஹி.. ஹி… க்க்ர்ர்ர்ர்… த்தூ…அப்படி துப்பிட்டு மேல படிங்க).


மூணாவது வருஷம் திரும்ப லேட்டா வர ஆரம்பிச்சான். ஏண்டானு கேட்டப்போ மொத்தக் கதையையும் சொன்னான். அந்த பொண்ணு இன்னொருத்தன் பொண்டாட்டியாம்(க்க்ர்ர்ர்ர்….). 18 வயசுலயே அவள கட்டிக்கிட்டு துபாய்க்கு போய்ட்டான் புருஷன்காரன். அந்த கேப்பில தான் இவனோட லவ்வு! ஒருநாள் அவளுக்கு ஃபோன் போட, அவ மாமனார் அத எடுக்க, இவன் ஜலதோஷமா, இப்படி இருக்கு குரலுண்டிருக்கான். அப்புறம் எல்லாத்துக்கும் தெரிஞ்சு போய் அவன அவங்கப்பா கொஞ்ச நாள் மாமா வீட்டில இருடான்னு அனுப்பி வைச்சுட்டார்..

“ஓ, அதான் லேட்டா?”

“அதனால இல்லடா”

“பின்ன?”

“இல்ல, இப்ப நான் நத்தத்திலிருந்து பஸ்ல வரேன்….”, இழுக்கிறான், இது சரியில்லயே?

“அதத்தான் சொன்னியே”

“அதுல வரும்போது தினமும் அர்ச்சனான்னு ஒரு பொண்ணும் வருது”

நான் ஒருமாதிரி பாக்குறதப் பார்த்த அவன், “ சும்மா பேசிட்டிருப்போம்டா. பஸ்ல போர் அடிக்கும்ல”

“சரி” என நான் அவன் பேச வாய்ப்பு கொடுத்தேன்.

“அவ இத எழுதிக்குடுத்தாடா. இத என்ன்ன்னு படிச்சு சொல்லுடா?”

அது ஹிந்தியில் எழுதிருந்துச்சு, அதான் என்கிட்ட வந்திருக்கு. அதப் பாத்துட்டு நான் அவன கேவலமா பாத்ததும் அவனுக்கு புரிஞ்சிருச்சு. ஆர்வமாக் கேட்டான், “என்னடா போட்டிருக்கு?”

“ஆங்…. அவளுக்கு எய்ட்ஸாம், மறுவாழ்வு குடுக்குறியான்னு கேட்டிருக்கா”

“டேய், விளையாடாதடா. என்ன போட்டிருக்கு”

“ஆமா, நீ சானியா மிர்சா, உன்னோட டென்னிஸ் விளையாடுறோம். போடாஆஅ…… வேற என்ன இழவ எழுதி இருக்கப் போறா? உன்னை காதல் செய்கிறேன்றத எழுதி காதலுக்கு பதிலா மட்டும் டாஷ் போட்டிருக்கா, ஃபில் பண்ணி அனுப்புங்க, அக்கா இதயத்த பொட்டலத்துல தந்தாலும் தந்திருவாங்க”(வயித்தெரிச்சல கிளப்புறானுங்க, சார்)

“மாப்ள், நீயே பதில் எழுதிருடா”

“இந்த பொழப்புக்கு….”

“கோவிச்சுக்காதடா!”

“சரி, பழகின பாவத்துக்கு!”

“தாங்கஸ்டா! இதோட அவள பத்தி முழுசா எழுதிக் கொடுத்திருக்காடா” அது பார்க்க அந்நியன்ல அம்பி எழுதுன மாதிரியே இருந்துச்சு.

“டேய், இவ உன்ன லவ் பண்றாளா? , இல்ல உன்கிட்ட வேலை கேக்குறாளா? அவ ஸ்கூல் பொண்ணுதானான்னு பாத்துக்கோடா. ஜெராக்ஸ் கடையில வேலை பாக்குறவளா இருக்கப் போகுது!”

“மச்சான், தங்கச்சியப் பத்தி தப்பா பேசாத”

“இப்போதான் லவ் லெட்டர் எழுதுன. தங்கச்சின்ற?”

“உனக்கு சொன்னேன் டா”

“அடி செருப்பால! ஏண்டா மொன்ன நாயே, உன் சவுரியத்துக்கு என்னய உருட்டுறியா? ஓடி போயிரு”

“கோவிச்சுக்காத மாப்ள”, எனக் கட்டிப் பிடித்து கூல் டிரிங்க் வாங்கிக் குடுத்து கூலாக்கிவிட்டு போனான்.


கொஞ்ச நாள் கழித்து வேலண்டைனுக்கு சிறிது நாட்கள் முன்பு,

“மச்சான், வேலண்டைன் டே வருதுடா”

“அதுக்கு நான் என்ன பண்றது. நான் என்ன லவ்வா பண்ணுறேன்”(அத வேற ஞாபகப் படுத்தி கடுப்பேத்துறானுங்க சார்)

“அதுக்கு இல்லடா”

“வேற் என்ன ம்#%$&%#”

“வேலண்டைன் வருதுல. உன் தங்கச்சிக்கு என்ன வாங்கிக் கொடுக்ற”

“டேய், தங்கச்சிக்கு வேலண்டைன்ல எதுவும் வாங்கிக் கொடுக்க்க் கூடாது. வாங்கிக் கொடுத்தா அது தங்கச்சியா இருக்காது. என்ன சொல்ற, வாங்கிக் கொடுக்கவா?”

“உன்கிட்ட கேக்குறதுக்கு நான் கந்து வட்டிக்கு கடன் வாங்கி செலவு பண்ணிறலாம்”.

அதுக்கப்புறம் ஒரு நாள் அவனுக்கும் அவளுக்கும் சண்டைனு வந்தான்.

“என்னடா ஆச்சு” எனக் கேட்டேன்.

“அவ பண்ணுனது பிடிக்கலடா”

“என்ன பண்ணுனா”

“அவ தங்கச்சிக்கு பிறந்தநாள்னு சொல்லவே இல்ல”

“தங்கச்சிக்குதான, அதனால என்ன? அதுக்கு என்ன சொல்லு”

“எனக்கு கோவம் வந்திருச்சு. அவளப் பார்த்து ‘எனக்கு உன்ன பாத்த்தும் புடிச்சிருச்சு, உன் தங்கச்சிய ரொம்பப் பிடிச்சு போச்சு. அவ பிறந்த நாளை எப்படி சொல்லாம விட்ட”ன்னு சொல்லிட்டு சண்டைய போட்டுட்டு வந்திட்டேண்டா. திரும்ப எப்படி பேசுறதுன்னு தெரியல”ன்னு சொன்னான்.


நான் ‘மௌனம் பேசியதே’ சூர்யாவ மனசில வச்சுக்கிட்டு,”நிறுத்துடா விளக்கெண்ணெய். நல்லாத் தானடா இருந்தீங்க. அப்புறம் எங்கிருந்துடா வந்துச்சு இந்த கரும்ம். காலைல கொண்டுபோய் விடுறதும், சாயந்திரம் கூப்பிட போறதும், சண்டை போடுறதும், அதுக்காக நீங்க சேருற வரைக்கும் பக்கத்தில இருக்கறவன பிடிச்சு மொக்க போடுறதும், எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு”, என கிழிச்சுட்டேன்.


பின்ன, என்ன பாத்தா மைக் மாதிரியா இருக்கு? போறவன் வர்றவன் எல்லாம் மொக்க போடுறான். ஆனா ஒண்ணு (ஆனா ஒண்ணுதான், ஆவன்னாதான் ரெண்டுன்னு சொல்றவங்களுக்கு கேர்ள் பிரண்டே கிடைக்காமல் போக! கல்யாணமாயிடுச்சேன்னு கொக்கரிக்கரவங்களுக்கு புதுசா கிடைச்சு அது பொண்டாட்டிக்கும் தெரிஞ்சிரும்). கைகால் உடைஞ்சவன்டயும் காதல் பண்றவன்டயும் சிக்கவே கூடாது. சிக்கினா சவ சவன்னு அதப் பத்தியே பேசி சாவடிச்சுருவானுங்க.

உண்மை நண்பன்

Filed under , by Prabhu on 6/16/2009 08:35:00 AM

1

"உண்மை நண்பன்? உண்மை நண்பன்னா சொல்ற? உண்மை நண்பன்னா என்னன்னு நினைக்கிற? உன் மேல பாசத்த கொட்டுறவன்தான் நண்பன்னா, அப்ப அம்மா யாரு? உனக்கு நல்ல புத்தி சொல்றவந்தான் நண்பன்னா, அப்பா யாரு? நீ கஷ்டப்படறப்போ உனக்கு தோள் குடுத்து ஆதரவு சொல்றவந்தான் நண்பன்னா, அப்ப மனைவிய என்னன்னு சொல்றது? இதெல்லாம் நட்புன்னு நினைச்சுட்டிருக்கயா?..ச்சு...ச்சு... இல்ல, இது இல்ல. உண்மையான நட்பு என்ன தெரியுமா? நீ செய்யறது ஒத்துவராதுன்னு தெரிஞ்ச பிறகும் உன்னை இப்படி போகவிட்டேனா பின்னாடி வருத்தப்படுவ." எனக் கூறிய அஜய், சிறிது இடைவெளிவிட்டு, "என்ன நான் சொல்றது புரியுதா?", என்றான். எதிரே அமர்ந்திருந்த வெங்கடேஷ் கண்ணாடிக்கு பின்னிருந்த விழிகளைக் கண்டபோது அவன் தன்னோட பேச்சை ஏத்துக்கிட்டது மாதிரி அஜய்க்கு தோணுச்சு. அவனும் யோசனையுடன் மெல்ல தனது தலையை அசைத்தபோது என்னவோ பிசைவது போல இருந்தது.


அஜய் அவனைப் பார்த்த பார்வையில் ஒரு கழிவிரக்கம் இருந்தது. அவனுக்கும் வெங்கடேஷுக்குமான உறவு என்றுமே இப்படிதான். முடிவெடுக்கும் நிலையில் அவன் தான் இருக்கிறான். அவனுக்கு சில சமயம் குற்ற உணர்ச்சி தோன்றினாலும், அது நிலைப்பதில்லை.

இவர்கள் இருவரும் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாகவே படித்தார்கள். எப்பவும் ஒன்றாகவே இருப்பார்கள். எப்பொழுதும் வகுப்பில் வெங்கடேஷ் படிப்பில் முதல் இடத்திலும் அஜய் இரண்டாவது இடத்திலுமாக இருப்பார்கள். ஆனால் இருவர்களில் அஜய் தான் எல்லாருக்கும் பிடித்தவன். அவன் எப்பொழுதும் சிரித்த முகமாக எல்லோரோடும் பேசிக்கிட்டு இருப்பான். கொஞ்சம் அறிவும், கொஞ்சம் அழகும் இருந்தால் வெற்றி நமக்கு இவ்வுலகில் உறுதி செய்யப்பட்டு விடுகிறது. அவனது விஷயத்தில் முதலாவதை வளர்த்துக்கொண்டான், இரண்டாவதை இயற்கை கவனித்துக் கொண்டது.

ஆனால் வெங்கடேஷின் நிலையோ நேரெதிரானது. அவன் ஒரு அதிக பவர் கண்ணாடியுடன், எந்த வித உணர்ச்சியும் வெளிப்படுத்தாத முகத்துடனும் வகுப்பில் அமைதியாக உட்கார்ந்திருக்கும்போது யாரும் அவனை பெரிதாக பொருட்படுத்தாதது பெரிய விஷயமில்லயே. அதுவும் இவன் நட்புருவாக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில் இது ஆச்சரியப் படவேண்டிய விஷயமாக தோன்றுவதில்லை. ஆனாலும் இவனிடம் அஜய் நட்பாக இருப்பதன் காரணம் யாருக்கும் விளங்குவதில்லை. கேட்டால், "அவனுக்கு என்ன விட்டா யாரு இருக்கா?", எனக் கூறுவான்.

அஜய் பாடத்தில் எல்லா உதவியும் வெங்கியிடமிருந்தே பெற்றுக்கொள்வான். கணக்கிலிருந்து எல்லாமே இவனிடமிருந்தே கற்றுக்கொள்வது யாருக்கும் தெரியாது. வெங்கி செய்த வேலையையே செய்யும் அஜய் பாராட்டைப் பெற்றுக்கொள்வான். இதே மாதிரி 'Young scientist Research Program"ல் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்து, வெங்கி பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது. வெங்கிக்கும், இன்னொருத்தனுக்கும் கிடைத்தது, அந்த வாய்ப்பு. அப்பொழுது அஜய், "இப்போ எதுக்குடா இதுக்கெல்லாம் போற? போர்ட் எக்ஸாம் வருதுடா. அத விட்டுட்டு இதுக்கு போய் என்ன செய்யப்போற?" எனக் கேட்டான். "பின்னாடி யூஸ் ஆகும்ல, இந்த ரிசர்ச் சர்டிபிகேட் எல்லாம்" எனக் கேட்ட வெங்கியிடம் "அது ஒண்ணுக்கும் தேறாதுடா. 10thமார்கில்லாம அதெல்லாம் வேஸ்ட்." என்றான். வெங்கி, தான் வரவில்லை என ஆசிரியரிடம் கூறிவிட்டான்.

அதன் பிறகு சிறிது நாள் கழித்து, தொடர்ந்து சில நாள் அஜயை காணாமல் தேடிக்கொண்டிருந்தவனிடம், அவன் YSRPக்கு போயிருப்பதாக ஒருவன் சொன்னபோது ரொம்ப வருத்தப்பட்டான். அஜய் வந்ததும், "வெங்கி, நீ போகமாட்டேன்னு சொன்னதும் அடுத்த மார்க் வாங்கின நான் தான் போகனும்னு சொல்டாங்கடா. மறுத்து பேசமுடியாதபடி கண்டிப்பா சொல்லிட்டாங்க" என சொன்னான். ஆறுதலடைந்த அவன், "சரி, விடுடா."என்றான்.

அடுத்து இதே மாதிரி இவர்கள் ஒன்றாக இயற்பியல் Ph.D வரை முடித்தனர். அதிலும் வெங்கி தன்னுடைய வாய்ப்பை இழத்தலும், இவனுக்கு அது எதிர்பாராமல் கிடைத்தலும் தொடர்ந்தது. அவனோட ப்ராஜக்டும் கடைசியில் இவனுக்கு வந்தது. அவன் உதவியிடன் முடித்த இவனுக்கு உடனே IISc.,யில் சயிண்டிஸ்டாக வேலை கிடைத்தது. பல்கலைக்கழகத்தில் பேராசிரியரான வெங்கியிடம், அவ்வப்போது ஆலோசனை கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தான். அவனிடம் சில புதிய ஐடியாக்களை வாங்கி அதைக் கொண்டு புது ஆராய்ச்சிகள் செய்த அவன் மிகுந்த புகழை அடைந்தான். இந்தியாவில் நடிகைகள், கிரிக்கெட் வீரர்களையும் தாண்டி பிரபலமான சில விஞ்ஞானிகளில் ஒருவனாய்த் திகழ்ந்தான். இந்திய அரசின் விஞ்ஞான வளர்ச்சித் துறையின் தலைவனாக பொறுப்பேற்கவும் செய்தான்.

ஒருநாள் அவனைத் தேடி உதவி கேட்டு வெங்கி அவன் அலுவலகத்திற்கு வந்தான். அவனிடம் ஒரு திட்டமிருந்தது. கடல் நீரை Reverse osmosis முறையில் சுத்தமாக்கி உப்பை நீக்கி குடி நீராக்கும் திட்டம். அது தனது வாழ்நாள் சாதனையாக கருதினான். மற்ற எல்லா முறைகளைக் காட்டிலும் குறைந்த செலவில் நிறைய நீரை குடி நீராக்கும் திட்டம். அதை செயலுக்கு கொண்டுவர அஜய் உத்வியிருந்தால் எளிதாகுமென நினைத்த வெங்கி அவனிடம் வந்தான். அவன் திட்டத்தை விடாமல் முழுதாகக் கேட்ட அஜய், அதில் உள்ள கஷ்டத்தை விளக்கினான். பொதுவாக இம்மாதிரி திட்டத்தை செயலாக்க அதிக நேரமெடுத்துக் கொள்ளும். அதுவும் குடி நீர் தட்டுப்பாடு வந்தால் மட்டுமே இதைப் பற்றி யோசிக்கும். உன்னைப் போன்ற பேராசிரியருக்கு நிரந்த்ர வேலை இருக்கும்போது இந்த ஆராய்ச்சிகளுக்கு ஏன் நேரத்தை வீணாக்குகிறாய்?இப்பொழுது பண்வீக்கம், உலக பொருளாதார உருக்கம்(Global Economic Meltdown) போன்ற விஷயங்கள் வேறு இருப்பதால் அரசு இத்திட்டத்தில் கை வைப்பது சந்தேகம்தான் எனப் பல காரணங்களை அடுக்கினான். இருந்தாலும் அஜய் கொஞ்சம் முயற்சி செய்தால் இயலும் என்று எண்ணிய வெங்கி, "நீ நினைத்தால் முடியும். எனக்கு ஒரே நண்பன், உண்மையான நண்பன் நீதான். நீயே ஏன் இப்படி பேசுற?" எனக் கேட்டதற்க்குதான் மேலே(ஆரம்பத்தில்) கூறப்பட்ட 'உண்மை நண்பன்' பதிலை அஜய் கூறினான்.

இதைக் கேட்ட வெங்கி ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டான்.அதன் பிறகு அஜய் சொன்னபடி அவன் தனது பணிக்கு திரும்பி ஒரு வருடம் ஓடிவிட்டது. ஒருநாள் இரவு உணவுக்கு தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிருந்த போது அஜய் போட்டோ காட்டப்பட்டது. அதில் அறிவிப்பு இந்திய அரசு அஜயின் கீழ் செயல்படுத்தவிருக்கும் திட்டத்தின் துவக்க விழா மறுநாள் ஞாயிறு காலை 8மணி கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடக்கவிருப்பதாயும், அது கடல்நீரை குடிநீராக்கும் திட்டமெனவும் சொல்லப்பட்டது. அந்த திட்டத்தை விளக்க விளக்க இவனுக்கு என்னவோ போலானது. அது அவன் அஜயிடம் விளக்கிய திட்டம்!

அவன் உடைந்து போனான். ஒரு மனிதன் மேல் வைக்கும் நம்பிக்கையை பொய்த்தால் மீண்டும் ஒருவரிடம் நம்பிக்கை வைப்பது கடினமான் விஷயம். ஒருவனை வாழ்நாள் முழுதும் நம்பினால், அது நிஜமில்லையென உணரும்போது, அந்த வாழ்க்கையின் பல தருணங்கள் அர்த்தமிழந்துவிடுகின்றன். அவ்வளவு நாள் அவனிடம் பழகிய ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் வேறோர் அர்த்தம் கற்பிக்கப் படுகிறதை அவனால் உணர முடிந்தது. அதுவரை அவன் நிஜமாக நட்புடன் கூறிய விஷயங்களுக்கும் தவறான அர்த்தங்கள் புலப்பட வாய்ப்புகள் உண்டானது அவனுக்கு தெரிந்தது.

இதனால் ஏற்பட்ட குழப்பத்தால் உறக்கம் பிடிக்காமல் மனைவியிடம் புலம்பிக் கொண்டிருந்த அவன், தூக்க மாத்திரையின் உதவியினால் தூக்கத்தைத் தருவித்துக் கொண்டான். காலையில் மிகவும் தாமதமாக 10 மணிக்கு எழுந்த அவன், எதுவும் செய்ய்ப் பிடிக்காமல் டீவி ரிமோட்டை எடுத்து உருட்ட ஆரம்பித்தான். அப்பொழுது ஒரு சில அலைவரிசைகளில் ஒரே காட்சி, என்னவோ அவனது கவனத்தை ஈர்த்தது. அதை நிறுத்திப் வெளிநாடு என நினைத்துப் பார்த்தவனுக்கு ஆச்சரியம், அது நம் நாடு. அறிவிப்பாளர் அறிவித்துக் கொண்டிருந்தார். "..... இது போன்ற நிகழ்வுகள் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சாதாரணமானாலும் நம் நாட்டுக்கு புதிது. இன்று காலை சுமார் 8 மணிக்கு மெரீனாவைத் தாக்கிய போது...."

வலது ஓரத்தில் மின்னிக்கொண்டிருந்தது........"ஞாயிறு 26.12.04 10.00 A.M."


பின் குறிப்பு: இது போன வருஷம் எழுதினது. இங்கிலீஷ்ல எழுதினத தமிழ்'படுத்திருக்கேன்'. 100 கதைகள்ல இருந்து வடிகட்டினப்போ இதுவும் செலக்ட் ஆகி என் மானத்தைக் காப்பாத்தினது.
பின்குறிப்பு: படிச்ச பிறகு கண்டிப்பா இதோட குறை நிறைகளை சொல்லுங்க. அப்புறம் இந்த ஓட்டு.....

பிடுங்கக் கிடைக்காத ஆணி

Filed under , by Prabhu on 6/15/2009 09:46:00 PM

2

இந்த பொருளாதார வீழ்ச்சியில வேலையே குதிரைக் கொம்பா இருக்கு. எல்லா இடத்துலயும் மிரண்டு போய் கிடக்கானுங்க. எல்லாரும் பெரிய உழைப்பாளி ஆயிட்டாங்க. லீவு போடுறதில்ல், ஒரே ஆணிதான். வேலைப் பார்க்காமல் சும்மா இருப்பதில்லை. ஆணியில்லாமலே பல இடங்களில் ஆணி பிடுங்கிட்டிருக்காங்க. அது எப்படின்னு கேட்டீங்கன்னா, ஒரு ஆணி புடுங்கறது, அப்புறம் இத இப்படி பிடுங்காம அப்படி பிடுங்களாமே என அவர்களே திரும்ப பிடுங்குறது(இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளயுமா அலையனும்!). இந்த மாதிரி பல வகையில அல்லாடுறாங்க.



இதவிட கொடுமையானது வேலை தேடுபவர்களின் நிலை. வேலை எங்க இருக்கு? ஒருத்தருக்கும் வேலை கிடைப்பதில்லை. பொதுவாக இம்மாதிரியான நிலை 70களில் இருந்திருப்பதாக அறிய முடிகிறது. அந்த நேரத்தில் பட்டத்தாரிகளுக்கு வேலை கிடைக்காத நிலை இருந்தது. அதை நீங்கள் அந்த காலகட்டத்துப் படங்களிலேயே அறிய இயலும். பாக்யராஜோ,வேறு எந்த கதாநாயகனோ, ஒரு நேர்முகத் தேர்வுக்கு செல்வார். அங்கே அவரது வெளிப்பாடும் நன்றாகத்தான் இருக்கும். அவரை மேனேஜர்(மேனேஜரா வேலைக்கு ஆள் எடுப்பாங்க? இது படம்தான!) பாராட்டக்கூட செய்வார். அப்பொழுது ஒரு கால் வந்ததும்(நடந்து வருமான்னு கேக்காதீங்க) அவர் முகம் சுருங்கி விடும். உடனே ஹீரோ,"என்ன சார் ஒரு பெரிய ஆள் வேற ஒருத்தருக்கு சிபாரிசு பண்ணிருக்கார். அதனால அந்த வேலைய அவருக்கு தரப் போறீங்க, அதானே", எனக் கூறி வெளியே சென்றுவிடுவார். இந்தக் காட்சி அப்போதைய படங்களில் ஒரு cliche. இப்போ புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

இதோடு அப்போதைய இளைஞர்களிடம் ஒரு தார்மீகக் கோபம் இருந்தது. இன்றோ நாம் சுரணையற்று இருக்கிறோம். அந்த மாதிரியாகவே படங்களின் ஹீரோக்களும் அந்த காலத்தில் கோபம் கொள்பவராக இருந்திருக்கிறார். அமிதாப்பை பார்த்தால் எப்போதும் அந்த மாதிரி கேரக்டர்களில் நடித்திருப்பார். 'Angry young man' கான்செப்ட்க்கு உருவம் குடுத்ததே அவர்தான். நிறைய படங்களில் பலரும் அவ்வாறு நடித்திருப்பார்கள், அப்பொழுது. ஒரு அநியாயம் நடந்தால் அங்கே தட்டிக் கேட்க ஹீரோ வருவார். இது ஒரு வகையில் அந்த காலத்திய இளைஞர்களை பிரதிபலித்தது. அந்த காலத்தில் நடந்த ஸ்டிரைக்குகளின் எண்ணிக்கை இதற்கு உதாரணம்.

இதே மாதிரி நிலைமை இப்போது இருந்தாலு மக்கள் ஒரு விழிப்புணர்வும் இல்லாம்ல் இருக்கிறார்கள். நமது அரசோ சொட்டையான பல பொருளாதாரத் திட்டங்களை போட்டுக் கொண்டு இருக்கிறது. போன வருடம் 39 ரூபாய் இருந்த அமெரிக்க டாலர் இந்த வருடம் 49 டாலர். இத்தனைக்கும் அமெரிக்காவும் சமாளிக்க இயலாத பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறது. இப்போ இதுக்கு காரணம் என்னவா இருக்கும்னு நினைக்கிறீங்க. இங்க இருக்கிற பொருளையே வெளிநாட்டிலிருந்து அதிக அளவில் புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்வது? கஷ்டப்படுவது என்னவோ சாதாரண மனிதன். ஏழைக்கு என்றைக்குமே கவலைதான். பணக்காரனுக்கோ பிழைப்புக்காக கவலை இல்லை. ஆனால் நடுத்தரக் குடிமகன் பாடு திண்டாட்டம்தான். அதற்காக அவர்களுக்கு பேரிழப்பு எனக் கூறவில்லை. ஆனால் சாவை விட, தொடரும் சாவு பயம் கொடுமையானது!



இப்போ எனது அண்ணன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எந்த நெருக்கடியோ, ஆட்குறைப்போ இல்லை. ஆனாலும் அங்கே அனைவரும் ஒரு பயத்தில்தான் வேலை பார்க்கின்றனர். தாங்கள் இல்லாமல் நிறுவனம் இயங்குமென்பதை உணராமல் இருக்க வேண்டுமென, ஏதோ மற்றவர்களால் பிடுங்க இயலாத ஆணியை பிடுங்குவது, அடுத்தவன் பிடுங்கிய ஆணியை தான் பிடுங்கியதாய் கூறுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இது ஒரு வகையில் மனிதர்களின் பத்திரமில்லாத சூழ்நிலைக்கும், அவர்களை பற்பல தவறான செயல்களுக்கும் இட்டுச் செல்கிறது. குற்றங்களை நாட்டில் அதிகரிக்கச் செய்கிறது. 'சோம்பேறியின் மூளை சாத்தானின் பட்டறை' என்ற பழமொழி கேள்விபட்டிருக்கிறீர்களா? சுப்பிரமணியபுரம் படத்தில இதப் பாத்திருக்க முடியும்.

பல பேர் நிலைமை இத விட பரிதாபமா இருக்கு. ஏசில வேலை பார்த்த ஒருவர் இப்பொழுது அதே அலுவலகத்தில் ஃபேனின் அடியில் வேலை செய்கிறார். பல பேருக்கு வேலை போய்க் கொண்டிருக்கிற நேரத்தில், வேலை போன மறுநாளே அதுவரைக்கும் கூடப் பிறக்காத தம்பின்னு கூபிடுற வீட்டுக்காரர், உங்கள அன்பான கஸ்(ஷ்)டமரா நினைக்கிற கடன் கொடுத்த பேங்க், வாரிக் கடன் கொடுத்த கடன் அட்டை புண்ணியவான்களுக்கெல்லாம் ஒரே நாளில் புழுவாகிப் போய்விடுகிறீர்கள். Maytas(satyam திருப்பி போட்டுப் பாருங்க!)ல் வேலை செய்யும் என் கஸினை ஃபாரின் அனுப்பி வைத்த இரண்டு நாளில் சத்யம்(பேர முதல மாத்துங்கய்யா!) ஃப்ராடு ரிலீஸ்(இது சினிமாவா,ரிலீஸ் பண்ண) ஆனது. அவன் அங்க கத்தாரில் வயித்த புடிச்சிட்டு உக்காந்திருக்கான்.



இதெல்லாம் பரவாயில்லை. என் நண்பனுக்கு ஒரு வேலை கிடைத்தது, கேம்பஸ் இண்டர்வியுவில். அடுத்த கட்ட இண்டர்வியுவுக்கு முன் அவர்களுக்கு ஒரு புராஜக்ட்(அவர்கள் புராடக்ட்) செய்து கொண்டு வர வேண்டுமாம்(டேய், வேலையே இன்னும் கொடுக்கலடா!). அப்புறமும் இண்டர்வியு வைத்து வடிகட்டுவார்களாம். இந்த recessionல வேலை கிடைக்கிறதே கஷ்டம்டானு அந்த புராஜக்டுக்கும் தயாராகிட்டான். இதை கேட்டதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

ஒரு சர்தார்ஜி இண்டர்வியுவுக்கு சென்றார்.அது ஒரு துப்பறியும் நிறுவனம்.

"வேலைக்கு தயாரா?" எனக் கேட்டார் அதிகாரி.
"தயார்" என்றார் சர்தார்.
"இது துப்பறியும் நிறுவனம். அதிக வேலை இருக்கும். ரொம்ப கூர்மையா இருக்கனும்"
"கண்டிப்பாக இருப்பேன்"
"சரி, இப்போ சொல்லு, காந்திய சுட்டது யாரு?".
உடனே எழுந்து அட்டென்ஷனில் நின்ற சர்தார்,
"ரொம்ப தாங்க்ஸ், வேலையில் சேத்துக்கிட்டதுக்கு. எப்படியும் 30 நாளுக்குள்ள கண்டுபுடிச்சிடறேன் சார்"

நான் யார்.....(spiritual இல்ல psychological and logical)

Filed under , by Prabhu on 6/15/2009 09:33:00 PM

3

நான் யார்ன்னு போட்டதும் நான் கடவுள், நான் பிரபு, நான் கிஷோர்ன்னு பின்னூட்டம் போட்டு கலாய்க்கக் கூடாது. இது கொஞ்சம் சைக்காலஜி(சுத்தம்! நீ சும்மா மொக்க போட்டாலே புரியாது, இதுல சைக்கால்ஜி வேறயா?) சம்பந்தப்பட்ட பதிவு. ஹேய்..ஹேய்...மிஸ்டர். எங்க நழுவுறீங்க? ஒரு அதிகாரி எழுதும் போது மரியாதை குடுக்குறதில்ல! ஓகே, மேட்டருக்கு வருவோம். மனுஷனோட குணாதிசயங்கள் (அ) personalitya விளக்குறதுங்கிறதுதான் இந்த பதிவு. இண்டிரஸ்டிங்கா இருக்கும். இதுல எது உங்களுக்கு ஒத்துப் போகும்



Ego என்ற ஆங்கில வார்த்தைக்கு (அது ஆங்கிலமே இல்ல greek என்பது வேற விஷயம்) செல்ஃப்(shelf இல்ல self) அதாவது நான் என்ற அர்த்தம். இத வச்சு ஒரு சில வகைகள நாம விளக்க முடியும்.

me the first
புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். me the first னு போட்ட உடனே பின்னூட்டத்தில போடுறவங்கள நினைச்சிங்களா? அது இல்லீங்க. என்ன செஞ்சாலும் அதுல எனக்கு என்ன இருக்குன்னு யோசிக்கிறது. எனக்கும் எல்லாம் கிடைச்சா போதும் அடுத்தவங்க என்ன ஆனாலும் பரவாயில்லைனு நினைக்கிறது தன் முன்னேற்றத்துக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்னு நினைப்பாங்க. (இது என்ன அரசியல்வாதியானு நீங்க கேக்கலாம்). இப்படி பட்டவன்தான் 'egoist'.

அடுத்தது 'egotist'
egoistக்கும் இவங்களுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு.( நடுவில வர்ற 't' என சொன்னா உங்க தலையில இடி விழட்டும்). அவங்களோட செயல் நாந்தான்னு இருக்குனா இவங்களுக்கு பேச்சு நாந்தான்னு இருக்கும். எதுக்கெடுத்தாலும் நான்...நான்...நான்... நாம எதப் பத்தி பேசுனாலும் நான். நாம் டாய்லெட் போனோம்னு சொன்னாக்கூட, "இப்படிதான் நான் டாய்லெட் போனப்ப...." என ஆரம்பிச்சு கொல்லுவானுக. இவனுங்க பேச்சுல ஒரே விஷயம், 'நான்'. நான் பிரதமரா இருந்திருந்தா பண்ணுவேன்னா, இந்த பிராப்ளத்துக்கு என்ன செய்வேனா...... (அய்யோ..நாராயணா, இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல. மருந்தடிச்சு கொல்லுங்கடா.)

ஆள விடுங்க சாமி
இவங்க சோஷியலா இருக்க முடியாதவங்க.ஆனா எல்லராலும் அங்கீகரிக்க படனும்னு நெனப்பாங்க.கொஞ்சம் கூச்ச சுபாவம். சயிண்டிஸ்ட் மாதிரி தன்னோட எண்ண ஓட்டங்களை மைக்ரோஸ்கோப் வச்சி பார்த்து, நாம் மத்தவங்களுக்கு எப்படி தெரியிறேன், அவங்க என்ன பத்தி என்ன நினைப்பாங்க என யோசிச்சிட்டு இருப்பாங்க. (நம்மல பத்தி அவ்ளோ காம்ப்ளெக்சா திங்க் பண்ற அளவுக்கு மத்தவங்களுக்கு நேரமில்லங்கிறதுங்கிற விஷயம் அவங்களுக்கு புரியறதில்ல). ஆனா இவங்க ஜீனியஸா இருக்கறதுக்கு சான்ஸ் ஜாஸ்தி. க்ரியேடிவிட்டி நல்லா இருக்கும். இவங்கதான் introvert.

என்னோடு சேர்ந்து ஆடுங்கள்
இவங்க introvertக்கு அப்படியே நேரெதிர். அடுத்தவங்க பிரச்சனைகள்ல உண்மையான ஆர்வம் காட்டுவாங்க. எப்பவும் சந்தோஷமா இருக்கற கேரக்டர். எப்பவும் நிறைய பேரோட இருக்கறத விரும்புவாங்க. இவங்க ஒரு டீச்சரா, லீடரா,நிர்வாகியா இருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. எல்லாரோடயும் சகஜமா பழகுவாங்க. 'வேர் இஸ் த பார்ட்டி, எங்க ஊட்ல பார்ட்டி'ன்னு சொல்ற ஆளு இவங்க. இவங்க extrovert என சொல்றாங்க.

ambivert
இவங்க extorvert, introvert ரெண்டும் கலந்து செய்த கலவை. ரெண்டோட கேரக்டரும் சரியான அளவில வெளிப்படும். மொத்ததில நார்மல் மனுஷங்க!

may i help you
இவங்களோட சந்தோஷமே அடுத்தவங்களுக்கு உதவுறதுதான். தன்னோட விருப்பு வெறுப்புகள பாக்காம அடுத்தவங்களுக்கு உதவுவாங்க. உங்கள எல்லாரும் ரொம்ப நல்லவருருன்ன்னு சொல்ல்வாங்க(அவ்வ்வ்...). நீங்கதாங்க altruist.

மனுஷனா......ச்ச்ச....
இவங்களுக்கு மனித குலத்து மேலயே ஒரு வெறுப்பு இருக்கும்.(அப்ப அவ்னுங்க மட்டும் என்னவாம். மனுஷனுங்க ஒண்ணத்துக்கும் லாயக்கில்லனு சொல்வாங்க(ஆனா, எங்கப்பா நான் மாடு மேய்க்கதான் லாயக்குனு சொல்றாரே). இவங்க பேரு misanthrope.

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்....
இவங்களுக்கு பொண்ணுகன்னாலே ஒரு கடுப்பு. குத்துங்க...எஜமான், குத்துங்க என சொல்லிக்கிட்டு திரியிவாய்ங்க.- a misogynist.

அஹம் பிரம்மாஸ்மி
இவங்க உலக வாழ்க்கைய துறந்தவங்க. ஆன்மிகம் தான் இவங்களுக்கு எல்லாமே. தவம், தியானம்னு இவங்க தங்களோட நேரத்தை செலவிடுவாங்க.-an ascetic.

இப்போ இதுல நீங்க யாருன்னு தெரிஞ்சிருக்கும். நான் யார் என கேட்டவுடனே நினைவுக்கு வருது. நான் யாருங்கிறதுக்கு உங்களோட பதில் என்ன? என்னோட லாஜிக் என்னன்னா நான் என்பது என்னோட நினைவுகள்(என் மூளை). நம்ம வாழ்க்கையோட மெமரி தான் நம்ம யாருங்கிற விஷயத்த நமக்கு உணர்த்துது. memento(ghajini) படத்தில பார்த்திங்கன்னா தான் யாரு என்ற விஷயம் தெரியாமதான் தன் வாழ்க்கைக்கு ஒரு பர்பஸ் கொடுக்க, ஒரு இல்லாத (அ) இறந்த மனுஷனோட பேரில ஆள தேடி ஒரு romantic questa அலைஞ்சிக்கிட்டு இருப்பான்.

இந்த questக்கு மட்டும் மனிதன் இருக்கிற வரைக்கும் முடிவே இருக்காது.



டிஸ்கி - இது ஆல்ரெடி எனது அழிந்துபோன ப்ளாக்ல பப்ளிஷ் பண்ணி யூத்புல் விகடன்ல வந்தது.

2008ம் ஏ.ஆர்.ரஹ்மானும்

Filed under , , by Prabhu on 6/05/2009 08:45:00 AM

3

இந்த விஷயத்தைப் பல பேர் ஏற்கனவே அலசி அவங்க அவங்க வீட்டுக் கொடில காயப் போட்டிருப்பாங்க. இருந்தாலும் நானும் கொஞ்சம் அழுக்கு போக அலசிக்குறேன். நான் இதைப் பத்தி எழுதலேனா தலையே வெடிச்சுரும்(எழுத வேற இல்லன்னு சொல்லு). 'நாட்டாம தம்பி பசுபதி டீச்சர வச்சிருக்கான் டோய்'னு செவிடன் கிட்ட சொல்லி அவஸ்தை படுற கவுண்டமணி நிலைமைதான் எனக்கு. நீ எழுதறதுக்கு எல்லாம் ஏண்டா ஓவரா பில்டப்னு நீங்க கேட்டா, பில்டப் எனக்கில்ல, எங்க தலைவருக்குனு சொல்வேன் (அப்போ இளிச்சுக்கிட்டே விஜய் தாவி கொடில இருக்கிற அடுத்தவன் பொண்டாட்டி சேலையெல்லாம் சுத்திக்கிட்டு குதிச்சு intro குடுக்க போறாரானு நக்கலா கேக்குறவங்க வீட்டுக்கு வில்லு டிவிடி அனுப்புவோம்). நான் சொல்றது எங்க இசைப்புயல், Mozart of Madras A.R.Rehman பத்திதான். (ஓ....அதுவா....னு மெல்ல நழுவக்கூடாது. இங்க கொஞ்சம் வேற புரிதலோட(perception) பாப்போம். இதே வருஷம் ஆஸ்கார்(slumdog millionaire) வாங்கிருக்காரு. இத விட அருமையான் பாடல்களை அவர் இசை அமைச்சிருக்காருன்னாலும் இந்த படம் ஆங்கிலம்ன்றதால வாங்கினாரு, அந்த படமும் அப்படி ஊர் உலகத்தில இல்லாத படமில்லனாலும் இந்தியாவ அவங்க பிடிச்ச மாதிரி காண்பிச்தாலதான் இத்தனை விருதுகள்னு பலவாறு பேசுனாலும் நான் அத பத்தி பேச வரல.

எனக்கு விவரம் தெரிஞசதில இருந்து நான் ஏ.ஆர்.ரஹ்மானோட விசிறி. பொதுவா சில வருஷங்களா அவரோட பாடல்கள் அதிகமா வர்றதில்லன்ற வருத்தம் இருந்தது. ஆனா 2008 ஆரம்பமே ஜோதா அக்பர் பாடல்கள் வந்து என்னய மாதிரியான ரசிகர்களுக்கு செம ட்ரீட். அதுல Jashn-e-bahaara னு ஒரு காதல் பாட்டு, உருக்கிடும்(இன்னும் என் ப்ளே லிஸ்ட்ல இருக்கு, ஒரு வருஷம் பின்னயும்). லவ் பண்ணாதவங்களுக்கும் அப்படி ஒரு ஃபீல காட்டும். அதே படத்தில ஒரு ஸூஃபி(இஸ்லாம் வழிபாட்டு) பாடல் ஒண்ணு மனுஷன் ஃபீல் பண்ணி போட்டிருப்பார் போல(எல்லா புகழும் இறைவனுக்கே). இப்படி அட்டகாசமா ஆரம்பிச்ச அந்த வருஷம் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களை கடைசி வரை ஏமாத்தல.

அடுத்து அட்டகாசமாக வந்து இளைஞர்களையெல்லாம் ஆட்டம் போட வச்சது 'jaane tu yaa jaane na'(உனக்கு தெரியுமா? தெரியாதா?). அந்த படத்தில ஒரு பாட்டு செம ஹிட்டு! அந்த பாட்டு போன வருஷம் பல காலத்துக்கு முதலிடம் விட்டு இறங்காம இருந்தது. எவன பாத்தாலும் அத முணும்ணுத்துக்கிட்டு திரிஞ்சான். அந்த பாட்டோட முதல் வார்த்தையே ஒரு பிரபல பதிவரோட பேர்தான். ஆங்... புரிஞ்சதா? இல்லையா? புரியாதவங்களுக்கு உடைச்சிடறேன். அந்த பாட்டு "Pappu can't dance saala". புரியுதா அந்த பாட்டோட முதல் வார்த்தை, pappu! நாந்தான்(பிரபல?). பிரபலனு தப்பான க்ளூ குடுத்தேன்னு யார்றா சைட்ல சவுண்ட் குடுக்றது. Jazz musicல 'ஜானே து யா ஜானே நா' எல்லாரும் ரசிச்ச title musicனு அவார்டே குடுக்கலாம். கொஞ்சம்கூட சிதறாம, பதறாம போட்டிருக்கார்.காஃபி ஷாப்பில போட்டு விட்டு கடலை போட்டா நேரம் போறதே தெரியாது, அப்பிடி போட்டிருக்கார். எல்லா பாட்ல்களும் அவ்ளோ ஃப்ரெஷ், அவ்ளோ யூத்ஃபுல். இங்க பதிவரெல்லாம் கல்யாணம் ஆயி நானும் யூத்துதான்னு சும்மா சொல்லியில்ல பார்க்குறீங்க, உங்களுக்கு பிடிக்குமா?

இந்த சமயத்திலதான் ஏ.ஆர்.ரஹ்மானோட அந்த வருஷத்திய ஒரே தமிழ் படைப்பான சக்கரக்கட்டி வந்தது. அட்டண்ட் பண்ணது ஒரு பால்னாலும் அடிச்சது சிக்ஸ்! ஓரே ஹிட்டுல அந்த வருஷம் பல ஹிட்டு கொடுத்த ஹாரிஸ் முதல்கொண்டு எல்லோரையும் பின் தள்ளிக்கிட்டு முன்னாடி வந்தது நம்ம ஏ.ர்.ரஹ்மான் ஓட்டின 'டாக்ஸி'. இது போக மதுஸ்ரீ பாடின(போட்ட) 'மருதாணி விழியில் ஏன்' இன்னமும் கேக்கும்போது என்னவோ மாதிரி ஃபீலிங் இருக்கும். படம் ஓடலைனாலும் பாட்டு ஒரே நாளில பண்பலை வானொலிகளில் அளவில்லாம் ஒடி, ஒரே நாளில அதிகமான தடவை ஓடின பாடல்னு உலக சாதனை படைத்தது. இப்படி ஒரு படம்னாலும் அதுவும் ஓடாத படம்னாலும் எளிதில் மறக்கமுடியாத ஆல்பமாக 'சக்கரக்கட்டி' அமைந்தது.

அடுத்து வந்த ஆல்பம் 'Yuvaraaj'. சல்'மான்' நடித்த இந்த படத்தின் சிறப்பம்சமே இதன் இசைதான். இந்த படம் ஒரு மியூசிக்கல் சப்ஜக்ட். 'மன்மோஹினி மோரே'- இந்தப் பாட்டு ஹிந்துச்தானியும் வெஸ்டர்னும் ஃப்யூஷன் பண்ணிருப்பாரு பாருங்க..ப்ப்ப்பா....சான்சே கிடையாது. 'தில் கா ரிஷ்தா'- இதுல பாடுன ஆட்கள வச்சு ஒரு பாண்டே(band) உருவாக்கலாம், அவ்ளோ பேரு பாடிருக்காங்க. 'தூ ஹி மெரே தோஸ்த்'- இந்த பாட்டுலயும் இதுக்கு முன்னாடி சொன்ன பாட்டுலயும் செல்லோ(cello) விளையாடிருக்கும். ஸ்ரீனிவாஸ் பாடின 'ஜிந்தகி'ய சொல்லவா, இல்ல ரொம்ப நாள் கழி(ளி)ச்சு ஜாவேத் அலி, அல்கா யக்னிக் சேர்ந்து பாடின ' து முஸ்குரா'வ சொல்லவா. 2008ம் வருஷம் அந்த மனுஷன் கைலயும் மூளைலயும் கண்டிப்பா சரஸ்வதி தேவி நின்னு ஆடிருக்காங்க. இந்த படம் ஓடலேனாலும் அமெரிக்காவில ஃபிலிம் லைப்ரரில வைக்க முடிவு பண்ணி டைரக்டருக்கு அவங்க அனுப்பின கடிதம் ஒரு ஆறுதல் பரிசு.

அடுத்து வந்தது 'கஜினி'. இத பத்தி அறிமுகம் தேவையில்ல. இந்த படம் சக்கை போடு போட்டதும், 200கோடி அள்ளுனதும் வரலாறு. இந்த படத்தோட பாட்டுக்கு அத்தனை ஹைப். அந்த படப் பாடல்கள் அனைத்தும் ரிலீஸ் ஆனதும் ஹிட். நல்லாதான் இருந்தது. ஆனா, ஏ.ஆர்.ரஹ்மான் தரத்துக்கு இல்லன்னு நான் சொல்வேன். 'guzarish', 'kaise mujhe' ரெண்டும் ஓகே. எந்த பாட்டும் குறைச்சலே இல்ல. ஆனா எதுவும் not upto his mark. உதாரணத்துக்கு சொல்லனும்னா, கருத்தம்மால இருக்கிற quality படையப்பால இல்லனு சொல்வேன். அதுல ஒரு class இருக்கும்;படத்தோட தேவைக்கு அமைக்கப்பட்டிருக்கும். இது இப்போதைக்கு நல்லாருக்க அல்லது ஹீரோக்காக அமைக்கப்பட்ட contemporary வகையை சேர்ந்தது.(இத படிச்சா என் ஃபிரண்டு, ஏன்டா இப்படி சொரியிறன்னு கேப்பான். அதனால நான் விளக்க உரைய தொடரல.)

இதுக்கு நடுவுல வந்த 'slumdog millionaire' பத்தியும் அந்த இசை பத்தியும் ரஹ்மான் அவார்ட்ஸ் குவிச்சதும் உலகத்துக்கே தெரியும். அதனால அதப் பத்தி நான் பேசல.

இப்படி இந்த பாட்டே கேட்டு முடிக்க முடியாம கேட்டுட்டேஏஏஏஏஎ இருக்கும் போது இப்போ 'Delhi-6' பாட்டு! ஹய்யோ! என்னமா போட்டிருக்காரு(இப்படி வாய பொளக்குறதுக்குனே இந்த பதிவ போட்டிருக்கயா?). 'மசக்களி' ஆட வைக்குதுனு நானும் சொல்லத் தேவயில்ல. அத கேபிள் சங்கர் தெளிவா போட்டிருக்காரு. 'கேந்தா பூ'- கிராமியமாவும்(rustic) அதே நேரம் புதுமையாவும் போட இவராலதான் முடியும். 'ரெஹ்னா தூ', 'தில் கிரா தாஃபதன்' இந்த ரெண்டும் அவ்ளோ சாஃப்டா, அவ்ளோ அழகா இருக்கும். ஒரே படத்துல ஹிந்து மற்றும் இஸ்லாம் பாடல்கள ஒரே devotionஓட ரஹ்மான் தான் குடுக்க முடியும்.

இந்த படங்கள் எல்லாத்திலயும் நான் சொல்லாத பாடல்களும் நல்லாதான் இருக்கும். ஆனால் எல்லாத்தப் பத்தி பேச முடியாதில்லயா? அதானால முக்கியமான பாடல்கள பத்தி மட்டும் பேசினேன்.
இதுக்கிடையில connections ஆல்பம் வந்தது. அதப்பத்தி நீங்க கேபிள் சங்கர் பதிவுல பாக்கலாம். நான் சொல்லாம விட்டது ada மட்டும்தான். அது இப்போதான் கிடைக்கும்போல இருக்கு எனக்கு.

இப்படி இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா உங்களுக்கு பொறுமை இருக்காது.(பின்ன? எல்லாத்தையும் உன்ன மாதிரி வெட்டி பையன்னு நினைச்சயா?) இந்த மாதிரி ஒரு வருஷமா இனி வரும் ஒவ்வொரு வருஷமும் ரஹ்மானுக்கு இருக்கனும்னு வாழ்த்துறேன்.
எல்லாம் சுயநலம் தான்! நாம கேக்க நல்ல பாட்டு வேணாமா?

ஏதாவது செய்யனுங்க!

Filed under , , by Prabhu on 6/05/2009 08:43:00 AM

0

டிவில பாத்தா எந்நேரமும் தேர்தல் செய்திதான். எப்ப பாரு, ஐந்து கட்ட வாக்குப் பதிவு, துணை ராணுவ உதவி, அது இதுனு ஒரே சீனுப்பா? இந்த டயத்துல எல்லா மாநில தேர்தல் ஆணையரும் மூஞ்சிய டிவில காண்பிச்சுப்பாங்க! அட, எல்லா வருஷமும் இந்தியாவுல எங்கயாவது தேர்தல் நடந்துட்டேதான் இருக்கு, ஆனாலும் ஒவ்வொரு தேர்தல் நடக்கும் போதும் ஏதாவது குளறுபடிதான். உலகத்திலயே ரெண்டாவது பெரிய அரசியலமைப்பாம் (ம்ஹும்..இதுக்கு குறைச்சலில்ல.. போட்டிருக்கறது கோவணமா இருந்தாலும் ஓட்டை இல்லாம இருக்கணும்). ஏனோ தேவையில்லாத்துல எல்லாம் இந்தியா முண்டிகிட்டு போயி முதலாவதாவோ ரெண்டாவதாவோ வந்து, ஐ! நாந்தான் பர்ஸ்ட்னு சொல்லி பெருமைபட்டுக்குது. உ.ம். அரசியலமைப்பு, லஞ்சம், எய்ட்ஸ்.

இப்போ என்னடா சொல்லவரன்னு நீங்க கேக்கலாம். இது இவ்ளோ பெருசா வச்சுகிட்டு என்ன சாதிச்சுட்டோம். ஒண்ணும் இல்ல. அதுல இருக்றதுல என்னத்தை பாலோ பண்றாங்க! ஒண்ணுமே இல்ல! இதுல தைரியமா அந்த அரசியலமைப்பு வச்சுகிட்டு இந்தியா, இறையாண்மை அப்படின்னு அரசியல் பண்ண சொன்ன செய்வானுக(அப்படின்னா என்னன்னு கேட்டா முழிப்பான் அவன்). வேணும்னே ஒண்ணும் இல்லாத பிரச்சனய பெருசாக்குவாங்க. காவிரி தண்ணி பிரச்சனையிலயே அரசியல்தான் தண்ணி விடலைனு சொல்வேன். அட, தண்ணிய விடற வரைக்கும் தான போராட்டம் பண்ற மாதிரி சீன் குடுக்கலாம். அது தங்க முட்ட போடுற வாத்து, ரெண்டு மாநில அரசியல்வாதியுமே அறுக்க மாட்டானுக. அது கன்னித் தீவு மாதிரி, சிந்துபாத்(தமிழ் அரசியல்வாதிக) எப்பவுமே மந்திரவாதி(கர்நாடக அரசியல்வாதிக) அனுப்ற கஷ்டத்தில இருந்து லைலாவ(காவிரி, அது பாவம் அது பாட்டுக்கு போறது, அத வச்சு நம்ம மண்டைய உடைக்கிறாங்க) காப்பாதிட்டே இருப்பான். இவனுக ரவுசு தெரிஞ்சா காவிரியே கண்ணீர் விடுங்க!(ச்ச்சீ... கொசுவர்த்தி சுருளை அணைச்சுட்டு பேசு, எதுக்கு இந்த ப்ளாஷ் பேக்? அப்படிங்கறிங்களா?)

இப்படிப்பட்ட பிரச்சனைக்கெல்லாம் தீர்வு கொடுக்காத சட்டமோ, அரசியலமைப்போ, அதப் பத்தி பெருமைப்பட என்ன இருக்கு? நமக்கு அடிப்படை உரிமைகள்ன்ற விஷயமே கிடைக்கல, பின்ன இந்தியன் வேற எந்த உரிமைக்கு போராடுவான். அந்த மாதிரி உரிமைகள மீறும் போது அரசு பாதுகாப்பு. அரசே அத பண்ணா? அப்படி நடந்து கோர்ட்டில 'கப்பம்' கட்டின அரசுதான் தமிழக அரசு.நடந்தது இப்போ இல்ல, பல காலம் ஆச்சு.(அது என்னடா மீறல் சொல்லிட்டு பேசு,எதுக்குடா சஸ்பென்ஸ்னு கேப்பீங்க!). அது என்னன்னா, விருதுநகர்ல கல்லூரி மாணவர்கள போராட்டத்தப்போ புடிச்ச போலீஸ் கணவான்கள்(?!) அவங்கள சட்டையில்லாம குத்த வச்சு போட்டோ எடுத்து பத்திரிக்கைல பப்ளிஷ் பண்ணிட்டாங்க. அதுக்கு கோர்ட்டில கட்டுன கப்பம் கட்டின பிறகு நிறுத்திருக்கணும் (நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!). ஆனா நடக்கிறது என்னன்னு உங்களுக்கே என்னன்னு தெரிஞ்சிருக்கும்னு நினைகிறேன். இப்போ என்ன சொல்றீங்க? (நாங்க உன்னைய கேட்டா,நீ எங்கள கேக்குறயானு கேக்குறது என் காதில விழுது)

இப்போ தேர்தல்க்கு என்ன காமெடி பண்றாங்கனு தெரியல! தேர்தல் நடக்கும் போது IPLனு நிறைய நாட்டுக்காரங்க வந்தா பாதுக்காப்புக்கு கஷ்டம்னு இப்போ சிதம்பரம்(உள்துறை அமைச்சராம்!) BCCI கிட்ட கேக்குறாரு. வாஸ்தவம் தான். ஆனா இந்த அறிவுப்புயல்(Brain stormங்க!) இதுக்கு முன்னாடி அவருக்கு ஏன் தோணாம போச்சு! எல்லாம் பண்ண பிறகு. இப்போ BCCI முணுமுணுக்கிறான். இப்படி கோர்ட் பேச்ச கேக்காத அரசு, அரசு பேச்ச கேக்காத அரசு நிறுவனம்னு இந்தியாவே களேபரமா இருக்கு. இதுல குடியரசு தினம் மட்டும் 'கோலாஅஅஅஅகலமா' நடக்குது, வருஷாவருஷம். ஆற்காடு இருள்சாமி வேற கோர்ட்ட எதிர்த்து தப்பா பேசுறாரு. இப்படி இவங்களே பேசுனா படிக்காதவன் எப்படி மதிப்பான் கோர்ட்ட! தலைமை நீதிபதி "எங்க பேச்ச கேக்கலன்னா நாங்க எதுக்கு? பேசாம நீதித்துறைய கலச்சிருங்க"ன்னு சொல்ற அளவுக்கு ரப்ச்சற கொடுத்துருக்கானுங்க!

இந்த நாட்டில எதை எதிர்பார்த்து தேர்தல் நடத்தி ஓட்டு போட்டுறது. பேசாம ஒருத்தரு உச்ச நீதிமன்றத்தில கேசு போட்ட மாதிரி, ஓட்டு போட விருப்பமில்லன்னு ஒரு அமுக்கி(பட்டனுங்கோ!) வைக்கணும். அப்புறம் அதையே நிறைய பேர் அமுக்கினா, அந்த தேர்தல் செல்லாது. வேட்பாளர மாத்தி தேர்தல் நடத்தனும். அதுவரைக்கும் ஜனாதிபதிதான் அங்க. அப்பத்தான் நல்ல வேட்ப்பாளர உருப்படியா தேர்ந்தெடுக்க ஒரு வழியிருக்கும். நாம எல்லாத்துக்கும் ஒரு தகுதி எதிர்பார்க்கிறோம். ஆனா ஒரு அரசியல்வாதிய தேர்ந்தெடுக்க ஒரு தகுதி வரைமுறையே இல்ல. கேட்டா அது அடிப்படை உரிமைகளை மீறுவதா ஆயிடும்னு சொல்வாங்க. ஆமா, கொடுக்க வேண்டிய வாழத் தேவையான உரிமைகள பறிச்சுக்கிட்டு, கண்ட கிரிமினலுக்கும் உரிமைய கொடுத்து நாட்ட காப்பாத்துறாய்ங்களாம். போங்கடா, நீங்களும் உங்க ஜனநாயகமும்.

இப்படி எல்லாத்தையும் மீறி இங்க சந்தோசமா வாழ்ந்துக்கிட்டிருக்கோம் பாத்தீங்களா? அதாங்க இந்தியன், அதுக்கு பெருமைப்படுறதா இல்ல வருத்தப்படுறதானு தெரியல.
எங்க கல்லூரில படிச்சவரு எடுத்த ஒரு படத்தில சொன்ன மாதிரி,


"ஏதாவது செய்யனுங்க!"

என்ன கருமமோ?

Filed under , by Prabhu on 6/02/2009 10:17:00 PM

3

நேத்துக் காலையில கிளாசுல இருக்கிறப்போ திடீரென ஒரு sms வந்துச்சு. திறந்து பார்த்தப்போ எனக்கு ஒண்ணும் புரியல. திரும்ப படிச்சப்போ புரிஞ்சது ஆனா சந்தேகம். பாகிஸ்தான் போன இலங்கை வீரர்கள தாக்கிட்டாங்கனு போட்டிருந்துச்சு. எனக்கு அவங்க பாகிஸ்தான் போனதே தெரியாது.கிரிக்கெட்டுக்கும் எனக்குமான உறவ பன்னிரண்டாப்போட முறிச்சுக்கிட்டேன். நான் பாத்தாலே தோத்து போறாங்க, பாக்கலேனா உலக சாதனை! அட்லீஸ்ட் வெற்றியாவது உண்டு. என்ன இது சின்னப் புள்ளத்தனமா இருக்கு! போங்கடா நீங்களும் உங்க விளையாட்டும், ஒரு நாள் வேஸ்ட் பண்றாய்ங்க! அப்படினு விட்டுட்டேன் (ச்சீச்சீ... இந்த பழம் புளிக்கும்). அந்த smsல சந்தேகம் ஏன்னு கேக்கலாம். காரண்ம் அத அனுப்பினவன். அவன் சும்மாவே C.M.செத்துடாரு, மூணு நாளு லீவுனு அனுப்புவான்(அட, இத விடுங்க, நாகேஷ் என்ன பண்ணுவாரு, அவருக்கெல்லாம் 6 மாசம் முந்தியே இரங்கல் செய்தி அனுப்பினவன்). அவனையா நம்புறதுனு நினைச்சா நிஜமாவே நடந்திருக்கு. என்ன கருமமோ?

இது வந்ததும் எனக்கு என்ன தோணுச்சுனா, நம்ம நாட்டுக்காரன்னா கூட பரவாயில்ல, முன் விரோதம்னு நினைச்சுக்கலாம். பாவம் இலங்கைக்காரங்க, அதுவும் விளையாடுரவங்கள போய்...ச்ச்ச்ச்ச...(உங்களுக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடயாது). யாருங்க அடிச்சுருப்பா? அதுவும் எஸ்கேப் ஆயிட்டாங்களாமே? இத்தனைக்கும் அங்க நிறைய தீவிரவாத இயக்கங்களுக்கு ISI உதவி இருக்குனு சொல்வாங்க. அவங்களுக்கே கடுக்காய் குடுத்துட்டாங்க போல! இப்போ உணர்ச்சிவசப்படுவாரு பாருங்க ராஜ்பக்க்ஷே... அவங்களோட உதவில இலங்கைல ரேடார் வைகனும்னு நினைச்சப்ப அங்க தீவிரவாதம் இல்லயா?அந்த ரேடார் வச்சா நம்மளோட பங்களூருல இருக்கற விமான கட்டுமான தளத்த பாக்கலாமாம். என்ன கருமமோ?

எப்போ பாத்தாலும் பாகிஸ்தானுக்கு இடம் கொடுப்பேன், சீனாக்கு இடம் குடுப்பேன்னு நம்மல மிரட்டுறதே இவனுங்களுக்கும் பொழப்பாப் போச்சு.. இங்கிட்டு பாகிஸ்தானோட ரேடார் ப்ளான், அங்கிட்டு சீனாப் படைகிட்ட இருந்து பயிற்சி, விமானம் அப்படினு இந்தியாவ மிரட்டுறது. அப்பதான தமிழனுங்கள காப்பத்தறதுக்கு யோசிப்பானுங்க இந்தியாக்காரனுங்க. ஏன்னா உன் அவனுங்க இந்த ரெண்டு நாட்டுக்காரங்களையும் உள்ள விடுறது, இந்தியாக்காரனுக்கு கூடாரத்துக்குள்ள ஒட்டகத்தை விடுறமாதிரி. அதான் இந்தியா திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி பொத்திக்கிட்டு இருக்கு. ந்ம்ம பாதுகாப்பா, அங்க இருக்கும் தமிழர்கள காப்பாத்துறதானு வந்தா நம்ம பாதுகாப்புதானு முடிவு எடுத்திட்டு அத சொல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம கஷ்டப்படுது அரசாங்கம். அவங்களயும் தப்பு சொல்ல முடியாது.உண்மையில பிண்ண்னியில என்ன நடக்குதுனு நமக்கு தெரியிறதில்ல. என்ன கருமமோ?

இந்த தமிழ் ஈழம் மேட்டரும் எனக்கு புரியலங்க. நான் சின்னப் பையன்(நிஜமாவே!), அதனால என்னய மன்னிச்சிருங்க. எனக்கு நம்ம தமிழர்கள் கஷ்டப் படுறாங்கனு புரியுது. அவங்கள காப்பாத்தனும்னு புரியுது. அவங்க உரிமைகள் கிடைக்கனும்னு புரியுது. அவங்க அதுக்காக போராடனும்னு புரியுது. ஆனா இந்த தனி நாடு கேக்குறது சரியானு புரியலைங்க.
ஏன்னா, காஷ்மீர் தனி நாடு கேக்கும் போது நாம குடுக்கறதில்லயே. முக்கியமான விஷயம் என்னன்னா, காஷ்மீர் நம்ம நாடல சேர்ந்தது லேட்டாதான். பாகிஸ்தான் அட்டாக் பண்ணுவாங்கிற பயத்தில லால் பகதூர் சாஸ்திரிய கூப்பிட்டு கையெழுத்து போட்டு இந்தாங்க நாடு, என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ, நாட்ட நல்லா பாத்துக்கோங்கனு அந்த ராஜா(சுல்தானோ?.. என்ன கருமமோ?) நம்மகிட்ட குடுத்துட்டு எஸ்கேப் அயிட்டாரு. அன்னைல இருந்து இந்தியா தான் காஷ்மீர தன் தலையில(மேப்ப பாருங்க!) வச்சு காப்பாத்திட்டு இருக்கு(வருஷம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ராணுவ செலவுல!என்ன கருமமோ...). இப்ப சொல்லுங்க, இந்த ரெண்டு நிலைமையும் ஒண்ணுதான? அப்புறம் ஏன் இந்த 'உண்மை' தமிழர்கள் வேற வேற தீர்ப்புகள் வச்சிருக்காங்க. வித்தியாசம் இருந்தா விளக்கம் குடுங்க. இல்ல, இதுக்கு அரசியல் காரணம் இருக்குங்கறாங்க. சும்மா ஸ்டண்ட் பண்றாய்ங்களாம். என்ன கருமமோ?

இதெல்லாம் இங்க எழுதலாம், சந்தேகம் கேக்கலாம்ல. ஒண்ணும் பஞ்சாயத்து வராதே. நமக்கு இதெல்லாம் பழ்க்கம் இல்லீங்க. சாதாரண பையன் பிரச்சன வந்த உடனே பெரிய பைட் மாஸ்டர் ஆகுறதுக்கு நாம என்ன விஜயா? இந்த ராம் சேனா பத்தி ஒரு forum எழுதுனவர் மேல கேஸ் போட்டாங்களாம். இதுக்கெல்லாமா கேசு போடுவாய்ங்க! என்ன கருமமோ?