Lock, Stock and Two barrels (1998)
Filed under Movies , சினிமா , by Prabhu on 5/19/2010 06:42:00 PM
17
Tom என்ற சூப்பர் மார்கெட்/ப்ளாக் மார்கெட் ஆசாமி, Soap என்று தன் கைய சுத்தமாகவே இருக்கனும்ங்கிற ஒரு சமையல்காரன், Bacon என ஒரு திருடன், அப்புறம் Ed - இவன் சீட்டுல கில்லாடி. இப்படி சம்பந்தமில்லாத நாலு பேரும் நீண்ட நாள் நண்பர்கள். இவங்க எல்லாரும் காசு சம்பாதிக்க முடிவு செஞ்சு Ed ஓட சீட்டு விளையாடுற திறமை மேல முதலீட்டைப் போட நினைக்கிறார்கள். இல்லீகலா சீட்டு விளையாட, அதற்கு குறைந்தபட்ச தேவையான 100,000 பவுண்ட்ஸை எடுத்துக்கிட்டு Hatchet Harrey க்கு ஃபோன் போடுறாங்க.
Hatchet Harry. இவனைப் பற்றியும் சொல்லியாகனும். இவன் ஒரு Porn King. பார் கூட வச்சிருக்கான். அதே தான், Pole dance ஓட தான். Spank batல் இருந்து செக்ஸ் டாய் வரை விற்பதும் கூட. இது எல்லாம் போக இந்த இல்லீகல் சூதாட்டமும் நடத்துறான். இவனுக்கு ஒரு பில்டப் வேண்டாம்? இவனுக்கு வேலை செய்யுறவன் ஒருத்தன் சரியில்லை என சந்தேகம் வந்து விசாரிக்கும் போது அவன் கொடுத்த விளக்கம் போதலை எனத் தோணியதால், கையில் கிடைச்ச பொருளைத் தூக்கி அடிச்சே கொன்னுட்டான். அவன் கையில் கிடைத்த பொருள் - 15இன்ச் டில்டோ. ஊருக்குள்ள இவன் பேரக் கேட்டா பயப்படுவாங்க. இவனுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் இவனோட இருக்கும் Barry the Baptist தான் டீல் செய்வான். தண்ணியில் முக்கி முக்கி அடிப்பதால் இந்தப் பெயர். உபதொழில் - பணம் கொடுக்காதவங்க விரலை வெட்டுவேன் என மிரட்டுவது. Harryயின் வராக்கடன் கணக்குகளை வட்டியும் முதலுமாக வசூலிப்பது Big chris. இவனுக்கு தன் பையன்னா உயிரு. அந்த பயலும் அப்பாவோட தொழிலுக்கு போவான். சமீபத்தில ஏலத்துக்கு போக இருக்கும் antique துப்பாக்கிகள் மேல Harryக்கு ஒரு கண். அதைத் திருட Dean, Gary என ரெண்டு தேங்காய் மூடி திருடர்களைத் துப்பாக்கி கேபினட்குள்ள இருக்கிறது தவிர மத்ததெல்லாம் உனக்கு என்ற டீலில் அனுப்புகிறான் Barry.
இதற்கு நடுவில் Edன் பக்கத்துவீட்டுல ஒரு கேங் இருக்கு. போதைப் பொருள் ஆசாமிகளை தாக்கி சரக்கைக் கடத்திக் கொண்டு வந்து பங்கு பிரித்துக் கொள்ளும் ஒரு அபாரமான கூட்டம். அவர்கள் வீட்டில் சாவதானமாக பேசினால் கூட Ed வீட்டு Closet ல் எதிரொலிக்கும். அந்தக் கூட்டத்தில் ஒருவனான Plank தான் ஒவ்வொரு போது கும்பலையும் கண்டுபிடித்துக் போட்டுக் கொடுப்பது. அந்தக் கூட்டத்தின் திட்டக்குழுத் தலைவன் Dog கொஞ்சம் வயலண்டான ஆசாமி. Plank பலகாலமாக தனக்கு கஞ்சா கொடுக்கும் ஆசாமிகளை மார்க் செய்கிறான்.
இதற்கிடையில் Ed பணத்தை எல்லாம் Hatchet Harryன் தந்திரத்துக்கு தோற்றது மட்டுமல்லாமல் 500,000 அவனிடமே கடன் வேறு வாங்கி ஆடித் தொலைகிறான், மகாபாரதம் டப்பிங்கில் பார்க்காதவன். ஒரு வாரத்தில் காசு வரலைன்னா ஒவ்வொரு நாளும் ஒரு விரல். நாலு பேரு சேத்தா நாப்பது நாளு தாங்குதேன்னு நினைச்சா, தினமும் எல்லார் கையிலும் ஒரு விரல் எடுப்பானாம் Barry. அப்புறம் Ed அப்பாவோட பாரை எடுத்துப்பாங்களாம். அவங்கப்பா அது கேள்விபட்டதும் Ed மூக்கில குத்து உடுறாரு. இதற்கடுத்து மொக்க பிளான் நிறைய போடுறாங்க. அப்ப பக்கத்து வீட்டு ஆசாமிகள் பெரிய கொள்ளை ஒன்றை, Plank கஞ்சா வாங்கும் ஆட்களை கொள்ளை அடிப்பதை முடிவு செய்கின்றனர். அதை இவர்களிடம் இருந்து நாம் கொள்ளை அடிக்கலாம் என நம்ம ஹீரோ கேங்க் முடிவு செய்ய, Nick the Greek என்ற இடைத்தரகன் மூலம் அந்த சரக்கை Rory Breaker என்ற Afro தலையனிடம் விற்க முடிவு செய்கிறார்கள். இவனும் டெரரான ஆசாமிதான். இந்தக் கொள்ளைக்கும் துப்பாக்கி வாங்கி தர்றவன் Nick தான், அது கேபினட்டுக்கு வெளிய இருந்ததால தங்களது என நினைத்து Gary, Dean 700 பவுண்டுகளுக்கு விற்ற 250 மில்லியன் பெறுமானமுள்ள antique துப்பாக்கிகள்.
இப்ப கஞ்சா விக்கிறவங்களையும் அறிமுகப்படுத்திருவோம், என்ன? கெமிஸ்ட்ரி படிக்கிற மூனு இஸ்கோல் பசங்கதான் கஞ்சா வளர்க்கிறாங்க, வீட்டுக்குள்ளையே. படிக்கிற பசங்கள் என்பதால் குவாலிட்டி ஏ1. பிஸினஸ் எதிர்பாராத வகையில் சூடுபிடிக்க ஏக பணம். ஆனா பசங்க சப்பையானவங்க. அதைப் பார்த்ததால்தான் Plank இந்த திட்டமே போட்டிருக்கான். ஆனால் யாருக்குமே தெரியாத விஷயம் இந்த தொழிலயே அந்தப் பசங்க Rory Breakerக்காக தான் செய்யுறாங்க. ஆனா நம்ம பசங்களோ அதை கொள்ளை அடிச்சவங்களையே கொள்ளை அடிச்சு அதை முதலாளிகிட்டயே விக்க போற அறிவாளிகள்.
இதுவரைக்கும் தான் சொல்லமுடியும். இதற்கப்புறம் சொல்லனும்னா கார்த்திகேயன் மாதிரி ஆள் முழுக்கதை எழுதினால் தான் உண்டு. இதுக்கப்புறம் படம் முழுக்க, டமால், டுமீல், டப், பாம், படபடப்ட, என சைஸுக்கு ஏத்தாப்ல சவுண்டோட விதவிதமாக துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டே இருக்கு. படம் முழுக்க லோடு லோடா சர்ப்ரைஸ்கள் வச்சிருக்காங்க. காமெடியும் க்ரைமும் கலந்த மாதிரியான படம். Jason Statham, Jason Felamyng தவிர எனக்கு எந்த ’முகமும்’ தெரியவில்லை. Jason Statham காமெடில கெளப்புறாரு. கஷ்டமான accent. சப்டைட்டில்ஸ் புண்ணியம். பாலா மாதிரி ’மொழி பிரியல’ன்னு உதட்ட பிதுக்காமல், 700 MB டவுண்லோட் பண்ண நீங்க Kb கணக்கில் சப்டைட்டில்ஸ் டவுண்லோட் பண்ணிக்கோங்க. படம் முழுக்க ஒலிக்கும் இசை, பாடல்களும் ஏக பொருத்தம். Gary, Harryஐ என்கவுண்டர் செய்யும் இடத்தில் வித்தியாசமான இசை அந்த காட்சியின் பிரம்மாண்டத்தையும் அதே சமயம் absurdityஐயும் காட்டக் கூடிய இசை சம்பந்தமே இல்லாமல் எனக்கு ஒரு புல்லரிப்பாக இருந்தது.
Guy Ritchie - இயக்குனர். இவர் பிரிட்டிஷ் கேங்ஸ்டர் படங்களை எடுப்பதில் கில்லாடி. இவரும் Tarantino மாதிரி வித்தியாசமான ஆசாமி என்று சொன்னால் பாலா கோவிச்சுக்குவாரான்னு தெரியலை. ஆனால் இது கம்பேரிசன் இல்ல. தோணுச்சு. Ritchieன் படங்களில் காமெடி கலந்த வசனங்கள் பிரமாதமாக இருக்கும். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் 'Inglourious Basterd’ Hugo Stiglitz கதாபாத்திரத்துக்கு கதை சொல்லுவாரே Tarantino, அது போல கதை சொல்லி விளக்குறது இவரோட வழக்கம். இவர் கதை சொல்லுகிற முறை எனக்கு பிடித்து விட்டது. இந்த இயக்குனரின் 4 படங்கள் பார்த்துவிட்டேன், ஓகே, ஒரு ஷாட் பிலிமும் பாத்திருக்கேன். Sherlock Holmes தவிர மற்றவையெல்லாம் கிட்டதட்ட ஒரு கும்பல் குழப்பக் கதைதான் என்பது ஒன்றுதான் இவருடைய பின்னடைவு. இவர் ஒரே மாதிரியாக படங்கள் எடுக்கிறார். இதுதான் இவரிடம் எனக்கு ஒரே தயக்கமான விஷயம். வசனங்களை அடிச்சுக்க முடியாது. இந்த படத்தில் ’Fuck’ஐ ஃபுல் ஸ்டாப்பாக யூஸ் செய்கிறார். சின்ன மாதிரி -